எக்குவடோர்

தென் அமெரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள ஒரு குடியரசு ஆகும்

எக்குவடோர் (Ecuador) தென் அமெரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள ஒரு குடியரசு ஆகும். வடக்கில் கொலம்பியாவும், கிழக்கிலும் தெற்கிலும் பெருவும் இதன் அண்டை எல்லை நாடுகளாக உள்ளன. மேற்கில் பசிபிக் பெருங்கடல் உள்ளது.[1][2][3]

எக்வடோர் குடியரசு
República del Ecuador
ரெபூப்லிகா டெல் எக்வடோர்
கொடி of எக்வடோர்
கொடி
சின்னம் of எக்வடோர்
சின்னம்
குறிக்கோள்: "Dios, patria y libertad"  எசுப்பானியம்
"Pro Deo, Patria et Libertate"  இலத்தீன்
"கடவுள், தாய்நாடு, சுதந்திரம்"
நாட்டுப்பண்: Salve, Oh Patria  (எசுப்பானியம்)
வணக்கம் தாய்நாடு
எக்வடோர்அமைவிடம்
தலைநகரம்கித்தோ
பெரிய நகர்காயாக்கீல்
ஆட்சி மொழி(கள்)எசுப்பானியம்
மக்கள்எக்வடோரியர்
அரசாங்கம்தலைவர் இருக்கும் குடியரசு
• குடியரசுத் தலைவர்
ராஃபாயெல் கொறேயா
• துணைத் தலைவர்
லெனீன் மொரேனோ
விடுதலை
• ஸ்பெயின் இடம் இருந்து
மே 24 1822
• க்ரான் கொலொம்பியா இடம் இருந்து
மே 13 1830
பரப்பு
• மொத்தம்
256,370 km2 (98,990 sq mi) (73வது)
• நீர் (%)
8.8
மக்கள் தொகை
• 2007 மதிப்பிடு
13,755,680 (65வது)
• அடர்த்தி
53.8/km2 (139.3/sq mi) (147வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2006 மதிப்பீடு
• மொத்தம்
$61.7 பில்லியன் (70வது)
• தலைவிகிதம்
$4,776 (111th)
ஜினி42
மத்திமம்
மமேசு (2007) 0.772
Error: Invalid HDI value · 89வது
நாணயம்அமெரிக்க டாலர்2 (USD)
நேர வலயம்ஒ.அ.நே-5 (-63)
அழைப்புக்குறி593
இணையக் குறி.ec
  1. பழங்குடிகள் கிச்சுவா, வேறு சில மொழிகளை பேசுவர்கள்
  2. 2000 வரை எக்வடோரிய சுக்ரே
  3. கலாபகோஸ் தீவுகள்

தற்போது ஈக்குவடோர் என அழைக்கப்படும் நாடு முன்னர் அம்ரிஇந்தியன் குழுக்களின் தாயகமாக இருந்தது. பின்னர் படிப்படியாக இன்கா பேரரசுடன் 15ஆம் நூற்றாண்டில் இணைக்கப்பட்டது. 16ஆம் நூற்றாண்டில் இப்பகுதி எசுப்பானியர்கள் கட்டுக்குள் வந்தது, 1820ஆம் ஆண்டு பெரிய கொலம்பியாவின் பாகமாக விடுதலை பெற்றது. அதிலிருந்து 1830இல் இறையாண்மையுள்ள தனி நாடாக விடுதலையடைந்தது. இரு பேரரசுகளின் மரபு எச்சத்தை இந்தாட்டின் பரந்துபட்ட இன மக்கள் தொகையில் காணலாம். 15.2 மில்லியன் மக்களில் பெரும்பான்மையோர் மெசிசிடோசுக்கள் (ஐரோப்பிய அமெரிஇந்திய கலப்பினம்). அவர்களுக்கு அடுத்து ஐரோப்பியர்கள், அமெரிஇந்தியர்கள், ஆப்பிரிக்க இனத்தவர்கள் உள்ளனர்.

எசுப்பானியம் அதிகாரபூர்மான மொழியாகும். இதுவே பெரும்பான்மை மக்களால் பேசப்படுகிறது. இருந்தாலும் 13 அமெரிஇந்திய மொழிகளும் அரசால் தகுதிபெற்றவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. கித்தோ நாட்டின் தலைநகரமாகும். குவாயாகில் நாட்டின் பெரிய நகரமாகும். கித்தோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க நடுப்பகுதி யுனெசுகோவின் (ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்) உலகப் பாரம்பரியக் களம் என்று 1978இல் அறிவிக்கப்பட்டது. நாட்டின் மூன்றாவது பெரிய நகரான கியுன்கா உலகப் பாரம்பரியக் களம் என்று அதன் நகர திட்டமிடல், எசுப்பானிய பாணி கட்டடங்கள் போன்றவற்றுக்காக 1999இல் அறிவிக்கப்பட்டது. ஈக்குவடோர் வளரும் நாடாகும் இதன் பொருளாதாரம் பாறைநெய் விவசாய பொருட்களை சார்ந்து உள்ளது. நாடு நடுத்தர வருவாய் உள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=எக்குவடோர்&oldid=3864549" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை