அபூ பக்கர் அல்-பக்தாதி

அபூ பக்கர் அல்-பக்தாதி (Abu Bakr al-Baghdadi, அரபி மொழி: أبو بكر البغدادي; அண். 1971 – 27 அக்டோபர் 2019)[2]) இசுலாமிய அரசு எனும் தீவிரவாத அமைப்பின் தலைவர் ஆவார்.[3] இவரது இயற்பெயர் இப்ராகிம் அவ்வாத் இப்ராகிம் அலி அல்-பத்ரி ஆகும். இவர் டாக்டர்.இப்ராஹிம் அல்லது அபூ துவா என்றும் அறியப்படுகின்றார்.[4]

அபூ பக்கர் அல்-பக்தாதி
أبو بكر البغدادي
அமீர்(ஈராக், சாம் ஆகியவற்றின் இஸ்லாமிய அரசு)
பதவியில் உள்ளார்
பதவியில்
3 ஜனவரி 2014
முன்னையவர்அபு உமர் அல்-பக்தாதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புInfobox Military Person
1971[1]
சமரா, ஈராக்[1]
இறப்பு27 அக்டோபர் 2019(2019-10-27) (அகவை 47–48)
இளைப்பாறுமிடம்Infobox Military Person
பெற்றோர்
  • Infobox Military Person
Military service
பற்றிணைப்புஅல் காயிதா (முன்பு)
கட்டளைஇசுலாமிய அரசு
போர்கள்/யுத்தங்கள்ஈராக் போர்
சிரிய உள்நாட்டுப் போர்

இசுலாமிய அரசு எனும் தீவிரவாத அமைப்பு 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் தியதி அபூ பக்கர் அல்-பக்தாதியால் உருவாக்கப்பட்டது. இது முதலில் அல் காயிதா அமைப்பின் ஈராக்கியப் பிரிவாகச் செயற்பட்டது.[5]

அமெரிக்கா அரசு 4 அக்டோபர் 2011 அன்று அபூ பக்கர் அல்-பக்தாதியை சிறப்புக் கவனம் பெற்ற உலகளாவியத் தீவிரவாதி (Specially Designated Global Terrorist) என்று அறிவித்து அவரைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ தகவல் தருபவர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசு என அறிவித்தது.[6]

கொலைத் தாக்குதல்

அக்டோபர் 26, 2005 இல் அமெரிக்கப் போர் விமானங்கள் இவர் தங்கியிருக்கலாம் என்ற ஊகத்தில், சிரியா எல்லை அருகே குண்டு வீசி இவரைக் கொல்ல முயன்றன.[7] இவர் அல் காயிதாவின் மூத்த நபராக அடையாளம் காணப்பட்டிருந்த அச்சமயத்தில், சிரியா எல்லையில் தீவிரவாதப் பணிகளை மேற்கொள்வதும், சவூதி அரேபியா மற்றும் சிரியாவிலிருந்து போராளிகளைக் தந்திரமாக ஈராக்கினுள் ஊடுருவ வைப்பதும் இவரது பணியாக இருந்தது.[7] மேலும் அத்தாக்குதலின் போது அபூ பக்கர் அல்-பக்தாதி வீட்டினுள் தான் இருந்தார் என்றும், ஆனால் அவரது உடல் கண்டெடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.[7]

கைது அறிக்கை

டிசம்பர் 2, 2012 அன்று அபூ பக்கர் அல்-பக்தாதியைக் கைது செய்திருப்பதாக ஈராக்கிய அதிகாரிகள் தெரிவித்தனர்.[8][9] ஆனால் அல் ஜசீரா தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த ஈராக்கின் உள்துறை அமைச்சர் இத்தகவலை நிராகரித்து, கைது செய்யப்பட்டிருப்பது அபூ பக்கர் அல்-பக்தாதி அல்ல என்றார்.[10][11]

மரணம்

வடமேற்கு சிரியாவின் இதுலிபு மாகாணத்தின் இத்லிப் நகரத்திற்கு அருகே ஒரு பதுங்கு குழியில் ஒளிந்திருந்த அபு பக்கர் அல்-பக்தாதியை, 27 அக்டோபர் 2019 அன்று அமெரிக்கப் படைகள் சுற்றி வளைத்து நடத்திய தாக்குதல்களில் இறந்ததாக அமெரிக்க அரசுத்தலைவர் டோனால்ட் டிரம்ப் அறிவித்தார்.[12][13][14]

தொடர்புடைய கட்டுரைகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை