இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு

இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு (Israeli–Palestinian conflict) இருபதாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து இன்றுவரை இசுரேலுக்கும் பலத்தீனத்திற்கும் இடையே நடைபெற்றுவரும் தொடர்போராட்டத்தை குறிக்கிறது.[1] இந்தப் பிணக்குகள் பிரித்தானியர் ஆண்டுவந்த காலத்திலிருந்தே சீயோனியர்களுக்கும் (yishuv) அரபு மக்களுக்கும் இடையே இருந்து வந்துள்ளது. இது பரந்த அரபு-இசுரேல் முரண்பாட்டின் மைய அங்கமாகும். இந்தப் பிணக்கே உலகின் "மிகவும் சிக்கலான பிணக்காக" கருதப்படுகிறது.[3][4][5]இந்தப் பிணக்கை தீர்க்கும் வழியாக தன்னாட்சியுடைய பலத்தீனத்தையும் அதையடுத்த இசுரேலையும் கொண்டவாறு இரு நாடுகளை உருவாக்கும் தீர்வு பலமுறை முன்மொழியப்பட்டுள்ளன.[6] பல கருத்துக் கணிப்புக்களின்படி பெரும்பாலான இசுரேலியர்களும் பாலத்தீனர்களும் இந்த பிணக்கைத் தீர்க்க இருநாடுகள் தீர்வே சிறந்ததாக ஒப்புக் கொள்கின்றனர்.[7][8][9] மிகுதியான பலத்தீனர்கள் மேற்குக் கரையும் காசா கரையும் உள்ளடங்கியப் பகுதி தங்கள் வருங்கால நாடாக கருதுகின்றனர்; இதற்கு பெரும்பாலான இசுரேலியர்களும் உடன்படுகின்றனர்.[10] ஒரு சில கல்வியாளர்கள் இசுரேல், காசாக் கரை, மேற்கு கரை ஒவ்வொன்றும் சம உரிமையுடனான, இரட்டைக் குடியுரிமை பெற்ற, ஒரே நாட்டின் பகுதிகளாக ஒருநாட்டுத் தீர்வை முன்வைத்துள்ளனர். [11][12] இருப்பினும், எந்தவொரு இறுதித் தீர்வைக் குறித்தும் குறிப்பிடத்தக்க அளவில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. மேலும் எதிர்தரப்பின் நம்பகத்தன்மை குறித்தும் எந்தளவில் வாக்குறுதிகளை காப்பாற்றும் என்பது குறித்தும் மற்ற தரப்பிற்கு ஐயங்கள் உள்ளன.[13]

இசுரேல்–பலத்தீன பிணக்கு
the அரபு-இசுரேல் முரண்பாடு பகுதி

மேற்குக் கரைக்கும் காசா கரைக்கும் அடுத்துள்ள இசுரேலின் நடுப்பகுதி, 2007
நாள்20வது நூற்றாண்டின் நடுவில் [1] – இன்றளவில்
முதன்மை கட்டம்: 1964–1993
இடம் Israel
 State of Palestine
முடிவுஇசுரேலிய-பலத்தீன அமைதிப் பேச்சுக்கள்
தாழ்-நிலை சண்டைகள், பெரும்பாலும் இசுரேலுக்கும் காசாவிற்கும்
நிலப்பகுதி
மாற்றங்கள்
காசாவில் பலத்தீன அரசு நிறுவலும் கலைத்தலும் (1948–1959)
மேற்குக் கரையை ஜோர்தான் கையகப்படுத்தல் (1948–1967)
மேற்கு கரையையும் காசாவையும் இசுரேல் கையகப்படுத்துதல் (1967)
"A" மற்றும் "B" நிலப்பகுதிகளை இசுரேலிய நிர்வாகத்திடமிருந்து பலத்தீன தேசிய ஆணையத்திற்கு மாற்றுதல் (1994–95)
காசாவிலிருந்து இசுரேல் விலகல் (2005)
பிரிவினர்
 Israel அனைத்து-பலத்தீனம் (1948–1959)

பலஸ்தீன விடுதலை இயக்கம் (1964–93)
 பலத்தீன தேசிய ஆணையம் (2000–04)
காசா கரை (2006-இன்றளவில்)

இழப்புகள்
21,500 உயிரிழப்புகள் (1965–2013)[2]

வரலாறு

ஜெர்மனியில் ஹிட்லரால் யூதர்கள் வேட்டையாடப்பட்ட பின்னணியில் தங்களுக்கென்று ஒரு நாடு என்ற கோரிக்கை யூதர்கள் மத்தியில் வலுத்தது. 1947ல் ஐக்கிய நாடுகள் அவை தலையிட்டு, 55 சதவீத பிரதேசம் யூதர்களுக்கு எனவும், 44 சதவீதம் பாலஸ்தீனியர்களுக்கு என்றும், 1 சத வீதம் ஜெருசலேம் தனியாக சர்வதேசக் கண் காணிப்பில் இருக்கும் என்றும் பிரித்துக் கொடுத்தது.[14]

மேற்சான்றுகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை