இந்திய வரலாறு

இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்று

இந்திய வரலாறு (History of India) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் வரலாற்றுக் காலம் முன்பு வாழ்ந்த மக்கள், அவர்தம் சமுதாயம், சிந்து சமவெளி நாகரிகம், இந்தோ-ஆரியப் பண்பாடு உள்ளடக்கிய வேதகால நாகரிகம்[1] தொடங்கி இன்றுவரை உள்ள காலம் அடங்கும். மேலும் பல கலாச்சாரங்களின் சாரமாகவும் பண்பாடுகளை உள்வாங்கியும் பிறந்த இந்து சமயம், அதன் வளர்ச்சி குறித்தும் சிரமணா இயக்கத்தின் வளர்ச்சி, சிரவுத்தா பலிகளின் வீழ்ச்சி, சைனம், பௌத்தம், சைவம், வைணவம் மற்றும் சக்தி வழிபாடு இவைகளின் வளர்ச்சி, தாக்கம்,[2][3] மேலும் இப்பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த அரச பரம்பரை, பேரரசுகளின் தோற்றம், தாக்கம், இடைகாலத்தில் தோன்றிய இந்து மற்றும் முகலாய அரச பரம்பரைகள் குறித்த தகவல்கள், பிற்காலத்தில் வந்த ஐரோப்பிய வணிகர்கள், அதன் தொடர்ச்சியாக அமைந்த ஆங்கிலேய அரசு, அதன் தொடர்ச்சியாக எழுந்த விடுதலை இயக்கம், அதன் பின் நாடு பிரிவினை அடைந்து இந்தியக் குடியரசு பிறந்த வரை தகவல்கள் உள்ளிட்டவை அடங்கும்.[4]

சுமார் 75,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய துணைக்கண்டத்தில் இன்றைய மனிதர்களின் உடற்கூறியல் வடிவத்தை ஒத்த மனிதர்களோ அல்லது 5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தற்கால மனிதனின் முன்னோடிகளோ வாழ்ந்து வந்ததற்கான சான்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.[5] கிமு 3,200 முதல் கிமு 1,300 வரை இந்தியாவில் செழிப்பாக விளங்கிய சிந்துவெளி நாகரிகம்தான் தெற்கு ஆசியாவில் [6] தோன்றிய முதல் நாகரிகம் ஆகும். தொழில் நுட்பத்திலும், புதுமையிலும் ஒரு தலை சிறந்த மற்றும் நகர்ப்புற வாழ்க்கையில் தனித் தன்மை வாய்ந்த நாகரிகம் பயன்பாட்டில் இருந்த காரப்பா காலம்[7] கிமு 2,600 முதல் கிமு 1,900 வரை தொடர்ந்தது. கிமு இரண்டாவது ஆயிரமாண்டு துவக்கத்தில் இது மறைய, இதன் தொடர்ச்சியாக இரும்புக்கால வேதிய நாகரிகம் சிந்து-கங்கைச் சமவெளியில் தோன்றி வளர்ந்தது. இக்காலத்தில் தான் மகாசனப்பாடங்கள் என்னும் பல அரசாட்சிமுறைகளும் தோன்றி வளர்ந்தன. கிமு 5-ஆம் நூற்றாண்டு முதல் கி.மு 6-ஆம் நூற்றாண்டு வாக்கில் இது போன்ற ஓர் அரச வம்சத்தில் தான் மகதர்கள், மகாவீரர் கௌதம புத்தர் போன்றோர் தோன்றி ’’சிராமனிய’’ தத்துவத்தைப் பரப்பி வந்தனர்.

கிமு 4 ஆம் நூற்றாண்டு மற்றும் கிமு 3 ஆம் நூற்றாண்டுகளில் துணைக்கண்டத்தின் பெரும் பகுதி மவுரியப் பேரரசின் கீழ் கொண்டுவரப்பட்டது. இக்கால கட்டத்தில் வடநாட்டில் பிரகிருதி மற்றும் பாளி மொழி இலக்கியங்களும், தெற்கில் சங்க இலக்கியங்களும் வளர்ச்சியடைந்தன.[8][9]. தென்னிந்தியாவில் எடுக்கப்பட்ட ஊட்டுச்சு எக்கு[10][11][12] எனும் ஒரு வகை இரும்பு இக்காலத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அடுத்த 1,500 ஆண்டுகள் இந்தியாவின் பல பகுதிகள் பல அரசர்களால் ஆளப்பட்டிருந்தாலும், இக்காலத்தில் குப்தர் ஆண்ட காலம் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. இந்து சமயமும், கலை, கலாச்சாரம் போன்றவையும் புத்தாக்கம் பெற்று மறுமலர்ச்சியடைந்து விளங்கியதால், இந்தியாவின் பொற்காலம் என குப்தர்களின் காலம் வர்ணிக்கப்படுகிறது.

இக்காலத்தில் இந்திய நாகரிகம், கலை, கலாச்சாரம், பண்பாடு, குறிப்பாக இந்து சமயம் மற்றும் பௌத்தம் முதலியன ஆசியா முழுவதும் பரவின. கிமு 77-ஆம் ஆண்டு வாக்கில் தென்னிந்திய அரசுகள் உரோமப் பேரரசுடன் தொடர்பு வைத்திருந்தன. இந்திய கலாச்சாரத்தின் தாக்கமும், வீச்சமும் தென்கிழக்காசியாவின் பல இடங்களில் பரவின. இதன் காரணமாக பல இந்திய வம்சாவளி அரசுகள்[13][14] இப்பகுதியில் அமைந்தன.

பாலி, இராசிட்ரகூடம், குருசார பிராதிகார பேரரசு ஆகியவற்றிடையே கன்னோசி அரசை மையப்படுத்தி நடந்த மும்முனைப் போட்டி கிபி 7-ஆம் நூற்றாண்டிற்கும் 11-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த முக்கியமான நிகழ்வாகும். இப்போராட்டம் இரண்டு நூற்றாண்டுகளாகத் தொடர்ந்தது. தென்னிந்தியா அப்பொழுது, சாளுக்கியர், சோழர், பல்லவர், சேரர், பாண்டியர் மற்றும் மேலைச் சாளுக்கியர்களால் ஆளப்பட்டு வந்தது. கிபி 7-ஆம் நூற்றாண்டில் முகமதிய மதம் தோன்றி ஓர் அரசியல் சக்தியாகவும் உருவெடுத்தது. அதன் சுவடுகள் இந்தியத் துணைக்கண்டத்தின் மேற்குப்பகுதியான இன்றைய பாக்கித்தானத்திலும் அறியப்பட்டது.[15] சோழர்கள் தென்னிந்தியா முழுவதும் வெற்றி பெற்று கிபி 11-ஆம் நூற்றாண்டில் [16][17] தெற்காசியாவில் இலங்கை, மாலத்தீவு, வங்காளம்[18] உட்படப் பல பகுதிகளில் கால் பதித்தனர். இடைக்காலத்தின் ஆரம்பத்தில் இந்தியக் கணிதவியல், அரேபிய உலகின் வானியல் மற்றும் கணிதவியலின் மீதும் தாக்கத்தை எற்படுத்தின. அப்பொழுதுதான் இந்திய எண்களும் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டன.[18]

பல பேரரசுகளும் இராச்சியங்களும் இந்தப் பகுதியை ஆட்சி செய்ததின் மூலம் இந்தப் பகுதியின் பண்பாடு மேலும் வளர்ச்சி பெற்றது. கிமு 543 பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசு [19] முதல் கிமு 326 அலெக்சாண்டேர் தி கிரேட்[20] வரையில் நீடித்தது. பாக்திரியாவைச் சார்ந்த டெமெட்ரியஸால் உருவாக்கப்பட்ட இந்தோ கிரேக்க நாடு, காந்தாரம் மற்றும் பஞ்சாப் போன்ற இடங்களைத் தன்னுள் கொண்டிருந்தது. கிமு 184-ஆம் ஆண்டில் நிலவிய இந்த இராச்சியம் மெனாண்டர் காலத்தில் தனது உச்சத்தை அடைந்தது. இதே சமயத்தில் பண்பாட்டிலும், வாணிபத்திலும் சிறந்து விளங்கிய கிரேக்க-புத்த காலமும் எழுச்சி அடைந்தது.

கிபி 77-ல் கேரளா, ரோம சாம்ராச்சியத்துடன் கடல் சார்ந்த வணிகப் பிணைப்புகள் கொண்டிருந்தது. கிபி 712-ல், அரபு நாட்டைச் சேர்ந்த படைத்தலைவர் முகம்மது பின் காசிமின் வருகையால் இந்தத் துணைக்கண்டத்தில் இசுலாமிய ஆட்சி துவங்கியது. இவர், சிந்து, முல்டான், தெற்கு பஞ்சாப் பகுதிகளைக் கைப்பற்றினார்[21]. இதுவே மத்திய ஆசியப் பகுதியிலிருந்து பல படையெடுப்புகளை கிபி 10-ஆம் நூற்றாண்டிலிருந்து 15-ஆம் நூற்றாண்டுவரை இந்தியத் துணைக் கண்டம் சந்தித்து இஸ்லாமிய இராச்சியமாகக் காரணமாக இருந்தது. இவற்றுள் கசினி முகமது, கோரி முகமது, தில்லி சுல்தான்கள், முகலாயப் பேரரசு புகழ் பெற்றவை. துணைக் கண்டத்தின் பெரும்பாலான மேற்குப் பகுதிகளில் முகலாய சாம்ராச்சியம் பரவி இருந்தது. முகலாயர்கள் இந்தியாவுக்குள் மத்திய கிழக்கு ஓவியங்களையும், கட்டிடக் கலையையும் கொண்டு வந்தனர். முகலாயர்களுடன் விசயநகரப் பேரரசு, மராத்தியப் பேரரசு, இராசபுத்திர இராச்சிய

யங்கள் போன்ற பல இந்இதுச்சி்ஜியங்களும், மேற்கு மற்றும் தென்னிந்தியப் பகுதிகளில் தழைத்தெழுந்தன. முகலாய சாமச்சி்ஜியம், அவுரங்கசீப்பிற்குப் பின் 18-ஆம் நூற்றாண்டில், தானாகவே வலுவை இழந்தது. இதனால் ஆப்கன்கள், பலோசியர்கள், சீக்கியர்கள், மராத்தியர்கள் வட மேற்குத் துணைக்கண்டப் பகுதிக்குள் எளிதே நுழைந்தனர். இவர்கள், தெற்கு ஆசியாவை ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய நிறுவனம் தன் வசம் ஈர்க்கும் வரை ஆட்சி புரிந்தனர்.[22]

18-ஆம் நூற்றாண்டிலிருந்து அடுத்த நூற்றாண்டு வரை ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய நிறுவனம் படிப்படியாக இந்தியாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இந்த நிறுவனத்தின் ஆட்சியில் கிடைத்த அதிருப்தி, 1857-ஆம் ஆண்டு முதல் இந்திய சுதந்திரப் போருக்கு காரணமாக அமைந்தது. இதனால் ஆங்கிலேய அரசு இந்தியாவைத் தனது நேரடி ஆட்சிக்குள் கொண்டு வந்தது. இந்தக் கால கட்டத்தில் இந்தியா சமுதாயத்தின் வளர்ச்சியையும் பொருளாதாரத்தின் குலைவையும் கண்டது.

20-ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், நாடெங்கிலும் இந்திய தேசிய காங்கிரஸின் மூலம் துவக்கப்பட்ட சுதந்திரப் போராட்டம் காட்டுத் தீயைப் போல் பரவியது. இந்த போராட்டத்தில் முஸ்லிம் லீகும், தன்னை இணைத்துக் கொண்டது. இந்தத் துணைக் கண்டம் 1947ல், இந்தியா, பாகிஸ்தான் என்று இரு ஆளும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட பின்னர் ஆங்கிலேய ஆட்சியிடமிருந்து தன் சுதந்திரத்தைப் பெற்றது.

எழுதிய அணுகுமுறை

இந்திய வரலாற்றை எழுத வேண்டிய தேவை, ஆங்கிலேயர் இந்தியாவை ஆளத்துவங்கிய, 18-ஆம் நூற்றாண்டில் தான் அறியப்பட்டது.

இந்தியாவை ஆள்வதற்கு இந்தியர்களின் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள் மற்றும் சட்டங்கள் முதலியவற்றை தெரிந்துகொள்ளவேண்டிய கட்டாயம் இருந்தன. அதுவே ஆங்கிலேயர்களை இதில் கவனம் செலுத்தத் தூண்டியது.[23] இதற்கு ஏதுவாக சர் வில்லியம் ஜோன்ஸ் 1784-ஆம் ஆண்டு வங்காள ஆசியக் கழகத்தை நிறுவினார்.[24] கீழை நாடுகளில் வசிக்கும் மக்கள், அவர்தம் வாழ்க்கை முறையைக் குறித்த தகவல்கள், மற்றும் ஆராய்ச்சி செய்து புரிந்துகொள்வது, ஆவணப்படுத்துவது இதன் நோக்கமாகும். சார்லஸ் வில்கின்ஸ், H.T. கோல்புரூக், H.H. வில்சன் (1786–1860) முதலியோர் பெரும் பங்காற்றினர்.

மேக்ஸ் முல்லர் உட்பட பல ஐரோப்பிய அறிஞர் பெருமக்கள் சமக்கிருதம் கற்று வேதங்களில் புலமை பெற்றனர். இந்திய நாகரிகத்தையும், பண்பாட்டையும் புரிந்துகொள்வதற்கும், இந்திய வரலாறு பின்பு சரித்திர ஆசிரியர்களால் எழுதப்படுவதற்கும் இவர்களது எழுத்து உதவியாக இருந்துவந்துள்ளது.

இதைப்போல கிருத்துவ மத குருமார்களும், தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக, இந்திய நாகரீகத்தையும், பண்பாட்டையும் நன்கு அறிந்து, கிறித்துவ மதம் இதைவிட மேம்பாடானது என்று கூறி பரப்புரையில் ஈடுபட்டனர். இவர்களின் எண்ணமும் எழுத்தும் கூட ஒருதலைப்பட்சமாக இந்திய வரலாறு எழுதப்பட்டதற்கு காரணமாக அமைந்தது என்று கருதுவோரும் உண்டு.

ஜான் ஸ்டூவர்ட் எழுதிய பிரித்தானிய இந்தியாவின் வரலாறு (History of British India) என்னும் நூல் 1817-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்தியர்களின் பண்பாட்டையும், நாகரீகத்தையும் காட்டுமிராண்டித்தனமானது, காரண காரியங்களுக்கு எதிர்மறையானது என்று இந்நூல் வலியுறுத்தியது. ஆங்கில அதிகாரிகள் இந்தியா வருவதற்கு முன் பயிற்சியின் போது இந்நூலை ஒரு பாடமாகவே கற்று வந்தனர். இந்நூல் இந்தியர்கள் குறித்த ஒரு மோசமான மனப்பான்மையை அவர்கள் உள்ளத்தில் ஏற்படுத்தியது.

வி. ஏ. சிமித் என்னும் ஆங்கில அதிகாரி, இது போன்று வந்தவர்தான். இவர் ஆக்ஸ்போர்டு இந்திய வரலாறு (The Oxford history of India) என்னும் நூலை எழுதினார். ஆனால் ஸ்டூவர்ட் மில் போன்று அல்லாமல் இந்தியர்களைக் குறித்து வின்சென்ட் சிமித் அவ்வளவு மோசமான எண்ணம் கொண்டிருக்கவில்லை. இருந்தாலும் இந்தியர்கள் ஆளத்தெரியாதவர்கள் என விவரிக்கிறார். இதுபோன்று ஆங்கிலச் சரித்திர ஆசிரியர்கள் ஒருதலைப்பட்சமாக இந்திய வரலாற்றை எழுதுவதற்கு இந்தியச் சரித்திர ஆசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்திய அரசுமுறை குறித்தும் அதன் மேன்மை குறித்தும் பலவாறு விளக்கிவந்தனர்.

இவைகளின் தாக்கமாக ஆங்கிலச் சரித்திர ஆசிரியர்கள் பெரும்பாலும் பேரரசர்கள், பரம்பரையாக ஆட்சி செய்வது போன்றவற்றையே எழுதிவந்தனர். அரசர் தவிர வேறு எந்தவிதமான பயனுள்ள அரசியல், சமூக அமைப்புகளைப்பற்றியும் இவர்கள் எவ்விதக் குறிப்பும் கருத்தும் தெரிவிக்கவில்லை. மேலும் இந்திய மக்கள் சோம்பேறித்தனமான பிற்போக்கு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றும் ஆழமான எண்ணங்களைத் தம் மனதில் கொண்டே வரலாறை எழுதினர்.[25] பாகுபாடற்ற அணுகுமுறையுடன் இந்திய வரலாறு இவர்களால் பார்க்கப்படவில்லை என்னும் கருத்தும் உள்ளது.

பிற்காலத்தில் இந்திய வரலாறு அதன் உண்மையான பரிமாணத்துடன் எழுதப்படவேண்டும் என பல அறிஞர்கள் விரும்பி, அவ்வாறு எழுதப்பட்டும் வந்துள்ளது.[26]

வரலாற்று ஊழிக்கு முன்

கற்காலம்

பீம்பேட்கா பாறை வாழிடங்கள், மத்தியப் பிரதேசம்

ஹோமோ எரெக்டஸின் தனிமைப்படுத்தப்பட்ட மிச்சங்கள் மத்திய இந்தியப் பகுதியில் உள்ள நர்மதா சமவெளியில் கண்டெடுக்கப்பட்டன. இது பனி உறைந்திந்திருந்த மத்திய பிளைச்டோசீன் காலத்திலேயே அதாவது 200,000 இலிருந்து 500,000 ஆண்டுகளுக்கு நடுவே பரிணாமம் அடைந்த உயிரினங்கள் வாழ்ந்தன என்பதை உறுதிப்படுத்துகின்றது.[27][28]ஆனால், இந்து மகா சமுத்திரக் கரையோரம் இருந்த ஆப்பிரிக்க இடப்பெயர்ப்பின் அடையாளங்கள் சுவடே இல்லாமல் இருப்பதால் அவை தொலைந்ததாகவே கருதப்படுகின்றறன. 25,000 த்திலிருந்து 30,000 ஆண்டு காலம் வரை மத்திய கற்காலம் இந்த துணைக் கண்டத்தில் நீடித்திருந்தது. இன்னும் விரிவான குடியேற்றங்கள் இந்தத் துணைக் கண்டத்தில் பனியுகத்தின் இறுதிக் கட்டங்களில் அதாவது ஏறத்தாழ 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தன என்று யூகிக்கப் படுகிறது. நிச்சயமாகச் சொல்லக்கூடிய நிலையான குடியேற்றங்கள் 9000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாக ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த ஆதாரங்கள் தற்கால மத்தியப் பிரதேசத்தில், பீம்பேட்கா பாறை வாழிடங்கள் என்ற இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டன. பாகிஸ்தானில் உள்ள தற்கால பலுசிஸ்தானில் இருந்த மெஹெர்கர் கண்டுபிடிப்புகள் தென்னாசியாவில், புதிய கற்காலத்தின் ஆரம்ப காலப் பண்பாட்டைக் குறிக்கின்றன. இது சுமார் கிமு 7000 ஆண்டுக்குமுன் இருந்தது என்று கணக்கிடப்படுகிறது. இந்தப் புதிய கற்காலம் இருந்தது என்பதற்கான தடையங்கள் காம்பத் வளைகுடாவில் மூழ்கி இருந்தாலும், அதனையும் கண்டு பிடித்துள்ளனர். கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு இதனை கி.மு 7500 ஆண்டு என்று கணக்கிட்டுள்ளது.[29] புதிய கற்காலம் முடிவுக்கு வரும் காலத்தில் இருந்த பண்பாடு கி.மு. 6000 – 2000 ஆண்டுகளில் இந்து சமவெளி நாகரிகத்தில் இருந்ததாகவும், தென்னிந்தியாவில் கிமு 2800 – 1200 ஆண்டுகளில் இருந்ததாகவும் நிச்சயப்படுத்தப்பட்டுள்ளது.

துணைக் கண்டத்தின் இந்த பகுதியில் இரண்டு மில்லியன் ஆண்டுகளாக மக்கள் வசித்து வருகின்றனர். இது தற்காலப் பாகிஸ்தான் பகுதியில் உள்ளது.[30][31] இந்தப் பகுதியின் பழைமையான வரலாறு, இப்பகுதி தென்னாசியாவின் மிகப் பழைமையான குடியேற்றங்களையும்[32],[33][34]

தென்னாசியாவில் ஆரம்பகாலங்களில் கண்டு பிடிக்கப்பட்ட தொல்பொருள் இடங்களில் பழைய கற்காலத்தில் சொவன் நதிக்கரையோரம் இருந்த ஹோமொனிட் புரயிடமும் ஒன்று.[35] கிராம வாசிப்பு வாழ்க்கையை மேர்கர்ஹில் உள்ள புதிய கற்காலத்தின் புரயிடங்கள் காட்டுகின்றன.[36] சிந்து சமவெளி நாகரிகம்[37] போல வளர்ச்சியடைந்த நகர வாழ்க்கையைக் காட்டும் நாகரிகங்கள் மொகேன்ஜதாரோ, லோத்தல், ஹரப்பா, காளிபங்கான், தோலாவிரா போன்ற இடங்களில் இருந்ததற்கான அடையாளங்களும் இருக்கின்றன.[38]

வெண்கலக் காலம்

சிந்து சமவெளி நாகரிகத்தின் "தலைமை குருக்கள் "

சிந்து சமவெளி நாகரிகத்தின் ஆரம்பகாலங்களில், கிமு 3300-ஆம் ஆண்டில் வெண்கலக் காலம் இந்தியத் துணைக் கண்டத்தில் துவங்கியது. இது சிந்து நதி மற்றும் அதன் கிளைகளை ஆதாரமாகக் கொண்டிடிருந்தது. மேலும் காகர் நதி சமவெளி,[33] கங்கா-யமுனா, டோப்,[39] குஜராத்,[40] மற்றும் மேற்கு ஆப்கனிஸ்தான்பகுதிகளிலும் இது தழைத்து இருந்தது. .[41]இந்த நாகரிகம் பெரும்பாலும் இன்றைய இந்தியாவைச்சேர்ந்த (குஜராத், ஹரியானா, பஞ்சாப் ராஜஸ்தான் பகுதிகளிலும்) மற்றும் இன்றையப் பாகிஸ்தானைச் சேர்ந்த (சிந்து, பஞ்சாப், பலுசிஸ்தான் பகுதிகளில்) நிறைந்திருந்தது. வரலாற்றைச் சார்ந்து பார்க்கும் பொது பண்டைய இந்தியா, மெசொப்பொத்தேமியா, பண்டைய எகிப்து போல உலகிலேயே பழமை வாய்ந்த நகர நாகரிகத்தைக் கொண்டிருந்தது. சிந்து நதி சமவெளியில் வாழ்ந்த மக்கள் ஹரப்பர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் உலோகத்தைக்கொண்டு பலவற்றையும் தயாரிக்க புதுப் புது முறைகளைக் கண்டறிந்தனர். மேலும், அவர்கள் செம்பு, வெண்கலம், ஈயம், தகரம் போன்றவற்றையும் உற்பத்தி செய்தனர்

கி.மு. 2600 – 1900 ஆண்டுகளை செழிப்பாக இருந்த சிந்து சமவெளி நாகரிகம் இந்த துணை கண்டத்தில், நகர வாழ்க்கை நாகரிகத்தின் ஆரம்பத்தை குறிக்கிறது.இன்றைய இந்தியாவில் உள்ள காளிபங்கான், லோத்தல், ராக்கிகர்ஹி, தோலாவிரா, போன்ற நகரங்களும், இன்றைய பாகிஸ்தானிலுள்ள ஹரப்பா, கநேரிவாலா, மொகேஞ்சதாரோ போன்ற நகரங்களும் பழமைவாய்ந்த நாகரிகம் கொண்டிருந்த நகரங்களாக இருக்கின்றன.இந்த நாகரிகத்தில் நகரங்கள் செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன; சாலையோரங்களில் கழிவுகுழாய் அமைப்புகளும் பல மாடிக்கட்டிடங்களும் இந்த நகரங்களில் இருந்தன.

வேத காலம்

வேதகாலத்தின் இறுதியில் மேற்கு இந்தியாவின் வரைப்படம்
சுவஸ்திக் சின்னம்

வேதங்களில் சிந்து நதி ’ஸிந்து’ ’இந்து’ என்று இரண்டு விதங்களில் குறிப்பிடப்பட்டது. பாரசீகர்கள் இதனை ’ஹிந்து’ என்று மாற்றியபின்னர் கிரேக்கர்கள் ’இன்டஸ்’ என்று மாற்றினர். இதிலிருந்தே இந்தியா, இந்தியன் என்ற சொற்கள் இந்தியர்களால் உருவாக்கப்பட்டன.[42] வேதங்கள் கி.மு 5000 ஆண்டுகளுக்கு முன்னரும் இன்றிருப்பது போலவே இருந்ததென்று பண்டித பாலகங்காதர திலகர் நிருபித்திருக்கிறார்.[43]

இந்தோ ஆரியப் பண்பாடும், வேத சமஸ்கிருதத்தின் மூலம் வாய் வழியே கூறப்பட்ட, இந்து மதத்தினருக்கு புனிதமான வேதங்களும் வேத காலத்தின் வேராக அமைந்திருந்தது. பண்டைய எகிப்து, மெசொப்பொத்தேமியாவில் கண்டெடுக்கப்பட்ட ஆப்பெழுத்துகளை அடுத்து, இந்த வேதங்கள் மிகப்பழமை வாய்ந்தவை. இந்த வேதகாலம் கி.மு 1700 முதல் 500 வரை நீடித்திருந்தது. இது இந்து மதத்திற்கு பலமான அடித்தளத்தை இட்டுக் கொடுத்ததுடன் இந்தியாவின் சமூகத்தின் பண்பாட்டிற்கும் பல நல்வித்துக்களை இட்டது. பெரும்பாலாக கங்கைக் கரையோர சமவெளிகளில் வாழ்ந்த ஆரியர்கள் மேற்கிந்தியாவில் வேத நாகரிகம் பரவ காரணமாக இருந்தனர்.

ஆர்யா(ārya, Aryans) என்று தங்களை அழைத்துக்கொண்ட இந்தோ- ஆர்யர்களின் குடிப்பெயர்ப்பினால் ஏற்பட்டது இந்த காலம். டாசியஸ் என்று அவர்களுக்கு முன் இந்த பகுதியில் குடியிருந்தவர்களின் நாகரிகத்தை விட இவர்களது நாகரிகம் செம்மையாக இருந்தது. ஆரியர்களின் பூர்விகம் பெரும் சர்ச்சைக்குள்ளான ஒரு விஷயமாகும். ஒரு சிலர் அவர்கள் மத்திய ஆசியப் பகுதியிலிருந்து மையம் கொண்டிருந்தார்கள் என்றும் மற்றும் ஒரு சிலர் அவர்கள் ஏற்கனவேயே இந்தியாவில் இந்து சமவெளி நாகரிகத்திக்கு முன்னரே குடியிருந்தனர் என்றும் கூறுகின்றனர். இதற்கு அவர்கள் ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள ஒரு சில வாக்கியங்களையும் ஆதாரமாகக் கொண்டு பேசுகின்றனர். இந்தியாவுக்கு வெளியே என்ற கோட்பாடு, ஆரியர்கள் இந்தியாவிலிருந்து மத்திய ஆசியாவுக்கும், ஐரோப்பாவிற்கும் சென்றார்கள் என்று குறிப்பிடுகிறது.19 ஆம் நூற்றாண்டின் பின் பகுதியில் வந்த ஆரிய படையெடுப்புகள் கோட்பாடுகளை மாற்றி அறிஞர்கள், ஆராய்ச்சிகள் செய்து நம்பக்கூடிய கோட்பாடுகளை கொண்டுவந்துள்ளனர்.

ஹரப்பர்களின் புறக்கணிக்கப்பட்ட அந்த பழைய வேத கால சமுதாயத்தில் குருக்கள் இனத்தவர் மிகுந்து இருந்தனர்.[44]ரிக் வேதகட்டத்திற்கு பிறகு ஆரிய சமுதாயத்திற்கு வேளாண்மையிலும் ஈடுபாடு இருந்தது. நான்கு வர்ண பேதங்களையும் அது பின்பற்றியது. இந்து மதத்தின் ஆதாரமாக இருக்கும் வேதத்தை தவிர உபநிடதஙகள், இராமாயணம், மகாபாரதமும் கூட இந்த காலத்தில் தான் எழுதப்பட்டன.[45] தோல் பொருள் கண்டுபிடிப்புகள் இந்த இன்டோ-ஆர்யர்களின் வசிப்பு மஞ்சள் களிமண் வர்ணத்தை கொண்ட பானைகள் உறுதிப்படுத்துகின்றன.[46]

லிச்சாவி நாட்டின் தலைநகரமான வைஷாலி

[47] வட இந்தியப் பகுதிகள் கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு – (கிமு 1450 - கிமு 1200), சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடுகள் (கிமு 1200 - கிமு. 600) கொண்டிருந்தது.

மேலும், கிமு. 1000 ஆண்டில் எழுதப்பட்ட அதர்வண வேதம் இரும்புக் காலத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. இது இரும்பை கருப்பு உலோகம் என்று குறிப்பிட்டுśyāma ayas, இரும்பு காலத்தை பற்றி கூறிய முதல் இந்திய எழுத்து வடிவம் என்ற பெருமையையும் சேர்த்துக்கொண்டது. இந்த வர்ணம் பூசிய சாம்பல் நிற பாத்திர நாகரிகம் மேற்கிந்தியாவில் கி.மு.1100 முதல் கிமு 600 வரை நீடித்திருந்தது.[46] இந்த காலத்தின் இறுதி பகுதியில் ஒரு குல அமைப்பின் மூலம், மகாஜனபதங்கள் என்ற இராச்சியங்களின் எழுச்சியைப் பார்க்க முடியும்.

மகாஜனபதங்கள்

கௌதம புத்தர், பிகாரில் உள்ள புத்த கயா என்ற இடத்தில் பல்கு நதிக்கரையில், ஞானம் பெறுவதற்கு முன்னர் அவர் தீவிரமாக துறவறம் மேற்கொண்டார்.
மகாவீரரின் பிறப்பு பற்றியும் ஓர் இலையைப் பற்றிய விவரம் (24 வது சமண தீர்த்தங்கரர்), கல்ப சூத்ராவிலிருந்து, கி.பி.1375-1400.
பதினாறு மகாஜனபதங்கள்

வேதா காலத்தின் இறுதிக் காலகட்டத்தில் இந்திய துணை கண்டத்தில் நிறைய சிறு ராஜ்ஜியங்களும், நகர மண்டலங்களும் வரத் துவங்கின என்று பல இந்து, புத்த, சமண மத இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.கி.மு. 600 ஆம் ஆண்டில், பதினாறு முடியாட்சிகளும் மற்றும் மகாஜனபதங்கள் என்று அழைக்கப்பட்ட குடியரசும் தோன்றியன. இந்த மகாஜனபதத்தில் அங்கம், கோசலை, காசி, மகதம், வஜ்ஜி, மல்லம், சேதி, வத்சம், குரு,பாஞ்சாலம், மத்சம், சூரசேனம், அஸ்மகம், அவந்தி, காந்தாரம், காம்போஜம் இருந்தன. இந்த ஜனபதங்கள் சிந்து-கங்கைச் சமவெளியில் இன்றைய ஆப்கனிஸ்தானிலிருந்து, வட இந்தியா மற்றும் மத்திய இந்தியா வரை பரவி இருந்தன. இந்தியாவை நகரப்படுத்தி பார்த்ததில் இந்து சமவெளி நாகரிகத்துக்கு பிறகு வேத காலமே அடுத்த இடத்தை பிடிக்கிறது. ஆரம்பகால இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட பல குலங்கள் துணைக்கண்டத்தின் இந்த பகுதியில் காணப்பட்டன. இதில் சில அரசர்கள் வழி வழியாய் வந்தனர், மேலும் சிலர் அமைச்சரவையால் தேர்ந்தெடுக்கப் பட்டனர். படித்தவர் சமஸ்க்ருதத்தில் பேசுகையில், மேற்கிந்தியாவின் பொது மக்கள் பிரக்ரித்தி மற்றும் பாலி மொழியில் பேசினார். கி.மு.500/400 ல்,சித்தார்த்த கவுத்தமர் காலத்திலேயே இந்த பதினாறு ராஜியங்களும் ஒன்று கூடி நான்கு பெரும் அரசுகளாக உருமாறின.அவை வட்சா,அவந்தி,கோசலா,மகதா ஆகும்.[48]

இந்து மதப்படி செய்த சடங்குகள் எளிதானவையாக இல்லாததால் குரு குலத்தை சேர்ந்தவர்கள் அவற்றை செய்தனர். தத்துவங்களைப் புகட்டும் உபநிசதங்கள் பிற்கால வேத காலத்திலும் மகாஜனப்பதங்களின் ஆரம்ப காலத்திலும் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. (அதாவது கி.மு. 600 இலிருந்து 400 வரை). இந்திய தத்துவங்களில் தனது ஆதிக்கத்தை கொண்டிருந்த உபநிடதங்கள், பௌத்தம் மற்றும் சமண மதங்களும் வித்திட்டது. இது சிந்தனைக்கான பொற்காலமாகக் கருதப்பட்டது.கி.மு 537 ல், கௌதம புத்தர் போதி நிலையை அடைந்து ஞானம் பெற்றவராகக் கருதப்பட்டதால் அவர் புத்தர் என்று அழைக்கப்பட்டார்.அதே சமயத்தில் சமண சமயத்தின் 24 வது தீர்த்தங்கரரான) மகாவீரர் புத்த மதத்தை போல் இருந்த மற்றும் ஒரு சமயத்தை கோட்படுத்தினார். அதை மக்கள் சமண மதம் என்று அழைத்தனர்.[49] வேதங்களிலும் ஒரு சில தீர்த்தங்கர்களை பற்றிய குறிப்புடன் ஸ்ரமண இயக்கத்தின் முனிகளின் ஒழுங்கமைவு பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.[50] புத்தரின் பிரச்சாரங்கள் மற்றும் சமண மதத்தின் கோட்பாடுகள் துறவறம் பற்றி பிரக்ரிதி மொழி கொண்டு மக்களிடம் கொண்டு சேர்த்தன. இந்து மதத்துடனும், ஆன்மீக கோட்பாடுகளுடனும் தொடர்பு கொண்டிருந்த இந்த இரு சமயங்களும், சைவ உணவமைப்பு பற்றியும், விலங்குகளிடத்தில் கருணைகாட்டுதல் பற்றியும், அஹிம்சா வழி பற்றியும் கூறுகின்றன.

சமண மதம் இந்தியாவுக்குள் இருக்கையில் புத்த மதத்தின் துறவியர்கள் நாடு கடந்து சென்று மத்திய ஆசியா, கிழக்கு ஆசியா, திபெத், இலங்கை மற்றும் தென் கிழக்கு ஆசியாப் பகுதிகளில் புத்த மதத்தைப் பரப்பினர்.

பெர்சிய மற்றும் கிரேக்க படையெடுப்புகள்

கி.மு.323 ல் ஆசியா, நந்தன் மற்றும் கங்கரிடை ராஜ்ஜியங்களை அலேக்சாண்டேரின் ராஜ்ஜியத்துடனும் அவரது தோழமை ராஜ்ஜியங்களுடன் ஒப்பிட்டு பார்த்தல்

இந்திய துணைகண்டத்தின் பெரும்பாலான வட மேற்கு பகுதிகள் (தற்பொழுதைய கிழக்கு ஆப்கனிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்) பெர்சிய அகய்மேனிட் சம்ராஜ்ஜியாதின் போது டாரியஸ் தி கிரேட் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தன. (கி.மு. 520 ல்). அதற்கு பிறகும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு அதே சாம்ராஜ்ஜியம் நிலைத்து இருந்தது.[51] கி.மு. 326 ல்அலேக்சாண்டேர் ஆசியா மைனரை கைப்பற்றினார். அத்துடன் அகைமேனிட் சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சி இந்திய துணைகண்டத்தின் வட மேற்கு பகுதிகளில் ஒரு முடிவுக்கு வந்தது.அலேக்சாண்டேர் புரு மன்னனை ஹைடாச்பெஸ் போர்களத்தில் (இன்றைய பாகிஸ்தானின் ஜீலத்திற்கு அருகே) வீழ்த்தி பஞ்சாபை கைப்பற்றினார்.[52] பின்னர் அவர் கிழக்கு திசையில் சென்று நந்தர்கள் சாம்ராஜ்ஜியம், மகத நாடு மற்றும் வங்காளத்தின் கங்காரிடை சாம்ராஜ்ஜியத்தை ஒடுக்கினார். அவரது படைகள் மேலும் பலத்த இந்திய படைகளை காலத்தில் சந்திக்க பயந்து போரை ஹைபாசிஸ் (இன்றைய பீஅஸ்) என்ற இடத்தில் கங்கை நதி கரையோரம் புறக்கணித்தது.அலேக்சாண்டேர் தனது தளபதி கொயினசுடன் பேசிய பிறகு, திரும்பி செல்ல முடிவெடுத்தார்.

இந்த பெர்சிய மற்றும் கிரேக்க படையெடுப்புகள் இந்திய நாகரிகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தின.பெர்சிய நாட்டின் அரசியல் அமைப்புகள், இந்த துணை கண்டத்தில் மவுரியா சாம்ராஜ்ஜியத்தில் தென்பட்டன.காந்தார( இன்றைய கிழக்கு ஆப்கனிஸ்தான் மற்றும் வட மேற்கு பாகிஸ்தான் பகுதிகள்) என்னும் இடம் இந்திய, பெர்சிய, மத்திய ஆசிய மற்றும் கிரேக்க பண்பாடுகளின் உறைவிடமாக திகழ்ந்தது. இது கிரேக்க புத்த மதம் போற கலவையான பண்பாடுகளை உருவாக்கிற்று. இந்த வகையான மகாயான புத்த மதம் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தது.

மவுரியர்களின் காலம்

பேரரசர் அசோகரின் கீழ் மவுரிய சாம்ராஜ்ஜியம்

பண்டைய இந்தியாவை மவுரிய சாம்ராஜ்ஜியம் கிமு 322 முதல் கிமு 185 முடிய மவுரிய அரச மரபால் ஆட்சி செய்யப்பட்டது. அது அரசியல் மற்றும் போர் சார்ந்தவற்றில் மிகவும் வலிமை மிக்கதாகவும், புவியியலில் பரந்தும் இருந்தது. சந்திர குப்தா மவுரியரால் துவங்கப்பட்ட இந்த மவுரிய சாம்ராஜ்ஜியம் பேரரசர் அசோகரின் காலத்தில் தழைத்தோங்கியது.இந்த சாம்ராஜ்ஜியம் மேற்கு பகுதியில் இமாலயத்திலிருந்து கிழக்கு பகுதியில் அஸ்ஸாம் வரை பரந்திருந்தது.வடக்கு பகுதியில் அது பாகிஸ்தானையும் தாண்டி சென்று, பலோசிச்தானையும் (இப்போதைய ஆப்கனிஸ்தானின் எறாத்து மாகாணம் மற்றும் கந்தகார் மாகாணங்களை தன்னுள் அடக்கியது. சந்திர குப்தா மவுரியாவும் பிந்துசாராவும் மத்திய மற்றும் தென் இந்திய பகுதிகளைக் கைப்பற்றி இருந்தாலும், கண்டறியாத பல குலத்தினர் குடியிருந்த, பெரும் பகுதியான கலிங்கத்தை பேரரசர் அசோகர் வென்றார்.

பழைய மத்தியகாலப் பேரரசுகளின் பொற்காலம்

சுங்கர் மற்றும் சாதவாகனர் சாம்ராஜ்ஜியங்களின் எழுச்சியின் போது பண்டைய இந்தியா.
பண்டைய இந்தியாவின் குசான் பேரரசு
இராஜந்திர சோழரின் ஆட்சியில் சோழ சாம்ராஜ்ஜியம் கி.பி 1030
பதாமி சாளுக்கியர் சாம்ராஜ்ஜியம்

இந்த மத்திய காலம் பண்பாடு வளர்ச்சிக்கு பெயர் போன ஒன்றாகும். சதவாகனர்கள் அல்லது ஆந்திரா என்று அழைக்கப்பட்டவர்கள் மத்திய மற்று தென்னிந்திய பகுதிகளை கி.மு. 230 ல் ஆட்சி செய்தனர். சதவாகன சாம்ராஜ்ஜியத்தில் ஆறாவுதாக வந்த சதகர்ணி மன்னர் மேற்கிந்தியாவின் சுங்க சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்திய பெருமையைப் பெற்றவர் ஆவார். கௌதமிபுத்ர சதகர்ணி இந்த சாம்ராஜ்ஜியத்தின் மற்றும் ஒரு மேலார்ந்த மன்னர் ஆவார். இமாலய பகுதியிலிருந்த குலிந்தப் பேரரசு கி .மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து மூன்றாம் நூற்றாண்டு வரை நிலைத்து இருந்தது. கி.மு. முதல் நூற்றாண்டின் பாதியில் நடு ஆசியாவிலிருந்து வந்த குஷானர்கள் வட மேற்கு இந்தியப் பகுதி மீது படை எடுத்தனர். அவர்களது ராஜ்ஜியம் பெஷாவரிலிருந்து, மத்திய கங்கை பகுதியிலிருந்து மற்றும் வங்காள விரிகுடா வரை இருந்தது.அது பண்டைய பாக்திரியா (மேற்கு ஆப்கனிஸ்தான் பகுதி) மற்றும் தென் தஜகிச்தானத்தையும் தன்னுள் கொண்டிருந்தது. வடக்கு மற்றும் மத்திய இந்திய பகுதியை ஆண்ட சகர்கள், வடக்கு சத்திரப்பதிகளாக கருதப்பட்டனர். கிபி 35- முதல் 405 வரை இவர்கள் இந்தோ சிதியர்களை அடுத்தும், மேற்கு பகுதியை ஆண்ட குஷானர்களின் மற்றும் தெற்கு பகுதியை ஆண்ட சாதவாகனர்களின் சமகாலத்திலும் வாழ்ந்தனர்.

மேலும் பாண்டிய ராஜ்ஜியம், சோழ ராஜ்ஜியம், சேர ராஜ்ஜியம், கதம்ப ராஜ்ஜியம், பல்லவ ராஜ்ஜியம், சாளுக்கிய ராஜ்ஜியம் போன்ற பல சாம்ராஜ்ஜியங்களை, தென்னிந்தியாவில் பல கால கட்டங்களில் கொண்டிருந்தது.பல தென்னிந்திய ராஜ்ஜியங்கள் தங்களது எல்லையை கடலுக்கு வெளியேவும் எடுத்து சென்றனர். இது தென் கிழக்கு ஆசியா வரை இருந்தது.இந்த ராஜ்ஜியங்கள் தங்களுக்குள்ளேயும் , மத்திய மாநிலங்களுடன் ஆட்சிக்காக ஏராளமான போர்கள் இட்டன.களப்பிரர் எனும் புத்த ராஜ்ஜியம் தற்காலிகமாக சோழ, சேர பாண்டிய ராஜ்ஜியங்களை தன கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.

வட மேற்கு கலப்பு பண்பாடுகள்

இந்திய கிரேக்க ராஜ்ஜியத்தை துவக்கியவர் தேமேற்றியஸ் I "தி இன்வின்சிபில் " (கி.மு.205–171).

இந்தோ-கிரேக்கர்கள், இந்தோ-பார்த்தியர்கள், இந்தோ சசானியர்கள் போன்ற கலப்பு பண்பாடுகள் வட மேற்கு இந்திய துனைகண்டத்தில் செழித்தது. [[கிரேக்க பாக்திரியா பேரரசு|இந்தோ-பாக்திரியா பேரரசர் டெமெத்ரியஸ் கிமு 180-இல் இந்தியா மீது படையெடுத்த போது வடமேற்கு இந்தியாவில் கிரேக்கப் பண்பாடு கலகக்கத் துவங்கியது. இது இரண்டு நூற்றாண்டுகளுக்கு நீடித்து இருந்தாலும் இதனை ஆண்ட கிரேக்க மன்னர்கள் (ஏறத்தாழ முப்பது ஆண்டுகள்) ஒருவரோடு ஒருவர் போரிட்டுக் கொண்டே இருந்தனர். நடு ஆசியாவிலும், ஐரோப்பியாவிலும் வாழ்ந்த பண்டைய சிதியர்கள் எனும் சகர்கள் பண்பாட்டின் ஒரு கிளை தான் இந்தோ சிதியர்கள் பண்பாடு ஆகும்.இந்த சிதியர்கள் தெற்கு சைபீரியாவிலிருந்து, பாக்திரியா, சோக்தியானா, பாக்ராம், காஷ்மீர், காந்தாரம் வழியாக இந்தியா வந்து சேர்ந்தனர். இவர்களது ராஜ்ஜியம் மத்தியகாலத்தின் இரண்டாம் நூற்றாண்டிலிருந்து முதல் நூற்றாண்டு வரை நீடித்து இருந்தது. பாரசீகத்தை ஆண்ட பகலவரிகளின் ஒரு கிளையினரான இந்தோ-பார்த்தியர்கள் தற்காலத்து ஆப்கனிஸ்தான் மற்றும் மேற்கு பாகிஸ்தான் பகுதிகளையும் கந்தாராப் பகுதியின்பிறகால குசானப் பேரரசின் குசுலா கட்பிசஸ் போன்ற குறுநில மன்னர்களிடமிருந்து போரிட்டுப் பெற்றனர். பாரசீகத்தின் சாசானியர்கள், குப்தப் பேரரசு இருந்த காலத்தில் வாழ்ந்தனர். இவர்கள் தற்கால பாகிஸ்தானில் ஆட்சி செய்ததை நாம் அங்கு இருக்கு பாரசீகப் பண்பாட்டின் மூலம் தெளிவு படுத்திக் கொள்ளலாம். இதுவே இந்தோ சசானியர்கள் கலாச்சாரத்தின் பிறப்பிடம் எனவும் கூறலாம்.

இந்தியாவுடன் ரோமர்களின் வணிகம்

உரோமைப் பேரரசர் அரசர் அகஸ்ட்டஸ் காலத்திய நாணயம், புதுகோட்டை, தென்னிந்தியாவில் கண்டெடுக்கப்பட்டது.

இந்தியாவுடன் ரோமானியர்கள் தங்கள் வணிகத்தை கிபி முதல் நூற்றாண்டு முதல் ஆரம்பித்தனர். இது உரோமைப் பேரரசர் அகஸ்ட்டஸ், பன்டைய எகிப்தை ஆண்ட தாலமி வம்சத்தினரை வென்ற பின்னரே நடந்தது. இந்தியாவின் மத்திய ராஜ்ஜியங்கள், ரோமை மிகப்பெரிய பங்காளியாகக் கொண்டிருந்தது.

சைசியசின் எக்ஸொடஸ் கி.மு. 130 ல் இந்த வணிகத்தை ஆரம்பித்து வைத்தார், என்று ஸ்ட்ராபோ குறிப்பிடுகிறார்.(II.5.12.[53]) அகஸ்டஸ்காலகட்டங்களில் ஆண்டுக்கு ஒருகாபால் என்ற கணக்கில், மயோஸ் ஹார்மொசிலிருந்து இந்தியாவரை கப்பல் போக்குவரத்து இருந்தது.இங்கு ஏராளமாக தங்கம் வாணிகத்துக்காக உபயோகிக்கப்பட்டது. பின்னர் இதே தங்கத்தை குசானர்களும் உருக்கி தங்களது காசுகளை அச்சடிக்க உபயோகித்துக்கொண்டனர். இதனை மூத்த பிளினி என்ற வரலாற்று ஆசிரியர் குற்றம் சாற்றி கூறியுள்ளார் (NH VI.101)

இந்த வணிகப் பாதைகளும் துறைமுகங்களும் கிபி முதல் நூற்றாண்டில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் எரித்திரியக் கடலின் பெரிப்ளசு கையேடுகள் மூலம் அறிய முடிகிறது.

குப்தா அரச மரபு

குப்தப் பேரரசு
காளிதாசரின் சமஸ்க்ருத நாடகமான சகுந்தலம், குப்த சாம்ராஜ்ஜியத்தின் வரப்பிரசாதம்

4 ஆம் மற்றும் 5 ஆம் நூற்றாண்டுகளில் குப்த பேரரசு வட இந்தியாவை ஒன்றுபடுத்தியது. குப்தர்களின் காலத்தை இந்து மதத்தின் மறுமலர்ச்சி பொற்காலமாகக் கருதப்பட்ட இந்த காலத்தில் இந்து பண்பாடு, அறிவியல் அரசியல் அமைப்புகள் வளர்ச்சி அடைந்தன. இந்த பேரரசில் மிகவும் பிரபலமானவர்கள்:முதலாம் சந்திரகுப்தர், சமுத்திரகுப்தர் மற்றும் இரண்டாம் சந்திரகுப்தர் மற்றும் முதலாம் குமாரகுப்தர் காலத்தில் பழமைவாய்ந்த புராணங்கள் எழுதப்பட்டது என்றும் கூறுவர். மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஹூணர்களின் படையெடுப்பின் காரணமாக இந்த குப்த சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வந்தது. 6 ஆம் நூற்றாண்டில், இந்த பேரரசின் முடிவுக்கு பின்னர் இந்தியாவில் மேலும் பல குறுநில மன்ன்னர்கள் ஆண்டனர்.இந்த அரசு உருக்குலைந்த பின்னரும் குப்த குலத்தை சேர்ந்த ஒரு சிலர் மகத நாட்டை ஆட்சி செய்தனர். இறுதியாக இந்த குலத்தை வென்றவர் ஹர்ஷவர்தனர் . இவர் தனது ராஜ்ஜியத்தை 7 ஆம் நூற்றாண்டின் பாதியில் துவக்கினார்.

ஹெப்தலைட்டுகள் குழுவை சார்ந்த வெள்ளை நிற ஹூணர்கள், 5 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், ஆப்கனிஸ்தானில் உள்ள பாமியான் என்ற தலைநகரை கொண்டு ஆட்சிசெய்தனர். இவர்கள் குப்தர்கள் சாம்ராஜ்ஜியம் குலைய காரணமாக இருந்ததால் இவர்களே பொற்காலத்தின் முடிவுக்கும் கரணம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.என்ன இருந்தாலும் இந்த சர்ச்சைகள் தென்னிந்திய பகுதியையும், டெக்கான் பகுதியையும் எள் அளவும் பாதிக்கவில்லை.

பிந்தைய மத்தியகால இராச்சியங்கள் - தனிச்சிறப்புடைய காலம்

இந்தியாவின் தனிச்சிறப்புடைய காலம் மேற்கு பகுதிகளில், குப்தர்களின் காலத்தில் துவங்கியது, மேலும் இது ஹர்சப் பேரரசர் ஹர்ஷவர்தனர்வின் காலத்திலும் (7 ஆம் நூற்றாண்டு) தொடர்ந்தது. பின்னர் சிறு சிறு அரசுகளான கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு (கி. பி 650–1036), பாலப் பேரரசு(கிபி 750–1174), இராஷ்டிரகூடர் (கிபி 753–982), பரமாரப் பேரரசு(கிபி 800–1327), உத்பால வம்சம் (கிபி 855– 1003), தேவகிரி யாதவப் பேரரசு (கிபி 850 – 1334), காமரூப பால அரசமரபு கிபி 900 – 1100) சோலாங்கிப் பேரரசு (கிபி 950 – 1300), மேலைச் சாளுக்கியர் (கிபி 973 – 1189), சந்தேலர்கள் (கிபி 954 – 1315), லெகரா பேரரசு (கிபி 1003–1320), போசளப் பேரரசு (கிபி 1040–1346), சென் பேரரசு (கிபி 1070–1230), கீழைக் கங்கர் (கிபி 1078–1434), காக்கத்தியர்கள் (கிபி 1083–1323), காலச்சூரி பேரரசு (கிபி 1130–1184), [[தேவா பேரரசு (11-12 நூற்றாண்டு) பின்னர் வட இந்தியா மற்றும் வடமேற்கு இந்தியா மற்றும் கிழக்கு இந்தியாவின் பெரும்பகுதிகளை தில்லி சுல்தானகம் (கிபி 1206–1526) ஆண்ட காலத்தில் இந்துக்களின் அகோம் பேரரசு (கிபி 1228–1826), ரெட்டிப் பேரரசு (கிபி 1325–1448), விஜயநகரப் பேரரசு (கிபி 1336–1646), கஜபதி பேரரசு (கிபி 1434–1541) மற்றும் சியா இசுலாமியர்களின் தக்காணத்து சுல்தானகங்கள் (கிபி 1490–1596) ஆண்டனர். இந்தியாவின் தற்கால தமிழ்நாடு மற்றும் கேரளாப் பகுதிகளை தவிர்த்து இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் முகலாயப் பேரரசு (1526–1858) ஆண்ட காலத்தில் தென்னிந்தியாவின் மகாராட்டிரத்தில் மராட்டியப் பேரரசு (1674–1820) ஆண்டது. தற்கால தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் சேரர் , சோழர் மற்றும் பாண்டியர்களின் ஆட்சி நடைபெற்றது.

இந்த காலத்தில் இந்தியாவின் மிக சிறந்த கலைகள் தலையெடுத்தன. இதில் தனிச்சிறப்புடைய வளர்ச்சி காணப்பட்டது. ஆன்மீகம் மற்றும் இந்து, புத்த, மற்றும் சமண மதங்களின் தத்துவ அமைப்புகள் வளர்ச்சியடைந்தன.

தக்காணத்தின் இராஷ்டிரகூடர்கள், மால்வாவின் பிரதிகாரர்கள் மற்றும் வங்காளத்தின் பாலர்கக்கு மையமாக வைத்திருந்த இடம் கன்னோசி முக்கோணம் விளங்கியது.

7 ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவின் பெரும்பகுதிகளை கன்னோசி மன்னன் ஹர்சவர்தனர் ஒன்று படுத்தினார். இது குப்தர்களுக்கு பின்னர் நடந்தது. ஹர்ஷாவின் மறைவுக்கு பின்னர் இந்த ராஜ்ஜியமும் குலைந்தது. கிபி 7 லிருந்து 9 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சிக்காக மேற்கிந்தியாவில் மூன்று அரச மரபுகள் போட்டியிட்டுக் கொண்டனர். அவர்கள், மாலுவாவின் பிரதிஹாரா (பின்னாளில் கனவுஜ்), வங்காளத்தின் பாலர்கள், மற்றும்டெக்கான் பகுதியின் ராஷ்டிரகூடர்கள் ஆவர்.பலார்கிடமிருந்து பின்னாட்களில் சேனா ராஜ்ஜியம் ஆட்சியை கைப்பற்றியது. அதே சமையத்தில் ப்ரதிஹாரா ராஜ்ஜியம் சிறு சிறு ராஜ்ஜியங்களாக மாறியது.அதன் பின்னர் வந்த ராஜபுதர்கள் இந்தியாவில் தங்கள் ஆட்சியை வெள்ளையரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெரும் நாள் வரை சரிவர செய்தனர்.நாம் அறிந்த வரை ராஜபுத ராஜ்ஜியம் முதல் முதலில் ( 6 ஆம் நூற்றாண்டு) ராஜஸ்தானில் தான் இருந்தது. அதற்கும் பிறகு சிறு சிறு ராஜபுத ராஜ்ஜியங்கள் மேற்கிந்தியாவை ஆண்டன.சவுதான் குலத்தை சேர்ந்த ப்ரித்வி ராஜ் சவுதான் என்கின்ற ராஜபுதர்,இஸ்லாமிய சுல்தான்களை எதிர்த்து வீரத்துடன் போரிட்டார்.கிழக்கு ஆப்கனிஸ்தானை, மேற்கு பாகிஸ்தானை மற்றும் காஸ்மீரை மத்திய 7 ஆம் நூற்றாண்டிலிருந்து பதினோராம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை சாகி அரச மரபு ஆட்சி புரிந்தது.ஹர்ஷாவுடன் ஒற்றுமை எண்ணம் மேற்கிந்தியாவில் மறைந்தாலும், இந்த கொள்கை அப்படியே தென் பகுதிக்கு மாறியது.550 – 750 சாலுக்கிய சாம்ராஜ்ஜியம் மத்திய மற்றும் தென்னிந்தியாவை கர்நாடகாவிலுள்ள பதாமியிலிருந்து ஆண்டது. அதே கர்நாடகாவிலுள்ள கல்யாணியிலிருந்து 970-1190 ஆட்சி புரிந்தது.சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் என்றால் நாம் காஞ்சியின் பல்லவர்களை நினைவு கூறலாம்.சாளுக்கிய சாம்ராஜ்ஜியத்தின் முடிவுக்கு பின்னர் அவர்களது எதிரிகளான ஹலேபிடின் ஹோய்சாளர்கள், வாரங்களின்காகடியர்கள், தேவகிரியின் சூனா யாதவர்கள்மற்றும்கலசூரி என்ற தென் கிளையை சேர்ந்தவர்கள், பன்னிரண்டாம் நூற்றாண்டின் பாதியில் சாளுக்கிய ராஜ்ஜியத்தை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர்.பின்னர் வந்த காலங்களில் தமிழ் நாட்டின் மேற்கு பகுதியில் சோழ ராஜ்ஜியமும் கேரளாவில் சேர ராஜ்ஜியமும் எழுந்தன.1343 ல் இந்த ராஜ்ஜியங்களின் முடிவு விஜயநகரத்தின் எழுச்சிக்கு வழி வகுத்தது.இந்த தென்னிந்தியா ராஜ்ஜியங்கள் தங்களது ஆட்சிகளை கடல் தாண்டி தென் கிழக்கு ஆசியாவில் இந்தோனேசியா வரை கொண்டிருந்தனர்.தென்னிந்தியாவில் இருந்த துறைமுகங்கள் இந்து மகா சமுத்திரத்தில் நடந்த வாணிகத்தில் தங்களை ஈடுபடுத்தியிருந்தன. இந்த வாணிகம் வடக்கு பகுதியில் ரோமர்களிருந்து கிழக்கு பகுதியில் தென் கிழக்கு ஆசியா வரை நடைபெற்றது.[54][55] பதினான்காம் நூற்றாண்டில் டில்லி சுல்தான்களின் வருகை வரை தாய்மொழிகளில் இருந்த இலக்கியங்களும், கட்டிடக் கலையும் செழிப்பாக இருந்தன.இந்து மதத்தை பின்பற்றிய விஜயநகர அரச மரபு (பாமினி ராஜ்ஜியம்) இஸ்லாமிய ஆட்சியருடன் விரோதம் கொண்டது. இந்த இரு அமைப்புகளுக்கு நடுவே நடந்த கருத்து வேறுபாடுகள் ஒன்றன் மேல் மற்றொன்று தீராத பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.டில்லியிலிருந்து ஆட்சி செய்த சுல்தான்களால் விஜயநகரம் தனது வலுவை இழந்தது.

இந்தியாவின் தொல்பொருள் ஆரய்ச்சியாளர்கள் இந்தியாவின் 55,000000 கல்செதுக்கங்களில், 55 சதவிகிதமான கல்வெட்டுகள் தமிழில் உள்ளன என்றும் 60 சதவிகிதம் தமிழ்நாட்டில் உள்ளன என்றும் கண்டறிந்துள்ளனர்.[56]

இஸ்லாமிய சுல்தான்கள்

பிஜாபூரிலுள்ள கோல் கும்பாஸ் பைசான்டைன் ஹாகியா சோபியாவை அடுத்து உலகிலேயே இரண்டாவது பெரிய குவிமாடமாகும்

இந்தியாவின் வட தோழமை நாடான பெர்சியாவின் மீது ஆரபியர்கள் படையெடுத்த போது, நாகரிகத்தையும், வைர சுரங்கங்களையும், வெளிநாட்டு வாணிகத்திலும் செழித்தோங்கிய இந்தியாவையும் அவர்கள் கண்ணிட்டனர்.ஒரு சிறிய காலத்திற்கு போராட்டங்கள் இருந்தாலும் மேற்கிந்தியாவை இஸ்லாமிய சுல்தான்கள் கைப்பற்றினர். நாளடைவில் மேற்கு துணை கண்டத்தையும் தங்களது வசம் கொண்டுவந்தனர்.ஆனால் துருக்கியரின் படையெடுப்புக்கு முன்னர் இஸ்லாமியர்கள் இந்திய கடலோர பகுதிகளுடன் வாணிகம் கொண்டிருந்தனர். முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் அவர்கள் இந்து மகா சமுத்திரம் வழி அராபியாவிலிருந்து கேரளா வந்தனர். இதனால் ஆபிரகாமிய மத்திய கிழக்கு மதம் எழுந்தது. இது தென்னிந்தியாவில் புனிதமாகக் கருதப்பட்ட இந்து தருமங்களிலிருந்து வேறு பட்டிருந்தது.பின்பு பாமினி சுல்தான்களும் டெக்கான் சுல்தான்களும் தென்னிந்தியாவில் செழிப்புடன் இருந்தனர்.

டில்லி சுல்தான்கள்

உலகின் மிக உயரிய செங்கல் மசூதிக்கம்பம் , குதுப் மினார்,அடிமை அரச மரபினை சார்ந்த குத்புதின் ஐபகினால் கட்டப்பட துவங்கியது.

12 மற்றும் 13 ஆம் நூறாண்டுகளில் துருக்கியர்கள் மற்றும் பாஷ்டுன்கள் ராஜபுதர்களின் கைகளில் இருந்த மேற்கிந்தியாவின் மீது படையெடுத்து டில்லி சுல்தான்களாக மாறினர்.[57] அதன் பிறகு வந்த டில்லியை சார்ந்த அடிமை அரச மரபுமேற்கிந்தியாவின் பெரும்பகுதியை குப்தர்கள் போலவே கைப்பற்றியது. அனால்கில்ஜி அரச மரபுமத்திய இந்தியாவில் கைப்பற்றி இருந்தாலும் அவர்களால் இந்த பக்டுதியை ஒன்று படுத்தி கட்டிக் காக்க இயலவில்லை.இந்திய கலாச்சாரத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது இந்த சுல்தானியம்.இந்த இந்திய இஸ்லாமிய கலாசாரங்களின் கலப்பு கட்டிடக் கலை, இசை, மதம். உடைகளில் அழியாத மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.நாடோடி இனம் அல்லது முகாம் என்ற பொருளை கொண்ட உருது மொழி (துருக்கிய மொழியில்) டில்லி சுல்தான்கள் காலில் பிறந்தது. இது சமஸ்க்ருத பிரகிருத்தி பெர்சியா, துருக்கி, அரபு மொழியுடன் கலந்ததால் ஏற்பட்டது.டில்லி சுல்தானியும் பெண் ஆட்சியாளரை நியமித்த ஒரு சில ராஜ்ஜியன்களுள் ஒன்று. இது ரசியா சுல்தானை ஆட்சியில் அமர்த்தியது.(1236–1240).

1398 ஆண்டில் துருக்க மங்கோலிய அரசர் தைமூர் டில்லியை சார்ந்த துக்ளக் அரச மரப மன்னரான சுல்தான் நசீருதீன் முஹம்மதின் ஆட்சியை பிடிக்க முனைப்புடன் செயல் பட்டார்.[58] சுல்தான் டிசம்பர் 17, 1398 அன்று தோல்வியுற்றார். தைமூர் டில்லியை அடைந்த பின் அதனை கொள்ளையடித்து, அழித்து, துயரமான நிலையில் விட்டுச் சென்றார்.

முகலாய காலம்

17 ஆம் நூற்றாண்டில் முகலாய சாம்ராஜ்ஜியத்தின் ஏறத்தாழ பரப்பளவு.
முகலாயர்களால் கட்டப்பட்ட தாஜ் மஹால்

1526 ல் தைமூரிலிருந்து தைமூர் மற்றும் செங்கிஸ்கான் வம்சவழி வந்த பபூர், கைபர் பாசின் வழி வந்து முகலாய சாம்ராஜ்ஜியத்தை அமைத்தார். இது இரு நூறு ஆண்டுகளுக்கு நீடித்து இருந்தது.[59] 1600 களில் முகலாய அரச மரபு இந்திய துணைகண்டத்தின் முக்காவாசி பகுதிகளை ஆண்டு கொண்டிருந்தது. 1707 க்கு பிறகு அது தன வல்லாண்மையை இழக்கத் துவங்கியது. அது 1857 இந்திய சுதந்திரப் போர் அல்லது 1857 இந்திய புரட்சி காரணமாக முற்றிலும் தொலைந்து போனது.இந்த காலம் இந்திய வரலாற்றில் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்தியது. இந்து மக்கள் முகலாய பேரரசர்களால் ஆட்சி செய்யப்பட்ட காலம் இது. பெரும்பாலான இஸ்லாமிய மன்னர்கள் இந்து மதத்தையும் அதனது கலாச்சாரத்தையும் ஆதரித்தனர்.பபுரின் பேரரான அக்பர் இந்துக்களுடன் நல்லுறவை ஏற்படுத்த முனைப்பட்டார்.ஆயினும் பின்னர் வந்த அவுரங்கசீப் போன்ற மன்னர்கள் இஸ்லாமிய ஆதிக்கத்தை திணித்தனர். இதனால் பல கோவில்கள் அழிக்கப்பட்டன. இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் பெரும் வரிகளைக் கட்டினர்.மவுரிய சாம்ராஜ்ஜியத்தைப்போல பரந்த எல்லைப்பரப்பை கொண்டிருந்த முகலாய சாம்ராஜ்ஜியம் வலுவை இழந்தவுடன் அதனை ஈடுகட்ட சிறு சிறு ராஜ்ஜியங்கள் வரத் துவங்கின.செல்வசெழிப்புடன் இருந்த அரச மரபாக முகலாய சாம்ராஜ்ஜியம் திகழ்ந்தது. 1739 ல்,நதேர் ஷா முகலாய படையை கர்னல் போரில் வீழ்த்தினார். இந்த வெற்றியை தொடர்ந்து நதேர் ஷா தில்லியைக் கைப்பற்றி அதனுள் இருந்த செல்வத்தை தன்பால் எடுத்துச் சென்றார். அதில் மயில் சிம்மாசனமும் ஒன்றாகும்.[60]

முகலாய காலத்தில் உச்சக் கட்டத்தில் முகலாய சாம்ராஜ்ஜியத்தின் அரசியல் அமைப்புகள் மிகவும் வலிமையாக இருந்தன, அதன் பின்னர் வலுவிழந்த இந்த முகலாயர்களை வீழ்த்த மராத்திய ராஜ்ஜியங்கள் வீரியம் கொண்டன.முகலாயர்கள் இந்திய கலாச்சாரத்துடன் ஒன்று கூடி செயல்பட்டதே அவர்கள் நீண்ட காலம் ஆட்சி புரிந்ததன் ரகசியமாகும்.இந்த ரகசியத்தை டில்லியின் சுல்தான்கள் அறியாததால் அவர்கள் வெகு விரைவில் ஆட்சியை இழந்தனர்.இந்த கொள்கையை பெரிதும் மதித்து செயல் பட்டவர் பேரரசர் அக்பர் ஆவார்.சமண மதம் தழைத்து இருந்த அந்த காலத்தில் அக்பர் அமரி என்ற ஒன்றை அமல் படுத்தினார்.இந்து விலங்குகளை கொல்லக்கூடாது என்ற சட்டமாகும்.அவர் ஜசியா என்ற வரியை ரத்து செய்தார் (முஸ்லிம் அல்லாதவர்களுக்கு). முகல்லாய மன்னர்கள் இந்திய மன்னர்களுடன் ஒப்பந்தங்கள் செய்து கொண்டனர், இந்திய ராணிகளை மணந்து கொண்டனர், அவர்கள் தங்களது துருக்கிய பெர்சிய கலாச்சாரத்தை இந்திய முறைகளுடன் இணைத்து இந்தோ-சாராசெனிக் கட்டிடக் கலையை உண்டாக்கினார்கள்.இந்த வழி முறையை மறந்த நிலையிலும், இஸ்லாமிய ஆதிக்கமும், மக்களை கொடுமைப்படுத்துதலும் ஒன்று சேர்ந்து அவுரங்கசீபின் காலத்திக்கு பிறகு இந்த சாம்ராஜ்ஜியம் வலு இழக்க காரணமாக இருந்தது. அவுரங்கசீப் மற்ற அரசர்களைப் போல் அல்லாது பொதுமக்கள் பெரிதும் விரும்பாத பல கொள்கைகளை கையாண்டார்.

முகலாயர்களுக்கு பின்னர் வந்த ராஜ்ஜியங்கள்

ஹர்மந்திர் சாகிப் அல்லது பொற்கோயில், சீக்கியர் வழிபாடுத்தலம், அமிர்தசரஸ்

முகலாயர்களுக்கு பிறகு அவர்களது இடத்தை மராத்தியர் பிடித்தனர். இதே சமயத்தில் ஐரோப்பியர்களின் நடவடிக்கைகளுக்கும் இந்தியாவில் அதிகரித்தது.சிவாஜி துவக்கிய மராத்திய அரசு அவர் காலத்தில் மிகவும் வலிமையாக இருந்தது.18 ஆம் நூற்றாண்டுகளில் பேஷ்வாவின் ஆட்சியில் தன்னை மராத்திய ராஜ்ஜியமாக மாற்றியமைத்துக் கொண்டது. 1760 ல், இந்த சாம்ராஜ்ஜியம் இந்திய துணைகண்டம் முழுவதிலும் தனது கொடியை நாட்டி இருந்தது.இந்த மராத்திய விரிவாக்கம் அஹ்மது ஷா அப்டாலி தலைமையின் கீழ்வந்த ஆப்கனிய படையால், மூன்றாம் பானிபெட் போரின் மூலம் தடுக்கப்பட்டது.(1761). கடைசி பெஷ்வாவாகிய பாஜி ராவ் II, ஆங்கிலேயரால் மூன்றாம் ஆங்கிலேய மராத்திய போரில் வீழ்த்தப்பட்டார்.

மைசூர் தென்னிந்தியாவில் ஒரு சிற்றரசாகும். இது கி.பி. 1400 ல் வாடியார் அரசு மரபினரால் துவக்கப்பட்டது.வாடியர்களின் ஆட்சி ஹைதர் அலியாலும் அவரது மகன் திப்பு சுல்தானாலும் ஒரு முடிவுக்கு வந்தது. ஆங்கிலேய-மைசூர்ப் போர்கள் மூலம் ஐதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஒடுக்கப்பட்டு, மைசூர் அரசு ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டும் சுதேசி சமஸ்தானமாக மாறியது. ஈடுப. ஹைதராபாத் 1591 ல், கோல்கொண்டாவை சேர்ந்த குதுப் ஸாஹியால் ஆக்கப்பட்டது. ஒரு சிறிய ஆசிப் ஜாவின் கீழ் நடந்த முகலாய ஆட்சிக்கு பிறகு மீண்டும் ஹைடிராபாதை சேர்ந்த நிசாம் அழ மலக் 1724 ல் ஆட்சியைப் பிடித்தார்.1724 இலிருந்து 1948 வரை ஹைதராபாத் நிஜாம் வம்சாவளியினத்தினரால் ஹைதிராபாத் ஆட்சி செய்யப்பட்டது. ஆங்கிலேய தென் இந்தியாவில் மைசூரும், ஹைதிராபாதும் மன்னராட்சி செய்த நாடுகளாக மாறின.

சீக்கிய மதத்தினை சேர்ந்த ஒரு சிலரால் உண்டான பஞ்சாபிய ராஜ்ஜியம் அரசியல் நல்லபடியாக பஞ்சாபை ஆட்சிசெய்தது.இந்தப் பகுதி ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்ட இறுதிப் பகுதிகளில் ஒன்று.ஆங்கிலேய-சீக்கியப் போர்கள் சீக்கிய ராஜ்ஜியத்தின் உருக்குலைவுக்கு வழி வகுத்தது. 18 ஆம் நூற்றாண்டில் கோர்கா, ஷா மற்றும் ரானா ஆட்சியாளர்களால் நேபாளம் உருவாக்கப்பட்டது. அவர்கள், தங்களை பாதுகாத்துக் கொண்டதுடன் ஒற்றுமையாகவும் வாழ்ந்தனர்.

சேர பேரரசு

பண்டைய தமிழகத்தை ஆட்சிபுரிந்த 3 பேரரசுகளில் சேர பேரரசு ஒன்றாகும். தற்போதைய கேரளாவின் பெரும்பான்மையான பகுதிகள்,தமிழ்நாட்டின் சில பகுதிகளையும் கொண்ட பகுதி சேர பேரரசு ஆகும். முக்கிய துறைமுகம் முசிறி ஆகும். முதல் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து முசிறி துறைமுகம் வழியாக உரோமை நாட்டுடன் வணிக தொடர்பு சிறப்பாக நடந்ததாக மார்க்கோ போலோ தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

சோழ பேரரசு

சோழ பேரரசில் குறிப்பிட தக்க அரசர்களில் முக்கியமானவர்கள் இருவர், 1. ராஜராஜ சோழன் , 2. ராஜேந்திர சோழன் . இவர்களுடைய ஆட்சி காலத்தில் சோழ பேரரசு பறந்து விரிந்து காணப்பட்டது .சோழர்கள் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இரு குலங்கள் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். சோழர் என்னும் பெயர் எவ்வாறு வழங்கத்தொடங்கியது என்பது தெரியவில்லை, சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடும்பம் அல்லது குலத்தின் பெயராகும் என்று பரிமேலழகர் என்னும் புலவரால் கருதப்பட்டது. சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று கூறப்பட்டாலும் இது மரபு வழிச்செய்தியே தவிர வரலாற்று ஆதாரமற்றது. இது எவ்வாறாயினும் சோழ அரச மரபின் மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர். சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது.

== பாண்டிய பேரரசு == பாண்டியர்கள் தமிழகத்தை ஆட்சி புரிந்த சேர சோழ மன்னர்கள் போல் தென் தமிழகத்தை மதுரையை தலை நகரமாக கொண்டு ஆட்சி செய்தவர்கள் இந்தியாவை திறம்பட ஆட்சி புரிந்த மன்னர்களில் இவர்களுக்கும் பங்கு உண்டு

நாட்டின் குடியேற்றத்தை அமைத்த காலம்

வாஸ்கோ ட காமா 1498 ல் கடல் வழியே இந்தியாவுக்கு வழி கண்டு பிடித்தார்.இதனால் இந்திய ஐரோப்பிய வாணிகம் வளர்ச்சியடைந்தது.[61] போர்ட்யுகல் மக்கள் கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பேவில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர்.இவர்களையடுத்து டச், ஆங்கிலேயர்கள் வாணிக முகாம்களை சூரத்தின் வடக்கு கரையோரத்தில் நிறுவினர்.[62] 1619 ல் பிரெஞ்சு காரர்களும் அவர்களை பின் தொடர்ந்தனர்.உள்ளுக்குளே நடந்த போர்களும், குழப்பங்களும் ஐரோப்பியர் தேடிக்கொண்டிருந்த நுழைவு வாயிலாக அமைந்தன. இதன் மூலம் அவர்கள் அரசியல் ஆதிக்கத்தையும் செலுத்த ஆரம்பித்தனர்.மற்ற எல்லா ஐரோப்பியா நாடுகளும் தங்களது வசம் இருந்த பகுதிகளை ஆங்கிலேயரிடம் நாளடைவில், அதாவது இந்த ஒரே நூற்றாண்டில் இழந்தனர். இதற்கு விதிவிலக்காக பிரெஞ்சு நாட்டவர்களின் பாண்டிசெரி, சந்தேர்நாகூர் மற்றும் டச்சின் ட்ராவனகொர் துறைமுகமும், மற்றும் போர்ட்யுகல் நாட்டினரின் கோவா, டாமன், டியூ இருந்தன.

ஆங்கிலேயர் அரசாட்சி

ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனம் முகலாய பேரரசர் ஜெஹாங்கிரின் அனுமதிப் பெற்ற பிறகு இந்தியாவுடன் 1617 ல், வணிகம் கொள்ள ஆரம்பித்தது[63] நாளடைவில் அவர்களது ஆதிக்கத்தினால் சட்டப்படி (டி-சூரே ) இருந்த முகலாய பேரரசர் பருக் சியார் அவர்ர்களுக்கு தஸ்டக்குகள் அல்லது வரியில்லாமல் வங்காளத்தில், 1717 ல், வாணிகம் செய்ய அனுமதி வழங்கினார்.[64] வங்காள மாகாணத்தை தனது வம்சாவளியின் (டி-பாக்டோ ) மூலம் ஆண்ட, வங்காளத்தின் நவாப் சிராஜ் உத் தௌலா ஆங்கிலேயரரின் இந்த முயர்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இது 1757 ல் பிளாசே போருக்கு வழி வகுத்தது. இதில் இராபர்ட் கிளைவின் தலைமையில் சென்ற கிழக்கிந்திய நிறுவனத்தின் படை நவாபை வீழ்த்தியது. நிலங்களை அரசியல் நோக்குடன் ஆங்கிலேயர்கள் ஆக்கிரமித்ததில் இதுவே முதல் முறை.இந்த நிறுவனம் கிளைவை முதல் வங்காள ஆளுநராக 1757 ல் நியமித்தது.[65] 1764 ல் பக்சார் போருக்கு பின்னர் வங்காளத்தை ஆட்சி செய்ய முகலாய பேரரசர் ஷா அலாம் II இடமிருந்து அனுமதிப்பெற்றது. இதுவே இந்தியா முழுதும் ஆங்கிலேயரின் ஆட்சிக்குள் வர முதல் படியாக இருந்தது.3}[113]வங்காளத்தின் வணிகத்தை தான் மட்டுமே கையாண்டது பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்.அவர்கள் ஒரு புது நில வரியை அறிமுகப்படுத்தியது. பெர்மனென்ட் செட்டில்மென்ட் என்ற இதன் வழியாக நிலங்கள் பியூடல் முறையில் கையாளப்பட்டன. (வங்காளத்தின் ஜமீன்தாரை பார்க்க) 1850 முடிவகளில் கிழக்கிந்திய நிறுவனம் இந்திய துணைகண்டத்தின் பெரும்பாலான பகுதிகளை (இன்றைய பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசம்) தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.அவர்கள் பிரித்து ஆள் என்ற கொள்கையை தீவிரமாகப் பயன்படுத்தினர். அரசர்களால் கட்டுபடுத்தப்பட்ட மாநிலங்களுக்கும், சமுக மற்றும் மத சார்ந்த குழுக்களுக்கும் இருந்த பகைமையை இவர்கள் மிகவும் அறிவு பூர்வமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.[[|ஆங்கிலேயரின் கம்பெனி ஆட்சியின் பொழுது, அரசாங்கத்தின் சொல்லப்படாத கொள்கைகளால்இந்தியாவில் பஞ்சங்கள் உருவாகின. மிக கொடுமையான பயங்கர பஞ்சம் (கிரேட் பாமின் ஆப் 1876–78), 6.1 மில்லியனிலிருந்து 10.3 மில்லியன் மக்கள் வரை கொன்றது [66]. அதனை தொடர்ந்த 1899–1900 இந்திய பஞ்சம், 1.25 இலிருந்து 10 மில்லியன் மக்கள் வரை இறந்தனர்.[66] மூன்றாம் பிளக் பாண்டமிக் தனது ஆதீனத்தை சீனாவில் கொண்டிருந்தது. மத்திய 19 ஆம் நூற்றாண்டில் துவங்கிய அதுகண்டங்கள் முழுதும் அல்லது இந்தியாவில் மட்டும் 10 மில்லியன் மக்களை கொன்றது.[67] இந்த பஞ்சங்களும் வியாதிகளும் அதிகரித்த போதிலும் இந்திய துணைகண்டத்தின் மக்கள் தொகை 1750 ல் 125 மில்லியனாக இருந்து,1941 ல் 389 மில்லியனாக மாறியது 1941.[68]

பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தை எதிர்த்து நடந்த முதல் இயக்கம் 1857 இந்திய கலகம் என்ற பெயர் பெற்றது. இதனை இந்திய விடுதலையின் முதல் போர் என்றும் அழைப்பர். ஒரு வருடத்துக்கு பிறகு, மிகுந்த நடவடிக்கைகள் எடுத்த பிறகுதான் இந்த கழகத்தை ஆங்கிலேயர்களால் கட்டுப்படுத்த முடிந்தது.இந்த கலகத்திற்கு மானசீக தளபதியாக விளங்கிய முகாலாய பேரரசர் பகதூர் ஷா சபர் பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இதனால் முகலாய வம்சாவளியே ஒழிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்திய கம்பெனி ஆட்சிப் பொறுப்பை தன்னிடம் ஆங்கிலேய முடியாட்சி மாற்றி கொண்டது. இது இந்தியாவில் ஒரு குடியேற்ற நாடாகவே பார்த்து. இது நிறுவனத்தின் கீழ் இருந்த நிலங்களை வெளிப்படையாகவும் மற்ற நிலங்களை அரசர்கள் ஆண்ட நாடுகள் என்ற போர்வை கீழ் மறை முகமாகவும் ஆட்சி செய்தது. ஆங்கிலேயரிடமிருந்து ஆகஸ்ட் 1947 இல் விடுதலைப்பெற்ற இந்தியாவில் மொத்தம் 565 அரசர்களால் ஆளப்பட்ட நாடுகள் இருந்தன.[69]

இந்திய சுதந்திர இயக்கம்

1937 ல் மகாத்மா காந்தி மற்றும் ஜவகர்லால் நேரு
இந்தியாவின் தேசிய கீதத்தை எழுதிய ரவீந்திரநாத் தாகூர் ஆசியாவிலிருந்து நோபெல் பரிசு பெற்ற முதல் அறிஞர்.

பிரிடிஷ் வைஸ்ராய்க்கு அறிவுரை கூற இந்திய கவுன்சிலர்கள் நியமிக்கப்பட்டனர். இதுவே இந்திய சுதந்திரத்துக்கும் வடக்கு முறை குடியரசுக்கும் முதல் படியாக இருந்தது.[70] மாநிலவாரியான கவுன்சில்களில் நியமிக்கப்பட்டதன மூலம் கவுன்சிலர்கள் சட்டம் இயற்றுகிற கவுன்சில்களிலும் தங்களை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டனர்.[71] 1920 இலிருந்து மோகன்தாசு கரம்சந்த் காந்தி போன்ற தலைவர்கள் ஆங்கிலேயருக்கு எதிரான மக்கள் இயக்கங்களை துவக்கி பாடுபட்டனர்.ஆங்கிலேயரை எதிர்த்து படைகளை சேர்த்தார் சுபாஷ் சந்திர போஸ் என்ற மாபெரும் சுதந்திரப் போராட்டத் தலைவர்.பகத் சிங் என்ற மற்றும் ஒரு சுதந்திரப் போராட்டத் தலைவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் புரட்சிகள் ஏற்படுத்த காரணமாக இருந்தார். அவர் ஷகீத் பகத் சிங் என்று அழைக்கபடுகிறார். ஷகீத் என்றால் கொள்கைவாதி என்று பொருள்.முதல் விடுதலை போராட்ட வீரர் கட்டலங்குளம் வீரன் அழகுமுத்து கோன் வரியைக் கட்ட மறுத்து ஆங்கிலேய தளபதியான கான்சாகிப் எதிர்த்து போரிட்டு அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுத்தார்.அவர் சிந்திய ரத்தமே இந்திய விடுதலை போராட்டதிற்கு வித்திட்டது. சுதந்திர போராட்ட வீரரில் வீரபாண்டிய கட்டபொம்மனும் ஒருவர்.ஆங்கிலேயருக்கு எதிரான இந்தியா சுதந்திரத்துக்கான புரட்சி இயக்கத்தின் செயல்பாடுகளும் இந்தியத் துணைக்கண்டத்தில் நடைபெற்றன. இந்த இயக்கங்கள் அனைத்தும் 1947 ல் இந்தியா சுதந்திரம் பெற உறுதுணையாக இருந்தன.

சுதந்திரம் மற்றும் பிரிவினை

ஆங்கில அரசு முகமதிய ஆட்சியையும் அது ஏற்படுத்திய அழிவுகளையும் முனைந்து பயின்று இந்து முஸ்லீம்களுக்கிடையேயான பிரச்சனைகளை முக்கியத்துவப்படுத்திக் காட்டுவதன் மூலம் இஸ்லாமிற்கு எதிரான அமைதியான கிறித்துவக் கொள்கையாக தனது காலனீய ஆட்சியைக் காட்ட முயன்றது என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மதத்தைத் தவிர பல காரணிகள் ஆட்சியைத் தீர்மானித்ததால், ஆராயும் வரலாற்றறிஞர்கள் ’இந்து ஆட்சி’, ’முகமதிய ஆட்சி’ என்று குறிப்பிடும் முறையை ஏற்பதில்லை.[72]

இந்த விதத்தில் இந்திய விடுதலை இயக்கம் நடந்த அதே சமயத்திலேயே இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நடுவே பிரச்சனைகளும் வளர்த்தெடுக்கப்பட்டன.1915 ல் மோகன்தாஸ் கரம்சந்து காந்தி இருதரப்பினருக்கும் இடையே ஒற்றுமையைக் கொண்டுவர பாடுபட்டார். ஆங்கிலேயர்கள் "இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம்", என்று வாக்களித்தனர்.

இந்தியாவின் அனைத்து பகுதிகளும் 1947 ல் சுதந்திரம் பெற்றன. பிரித்தானிய இந்தியாவை பாகிஸ்தான் மற்றும் இந்தியா என பிரிக்கப்பட்டது. இந்தியப் பிரிவினைக்குப் பின், பஞ்சாப் மற்றும் வங்காளத்தின் பிரிவினைக்கு முன்னர் மற்றும் ஒரு கலவரம் இந்துக்களுக்கும், சீக்கியருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மூண்டது. இது இந்தியாவின் பெரும்பகுதிகளில் அதாவது பஞ்சாப், வங்காளம் மற்றும் டில்லியில் நடந்தது. இதில் கிட்டத்தட்ட 500,000 மக்கள் இறந்தனர்.[73] இதே சமயத்தில் வரலாறே ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய மக்கள் குடியேற்றம் நடந்தது. இதில் 12 மில்லியன் இந்துக்கள், சீக்கியர்கள், இஸ்லாமியர்கள் புதிதாய் உருவான இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்தனர்.}

சுதந்திரத்திற்குப் பின்னர்

15 ஆகஸ்ட் 1947அன்று இந்திய விடுதலைக்குப் பின் பிரதம அமைச்சர் ஜவகர்லால் நேரு தலைமையில் முதல் இந்திய அரசு உருவானது. 26 சனவரி 1950இல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவான அதே நாளில் இந்தியா குடியரசு நாடானது. 1951-1952ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்ற முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. வல்லபாய் படேலின் பெரு முயற்சியால் 562 மன்னராட்சி நாடுகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1960ஆம் ஆண்டில் இந்திய மாநிலங்கள் மொழிவாரி மாநிலங்களாக மாற்றி அமைக்கப்பட்டது.

இந்திய விடுதலைப் பின்னர் ஜனவரி 30, 1948 ஆம் தேதி இந்தியாவின் தேசப்பிதா காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இந்திய_வரலாறு&oldid=3845005" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை