கஞ்சா நகரம், அசர்பைஜான்

அசர்பைஜான் நகரம்

கஞ்சா (ஆங்கிலம்:Ganja, Azerbaijan) என்பது அசர்பைஜானின் இரண்டாவது பெரிய நகரமாகும், இதன் மக்கள் தொகை 632,600 பேர் ஆகும்.[1][2] அதற்கு எலிசபெத் போல் என்ற பெயரும் உண்டு. உருசிய பேரரசின் காலத்தில். 1920 ஆம் ஆண்டில் சோவியத் யூனியனில் இணைக்கப்பட்டதன் முதல் பகுதியில் இந்த நகரம் அதன் அசல் பெயரான கஞ்சாவை மீண்டும் பெற்றது. இருப்பினும், அதன் பெயர் 1935 இல் மீண்டும் கிரோவாபாத் என மாற்றப்பட்டது மற்றும் சோவியத் காலத்தின் எஞ்சிய பகுதிகளிலும் அந்த பெயரைத் தக்க வைத்துக் கொண்டது. 1989 ஆம் ஆண்டில், பெரெத்தோரோயிகாவின் போது, நகரம் அதன் அசல் பெயரை மீண்டும் பெற்றது.

சொற்பிறப்பு

இடைக்கால இஸ்லாமிய காலத்தின் சில ஆதாரங்களில் இதன் பெயருக்குஒ ரு முஸ்லீம் அரபு ஆட்சியாளர்தான் காரணம் என்று கூறினாலும், நவீன வரலாற்றாசிரியர்கள் கஞ்சா என்ற பெயர் புதிய பாரசீக கஞ்ச் ("புதையல்") என்பதிலிருந்து உருவானது என்றும் அரபு மூலத்தில் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் நம்புகின்றனர். கஞ்சா அமைந்துள்ள பகுதி 9 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை அரான் என்று அழைக்கப்பட்டது; அதன் நகர்ப்புற மக்கள் முக்கியமாக பாரசீக மொழியில் பேசினர்.

நிலவியல்

கஞ்சா, கடல் மட்டத்திற்கு மேலே 400–450 மீட்டர் (1312 முதல் 1476 வரை) அமைந்துள்ளது . அஜர்பைஜானின் மேற்கே உள்ள குர்-அராசு தாழ்நிலப்பகுதியில் கஞ்சா-கசாக் சமவெளியில் அமைந்துள்ளது, 375   கிமீ (33   mi) பாகுவிலிருந்து விலகி. இது கஞ்சாச்சே ஆற்றின் இலெச்சர் காகசசு மலைத்தொடர்களின் வடகிழக்கு அடிவாரத்தில் அமைந்துள்ளது.[3][4]

நிர்வாக பிரிவுகள்

இன்று, கஞ்சா 2 ரேயன் எனப்படும் நிர்வாக மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.[5] இதன் நகரசபைத் தலைவர், தற்போது நியாஸி பேராமோவன்பவராவார்.[6] அவர் நகரத்தின் நிர்வாக அதிகாரத்தை உள்ளடக்கியுள்ளார்.[7][8] கஞ்சாவில் 6 நிர்வாகக் குடியேற்றங்கள் உள்ளன, அதாவது காசிகேண்ட், ஜவட்கான், சிக்சமான்லி, நடவன், மகசதி மற்றும் சாதிலி.[9]

மக்கள் தொகை

சுமார் 332,600 [10] குடியிருப்பாளர்களைக் கொண்ட பக்கூக்குப் பிறகு கஞ்சா அசர்பைஜானின் இரண்டாவது பெரிய நகரமாகும். ஆர்மீனியாவைச் சேர்ந்த ஏராளமான அசர்பைஜான் அகதிகள் மற்றும் நாகோர்னோ-கராபாக் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் அசர்பைஜான் சமூகத்தைச் சேர்ந்த இடம்பெயர்ந்தவர்களும் இந்த நகரத்தில் வசிக்கின்றனர். 2011 ல் அவர்களின் எண்ணிக்கை 33,000 என மதிப்பிடப்பட்டது.[11] கஞ்சாவில் லெசுகி மக்கள் 20,000 பேர் வசிக்கின்றனர்.

மதம்

கஞ்சாவின் நகர்ப்புற நிலப்பரப்பு பல சமூகங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் மத்தத்தை மிகப் பெரிய அளவிலான மக்கள் பின்தொடர்கிறார்கள்.. முசுலிம்களில் பெரும்பான்மையானவர்கள் சியா முசுலிம்கள், அசர்பைஜான் குடியரசு ஈரானுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிக உயர்ந்த சியா மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.[12] நகரின் குறிப்பிடத்தக்க மசூதிகளில் ஷா அப்பாஸ் மசூதி, கோய் இமாம் மசூதி, சாக்செவன்லர் மசூதி, கிரிக்லி மசூதி மற்றும் கசாக்லர் மசூதி ஆகியவை அடங்கும் .[13]

பொருளாதாரம்

கஞ்சாவின் பொருளாதாரம் ஓரளவு விவசாயமானது, ஓரளவு சுற்றுலா அடிப்படையிலானது, சில தொழில்கள் செயல்பாட்டில் உள்ளன. அருகிலுள்ள சுரங்கங்களில் இருந்து எடுக்கப்படும் தாதுக்கள் கஞ்சாவின் உலோகவியல் தொழில்களை ஊக்குவிக்கின்றது, இது தாமிரம் மற்றும் அலுமினியத்தை உற்பத்தி செய்கிறது.[14] மேலும் பீங்கான், பட்டு மற்றும் காலணி போன்றத் தொழில்களும் உள்ளன. சுற்றியுள்ள விவசாய நிலங்களிலிருந்து உணவு, திராட்சை மற்றும் பருத்தியை பதப்படுத்தும் பிற தொழில்களையும் கொண்டுள்ளன்

சுற்றுலா மற்றும் விற்பனையகம்

பாரம்பரிய கடைகள், நவீன கடைகள் மற்றும் பெரிய வணிக வளாகங்கள் கஞ்சாவில் விற்பனை வாய்ப்புகளின் கலவையை உருவாக்குகின்றன. சவாத் கான் தெரு என்பது பழைய நகரத்தில் அமைந்துள்ள பாரம்பரிய பொருட்கள் வாங்கும் தெருவாகும்.[15] 2014 மற்றும் 2017 க்கு இடையில் கட்டப்பட்ட,[16] கஞ்சா வளாகம் நகரின் மிகப்பெரிய வளாகமாக கருதப்படுகிறது.[17][18] கம்சா பூங்கா, தாகியேவ் வளாகம் மற்றும் அவுரா பூங்கா ஆகியவை பிற வர்த்தக விற்பனை மையங்களில் அடங்கும்.[19]

குறிப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை