ஜான் மெக்கெய்ன்

ஜான் சிட்னி மெக்கெயின் (John Sidney McCain; (ஆகஸ்ட் 29, 1936]] – [[ஆகத்து 25|ஆகஸ்ட் 25, 2018) அரிசோனா மக்களின் சார்பான ஐக்கிய அமெரிக்காவின் மேலவையில் மூத்த உறுப்பினர். இவர் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் தலைவர் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியுற்றவர்.

ஜான் மெக்கெயின்
United States Senator
from அரிசோனா
பதவியில் உள்ளார்
பதவியில்
ஜனவரி 3 1987
Serving with ஜான் கைல்
முன்னையவர்பேரி கோல்டுவாட்டர்
Member of the U.S. House of Representatives
from அரிசோனா's 1ம் district
பதவியில்
ஜனவரி 3 1983 – ஜனவரி 3 1987
முன்னையவர்ஜான் ஜேகம் ரோட்ஸ் ஜூனியர்
பின்னவர்ஜான் ஜேகம் ரோட்ஸ் III
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஆகத்து 29, 1936 (1936-08-29) (அகவை 87)
கோகோ சோலோ கடற்படை விமான நிருத்தம், பனாமா கனால் பகுதி
தேசியம்அமெரிக்கர்
அரசியல் கட்சிகுடியரசுக் கட்சி
துணைவர்(s)கேரல் ஷெப் (திருமணம்:1965, மணவிலக்கு:1980)
சிண்டி ஹென்ஸ்லி மெக்கெயின் (திருமணம் 1980)
பிள்ளைகள்7
முன்னாள் கல்லூரிஐக்கிய அமெரிக்கா கடற்படை அகாடெமி
தொழில்கடற்படையில் விமான ஓட்டுநர், அரசியல்வாதி
இணையத்தளம்http://www.johnmccain.com/ www.johnmccain.com

ஐக்கிய அமெரிக்க கடற்படை அகாடமியிலிருந்து 1958இல் மெக்கெய்ன் பட்டம் பெற்று கடற்படை விமான ஓட்டுநர் ஆனார். விமானம் தாங்கிக் கப்பல்களிலிருந்து நிலத் தாக்குதல் விமானங்களை ஓட்டியுள்ளார். வியட்நாம் போரில் அமெரிக்கப் படையில் சேர்ந்து பணி புரிந்து "ஃபோரெஸ்டல்" விமானம் தாங்கிக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் தப்பினார். அக்டோபர் 1967இல் வியட்நாம் தலைநகரம் ஹனோய் மேல் வான் தாக்குதல் செய்யும் பொழுது தனது விமானம் சுட்டப்பட்டு மெக்கெய்ன் காயம் அடைந்து வடக்கு வியட்நாமியர்களால் போர் கைதியாக சிக்கினார். 1973 வரை வியட்நாமிய சிறையில் போர் கைதியாக இருந்து வதை செய்யப்பட்டு இதனால் இன்று வரை சில உடல் ஊனங்கள் கொண்டுள்ளார்.

காப்டனாக கடற்படையிலிருந்து 1981இல் விலகி அரிசோனாவுக்கு நகர்ந்து அரசியல் உலகில் நுழைந்தார். 1982இல் கீழவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு பதவி காலங்களாக பணியாற்றியுள்ளார். பின்பு 1986இல் மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 1992, 1998, மற்றும் 2004இல் மீண்டும் வாக்கெடுப்பில் வெற்றிபெற்றார். பொதுவாக பழமைவாதக் கொள்கைகளை நம்புகிற மெக்கெய்ன் சில முக்கிய தலைப்புகள் தொடர்பான தனது கட்சிக்கு எதிராக கருதுகிறார். 1980களில் அரசியல் செல்வாக்கு இழிப்பு நடவடிக்கையில் ஆராய்ச்சி செய்யப்பட்டு குற்றமற்றவர் என்று தீர்ப்பு செய்யப்பட்டதற்கு பிறகு பிரச்சாரம் நிதி சீர்திருத்தம் (campaign finance reform) ஒரு முக்கிய தலைப்பாக உறுதி செய்து பிரச்சாரம் நிதியை திருத்த 2002இல் ஒரு சட்டத்தை படைத்தார். 1990களில் வியட்நாமுடன் உறவு மேம்படுத்துதலுக்கும் 2000களில் ஈராக்கில் முடிவு வரை சண்டையிடுவதுக்கும் மெக்கெய்ன் கவனம் பெற்றார். மேலவையில் பொருளாதார செயற்குழுவின் தலைவராக பணியாற்றி மாநிலங்களின் சிறிய திட்டங்களுக்கு நடுவண் அரசு நிதி கொடுதலை எதிர்த்தார்.

2000இல் குடியரசுத் தலைவர் தேர்தலில் குடியரசுக் கட்சி முதல்கட்ட தேர்தல்களில் ஜோர்ஜ் புஷிடம் தோல்வி அடைந்தார். 2008இல் மீண்டும் குடியரசுக் கட்சி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு போட்டியிட்டு மார்ச் 2008இல் முன்னோடி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். செப்டம்பர் 2008 குடியரசுக் கட்சி சம்மேளனத்தில் அதிகாரபூர்வமாக குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக, தனது தேர்வான துணைத் தலைவர் வேட்பாளர் சேரா பேலின் உடன் உறுதி செய்யப்பட்டார். 2008 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் பராக் ஒபாமாவால் தோற்கடிக்கப்பட்டார்.

வாழ்க்கை வரலாறு

குழந்தை பருவமும் கல்வியும்

பனமாவில் அமெரிக்க கடற்படை விமான நிலையத்தில் 1936இல் கடற்படை அலுவலர் ஜான் மெக்கெய்ன் சீனியர் மற்றும் ரொபேர்ட்டா ரைட் மெக்கெய்னுக்கு ஜான் மெக்கெய்ன் பிறந்தார்[2]. அப்பொழுது பனமா கால்வாய் அமெரிக்கக் கட்டுப்பாட்டில் இருந்தது[3]. மெக்கெய்னின் குலமரபில் ஆங்கிலேயர்கள், ஸ்காட்டியர்கள், மற்றும் ஸ்காட்-ஐரியர்கள் உள்ளனர்[4]. தனது தந்தையார் பல்வேறு கடற்படை நிலையங்களுக்கு நகர்த்தப்பட்டது காரணமாக மெக்கெய்ன் மொத்தத்தில் 20 பள்ளிகளில் படித்தார். 1951இல் வர்ஜீனியாவின் வடக்கு பகுதியில் தனது குடும்பம் குடியேறி மெக்கெய்ன் 1954இல் உயர்பள்ளியிலிருந்து பட்டம் பெற்றார்[5]. பின்பு ஐக்கிய அமெரிக்க கடற்படை அகாடெமியில் சேர்ந்தார். அங்கே இருக்கும் பொழுது குத்துச்சண்டை விளையாடினார். நான்கு ஆண்டுகளாக படித்து 899 மாணவர்கள் கொண்ட வகுப்பில் 894ஆம் நிலையில் 1958இல் பட்டம் பெற்றார்[6].

கடற்படை பயிற்சியும் வியட்நாமும்

கடற்படை அகாடமியிலிருந்து பட்டம் பெறுவதற்கு பிறகு இரண்டரை ஆண்டுகளாக விமான ஓட்டுநர் பயிற்சி செய்தார். ஆரம்பத்தில் இவர் தரம் தாழ்ந்த ஓட்டுநராக இருந்து இரண்டு முறையாக பறக்கும் பொழுது விபத்துகள் ஏற்பட்டன[7]. ஆனால் 1960இல் பயிற்சி முடிந்த காலத்தில் ஓர் அளவு கவனக்குறைவான ஆனால் வேலைத்திறனுள்ள ஓட்டுநராக தெரிந்து கொண்டுள்ளார்[7]. 1965இல் தனது முதல் மனைவி கேரல் ஷெப்புடன் திருமணம் செய்து அவரது இரண்டு பிள்ளைகளும் தத்தெடுத்தார்.

1967இல் "ஃபோரெஸ்டல்" என்கிற விமானம் தாங்கிக் கப்பலின் விமான படையை சேர்ந்து வியட்நாமுக்கு சென்றுள்ளார். ஜூலை 1967இல் ஃபோரெஸ்டல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் தப்பினார்[8]. தனது எரிகின்ற விமானத்திலிருந்து தப்பி பிற ஓட்டுநர்களுக்கு உதவி செய்யும் பொழுது ஒரு குண்டு வெடித்து கால்களிலும் மார்பிலும் குண்டு துண்டுகள் மோதின. இந்த நிகழ்வில் மொத்தத்தில் 134 கடற்படையினர்கள் உயிரிழந்தனர்[9][10]. பின்னர் வேறு விமான தாங்கிக் கப்பலின் படையை சேர்ந்து வடக்கு வியட்நாமில் தாக்குதல்கள் நடத்தி விருதுகளை பெற்றார்.

போர் கைதி

1967இல் அக்டோபர் 26ஆம் தேதி மெக்கெய்ன் தனது 23ஆம் தாக்குதல் பயணத்தை நடத்தும் பொழுது ஹனோய் நகர் அருகில் ஒரு ஏவுகணை தனது விமானத்தை தாக்கி மெக்கெய்ன் மூன்று மூட்டுகளை உடைத்தார்[11]. டுருக் பாச் ஏரியில் விழுந்து வடக்கு வியட்நாமியப் படையினர்கள் மெக்கெய்னை கண்டுப்பிடித்து கைது செய்தனர். ஹனோயில் ஹொவா லோ சிறையில் சிறைப்பிடிக்கப்பட்டார். வடக்கு வியட்நாமியப் படையினர்கள் அவரிடம் தகவல்களை பெறுவதற்காக மெக்கெய்னை அடித்து, குத்தி, வதை செய்தனர்[12]. மெக்கெய்னின் தந்தையார் இராணுவத்தில் ஒரு முக்கிய அதிகாரி என்று தெரிந்த பொழுது தான் வியட்நாமியர்கள் அவருக்கு மருத்துவ உதவி கொடுத்தனர். ஆறு வாரங்களால் மருத்துவமனையில் இருந்து 20 கிலோகிராம் எடையை இழந்தார். பின்னர் இரண்டு ஆண்டுகளாக சிறையில் தனிமைச் சிறை வைப்பில் இருந்தார்[13].

ஆகஸ்ட் 1968இல் மெக்கெய்னின் தந்தையாருக்கு நிலை உயர்வு பெறுவது காரணமாக வடக்கு வியட்நாமியர்கள் மெக்கெய்னுக்கு முன்னர் விடுவித்தல் அனுமதி கொடுத்தனர், ஆனால் பிற போர் கைதிகளுக்கு விடுவித்தல் கொடுக்கவில்லை. இதனால் மெக்கெய்ன் சிறையிலிருந்து வெளிவரவில்லை[14]. பின்னர் வியட்நாமியர்கள் மெக்கெய்ன் மீது கடும் வதை திட்டத்தை தொடங்கினர்[15]. இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை கயிறால் கட்டிவைத்து வடக்கு வியட்நாமியர்கள் மெக்கெய்னை அடித்தனர். இதனால் மெக்கெய்ன் ஒரு முறை தற்கொலை முயற்சி செய்தார். சிறையில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக இன்று வரை மெக்கெய்னால் கைகளை தலைக்கு மேல் தூக்க முடியாது. மொத்தத்தில் ஐந்து ஆண்டுகளாக போர் கைதியாக இருந்து 1973இல் விடுதலை பெற்றார்.

அமெரிக்காவுக்கு திரும்புவது

அமெரிக்காவுக்கு திரும்பி ஓர் அளவு புகழ்பெற்றவராக தெரியவந்தார்[16]. இரண்டு ஆண்டுகளாக காயங்களுக்கு நோய்த்தீர் மருத்துவம் செய்து மறுபடி விமான ஓட்டுநர் உரிமத்தை பெற்றார்[17]. 1976இல் புளோரிடாவில் ஒரு கடற்படை பயிற்சி குழுமத்தின் அதிகாரியாக பணியாற்றினார். 1977 முதல் மேலவைக்கு கடற்படை தொடர்பு அலுவலராக பணி புரிந்தார். இதுவே அரசியல் உலகில் தனது முதல் நுழைவு என்று மெக்கெய்ன் கூறியிருக்கிறார்[18]. 1980இல் தனது முதல் மணம் முறிந்து இரண்டாம் மனைவி சிண்டி மெக்கெய்னை திருமணம் செய்தார். 1981இல் 17 விருதுகளுடன் கடற்படையிலிருந்து காப்டனாக விலகி அரிசோனா மாநிலத்துக்கு நகர்ந்தார்.[19]

சட்டமன்றத்தில், 1982 முதல் 2000 வரை

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

ஜான் மெக்கெய்ன் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜான்_மெக்கெய்ன்&oldid=3714699" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை