ஜேம்சு வெப் விண்வெளித் தொலைநோக்கி

James web

ஜேம்சு வெப் விண்வெளித் தொலைநோக்கி (James Webb Space Telescope, JWST) என்பது அகச்சிவப்பு வானியலை நடத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு விண்வெளி நோக்காய்வுக்கலம் ஆகும். விண்வெளியில் உள்ள மிகப்பெரிய ஒளித் தொலைநோக்கி இதுவாது. இதன் பெரிதும் மேம்படுத்தப்பட்ட அகச்சிவப்புத் தெளிவுத்திறன் மற்றும் உணர்திறன், ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியால் பார்க்க முடியாத மிகவும் பழைய, தொலைதூர அல்லது மங்கலான பொருட்களையும் பார்க்க அனுமதிக்கிறது. இதன் மூலம் முதல் விண்மீன்கள் மற்றும் முதல் விண்மீன் திரள்களின் உருவாக்கம் மற்றும் வாழக்கூடிய வெளிக்கோள்களின் விரிவான வளிமண்டலத் தன்மை போன்ற வானியல் மற்றும் அண்டவியல் துறைகளில் பரந்த அளவிலான ஆய்வுகளை செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி
James Webb Space Telescope
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் மீள்தருகை முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது.
திட்ட வகைவானியல்
இயக்குபவர்விண்வெளி தொலைநோக்கி அறிவியல் நிறுவனம் (நாசா)[1] / ஐசா / கனடிய விண்வெளி நிறுவனம்
காஸ்பார் குறியீடு2021-130A
சாட்காட் இல.50463[2]
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்
திட்டக் காலம்
  • 2 ஆண்டு-கள், 3 மாதம்-கள், 23 நாள்-கள் (இதுவரை)
  • 5 12 ஆண்டுகள் (முதன்மைத் திட்டம்)[3]
  • 10 ஆண்டுகள் (திட்டம்)
  • 20 ஆன்டுகள் (எதிர்பார்க்கப்படும் வாழ்நாள்)[4]
விண்கலத்தின் பண்புகள்
தயாரிப்பு
  • நோர்த்ரொப் கிரம்மன்
  • பால் வான்வெளி
  • L3-ஆரிசு[1]
ஏவல் திணிவு6,161.4 கிகி (13,584 இறா.)[5]
பரிமாணங்கள்20.197 மீ × 14.162 மீ (66.26 அடி × 46.46 அடி)
திறன்2 கி.வா
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்25 திசம்பர் 2021 (2021-12-25), 12:20 ஒ.ச.நே
ஏவுகலன்ஆரியான் 5 ECA (VA256)
ஏவலிடம்கயானா விண்வெளி மையம், ELA-3
ஒப்பந்தக்காரர்Arianespace
Entered service12 சூலை 2022
சுற்றுப்பாதை அளபுருக்கள்
Reference systemசூரியன்–பூமி L2 சுற்றுவட்டம்
சுற்றுவெளிஏலோ சுற்றுவட்டம்
அண்மைசுற்றுப்பாதை வீச்சு250,000 கிமீ (160,000 மைல்)[6]
கவர்ச்சிசுற்றுப்பாதை வீச்சு832,000 கிமீ (517,000 மைல்)[6]
சுற்றுக்காலம்6 மாதங்கள்
Main telescope
வகைகோர்சு தொலைநோக்கி
விட்டம்6.5 மீ (21 அடி)
குவிய நீளம்131.4 மீ (431 அடி)
சேர்க்கும் பரப்பு25.4 மீ2 (273 ச.அடி)[7]
அலைநீளங்கள்0.6–28.3 μm (செம்மஞ்சள் முதல் நடு-அகச்சிவப்புக் கதிர் வரை)
Transponders
Band
பட்டையகலம்
  • S-band up: 16 kbit/s
  • S-band down: 40 kbit/s
  • Ka-band down: up to 28 Mbit/s
கருவிகள்
  • FGS-NIRISS
  • MIRI
  • NIRCam
  • NIRSpec]
கூறுகள்
  • ஒருங்கிணைந்த அறிவியல் கருவி தொகுதி
  • ஒளித் தொலைநோக்கி உறுப்பு
  • விண்கலம்

ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கித் திட்டச் சின்னம்
வெப்பின் முதல் ஆழமான புலம்

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், கனடிய விண்வெளி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து அமெரிக்காவின் நாசா நிறுவனம் இப்பணியை மேற்கொள்கிறது. இத்தொலைநோக்கிக்கு ஜேம்சு ஈ. வெப் என்பவரின் நினைவாக பெயர் சூட்டப்பட்டது. இவர் 1961 முதல் 1968 வரை மெர்க்குரி, செமினி, அப்பல்லோ திட்டங்களை செயல்படுத்திய காலகட்டத்தில் நாசாவின் நிருவாகியாக இருந்தார்.

இத்தொலைநோக்கி 2021 திசம்பர் 25 அன்று ஆரியான் 5 ஏவுகலன் மூலம் பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏவப்பட்டது. இது 2022 சனவரியில் சூரிய-பூமி L2 லெக்ராஞ்சியப் புள்ளியை அடைந்தது.

இத்தொலைநோக்கி மூலம் பெறப்பட்ட முதலாவது படிமம் 2022 சூலை 11 இல் பொதுமக்களின் பார்வைக்கு விடுவிக்கப்பட்டது.[8] தெற்கு அரைக்கோளத்தில் இருந்து தெரியும் வானத்தின் ஒரு சிறிய பகுதியை உள்ளடக்கிய ஆழமான-புல புகைப்படம், பூமியிலிருந்து 4.6 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள வோலன்சு விண்மீன் குழாமில் உள்ள SMACS 0723 என்ற விண்மீன் பேரடைக் கொத்தை சித்தரிக்கிறது.[9][10] தொலைநோக்கியின் அண்மை அகச்சிவப்புப் புகைப்படக் கருவி (NIRCam) மூலம் இப்படம் பிடிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான விண்மீன் பேரடைகள் இப்படத்தில் காணப்படுகின்றன, இது இதுவரை எடுக்கப்பட்ட ஆரம்பகால அண்டத்தின் மிக உயர்ந்த தெளிவுத்திறன் படமாகும்.

திட்டசெலவு

இதன் திட்டம், ஆராய்ச்சி என அனைத்திற்குமான செலவு 9.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சிக்காக 17 நாடுகள் கூட்டுச்சேர்ந்து உள்ளன. இதில் முக்கியமாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், மற்றும் கனடியன் விண்வெளி நிறுவனமும் பங்கு வகிக்கின்றன.

குவி ஆடிகள்

இதில் மொத்தமாக 18 அறுங்கோண வடிவிலான குவி ஆடிகள் பொருத்தப்படும், முதல் முயற்சியாக 2015 நவம்பர் 26 ஆம் தேதி அன்று முதல் ஆடி பொருத்தப்பட்டது. இந்த ஆடிகளில் ஒன்வொன்றும் எடை 40 கிலோ கிராம், 1.3 மீட்டர் சுற்றளவு கொண்டிருக்கும். ஆடிகள் அனைத்தும் பொருத்தப்பட்டபின்பு 6.5 மீட்டர் அளவு கொண்ட பெரிய ஒரே ஆடியாக காட்சி கொடுக்கும்.

ஹம்பிலில் உள்ள ஆடியின் தோற்றமும் ஜேம்ஸ் தொலை நோக்கியில் அமைந்துள்ள ஆடியின் தோற்றம்

ஒப்பீட்டு

முதன்மை கண்ணாடிகள் உதாரணங்கள் ஒப்பீடு

கூட்டாளிகள்

பங்குபெரும் நாடுகள்

காட்சியகம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை