ஜே. எம். கோட்ஸி

ஜே. எம். கோட்ஸி (John Maxwell Coetzee/kʊtˈsɪə, -ˈs/[1])(பிறப்பு - பெப்ரவரி 9, 1940, கேப்டவுண்) என்பவர் தென்னாபிரிக்க புதின எழுத்தாளர், கட்டுரையாளர்,மொழியியலாளர், மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவருக்கு 2003 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. கோட்ஸி இரு முறை புக்கர் பரிசும் பெற்றுள்ளார். 2002 ஆத்திரேலியாவில் உள்ள அடிலெயிடில் குடியேறினார்.[2] 2006 ஆம் ஆண்டில் ஆத்திரேலியக் குடியுரிமையைப் பெற்றார்.[3]

ஜே. எம். கோட்ஸி
பிறப்பு9 பெப்பிரவரி 1940 (அகவை 84)
கேப் டவுன்
படித்த இடங்கள்
பணிமொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர், பல்கலைக்கழகப் பேராசிரியர், எழுத்தாளர், prose writer, critic
வேலை வழங்குபவர்
  • National University of General San Martín
  • கேப் டவுன் பல்கலைக்கழகம்
சிறப்புப் பணிகள்Life & Times of Michael K
விருதுகள்இலக்கியத்திற்கான நோபல் பரிசு, Chevalier des Arts et des Lettres, புக்கர் பரிசு, Order of Mapungubwe, புக்கர் பரிசு

2013 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்க வலைதள பத்திரிக்கையாளரான ரிச்சர்டு பாப்லக் என்பவர் கோட்சியைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார். "எந்த ஐயமும் இன்றி போற்றிப் பாராட்டப் படவேண்டிய ஆங்கில மொழி எழுத்தாளர் எனப் பாராட்டுகிறார்[4]. 2003 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெறுவதற்கு முன்பாக எருசலேம் விருது, சி என் ஏ விருதினை மூன்று முறையும், பிரிக்ஸ் ஃபெமினா விருது, ஐரிசு டைம்ஸ் பத்திரிகையின் சர்வதேச புனைவு விருது, புக்கர் பரிசினை இருமுறையும் பெற்றிருக்கிறார். சமீப காலமாக கோட்ஸி விலங்குரிமைக்காகவும் விலங்கு வன்கொடுமைகளை எதிர்த்தும் குரல் கொடுத்து வருகிறார்.[5]

ஆரம்ப கால வாழ்க்கை

ஜான் மேக்ஸ்வெல் கோட்ஸி பெப்ரவரி 9, 1940 இல் தென்னாப்பிரிக்காவிலுள்ள கேப்டவுணில் பிறந்தார்.[6] இவருடைய தந்தை சாக்கரியாசு கோயட்ஸி அரசுப் பணியாளர் மற்றும் பகுதிநேர வழக்கறிஞர். இவருடைய தாய் வேரா கோயட்ஸி பள்ளிக்கூட ஆசிரியர் ஆவார்[7]. இவர்களுடைய குடும்பத்தில் ஆங்கிலம் தான் பெரும்பாலும் பேச்சு மொழியாகைருந்தது. ஆனால் ஜான் தனது உறவினர்களிடம் ஆப்பிரிக்க மொழியில் பேசினார்.[7]

கோயட்ஸி தனது ஆரம்பகாலத்தின் பெரும்பாலான நேரங்களில் கேப்டவுனிலும், வோர்செஸ்டரிலும் இருந்தார். இவருடைய தந்தை அரசு வேலையை இழந்தவுடன் இவருடைய குடும்பம் வோர்செஸ்டர் சென்றது.[8] அப்போது கோட்ஸிக்கு எட்டு வயதாகும். பின் புனித ஜோசப் கல்லூரியில் சேர்ந்தார். பின் கேப்டவுன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1960 ஆம் ஆண்டில் ஆங்கிலப் பிரிவில் கௌரவ இலங்கலைப் பட்டமும், 1961 ஆம் ஆண்டில் கணிதப் பிரிவில் கௌரவ இளங்கலைப் பட்டமும் பெற்றார்.[9]

விருதுகள், அங்கீகாரங்கள்

கோட்ஸி தனது வாழ்நாள் முழுவதும் பல விருதுகளைப் பெற்றுள்ளார்,விருதுகளைப் பெறுவதில் இவர் ஆர்வம் காட்டவில்லை, அதனாலேயே இவர் அதிகமாகப் புகழப்பட்டார்.[10]

புக்கர் பரிசுகள்

மான் புக்கர் பரிசு இரண்டுமுறை பெற்ற முதல் எழுத்தாளர் இவர் தான். 1983 ஆம் ஆண்டில் வெளிவந்த லைஃப் அண்ட் டைம்ஸ் ஆஃப் மிக்கேல் கே (மிக்கேல் கே வின் வாழ்க்கைப் பயணம்) மற்றும் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த டிஸ்கிரேசு (அவமானம்) என்பதற்காகவும் இரண்டுமுறை இந்த விருதினைப் பெற்றார்.[11] பின் 1988 மற்றும் 2001 இல் பீட்டர் கேரியும், 2009 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் ஹிலாரி மன்டலும் இருமுறை விருதினைப் பெற்றுள்ளனர்.

நோபல்பரிசு 2003

அக்டோபர் 2 2003 இல் சுவீடன் அகாதமியின் தலைவரான ஹொராஸ் எங்தல் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் இந்த வருடத்திற்கான இலக்கியத்திற்கான பிரிவில் நோபல் பரிசு பெறுபவராக ஜான் மேக்ஸ்வெல் கோட்ஸி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என இருந்தது. மேலும் இந்தவிருதினைப் பெறும் நான்காவது ஆப்பிரிக்க எழுத்தாளர் [12] எனும் சிறப்பினையும் நடைன் கார்டிமருக்குப் பிறகு இந்த விருதினைப் பெறும் இரண்டாவது தென்னாப்பிரிக்க எழுத்தாளர் எனும் பெருமை பெற்றார்.[13] இந்த விருது வழங்கும் நிகழ்வானது டிசம்பர் 10, 2003 இல் ஸ்டாக்ஹோமில்நடைபெற்றது.[13]

சான்றுகள்

வெளியிணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜே._எம்._கோட்ஸி&oldid=3800263" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை