தாதர்கள்

பிந்தைய சோவியத் நாடுகளிலுள்ள துருக்கி மொழி பேசும் மக்கள் குழு

தாதர்கள் (உருசியம்: татары); (தாதர்: татарлар) என்பவர்கள் ஒரு துருக்கிய இன மக்கள்[1] ஆவர். இவர்கள் ஆசியா மற்றும் ஐரோப்பாவில் வாழ்கின்றனர். "தாதர்" என்ற பெயரானது எழுத்து வடிவில் முதன்முதலில் குல் திசினின் நினைவுச்சின்னத்தில் 𐱃𐱃𐰺 (TaTaR) என்ற வடிவில் தோன்றுகிறது. வரலாற்றுரீதியாக "தாதர்கள்" என்ற சொல் பல்வேறு வகையான துருக்கிய-மங்கோலிய பகுதி-நாடோடிப் பேரரசுகளுக்கு வழங்கப்பட்டது. இவை தார்தரி என்று அழைக்கப்பட்ட பெரிய நிலப்பரப்பை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஆனால் இந்தச் சொல் தற்போது குறுகிய அளவிலேயே பயன்படுத்தப்படுகிறது. ஏதாவது ஒரு துருக்கிய மொழியைப்[1] பேசும் மக்களை மட்டுமே குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. 

தாதர்கள்
மொத்த மக்கள்தொகை
c. 6,800,000[சான்று தேவை]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 Russia (கிரிமியக் குடியரசைச் சேர்க்காமல்)5,319,877
 Uzbekistan477,875
 Ukraine (கிரிமியா உட்பட)319,377
 Kazakhstan240,000
 Turkey175,500
 Turkmenistan36,355
 Kyrgyzstan28,334
 அசர்பைஜான்25,900
 Romania24,137
 Israel15,000
 Belarus7,300
 France7,000
 Lithuania6,800-7,200
 China5,000
 Canada2,850
 Estonia1,981
 Poland1,916
 Bulgaria1,803
 Finland900
மொழி(கள்)
தாதர், உருசியம்
சமயங்கள்
சுன்னி இசுலாம், கிழக்கு மரபுவழி திருச்சபை

செங்கிஸ் கானின் தலைமையில் கி.பி. 1206ல் உருவாக்கப்பட்ட மங்கோலியப் பேரரசு தாதர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டது. செங்கிஸ் கானின் பேரன் படு கானின் (அநேகமாக கி.பி. 1207-1255) தலைமையில் மங்கோலியர்கள் மேற்கு நோக்கிப் பயணித்தனர். அவர்கள் தங்களுடன் பல மங்கோலியப் பழங்குடியினரை உருசியாவின் சமவெளிகளை நோக்கி அழைத்துச் சென்றனர். தாதர் குலமரபானது இன்னும் மங்கோலியர்கள் மற்றும் கசாராக்கள் இடையே உள்ளது. 

உருசியர்களால் "தாதர்கள்" என்று அழைக்கப்படும் இப்போது இருக்கும் மிகப்பெரிய குழுவானது வோல்கா தாதர்கள் ஆவர். இவர்கள் வோல்கா பகுதியைச் (தாதர்தான் மற்றும் பசுகோர்தோதான்) சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் இக்காரணத்திற்காக எளிமையாக "தாதர்கள்" என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களின் மொழி தாதர் மொழி என்று அழைக்கப்படுகிறது. 2002ம் ஆண்டின் கணக்குப்படி இவர்களின் மதிப்பிடப்பட்ட மக்கள்தொகையானது ஏறக்குறைய 60 இலட்சம் ஆகும். உருசியர்களும், தாதர்களும் ஒருவருடன் ஒருவர் ஒன்றாகக் கலந்துவிட்டதாக ஒரு நம்பிக்கை உண்டு. இது "ஒரு உருசியனைச் சிறிது சுரண்டினால் அவனுக்கு உள்ளே ஒரு தாதன் வெளிப்படுவான்"[2] என்ற ஒரு கூற்றால் விளக்கப்படுகிறது. உருசியாவின் முதலாம் பேதுரு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இருந்த பிரபுக் குடும்பங்கள் தாதர் வழிவந்தவர்களாக இருந்தனர்.[3] எனினும் மரபியல் ஆராய்ச்சிகள் உருசியர்கள் வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பியர்களை (முக்கியமாக பெலாரசியர்கள் மற்றும் உக்கிரைனியர்கள்) மூதாதையர்களாகக் கொண்டுள்ளதாகக் காட்டுகின்றன. தாதர் மக்களிலிருந்து மரபியல்ரீதியாகத் தொலைவில் உள்ளவர்களாகக் காட்டுகின்றன.[4][5]  

இக்காலத்தில் தாதர்களின் உடல் தோற்றம் ஒரு வண்ணப் பட்டியாக உள்ளது. இவர்கள் மங்கோலியர் முதல் காக்கேசியர் வரையிலான தோற்றங்களைக் கொண்டுள்ளனர்.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தாதர்கள்&oldid=3557630" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை