நியூ ஹரைசன்ஸ்

நியூ ஹரைசன்ஸ் (New Horizons) என்பது தற்போது நாசாவினால் விண்ணுக்கு ஏவப்பட்டிருக்கும் ஒரு தானியங்கி விண்கலமாகும். இதுவே புளூட்டோ என்ற குறுங்கோளை நோக்கி ஏவப்பட்ட முதலாவது விண்கலமாகும். இது புளூட்டோவையும் அதன் நிலாக்களான சாரன், நிக்ஸ், மற்றும் ஹைட்ரா ஆகியவற்றை ஆராயும்.

நியூ ஹரைசன்ஸ்
New Horizons
இயக்குபவர்நாசா
திட்ட வகைஅண்மிப்பது
அணுகிய விண்பொருள்ஜுப்பிட்டர், புளூட்டோ, சாரன்
அணுகிய நாள்ஜூலை 14, 2015
ஏவப்பட்ட நாள்ஜனவரி 19, 2006
ஏவுகலம்ஆட்லஸ் V-551
திட்டக் காலம்புளூட்டோவை அண்மிப்பது (>10 ஆண்டுகள்)
தே.வி.அ.த.மை எண்2006-001A
இணைய தளம்நியூ ஹரைசன்ஸ் இணையம்
நிறை478 கிகி
நியூ ஹரைசன்ஸ் இனால் காணப்பட்ட 132524 APL என்ற சிறுகோள்

நியூ ஹரைசன்ஸ் விண்ணுளவி ஜனவரி 19, 2006 இல் புளோரிடாவில் உள்ள கேப் கனவேரல் வான்படைத் தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது. இது பெப்ரவரி 28, 2007 இல் வியாழனை 5:43:40 UTC நேரத்தில் அண்மித்தது. புளூட்டோவை இது ஜூலை 2015 இல் இது புளூட்டோவை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பூமி சார்பான வேகம் 16.21 கிமீ/செ (36,260 மைல்/மணி) ஆகும். இதுவே இதுவரை விண்ணுக்கு ஏவப்பட்ட விண்கலங்களில் அதிகூடிய வேகத்தைக் கொண்டதாகும்.

இதற்கான மொத்த செலவீனம் 15 ஆண்டுகளுக்கு (2001 இலிருந்து 2015 வரை) கிட்டத்தட்ட $650 மில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

செவ்வாய், மற்றும் சிறுகோள்களை தாண்டல்

ஏப்ரல் 7, 2006, 1000 UTC நேரத்திற்கு, இவ்விண்கலம் செவ்வாயின் சுற்றுவட்டத்தை 21 கிமீ/செக் வேகத்தில் கடந்தது. அப்போது அது 243 மில்லியன் கிலோ மீட்டர் சூரிய தூரத்தில் இருந்தது.[1]

நியூ ஹரைசன்ஸ் தனது வழியில் 101,867 கிமீ தூரத்தில் 132524 APL என்ற சிறுகோளை ஜூன் 13, 2006 இல் சந்தித்து அதன் படத்தைப் பூமிக்கு அனுப்பியது. இச்சிறுகோளின் விட்டம் கிட்டத்தட்ட 2.3 கிலோமீட்டர்கள் ஆகும். இதிலிருந்து மிக வேகமாய்ச் செல்லும் பொருட்களை இனங்காணும் வலிமையை இவ்விண்கலம் பெற்றுள்ளது என நிரூபிக்கப்பட்டது. ரால்ஃப் தொலைக்காட்டி மூலம் இதன் படங்கள் பிடிக்கப்பட்டன.[2]

பயணத் திட்டக் காலக்கோடு

  • ஜனவரி 19, 2006 — விண்ணுக்கு ஏவப்பட்டது.
  • ஏப்ரல் 7, 2006 — செவ்வாய்க் கோளைத் தாண்டியது.
  • ஜூன் 13, 2006 — 132524 APL என்ற சிறுகோளுக்கு மிகக்கிட்டவாக அண்மித்தது.
  • நவம்பர் 28, 2006 — புளூட்டோவின் முதலாவது படத்தை அனுப்பியது.
  • ஜனவரி 8, 2007 — வியாழனை சந்திக்க ஆரம்பித்தது.
  • பெப்ரவரி 28, 2007 — வியாழனை அண்மித்தது. (2.305 மில்லியன் கிமீ தூரத்தில், 21.219 கிமீ/செக் வேகத்தில்).
  • மார்ச் 5, 2007 — வியாழனை விட்டு விலகியது.
  • ஜூன் 9, 2008சனி கோளைக் கடக்கும்.
  • மார்ச் 5, 2011யுரேனஸ் கோளின் சுற்றுப் பாதையைக் கடக்கும்.
  • ஆகஸ்ட் 1, 2014நெப்டியூன் கோளின் சுற்றுப்பாதையைக் கடக்கும்.
  • ஜூலை 14, 2015 — புளூட்டோவை அண்மிக்கும். (11096 கிமீ தூரத்தில், 13.780 கிமீ/செக் வேகத்தில்)
  • ஜூலை 14, 2015 — சாரன் நிலாவை அண்மிக்கும் (26927 கிமீ தூரத்தில், 13.875 கிமீ/செக் வேகத்தில்)
  • 2016-2020 — possible flyby of one or more Kuiper Belt objects (KBOs).

மேற்கோள்கள்

ஊடகம்

நியூ ஹரைசன்ஸ் புறப்படல் (தகவல்)
நியூ ஹரைசன்ஸ் விண்ணுளவி கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஜனவரி 19, 2006 ஏவப்படல் (5.8 MB).
இந்த நிகழ்படத் துண்டினை சரியாக இயக்கிப்பார்க்க முடியவில்லையா?ஊடக உதவி ஆவணத்தை பார்வையிடவும்.


வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நியூ_ஹரைசன்ஸ்&oldid=3377062" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை