பழக்க அடிமைத்தனம்

பழக்க அடிமைத்தனம்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புமன நல அடிமைத்தனம்
மருந்துகளுக்கு அடிமையாதல்
ஐ.சி.டி.-10ICD10|F10-F19 உட்பிரிவு .2

பழக்க அடிமைத்தனம் (addiction) என்பது ஏதாவது ஒரு பழக்கம் தொடர்பில் அளவுக்கு அதிகமான ஈடுபாடு கொண்டிருத்தலைக் குறிக்கும். பல சமயங்களில் உடலளவிலும், உள்ளத்தளவிலும் இத்தகைய பழக்கங்களில் தங்கியிருத்தலையும் இது குறிக்கும். போதைப்பொருள் பாவனை, மதுபானம்அருந்துதல், சூதாட்டம், புகைத்தல் அல்லது புகையிலை பிடித்தல் போன்றவற்றில் ஏற்படக்கூடிய பழக்கங்கள் இத்தகையவை ஆகும். சில பழக்கங்கள் தீங்கு தரும் பின் விளைவுகளைத் தரக்கூடியவையாக இருப்பினும், அவற்றினால் கிடைக்கும் திருப்தி காரணமாக, தொடர்ந்து குறிப்பிட்ட பழக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஒரு மூளைச் சமநிலையற்ற தன்மை பழக்க அடிமைத்தனமாகும்[1].

மருத்துவத்தில் பழக்க அடிமைத்தனம் என்பது, உடலின் சாதாரண தொழிற்பாடுகளுக்கு, போதை மருந்து போன்ற ஏதாவது ஒரு பொருளில் தங்கியிருக்கும் நிலையைக் குறிக்கிறது. இப்பொருள் திடீரென மறுக்கப்படும்போது உடலில் சில தனித்தன்மையான அறிகுறிகள் தோன்றுகின்றன. பொருட்களைத் தவறாகப் பயன்படுத்தி உட்கொள்ளுவதனால் மட்டுமன்றி மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்ளுவதனாலும் இந்நிலை ஏற்படலாம். மருந்துகள் மற்றும் உட்கொள்ளும் பொருட்கள் தொடர்பில் மட்டுமன்றி அளவு மீறிய கணினிப் பழக்கம் முதலியனவும் பழக்க அடிமைத்தனத்தை உண்டாக்கக் கூடும்.
இந்த பழக்க அடிமைத்தனம் ஒருவருடைய உடல்நலம், உளநலம், சமூக வாழ்க்கை போன்றவற்றைப் பாதிப்பதுடன், ஒரு நோய் நிலையாகக் கருதப்படக் கூடியதாகும்[2]. இருப்பினும் இவ்வகையான பழக்க அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு, சாதாரண, வளமான வாழ்க்கையைத் தொடருவதற்கான சில வினைத்திறனான மருத்துவ முறைகளும் உள்ளன[1].

பழக்க அல்லது சார்பு அடிமைத்தன்மை குறித்த அருஞ்சொல் விளக்கத்தொகுதி
  • பழக்க அடிமைத்தனம் மூளை ஒழுங்கின்மை என்பது, பாதகமான சூழ்நிலைகளின் தொகுப்பானது தூண்டப்படும்போது ஏற்படும் விளைவுகளால் உருவானது ஆகும்.
  • அடிமைப் பழக்க வழக்கங்கள் பாதகமான பழக்க வழக்கங்களின் வெகுமதியாகவும், அது தூண்டப்படுவதால் ஏற்படும் விளைவுகளாக இதனை குறிக்கலாம்.
போதைப் பொருட்களை நிறுத்தல் போதைப் பொருட்களை அடிக்கடி உபயோகப் படுத்தக்கூடியவர்கள் அதனை திடீரென நிறுத்துவதனால் ஏற்படும் அறிகுறிகள் ஆகும்.
உடல்ரீதியான சார்பு சோர்வு போன்ற காரங்களினால் உடலியல் ரீதியாக மற்றவர்களை சார்ந்திருத்தல் ஆகும்.

பழக்க வழக்க அடிமைத்தனம்

பழக்கவழக்கங்களின் அடிமைத்தனம் என்பது மனிதர்கள் தங்களின் வாழ்க்கையில் இயல்பாகவே செய்யக்கூடிய சில செயல்களை செய்தே தீர வேண்டும் என்ற ஒரு கட்டாய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவதே ஆகும்.

பாதிப்பிற்கான காரணிகள்

பழக்க அடிமைத்தனத்திற்கு மரபுவழி மற்றும் சுற்றுப்புறச் சூழல் போன்றவை சூழிடர் காரணிகளாக உள்ளன[3]. இதில் 50% மரபுவழிக் காரணங்களாலும், மிகுதி 50% சூழல் காரணிகளாலும் ஏற்படுகிறது[3]

மரபுக் காரணிகளின் தாக்கம் குறைவாக இருந்தாலும், நீண்ட காலத்திற்கு போதைப் பொருட்களை அதிக அளவில் பயன்படுத்தும் ஒருவர் அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி விடுவார்[3]. சூழ்நிலைகள் உடந்தையாக அமைகையில் ஒருவருக்கு பழக்க அடிமைத்தனம் ஏற்படலாம் என்பதையே இது காட்டுகிறது.

வயது

விடலைப்பருவத்தில் அடிமைப்பழக்க வழக்கத்திற்கான காரணிகள் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.[4] விடலைப் பருவங்கள் இதற்கு முக்கியமான காரணியாக இருந்தபோதும், தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளக் கூடிய போதைப் பொருட்களும் காரணியாக அமைகின்றது புள்ளி விவரங்களின்படி எவர் ஒருவர் இளமைப் பருவத்திலேயே மதுப் பழக்கவழக்கத்திற்கு அடிமை ஆகிறார்களோ அவர்கள் அதன் பின்னரும் அதிலிருந்து விடுபட வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.  33 சதவீத மக்கள் தாங்கள் தங்களுடைய 15 முதல் 17 வயதிற்குள்ளாகவே மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறுகிறார்கள்.[5]

மேலும் 18 சதவீத மக்கள் அதற்கு முன்பாகவே அதற்கு அடிமையானதாக கூறுகிறார்கள். பன்னிரண்டு வயதிலேயே மது அருந்துபவர்கள் அதன் பின்பு அதனை விடுவது சிரமம் என்று கூறபப்டுகிறது.

மரபுவழிக் காரணங்கள்  

மரபுவழிக் காரணங்களானது , சமூக மற்றும் உளவியல் காரணிகளுடன் இணைந்து மக்கள் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகக் காரனமாக அமைகின்றது.

நோய்த்தொற்று அறிவியலானது 40 முதல் 60 சதவீத மக்கள் தங்களுடைய மரபு வழிக்காரணங்களினாலேயே மதுப் பழக்கத்திற்கு அடிமையாகின்றனர் என கூறுகின்றது. சாதாரண புரதங்களானது அது வழங்கப்படும் சுற்றுப்புறச் சூழ்நிலைகளின் காரணமாக குறிப்பிட்ட சில மூளை நரம்புகளிலோ அல்லது அதன் அமைப்புகளின் வளர்ச்சியிலோ தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சுற்றுப் புறக்காரணிகள்

குழந்தைகளின் நடத்தையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக பல்வேறு காரணிகள் அமைகின்றன. அவற்றில் மிக முக்கியமாக தவறாக வழிநடத்துதல் அல்லது சித்ரவதைக்கு உட்படுத்தல், குழந்தைப் பருவத்தில் அவர்கள் சந்திக்கின்ற சில விரும்பத்தகாத நிகழ்வுகள் ஆகியன முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தைகளின் நரம்பியல் வளர்ச்சிக்கு தடையாக அல்லது இடையூறு செய்யக்கூடிய காரணிகள் பின்வருமாறு,

உளக் காரணிகள்

மனிதர்களில் சிலருக்கு சில சமயங்களில் , ஒரே நேரத்தில் இருவிதமான மனநோய்கள் (comorbid) பாதிக்கலாம்.

அவையாவன,[6]

உருமாறும் தன்மை கொண்ட அடிமைப் பழக்க வழக்கங்களின் குறிப்புகள்

நரம்பியல் உருமாறும் தன்மைகளின் அமைப்புதூண்டல் வகைகள்
தூக்க மருந்துஉள தூண்டல்கள்அதிக கொழுப்பு அல்லது இனிப்பு உணவுஉடலுறவுஉடற்பயிற்சிசுற்றுப்புற செறிவூட்டல்வளங்கள்
அனுக்கருவின் சாய்வு நிலை டி-1 வகை எம் என் எஸ்[1]
உருமாறும் தன்மை கொண்ட பழக்கவழக்கங்கள்
விரிவாக்க கொள்திறன்

கலப்பினப்புகள் மிகுந்த

உள தூண்டல்கள்

ஆம்ஆம்ஆம்[2]
தொடக்க இனங்களை முக்கியத்துவமாகக் கொண்ட உள தூண்டல்கள்ஆம்பொருந்தாதுஆம்ஆம்வீரியம் குறைந்தவீரியம் குறைந்த[3]
போதைப் பொருட்களை மீளமர்த்துகைக்கான நடவடிக்கைகள்[4]
உள தூண்டல்கள் (நிபந்தனைகளுக்குட்பட்ட விருப்பங்கள்)[5]
போதை மருந்துகளை நாடும் பழக்கத்தை மீளமர்த்துதல்[6]
நரம்பியல் வேதியலுக்கான உருமாறும் தன்மை
சாய்வான அனுக்கருவின் CREB பாஸ்போரைலேஸன்[7]
சாய்வான அனுக்கருவின் டோபமைன் உணர்திறன்இல்லைஆம்இல்லைஆம்[8]
வரித்தசையுள்ள மாற்று டோபமைன் உணர்திறன்↓DRD2, ↑DRD3↑DRD1, ↓DRD2, ↑DRD3↑DRD1, ↓DRD2, ↑DRD3↑DRD2↑DRD2[9]
இதய நடு உறைகளுக்கான நரம்பு இணைப்புகளின் உருமாற்றஙகள்
சாய்வான உட்கருவின் சிறு நரம்பு இழைகளின் எண்ணிக்கை[10]
சாய்வான உட்கரு முதுகெலும்பின் சிறு நரம்புகளின் அடர்த்தி[11]

உணர்திறனுக்கான வெகுமதி

ΔFosB படியெடுத்தல் இலக்குகளின் நரம்பியல் மற்றும் நடத்தை விளைவுகள் [7]
இலக்கு மரபணுஇலக்கு உணர்ச்சி வெளிப்பாடுநரம்பியல் தாக்கங்கள்நடத்தையியல் தாக்கங்கள்
சி -எஃப் ஒஎஸ் (c-Fos)
  • மூலக்கூறுகளில் ஏற்படும் மாற்ற நிலைகளால் ΔFosB நீடித்த காலத்திற்குத் தூண்டப்படுதல்
டைனார்ஃபின் (dynorphin)

[8]

  • Κ-opioid என்ற புரதங்களின் பின்னூட்டு வளையத்தின் ஒருங்கமைவுகளில் ஏற்படும் குறைந்து செல்லும் மாற்றங்கள்
  • போதைப்பொருள் வெகுமதி அதிகம் பயன்படுத்துதல்
என் எஃப் - கேபி (NF-κB) என்ற சிக்கலான புரதம்
  • NAcc யில் ஏற்படும் விரிவாக்கம்.
  • NAcc யில் NF-κB அழற்சியின் வெளிப்பாடு
  • CP யில் NF-κB அழற்சியின் வெளிப்பாடு
GluR2 என்ற புரதம்
  • போதைப்பொருள் வெகுமதி அதிகம் பயன்படுத்துதல்
Cdk5 எனும் நொதி
  • GluR1 எனும் புரதங்களுக்கான பிணைப்புகளின் பாஸ்ஃபோ ஏற்றம்
  • NAcc யில் ஏற்படும் விரிவாக்கம்
  • போதைப்பொருள் வெகுமதி அதிகம் பயன்படுத்துதல்

பழக்க அடிமைத்தன மீட்புக் குழுக்கள்

பழக்க அடிமைத்தன மீட்புக் குழுக்கள் என்பது அடிமைப் பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள் தாங்களாகவே ஒரு குழுவினை ஏற்படுத்துதல் ஆகும். இதில் பல்வேறு வகையான அமைப்புகள், பல்வேறு வகையான வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதில் சட்டவிரோதமாக போதைப் பொருட்களை தடை செய்தனர். இருந்தபோதிலும் அவை தற்காலிக மாற்றுகளாகவே இருந்தன. மேலும் தனிநபர்களாக செயல்படுவதை விட ஒரு குழுவாக செயல்படும்போது அதன் வீரியம் அதிக அளவில் குறைவதாக கருதப்படுகிறது.

பன்னிரண்டு படி அடிமை மீட்பு குழுக்கள்

இந்தியாவில் உள்ள அடிமை பழக்க வழக்க மீட்பு மையம்
  • பெயர் அறியப்படாத மதுப்பழக்க மீட்புக் குழுக்கள் (AA)
  • பெயர் அறியப்படாத கோகோயின் மீட்புக் குழுக்கள் (CA)
  • பெயர் அறியப்படாத ஹெராயின் மீட்புக் குழுக்கள் (HA)
  • பெயர் அறியப்படாத மீத்தேன் மீட்புக் குழுக்கள் (MA)
  • பெயர் அறியப்படாத நிக்கோடின் மீட்புக் குழுக்கள் (NicA)
  • பெயர் அறியப்படாத நார்கோடிக்ஸ் மீட்புக் குழுக்கள் (NA)
  • பெயர் அறியப்படாத மாத்திரை (போதை) மீட்புக் குழுக்கள் (PA) [12]

சிகிச்சைகள்

  • நடத்தை மாற்றங்களின் மூலம் சிகிச்சை

மருந்துகளின் மூலம் சிகிச்சை மேற்கொள்ளல்

  • மது போதையால் அடிமையானவர்களை மீட்டல்
  • நடத்தைகளினால் அடிமையானவர்களை மீட்டல்
  • நிகோடின் போதையால் அடிமையானவர்களை மீட்டல்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பழக்க_அடிமைத்தனம்&oldid=3562185" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை