மரியா இரேசா

மரியா அஞ்சலீட்டா இரேசா (Maria Angelita Ressa, பிறப்பு: அக்டோபர் 2, 1963) பிலிப்பீனிய-அமெரிக்கப் பத்திரிகையாளரும், நூலாசிரியரும், 'இராப்பிலர்' இணையவெளிப் பத்திரிகையின் பணிப்பாளரும் ஆவார்.[1] இவர் முன்னதாக சி.என்.என் செய்தி நிறுவனத்திற்காக தென்கிழக்காசியாவின் முன்னணி புலனாய்வு செய்தியாளராக இரண்டு தசாப்தங்களாகப் பணியாற்றியுள்ளார்.

மரியா இரேசா
Maria Ressa
2011 இல் இரேசா
பிறப்பு2 அக்டோபர் 1963 (1963-10-02) (அகவை 60)
மணிலா, பிலிப்பீன்சு
குடியுரிமைபிலிப்பீன்சு,
ஐக்கிய அமெரிக்கா
கல்விபிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் (BA), பிலிப்பீன்சு திலிமான் பல்கலைக்கழகம்
பணிஊடகவியலாளர், நூலாசிரியர்
அறியப்படுவதுஇராப்பிலர் பத்திரிகையின் நிறுவனர்
விருதுகள்சுதந்திரத்தின் தங்க எழுதுகோல் விருது (2018)
யுனெஸ்கோ/கிலெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர விருது (2021)
அமைதிக்கான நோபல் பரிசு (2021)
வலைத்தளம்
அதிகாரபூர்வ தளம்

2020-இல், சர்ச்சைக்குரிய பிலிப்பீன்சு இணையவெளிக் குற்ற எதிர்ப்புச் சட்டத்தின் கீழ்[2][3] அந்நாட்டு அரசாங்கத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.[4][5] இந்த நடவடிக்கை பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என மனித உரிமை அமைப்புகள் மற்றும் பத்திரிகையாளர்களால் கண்டனம் செய்யப்பட்டது.[6][7][8]

இவருக்கு 2021-இற்கான அமைதிக்கான நோபல் பரிசு உருசிய ஊடகவியலாளர் திமீத்திரி முராத்தொவுடன் இணைந்து "சனநாயகம் மற்றும் நீடித்த அமைதிக்கான முன்நிபந்தனையான கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான அவர்களின் முயற்சிகளுக்காக" வழங்கப்பட்டது.[9][10]

டைம்'இன் போலிச் செய்திகளை எதிர்த்துப் போராடும் உலகெங்கிலும் உள்ள பத்திரிகையாளர்களின் தொகுப்பில் இரேசா 2018 ஆம் ஆண்டின் சிறந்த நபராகச் சேர்க்கப்பட்டார். 2013 பிப்ரவரி 13 அன்று, இவரது ராப்பிலர் பத்திரிகை தொழிலதிபர் வில்பிரெடோ கெங் குறித்து ஒரு தவறான செய்தியை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டார். 2020 சூன் 15 அன்று, மணிலாவில் உள்ள ஒரு நீதிமன்றம் இவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.[5] இரேசா பிலிப்பீனிசின் அரசுத்தலைவர் ரொட்ரிகோ துதெர்த்தேயின் வெளிப்படையான விமர்சகராக இருப்பதால், அவரது கைதும் தண்டனையும் எதிர்க்கட்சிகளினாலும், சர்வதேச சமூகத்தினராலும் துதெர்த்தே அரசின் அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகப் பார்க்கப்பட்டது.[11][12][13] எல்லைகளற்ற செய்தியாளர்களால் தொடங்கப்பட்ட தகவல், சனநாயக ஆணையத்தில் 25 முன்னணி நபர்களில் இரேசாவும் ஒருவர்.[14]

விருதுகளும் சிறப்புகளும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
மரியா இரேசா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மரியா_இரேசா&oldid=3931320" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை