மலச்சிக்கல்

மலச்சிக்கல் (Constipation; costiveness[1]) வலிமலக்கழிப்பு (dyschezia)[2] என்பது மலங்கழிப்புகள் அரிதாகவும், மலத்தை வெளியேற்றுவதற்கு கடினமாகவும் உள்ள நிலையைக் குறிக்கும்[2]. இது, மனிதனுக்கு ஏற்படும் ஓர் உடல் உபாதை ஆகும். உட்கொள்ளும் உணவானது சில காரணங்களால் மலக்குடலில் தங்கிவிடுவதால் மலம் கழிக்கும் போது, மலம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. வலியுடன் மலங்கழிப்பதற்கு மலச்சிக்கலே பொதுவானக் காரணமாக அமைகிறது. கடும் மலச்சிக்கல், நோய்முதலறியா மலச்சிக்கல் (obstipation) (மலம், வாயு (குசு) வெளியேற்ற முடியாத நிலை) மற்றும் மலக்கட்டு (fecal impaction) ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

மலச்சிக்கல்
ஒரு குழந்தையின் மலச்சிக்கலை எக்ஸ் கதிர்கள் துணைக்கொண்டு பார்க்கும் படம். வளையங்கள் மலப்பொருள்கள் (அ) மலக்கட்டிகள் உள்ள பகுதிகளைக் குறிக்கின்றது. மலமானது ஒளி உடுருவாத வெண் பகுதியாக, கருமையான குடல்வாயு சூழப்பட்டுக் காணப்படுகிறது.
ஐ.சி.டி.-10K59.0
ஐ.சி.டி.-9564.0
DiseasesDB3080
MedlinePlus003125
ஈமெடிசின்med/2833
MeSHD003248

மலச்சிக்கல் சாதாரணமாகக் காணப்படும் ஒன்றாகும்; பொதுவான மக்கள்தொகையில் மலச்சிக்கலின் விழுப்பாடு (நிகழ்வு) 2-30 சதவிகிதம் உள்ளது[3].

மலச்சிக்கல் பல்வேறு காரணங்களைக் கொண்ட அறிகுறியாகும். இக்காரணங்கள் இருவகைப்படும்: தடுக்கப்பட்ட மலங்கழித்தல் மற்றும் பெருங்குடல் மெதுவாக மலம் கடத்துவது [பெருங்குடல் குறையசைவு (hypomobility)]. மூன்றாம் நிலை பரிந்துரைக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஏறத்தாழ ஐம்பது சதவிகித நோயாளிகளை மலச்சிக்கலுக்கு மதிப்பீடு செய்ததில் தடுக்கப்பட்ட மலங்கழித்தல் முக்கிய காரணமாக இருப்பதுக் கண்டறியப்பட்டது.[3] தடுக்கப்பட்ட மலங்கழித்தல் வகையான மலச்சிக்கல் இயக்கமுறை மற்றும் செயற்பாட்டுக் காரணங்களைக் கொண்டுள்ளது. பெருங்குடல் குறையசைவு மலச்சிக்கலுக்கான காரணங்களாக உணவுவகை, வளரூக்கிகள், மருந்துகளின் பக்கவிளைவுகள், அடர் உலோக நச்சுத்தன்மை ஆகியவற்றைக் கூறலாம்.

மலச்சிக்கலுக்கு உணவுப் பழக்கவழக்கங்களில் மாறுதல்களைக் கொண்டு வருதல், மலமிளக்கிகளை உபயோகித்தல், மலக்குடலைக் கழுவுவல், உயிரியப் பின்னூட்டம் (biofeedback), அறுவை சிகிச்சை ஆகிய சிகிச்சை முறைகள் உள்ளடங்கும்.

சுத்திகரிக்கப்பட்ட மாவுசத்து பொருளான மைதா, சோள மாவு மற்றும் ஐஸ்கிரீம் வெள்ளை சர்க்கரை போன்றவற்றை மலச்சிக்கல் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். மேலும் படிக்க

வரையறை

மலச்சிக்கலின் வரையறைகளுக்குள் பின்வருவன உள்ளடங்குவதாக கூறலாம்: அரிதான மலங்கழிப்புகள் (வாரத்திற்கு மூன்று அல்லது அதற்கு குறைவான முறைகள்), மலங்கழிப்பின்போது சிரமப்படுதல் (25 சதவிகிதத்திற்கும் மேலான மலங்கழிப்பு சமயங்களில் திணறுதல் (கடுமுயற்சி செய்தல்) அல்லது கடினமான மலம் வெளிவரக்கூடிய அகவயமான உணர்வினைக் கொண்டிருத்தல்) மற்றும் முழுவதுமாக மலங்கழிக்காத உணர்வு[4][5][6][7].

நாள்பட்ட மலச்சிக்கலைக் கண்டறிவதற்கு ரோம்-III கட்டளை விதிகள் பரவலாக உபயோகப்படுத்தப்படுகின்றன. இவ்விதிகள், நாள்பட்ட மலச்சிக்கல் செயற்பாடுகளை, தீவிரமற்ற நேர்வுகளிலிருந்து வேறுபடுத்தி அறிய உதவுகின்றது[8].

குழந்தைகளில் மலச்சிக்கல்

சாதாரணமாகக் குழந்தைகளில் மலச்சிக்கல் மூன்று வெவ்வேறான காலகட்டங்களில் நிகழ்கிறது: குழந்தை உணவு (infant formula) அல்லது பதப்படுத்தப்பட்ட உணவு ஆரம்பித்த பிறகு (மழலையராக உள்ளபோது), நடைக்குழந்தை பருவத்தில் கழிவறைப் பயிற்சியின்போது, மழலையர் பள்ளியில் சேர்ந்து பள்ளி செல்லும்போது[9].

குழந்தை பிறந்தவுடன், பெரும்பாலான மழலையர் ஒரு நாளைக்கு நான்கிலிருந்து ஐந்துமுறை மிருதுவாக, தண்ணீர்போல் மலங்கழிப்பார்கள். பொதுவாக, தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள், குழந்தை உணவு உட்கொள்ளும் குழந்தைகளைக் காட்டிலும் அதிகமாக மலங்கழிப்பார்கள். சில தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள், பால் குடிக்கும் ஒவ்வொரு தடவையும், மற்ற குழந்தைகள் இரண்டு-மூன்று நாட்களுக்கு ஒரு முறையும் மலங்கழிப்பார்கள். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் மிக அரிதாக மலச்சிக்கலுக்கு உள்ளாகிறார்கள்[10]. சாதாரணமாக நாளொன்றிற்கு, இரண்டு வயதுடையக் குழந்தைகள் ஒன்று-இரண்டு முறையும், நான்கு வயதுடையக் குழந்தைகள் ஒரு முறையும் மலங்கழிப்பார்கள்[11].

காரணங்கள்

மலச்சிக்கலுக்கான காரணங்களை பிறவிக்கோளாறு, முதன்மையானவை, இரண்டாம் தரமானவை என வகைப்படுத்தலாம்[2]. பெரும்பான்மையானப் பொதுக்காரணங்கள் முதன்மையானவை என்றாலும் வாழ்கையை பயமுறுத்துபவை அல்ல[12]. பெரியவர்களில் மலச்சிக்கல் ஏற்படுவதற்கு பின்வரும் காரணங்களை குறிப்பிடலாம்: உணவில் நார்ச்சத்து தேவையான அளவு இல்லாமை, தேவையான அளவு திரவங்களை அருந்தாமை, குறைந்த அளவு உடல் உழைப்பு, மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் பக்க-விளைவுகள், தைராய்டு சுரப்புக் குறை, மலக்குடலுக்குறிய புற்றுநோயினால் ஏற்படும் அடைப்பு[13].

மருத்துவ விளக்கம் அளிக்க முடியாத மலச்சிக்கலில் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக அளவு பாதிக்கப்படுகிறார்கள்[14].

முதன்மையான காரணங்கள்

உணவு

மருந்து உட்கொள்ளல்

வளர்சிதைமாற்ற, தசைக் காரணிகள்

கட்டமைப்பு, செயற்பாட்டுமுறைச் சிக்கல்கள்

உளவியல் காரணிகள்

மலங்கழிக்காமல் தன்னிச்சையாக தடுத்து நிறுத்துவது மலச்சிக்கலுக்கு பொதுவான காரணமாகும்[5]. இவ்விதம் தடுத்து நிறுத்துவதற்கு வலி ஏற்படும் என்னும் அச்சம், பொது கழிவறைகளைக் குறித்த பயம் அல்லது சோம்பல் ஆகியன காரணமாகலாம்[5]. குழந்தைகள் இவ்வாறு மலங்கழிக்காமல் தடுத்து நிறுத்துவதை உற்சாகமூட்டல், பானங்கள் (தண்ணீர்) குடிக்க வைத்தல், நார்ச்சத்துமிக்க உணவினைக் கொடுத்தல், மலமிளக்கிகளைக் கொடுத்தல் ஆகிய முறைகளை உபயோகப்படுத்தி இச்சிக்கலைத் தீர்க்க உதவலாம்[15].

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மலச்சிக்கல்&oldid=3744575" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை