வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு

சர்வதேச ஒத்துழைப்பு அமைப்பு

வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு (Bay of Bengal Initiative for Multi Sectoral Technical and Economic Cooperation; BIMSTEC), தெற்கு ஆசியாவிலும், தென் கிழக்கு ஆசியாவிலும் அமைந்துள்ள ஏழு நாடுகள் அடங்கிய ஒரு பன்னாட்டு அமைப்பாகும். இந்நாடுகளின் கூட்டு மக்கள் தொகை 1.5 மில்லியன், ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.5 டிரில்லியன் டாலராகும் (2018).[3] இந்நிறுவனத்தின் உறுப்பினா் நாடுகள் வங்காள தேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேப்பாளம், பூட்டான் ஆகும். இவைகள் அனைத்தும் வங்காள விரிகுடாவைச் சுற்றியுள்ள நாடுகள் ஆகும்[4].

வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டமைப்பு
Bengali:বঙ্গোপসাগরীয় বহুক্ষেত্রীয় প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগীতা উদ্যোগ (বিম্‌সটেক্)
Burmese:ဘင်္ဂလားပင်လယ်အော် စီးပွားရေးနှင့် နည်းပညာဆိုင်ရာ ဘက်စုံ ပူးပေါင်း ဆောင်ရွက်ရေး အဖွဲ့အစည်း (ဘင်းမ်စတက်)
Hindi:बहुक्षेत्रीय तकनीकी और आर्थिक सहयोग के लिए बंगाल की खाड़ी पहल (बिम्सटेक)
Nepali:बहुक्षेत्रीय प्राविधिक तथा आर्थिक सहयोगका लागि बङ्गालको खाडीको प्रयास (बिम्स्टेक)
Sinhalese:බහු සංස්කෘතික සහ තාක්ෂණික සහයෝගීතාව සඳහා බෙංගාල බොක්ක(බිම්ස්ටෙක්)
Thai:ความริเริ่มแห่งอ่าวเบงกอลสำหรับความร่วมมือหลากหลายสาขาทางวิชาการและเศรษฐกิจ (บิมสเทค)
தலைமைச் செயலகம்டாக்கா, வங்காள தேசம்[1]
அங்கத்துவம்
தலைவர்கள்
• Chairmanship
 இலங்கை (since September 2018)[2]
உருவாக்கம்6 சூன் 1997; 26 ஆண்டுகள் முன்னர் (1997-06-06)

14 முன்னுரிமைத் துறைகள் இனங்காணப்பட்டு, இவைகளில் தொடா்ந்து நடவடிக்கை எடுக்க பல மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன[3][5]. இவைகளுள் வரியில்லா வா்த்தக உடன்பாடு செய்து கொள்ள பேச்சு வாா்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது (2018). இந்நாடுகளில் தலைமை வகிக்கும் பொறுப்பு அகர வரிசையில் சுற்றிவரும். இதன் நிரந்தர செயலகம் டாக்காவில் அமைந்துள்ளது.

பின்னணி

1997 ஆம் ஆண்டு சூன் மாதம் 6 ஆம் நாள் பாங்காக் நகரில் BIST - EC (வங்காள தேசம், இந்தியா, இலங்கை, தாய்லாந்து பொருளாதாரக் கூட்டுறவு) என்ற துணை மண்டல அமைப்பு உருவாக்கப்பட்டது.[6][7] 1997 டிசம்பா் 22 அன்று மியன்மாா் நாடும் இதன் முழு உறுப்பினரானது. இதனால் இவ்வமைப்பு BIMST - EC எனப் பெயர் மாற்றமடைந்தது. முதலில் நேப்பாளம் ஒரு பாா்வையாளராக இருந்தது. பின்னா் நேப்பாளமும் பூட்டானும் முழு உறுப்பினா்கள் ஆயினா்.

2004 ஆம் ஆண்டு சூலை 31 ஆம் நாள் நடைபெற்ற உச்சி மாநாட்டில் இந்நிறுவனத்திற்கு BIMSTEC அல்லது Bay of Bengal Initiative for Multi Sectoral Technical and Economic Cooperation என்று பெயா் சூட்டப்பட்டது.[8]

நோக்கம்

வங்காள விரிகுடா கடற்கரையிலமைந்திருக்கும் நாடுகளிடையே தொழில்நுட்ப மற்றும் பொருளாதாரக் கூட்டுறவை மேம்படுத்த 14 நோக்கங்கள் வரையறுக்கப்பட்டன. வணிகம், முதலீடு, தொழில் நுட்பம், சுற்றுலா, மனித வள மேம்பாடு, வேளாண்மை, மீன்வளம், போக்குவரத்து மற்றும் தொலை தொடா்பு, நெசவு, தோல் உள்ளிட்டவை தெரிந்த துறைகளுள் அடங்கும்.[8] மேலும் கல்வி தொழிற்கல்வி, தொழில்நுட்பத் துறைகளில் ஆராய்ச்சி செய்வது பயிற்சியளிப்பதிலும் கூட்டுறவை வளா்ப்பதும் இதன் நோக்கமாகும். இந்த நாடுகளின் சமூக பொருளாதார வளா்ச்சிக்கு சமூக, தொழில் நுட்ப மற்றும் அறிவியல் துறைகளில் ஒவ்வொரு நாடும் மற்றவற்றிற்கு உதவி செய்து எல்லோரும் நன்மையடைய வேண்டும் என்பது இதன் நோக்கம்.

நிரந்தர தலைமை செயலகம்

இதன் நிரந்தரத் தலைமைச் செயலகம் டாக்கா நகரில் 2014 ஆம் ஆண்டு துவங்கப் பட்டது. இதனை அமைக்கும் செலவில் 33 விழுக்காட்டை இந்தியா ஏற்றுக் கொண்டது.[8]

தலைமை

வங்காள தேசம் துவங்கி, அகரவரிசையில், இதன் தலைமையை ஒவ்வொரு நாடும் சுற்றில் ஏற்கும்.[9]

உறுப்பு நாடுகள்

நாட்டின் பெயர்தலைமைப்பதவிதலைமைச் செயல் அலுவலர்அரசின் தலைமைமக்கள் தொகை

(2021)[10][11]

உள்னாட்டு உற்பத்தி

(nominal)

உலக வங்கிதெற்காசியக்கூட்டமைப்பு
 Bangladeshபிரதம மந்திரிஸேக் ஹசீனா,

வங்காள தேசத்தின் பிரதம மந்திரி

அப்துல் ஹமீது, வங்காள தேசத்தின் குடியரசுத் தலைவர்169,356,251$285.8 bn
 Bhutanபிரதம மந்திரிதஸ்ஸோ ஸெரிங்க் வான்சுக்,

பூடானின் பிரதம் மந்திரி

ஜிக்மி கேசர் நாம்ஜில் வாங்க்சுக், பூடனின் அரசர்777,486$2.2 bn
 Indiaபிரதம மந்திரிநரேந்திர மோடி,

இந்தியாவின் பிரதமர்

ராம் நாத் கோவிந்து,குடியரசுத் தலைவர்1,407,563,842$2308.0 bn
 Myanmarதலைவர்வின் மியிந்த், மியான்மரின் தலைவர்53,798,084$68.277 bn
 Nepalபிரதம மந்திரிகாட்கா பிரசாத் ஓலி,நேபளத்தின் பிரதமர்பித்யா தேவி பந்தாரி, நேபாளத்தின் தலைவர்30,034,989$74.020 bn
 Sri Lankaகுடியரசுத்தலைவர்ரனில் விக்கிரம சிங்கே,

இலங்கையின் பிரதமர்

மைத்ரிபால சிரிசேனா , இலங்கையின் குடியரசுத் தலைவர்21,773,441$80.4 bn
 Thailandபிரதம மந்திரிபிராயுட் சான் ஓ சா, தாய்லாந்து பிரதமர்அரசர் வஜிரலாங்க்கார்ன் (பத்தாவது ராமர்),

தாய்லாந்து அரசர்

71,601,103$409.724 bn

BIMSTEC முன்னுரிமைத்துறைகள்

14 துறைகள் முன்னுரிமைத்துரைகளாக கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது[3][5][12]

முன்னுரிமைத் துறைகள்தலைமை நாடுமையம்குறிப்பு
போக்குவரத்து, தொலைத் தொடர்புஇந்தியா
சுற்றுலாஇந்தியாBIMSTEC சுற்றுலா தகவல் மையம், புது டெல்லி
பயங்கரவாதத்தை எதிர் கொள்ளல் மற்றும் நாடுகடந்த குற்றம்இந்தியாநாங்கு உட்குழுக்கள்: ஒற்றுத்தகவல்கள் பரிமாற்றம் - இலங்கை - (தலமை),
பயங்கரவாதத்திற்கு நிதி உதவி - தாய்லாந்து,
சட்டம் தொடர்பானவை - மைன்மார்,
சட்ட அமலாக்கம் - போதைப்பொருள் கடத்தல் - மியான்மர்
சுற்றுச் சூழல் பேரிடர் மேலாண்மைஇந்தியாBIMSTEC கால நிலை மற்றும் தட்பவெட்ப நிலை மையம், நோய்டா
சக்திமைன்மார்BIMSTEC சக்தி மையம் பரணிடப்பட்டது 2018-10-27 at the வந்தவழி இயந்திரம், பெங்களூருBIMSTEC Grid Interconnection MoU signed in 2014.[13][14]
பொது சுகாதாரம்தாய்லாந்துBIMSTEC இந்திய பாரம்பரிய மருத்துவத்தின் இணையம்
வேளாண்மைமியான்மர்
வர்த்தகம் மற்றும் முதலீடுவங்காள தேசம்
தொழினுட்பம்இலங்கை
மீன்வளம்தாய்லாந்து
நாட்டு மக்களிடையே தொடர்புதாய்லாந்து
வறிமை ஒழிப்புநேப்பாளம்
காலனிலை மாற்றம்வங்காள தேசம்
கலாச்சார ஒத்திழைப்புபூட்டான்1200 ITEC இந்தியா வழங்கும் நிதியுதவி

BIMSTEC - வரியில்லா வா்த்தக மண்டல உடன்பாட்டின் வரம்பு

BIMSTEC வரியில்லா வா்த்தக மண்டலத்தின் உடன்பாடு உறுப்பினா் நாடுகளால் ஏற்கனவே கையெழுத்திடப்பட்டுவிட்டது. உறுப்பு நாடுகளிடையே வா்த்தகத்தையும் முதலீட்டையும் தூண்டுவதும், வெளிநாடுகளிலிருந்து இவைகளை ஈா்ப்பதும் இவ்வமைப்பின் நோக்கங்களில் ஒன்றாகும். உறுப்பு நாடுகளிடையே பேச்சு வாா்த்தை நடத்தி இவா்களிடையே வா்த்தகம், முதலீடு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு வா்த்தகப் பேச்சு வாா்த்தைக் குழு (Trade Negotiation Committee) தாய்லாந்தை நிரந்தரத் தலைமை மையமாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

BIMSTEC - கரையோர கப்பல் போக்குவரத்து உடன்பாடு வரைவு

2017, 4 டிசம்பா் மாதம் புதுடெல்லியில் விவாதிக்கப்பட்டது. கடற்கரையிலிருந்து 20 நாட்டிகல் மைலுக்குள் கப்பல் போக்குவரத்து செய்வது இதில் அடங்கும். இதனால் நாடுகளிடையே குறைந்த செலவில் பொருட்களை எடுத்துச் செல்ல இயலும்.

ஆசிய மேம்பாட்டு வங்கியின் உதவி

ஆசியமேம்பாட்டு வங்கி இந்த அமைப்பின் போக்குவரத்து கட்டமைப்பின் வசதியைக் குறித்த ஆய்வினை மேற்கொள்ளௌதவி செய்தது. இந்த ஆய்வும் 2004 ஆம் ஆண்டு செய்து முடிக்கப்பட்டது

உச்சி மாநாடுகள்

மூன்றாவது உச்சி மாநாடு, நைபைடா மியான்மர்
எண்.தேதிநடைபெற்ற நாடுநகரம்
1வது31 சூலை 2004  Thailandபாங்காக்
2வது13 நவம்பர் 2008  Indiaபுது டெல்லி
3வது4 மார்ச் 2014  Myanmarநை பை டா [15]
4வது30, 31 ஆகத்து 2018  Nepalகாத்மண்டு[16]
5வதுடிபிடி  Sri Lankaகொழும்பு[2][17]

திட்டங்கள்

  • சாலை மற்றும் ரயில்போக்குவரத்து கிழக்கை இணைக்கும் திட்டங்கள்
  • கடற்கரைக் கப்பல் போக்குவரத்து
  • மின்சார வினியோக கட்டமைப்பு
  • மண்டல அளவில் பேரிடர் கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை ஏற்பாடு

Current leaders of BIMSTEC

மேலும் காண்க

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை