1918 இன்ஃபுளுவென்சா தொற்றுப்பரவல்

1918 இன்ஃபுளுவென்சா தொற்றுப்பரவல் (சனவரி 1918 – திசம்பர் 1920) எசுப்பானிய இன்ஃபுளுவென்சா/எசுப்பானிய ஃபுளூ, பெரும் இன்ஃபுளுவென்சா தொற்றுப்பரவல் என்றும் அழைக்கப்படுகிறது. 1918 இன்ஃபுளுவென்சா தொற்றுப்பரவல் எனப்படுவது வழமையல்லா கொல்லியாக இன்ஃபுளுவென்சா தொற்றுப்பரவல் ஏற்பட்ட நிகழ்வு குறிப்பதாகும்.

1918 இன்ஃபுளுவென்சா தொற்றுப்பரவல்
எசுப்பானிய இன்ஃபுளுவென்சாவால் பாதிக்கப்பட்டு கேம்ப் பன்சுட்டனில் உள்ள மருத்துமனையில் கான்சசின் ரிலீ கோட்டையைச் சேர்ந்த படைவீரர்கள்.
எசுப்பானிய இன்ஃபுளுவென்சாவால் பாதிக்கப்பட்டு கேம்ப் பன்சுட்டனில் உள்ள மருத்துமனையில் கான்சசின் ரிலீ கோட்டையைச் சேர்ந்த படைவீரர்கள்.
நோய்இன்ஃபுளுவென்சா
தீநுண்மி திரிபுஏ/எச்1என்1 திரிபுகள்
அமைவிடம்உலகம் முழுவதும்
முதல் தொற்றுதெரியவில்லை
நாள்பெப்ரவரி 1918 – ஏப்ரல் 1920[1]
ஐயுறவுக்குரிய தொற்றுகள்500 மில்லியன் (மதிப்பிடப்பட்டது [2]
இறப்புகள்
25–50 மில்லியன் (பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது), மற்ற மதிப்பீடுகள் 17 முதல் 100 மில்லியன் வரை இருக்கும்[3][4][5]
ஆய்வக சோதனைகள் மூலம் இந்த திரிபு காரணமாக சந்தேகிக்கப்படும் தொற்றுகள் உறுதிப்படுத்தப்படவில்லை, இருப்பினும் வேறு சில திரிபுகள் நிராகரிக்கப்பட்டிருக்கலாம்.

இது எச்1.என்1 சளிக்காய்ச்சல் நுண்ணுயிரியால் ஏற்பட்டது.[6] இந்நோய் உலகெங்கும், தொலைபகுதிகளில் உள்ள அமைதிப் பெருங்கடல் தீவுகளும் ஆர்க்டிக் பகுதிகளையும் உள்ளிட்ட, 500 மில்லியன் மக்களை பாதித்தது;[2] 50 முதல் 100 மில்லியன் மக்கள் (உலக மக்கள்தொகையில் 3 முதல் 5%) இத்தொற்றால் உயிரிழந்தனர்.[7]) எனவே இதுவே மனித வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரும் இயற்கைப் பேரழிவாகக் கருதப்படுகின்றது.[2][8][9][10]

பெரும்பாலான சளிக்காய்ச்சல்கள் குழந்தைகளையும் பெரியவர்களையும் ஏற்கெனவே வலிவிழந்துள்ள நோயாளிகளையும் வெவ்வேறு வீதத்தில் கொல்லும். மாறாக,1918இல் ஏற்பட்ட தொற்று பெரும்பாலும், நோய்க்கு முன்னர் உடல்நலம் நன்றாக இருந்த இளைஞர்களைக் கொன்றது. பாதிக்கப்பட்டோரின் உறைநிலை உடல்களிலிருந்து எடுக்கப்பட்ட நுண்ணுயிரிகளைக் கொண்டு நடத்தப்பட்ட தற்கால ஆராய்ச்சிகளில் சைட்டோகைன் தாக்கம் (cytokine storm, உடலின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் அதீத எதிர்வினை) மூலம் உயிரிழப்பு நிகழ்ந்ததாக அறிகிறார்கள். எனவேதான் உடல்நலமிக்க இளைஞர்களின் வலிவான எதிர்ப்பாற்றல் செய்வினைகள் உடலைப் புரட்டிப்போட்டு உயிரிழக்க வைத்தன; சிறுவர்கள், முதியோரின் எதிர்ப்பாற்றல்கள் வலுவிழந்து இருந்ததால் இத்தகையோரில் குறைவான பேர்கள் உயிரிழந்தனர்.[11]

குறைவான வரலாற்றுத் தரவுகளும் நோய்ப் பரவலியல் தரவுகளும் கொண்டு இத்தொறு எந்த புவிப்பகுதியிலிருந்து தொடங்கியது என்பதை அடையாளம் காணவியவில்லை. [2] 1920களில் ஏற்பட்ட சோம்பேறித்தன மூளையழற்சி நோய்த்தொற்றிற்கு இதுவும் காரணமாக கூறப்படுகின்றது.[12]

உலகப் போரின் போது கலவரப்படாமல் இருப்பதற்காக செருமனி, பிரித்தானியா, பிரான்சு, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்நோய்த்தொற்றைக் குறித்த துவக்க அறிக்கைகளும் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் தணிக்கை செய்யப்பட்டன. [13][14]இப்போரில் ஈடுபடாத நடுநிலை எசுப்பானியாவில் நாளிதழ்கள் இந்நோய்த்தொற்றைக் குறித்த செய்திகளை வெளியிட்டனர். அரசர் பதின்மூன்றாம் அல்போன்சோவும் நோய்வாய்ப்பட்டிருந்ததை செய்தியாக வெளியிட்டன.[15] இதனால் எசுப்பானியாதான் மிகவும் மோசமாக பாதிப்பிற்குள்ளானதைப் போன்ற தோற்றப்பிழை எழுந்தது.[16] எனவே இந்நோய்ப்பரவலை எசுப்பானிய சளிக்காய்ச்சல் என்றனர்.[17].

ஒளிப்படத் தொகுப்பு

மேற்சான்றுகள்

நூற்கோவை

அடிக்குறிப்புகள்

மேற்கோள்

மேற்கோள்கள்

நூல் பட்டியல்

மேலும் படிக்க

வீடியோக்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை