அஃப்ளாடாக்சின்

அஃப்ளாடாக்சின்கள் (Aflatoxins) எனப்படுபவை ஆஸ்பெர்ஜிலஸ் (Aspergillus) என்னும் பேரினத்தைச் சேர்ந்த பூஞ்சைகளில் காணப்படும் ஒருவகை பூஞ்சை நஞ்சுகள் (Mycotoxin) ஆகும். சில இன பூஞ்சைகளால் உருவாக்கப்பட்டு, இயற்கையில் காணப்படும் இவ்வகை நஞ்சுகளை உருவாக்கும் முக்கியமான இனங்கள், ஆஸ்பெர்ஜிலஸ் ஃப்ளேவஸ் (Aspergillus flavus) மற்றும் ஆஸ்பெர்ஜிலஸ் பராசிட்டிக்கஸ் (Aspergillus parasiticus) ஆகும். இந்தபூஞ்சை நஞ்சுகள் இதுவரை கண்டறியப்பட்ட நஞ்சுத் தன்மைக் கொண்ட பொருட்களுள் மிகவும் சக்திவாய்ந்த புற்றுநோய் உருவாக்கும் பொருட்களாக அறியப்படுகிறது[1]. இவை உடலுக்குள் நுழைந்தபின் கல்லீரலில் நிகழும் வளர்சிதைமாற்றம் காரணமாக, வினைபுரியும் ஈபாக்சைடு இடையினங்களாகவோ அல்லது ஹைட்ராக்சில் ஏற்றப்பட்டு குறைந்த தீங்கு விளைவிக்கும் அஃப்ளாடாக்சின் M1 ஆகவோ மாற்றம் பெறுகின்றன.

அஃப்ளாடாக்சின்

Chemical structure of (-)-Alflatoxin B1

3D Structure of aflatoxin B1
பெயர்கள்
வேறு பெயர்கள்
அஃப்ளாடாக்சின் B1
இனங்காட்டிகள்
ChEMBLChEMBL1697694
ChemSpider13758
InChI
  • InChI=1S/C17H12O6/c1-20-10-6-11-14(8-4-5-21-17(8)22-11)15-13(10)7-2-3-9(18)12(7)16(19)23-15/h4-6,8,17H,2-3H2,1H3
    Key: OQIQSTLJSLGHID-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள்Image
பப்கெம்14403
SMILES
  • O=C5C=4C(=O)Oc3c1c(OC2O\C=C/C12)cc(OC)c3C=4CC5
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references
அஃப்ளாடாக்சினின் முப்பரிமாண வடிவம்

பரவும் சூழல்கள்

இவ்வகை பூஞ்சை நஞ்சுகளை உருவாக்கும் ஆஸ்பெர்ஜிலஸ் காளான்கள் (பூஞ்சைகள்) இயற்கையில் சாதாரணமாகவும், பெருமளவிலும் காணப்படுகின்றன. தானிய அறுவடைக்கு முன்பாகவோ அல்லது சேமிக்கும்போதோ இவ்வகை பூஞ்சைகள் வயல்களில் பரவிக் கலந்து விடுகின்றன. நீண்டகால ஈரப்பதத்திற்கோ அல்லது வறட்சி முதலிய சுற்றுச்சூழல்களுக்குப் பயிர்கள் உட்படும்போது ஆஸ்பெர்ஜிலஸ் காளான்கள் பரவத் தடைகள் குறைகிறது. எனவே பயிர்களும் ஆஸ்பெர்ஜிலஸ் பூஞ்சையால் பாதிக்கப்படுகின்றன.

வாழ்விடங்கள்

மண், அழுகும் காய்கறிகள், மக்கிய வைக்கோல் மற்றும் நுண்ணுயிரிகளால் சீர்கெட்டத் தானியங்கள் ஆகியவை ஆஸ்பெர்ஜிலஸ் பூஞ்சைகளின் சாதாரண வாழ்விடங்களாக விளங்குகின்றன. அதிக அளவு ஈரப்பதம் (குறைந்த அளவு ஏழு சதவிகிதம்) மற்றும் மிதமான அல்லது உயர்ந்த வெப்பம் உருவாகும்போது எல்லாவிதமான இயற்கை கரிம தளப்பொருள்களிலும் இவை ஊடுருவுகின்றன. இவையே இவ்வகைப் பூஞ்சைகள் வளருவதற்கு இணக்கமான சூழல்கள் ஆகும்.

தக்காளி மீது வளர்ந்துள்ள ஆஸ்பெர்ஜிலஸ் பூஞ்சை

பூஞ்சைகளால் அடிக்கடி தாக்கப்படும் பயிர்கள்

ஆஸ்பெர்ஜிலஸ் பூஞ்சைப் பிடித்த நிலக்கடலைச் செடி

பூஞ்சைப் பிடித்த தானியங்கள் அல்லது பயிர்களை உட்கொள்ளும் பசுவின் பாலிலும் இந்த நச்சுக்கள் காணப்படுகின்றன.

அமெரிக்க உணவு மற்றும் கட்டுப்பாட்டுத் துறை (FDA) மனித மற்றும் விலங்குகளின் நலம் பேண உணவு மற்றும் தீவனங்களில் உள்ள பூஞ்சை நஞ்சின் அளவைத் தர நிர்ணயம் செய்கிறது.[2]

ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட ஆஸ்பெர்ஜிலஸ் பூஞ்சை
உணவுப் பொருட்களில் அஃப்ளாடாக்சின்கள் அளவு கீழுள்ள அளவுகளை மீறக் கூடாது

{| class="wikitable" border="1"|-!பில்லியனில் ஒரு பகுதி (1 × 10−9)!அளவுகோல் |-| 20|மனிதர்கள் உண்ணத்தகுந்த எல்லா வகை உணவுப் பொருள்கள், வளரும் விலங்குகளுக்கான (கோழிகளையும் சேர்த்து) மக்காச்சோளமும் பிற தானிய வகைகளும்|-|100|இறைச்சிக்கான கால் நடைகள், பன்றி , கோழிகளுக்கான மக்காச்சோளமும் பிற தானிய வகைகளும்|-|200|இறைச்சிக்காக வெட்டப்படும் நிலையிலுள்ள, நூறு இறாத்தலுக்கு அல்லது அதற்கு மேற்பட்ட எடையுள்ள பன்றிகளுக்கான மக்காச்சோளமும் பிற தானிய வகைகளும்|-|300|இறைச்சிக்காக வெட்டப்படும் நிலையிலுள்ள பன்றி, கோழி , மாடுகளுக்கான மக்காச்சோளமும், பிற தானிய வகைகளும், பருத்திக்கொட்டையும் புண்ணாக்கும்.|}

நோய்த்தோற்றவியல்

இலத்திரன் நுண்ணோக்கியில் நோக்கும்போது ஆஸ்பெர்ஜிலஸ் ஃபியூமிகாடஸ் பூஞ்சையின் தோற்றம்

அதிக அளவு அஃப்ளாடாக்சின்கள் உடலில் சேரும்போது திடீரெனத் தோன்றும் தீவிரமான கல்லீரல் இழையநசிவு ஏற்படுகிறது. பின்னர் இதுவே, கல்லீரலில் இழைநார் வளர்ச்சி மற்றும் கல்லீரல் புற்று தோன்றக் காரணமாகிறது. எந்தவொரு விலங்கு இனமும் (மனிதர்களையும் சேர்த்து) கடுமையான பூஞ்சை நச்சு விளைவுகளை எதிர்க்கும் பண்புகளைப் பெறவில்லை. என்றாலும் மனிதர்கள், அஃப்ளாடாக்சின்கள் விளைவுகளைப் பொறுத்துக்கொள்ளும் அபாரமான அதிக அளவு சகிப்புத் தன்மையைக் கொண்டுள்ளதால், அரிதாகவே கடின பூஞ்சை நச்சேற்றத்திற்கு உள்ளாகிறார்கள். நெடுங்காலம் தாழ்புலன் (குறைந்த அளவு) மருத்துவ நஞ்சு அளவிற்கு மனிதர்கள் உட்பட்டாலும், சடுதியில் (உடனே) கடின பூஞ்சை நச்சேற்ற நோய் அறிகுறிகள் தோன்றுவதில்லை. ஆனால் குறிப்பாகக் குழந்தைகள் பூஞ்சை நஞ்சிற்கு உட்படும்போது காலந்தாழ்ந்த வளர்ச்சி மற்றும் குறைவளர்ச்சிக்கு ஆளாகிறார்கள்.[3]

நறுமணமிக்க உள்ளீடற்ற தண்டினையுடைய தாவரங்களைச் செம்மங்கி (கேரட்), பாசினிப் கிழங்கு, சிவரிக்கீரை (செலரி), வோக்கோசு (பார்ஸ்லே) சேர்த்த ஒழுங்கான உணவு வகைகளை உட்கொண்டால், பூஞ்சை நஞ்சினால் புற்றுநோய் உருவாகும் விளைவுகளைத் தடுக்க முடியும் என்பதை மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[4]

பாலூட்டிகளில் அஃப்ளாடாக்சின்களின் மைய இலக்கு உறுப்பு கல்லீரலாகும். எனவே, அஃப்ளாடாக்சின் நச்சேற்றம் முதன்மையாக, ஒரு கல்லீரல் நோயாகும்.

பூஞ்சை நச்சேற்றத்திற்கு மனிதர்கள் ஆட்படுவதற்கான காரணங்கள்

பூஞ்சை நச்சேற்றத்திற்கு மனிதர்கள் ஆட்படுவதற்கானக் காரணங்களாக,

  • போதிய உணவு இல்லாமை
  • உணவுகளில் பூஞ்சை வளரும் சூழல்
  • பூஞ்சை நஞ்சுகளின் அளவினைக் கண்டறிய, கட்டுப்படுத்தப் போதிய உணவுத் தரக்கட்டுப்பாட்டு அமைப்புகள் இல்லாமை ஆகியன குறிப்பிடப்படுகின்றன.[5]

சில நேரங்களில், அஃப்ளாடாக்சின்கள் உருமாற்ற விளைபொருள்கள் முட்டை, பால் மற்றும் இறைச்சி ஆகியவற்றில் காணப்படுகின்றன. பூஞ்சைப் பிடித்த தானியங்கள் அல்லது பயிர்களை விலங்குகள் உட்கொள்வதால் இது ஏற்படுகின்றது.[6]

நுண்ணுயிரியல்

பூஞ்சை நஞ்சுக்களிலேயே மிகவும் முக்கியமானவை இந்த அஃப்ளாடாக்சின்கள் ஆகும். இவை ஆஸ்பெர்ஜிலஸ் என்னும் பேரினத்தைச் சேர்ந்த உயிரினக்களின் சில இனங்களில் மட்டுமே காணப்படுகின்றன. அந்த இனங்களில் மிகவும் ஆபத்தானவை ஆஸ்பெர்ஜிலஸ் ஃப்ளேவஸ் (Aspergillus flavus) மற்றும் ஆஸ்பெர்ஜிலஸ் பராசிடிகஸ் (Aspergillus parasiticus) ஆகிய இரண்டுமாகும். இப்பூஞ்சைகள் இலக்கு வைத்துத் தாக்கும் முலையூட்டிகளின் உறுப்பு கல்லீரல் ஆகும்.

அஃப்ளாடாக்சின் தொடர்பான நோய்களைத் தாக்கம் செலுத்தக்கூடிய காரணிகள், இனம் (பாலினம்), வயது, உணவு, வெறும் நஞ்சுகளுக்கு வெளிப்படுத்தப்படுதல் என்பனவகும் இந்த அஃப்ளாடாக்சின் தாக்கத்தை அதிகரிக்கக்கூடிய நிலைமைகளாக உணவுத் தட்டுப்பாடு, உணவுப் பொருட்களில் பூஞ்சைகளின் வளர்ச்சியை அதிகரிக்கக்கூடிய சூழல் காரணிகள், உடலில் அஃப்ளாடாக்சினை நெறிப்படுத்தி கட்டுப்படுத்தக்கூடிய ஒழுங்கு முறைமைகள் இல்லாமை என்பனவாகும்[5].

ஆஸ்பெர்ஜிலஸ் ஃப்ளேவஸ், ஆஸ்பெர்ஜிலஸ் பராசிடிகஸ் ஆகிய இரண்டும் எவ்வகையான தளப்பொருட்களிலும் வாழக்கூடிய, முக்கியமாக அதிக ஈரப்பதத்தில் வளரக்கூடிய ஒரு வகை களைப் பூஞ்சைகளாகும். மனித மற்றும் விலங்கு உணவுகளில் பலவற்றையும் இந்தப் பூஞ்சைகள் மாசுபடுத்த வல்லன. வளர்ப்பு விலங்குகளான ஆடு, மாடு, கோழி போன்றன அஃப்ளாடாக்சின் தொற்றுக்குட்பட்ட உணவை உண்ணும்போது, அஃப்ளாடாக்சினின் மாற்றத்துக்கு உட்பட்ட ஒரு வடிவம், அவ்விலங்குகளின் பால், முட்டை, இறைச்சி போன்றவற்றில் தோன்றுகின்றன.[6].

மனிதர்களில் அஃப்ளாடாக்சினைக் கண்டறியும் முறைகள்

மனிதர்களில் அஃப்ளாடாக்சினைக் கண்டறிய இரண்டு முதன்மையான வழிகள் உள்ளன.

முதலாவது முறையில், நோய்வாய்ப்பட்டவர்களின் சிறுநீரில் உள்ள அஃப்ளாடாக்சின் B1-குவானிடின் கூட்டு விளைபொருளினைக் கண்டறிவதாகும். இச்சிதைவுப் பொருள் சிறுநீரில் இருந்தால், கடந்த இருபத்திநான்கு மணித்தியாலங்களுக்குள் நோய்வாய்ப்பட்டவர் அஃப்ளாடாக்சின் B1 இற்கு உட்பட்டதாகக் கருதப்படும். ஆனால், இந்த உத்தியானது அண்மையில் நஞ்சிற்கு உட்பட்டதை மட்டுமே கண்டறியப் பயன்படும். அஃப்ளாடாக்சின் B1-குவானிடின் கூட்டு விளைபொருளின் குறைந்த அரைவாழ்வுக்காலத்தினால், இதன் தின அளவு மதிப்பீடு உணவு உட்கொள்ளுதலைப் பொறுத்து மாறிக் கொண்டேயிருக்கும். எனவே, இந்த உத்தியானது நீண்டகால நஞ்சுத் தாக்கத்தினை அறிய உபயோகிக்க முடியாது.

மற்றொரு உத்தியானது, இரத்தத்தில் உள்ள அஃப்ளாடாக்சின் B1-வெண்புரதக் (அல்புமின்) கூட்டு விளைபொருளினைக் கண்டறிவது. இந்த உத்தியானது நீண்டகால (பல வார-மாத) நஞ்சுத் தாக்கத்தினை அறிய உபயோகப்படுத்தப்படுகின்றது.

விலங்குகள்

அஃப்ளாடாக்சின்கள் நாய்களில் கல்லீரல் நோயினை உண்டாக்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனினும், அஃப்ளாடாக்சின்களுக்கு ஆட்பட்ட எல்லா நாய்களும் கல்லீரல் நோயினைப் பெறுவதில்லை. அஃப்ளாடாக்சின் நச்சேற்றம் உருவாவது உடலில் உள்ள அஃப்ளாடாக்சின்களின் அளவைப் பொறுத்ததாகும். குறைந்த அளவு அஃப்ளாடாக்சின்களுக்குத் தொடர்ந்து பல வாரங்கள்,மாதங்களுக்கு ஆட்பட்டு அதாவது அஃப்ளாடாக்சின்கள் கலந்த உணவுகளை உட்கொண்டு வந்தால் மட்டுமே கல்லீரல் செயலிழப்பு அறிகுறிகள் தோன்றும்.[7]

நாய் உணவுகளில் ஒத்துக்கொள்ளத் தக்க அஃப்ளாடாக்சின் அளவு 100-300 பில்லியனில் ஒரு பகுதி (ppb) எனச் சில ஆய்வு முடிவுகள் அறிவிக்கின்றன. மேலும், இந்த அளவு நஞ்சினைக் கொண்ட உணவு வகைகளைச் சில வாரங்களோ, மாதங்களோ தொடர்ந்து உண்டு வந்தாலோதான் இந்த அஃப்ளாடாக்சின் நச்சேற்றம் உருவாகுமென அம்முடிவுகள் தெரிவிக்கின்றன.[8]

அஃப்ளாடாக்சின்களின் முக்கிய வகைகளும் அவற்றின் வளர்சிதைமாற்றப் பொருள்களும்

இயற்கையில் குறைந்தபட்சம் 14 வெவ்வேறு வகையான பூஞ்சை நஞ்சுகள் காணப்படுகின்றன.[9] இவற்றுள், அஃப்ளாடாக்சின் B1 மிகவும் நச்சுத் தன்மை உடையதாகும். ஆஸ்பெர்ஜிலஸ் ஃப்ளேவஸ் மற்றும் ஆஸ்பெர்ஜிலஸ் பராசிடிகஸ் என்னும் இரண்டுவகைப் பூஞ்சைகளாலும் அஃப்ளாடாக்சின் B1 உருவாக்கப்படுகிறது. அஃப்ளாடாக்சின் G1 மற்றும் G2 நச்சுகளை ஆஸ்பெர்ஜிலஸ் பராசிடிகஸ் என்ற பூஞ்சை மட்டுமே உருவாக்குகிறது. ஆஸ்பெர்ஜிலஸ் பூஞ்சை, உணவுப் பொருட்களில் இருக்கும் எல்லா நேரங்களிலும் ஊறு விளைவிக்கும் அளவிற்கு பூஞ்சை நஞ்சு இருப்பதாகக் கூற முடியாது. எனினும், இத்தகு பூஞ்சைப் பிடித்த உணவுகளை உட்கொள்ளுதல் குறிப்பிடத் தக்க இடரினை உடலுக்கு விளைவிக்கும் எனலாம்.

முக்கியமான அஃப்ளாடாக்சின்களின் வேதியியல் கட்டமைப்புகள்
அஃப்ளாடாக்சின் B1
அஃப்ளாடாக்சின் G1
அஃப்ளாடாக்சின் M1
அஃப்ளாடாக்சின் B2
அஃப்ளாடாக்சின் G2
அஃப்ளாடாக்சின் M2

அஃப்ளாடாக்சின்கள் M1 மற்றும் M2 வகைகள், பூஞ்சைப் பிடித்த தானியங்களை உட்கொண்ட பசுவின் பாலில் உள்ளதாக முதன்முதலில் கண்டறியப்பட்டது. இந்த நஞ்சுகள், பசுவின் கல்லீரலில் நிகழும் வளர்சிதைமாற்ற செயல்முறையில் விளைந்த விளைபொருட்களாகும். எனினும், ஆஸ்பெர்ஜிலஸ் பராசிடிகஸ் பூஞ்சையின் புளிக்கும் மாங்கிசநீரில் அஃப்ளாடாக்சின் M1 காணப்படுகிறது.

  • அஃப்ளாடாக்சின் B1 & B2: ஆஸ்பெர்ஜிலஸ் ஃப்ளேவஸ் மற்றும் ஆஸ்பெர்ஜிலஸ் பராசிடிகஸ் உருவாக்கும் நஞ்சு.
  • அஃப்ளாடாக்சின் G1 & G2: ஆஸ்பெர்ஜிலஸ் பராசிடிகஸ் உருவாக்கும் நஞ்சு.
  • அஃப்ளாடாக்சின் M1: மனிதர்கள் மற்றும் விலங்குகளில் உருவாக்கப்படும் அஃப்ளாடாக்சின் B1 நஞ்சின் வளர்சிதை வினைமாற்ற பொருள்.
  • அஃப்ளாடாக்சின் M2: பூஞ்சைப் பிடித்த தானியங்களை உட்கொண்ட பசுவின் பாலில் உள்ள அஃப்ளாடாக்சின் B2 நஞ்சின் வளர்சிதை வினைமாற்ற பொருள்.[10]
  • அஃப்ளாடாக்சிகோல்

அஃப்ளாடாக்சின் B2 உயிரியல் சேர்க்கை

அஃப்ளாடாக்சின் B2 உயிரியல் சேர்க்கை

முதன்மை தயாரிப்பாளர்கள்

  • ரோமர் ஆய்வகம்[11] காப்புரிமை பெற்ற கதிரியக்க 13C அஃப்ளாடாக்சின்களைத் தயாரிக்கிறார்கள்.
  • சிக்மா-ஆல்டிரிச்[12]
  • ஃபெர்மன்டெக், அஃப்ளாடாக்சின் M2 தயாரிப்பாளர்கள்.

இவ்வாறு தயாரித்த அஃப்ளாடாக்சின்களை, உணவில் உள்ள அஃப்ளாடாக்சினைக் கண்டறியும் ஆய்வின் உள் தரப்படுத்தலில் உபயோகப்படுத்துகிறார்கள்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அஃப்ளாடாக்சின்&oldid=3322391" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை