இபின் அல் ஹய்தம்

இபின் அல் ஹய்தம் (Ibn al-Haytham) இன்றைய ஈராக்கைச் சேர்ந்த இஸ்லாமிய பொற்காலத்தின் இடைக்கால கணிதவியலாளர், வானியலாளர் மற்றும் இயற்பியலாளர் ஆவார்.[8][9][10][11] "நவீன ஒளியியலின் தந்தை" என்று குறிப்பிடப்படுகிறார்.[12][13][14] இவர் குறிப்பாக ஒளியியல் மற்றும் காட்சி உணர்வின் கொள்கைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தார். அவரது மிகவும் செல்வாக்கு மிக்க படைப்பு கிதாப் அல்-மனாயிர் ( புக் ஆஃப் ஆப்டிக்ஸ்"), 1011-1021 இல் அரபு மொழியில் எழுதப்பட்டது. இது இலத்தீன் பதிப்பிலும் உள்ளது.[15] ஐசாக் நியூட்டன், யோகான்னசு கெப்லர், கிறித்தியான் ஐகன்சு மற்றும் கலீலியோ கலிலி ஆகியோரால் அறிவியல் புரட்சியின் போது அல்ஹசனின் படைப்புகள் அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்டன.

அசன் இபின் அல் ஹய்தம்
(அல்அசன்)
பிறப்புஅண். 965 (0965) (சுமார் 354 இசுலாமிய நாட்காட்டி)[1]
பசுரா, Iraq
இறப்புஅண். 1040 (1041) (சுமார் 430 இசுலாமிய நாட்காட்டி[2]
கெய்ரோ, எகிப்து
வாழிடம்
துறை
அறியப்படுவதுஒளியியல் புத்தகம், பகுப்பாய்வு,[3][4] ஆராய்ச்சி, அறிவியல் அறிவு வழி,[5] விலங்கு உளவியல்[6]
தாக்கம் 
செலுத்தியோர்
அரிஸ்டாட்டில், யூக்ளிடு, தொலெமி, கலென், பானு முசா, அல்-கிந்தி, இபின் ஷா (கணிதவியலாளர்), அபு ஷா அல்-குய்கி
பின்பற்றுவோர்ஓமர் கய்யாம், இப்னு றுஷ்து[7] யோகான்னசு கெப்லர்

பார்வைக் கோட்பாட்டை முதன்முதலில் சரியாக விளக்கிய இவர், பார்வை மூளையில் நிகழ்கிறது என்று வாதிட்டார்.[16] இது அகநிலை மற்றும் தனிப்பட்ட அனுபவத்தால் பாதிக்கப்படும் அவதானிப்புகளை சுட்டிக்காட்டுகிறது.[17] பின்னாளில் பெர்மாவின் கொள்கையாக மாறிய ஒளிவிலகலுக்கு குறைந்த நேரம் என்ற கொள்கையையும் கூறினார்.[18] கருதுகோள்களின் நம்பகத்தன்மையான நடைமுறைகள் அல்லது கணித சான்றுகளின் அடிப்படையில் ஒரு கருதுகோள் நிரூபணம் செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.[19][20] எனவே மறுமலர்ச்சி விஞ்ஞானிகளுக்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் அறிவியல் அறிவு வழி முறைகளைப் புரிந்து கொண்டார்.[21][22][23][24] ஒரு பொருளின் மீது ஒரு கணம் ஒளிபட்டு கண்ணை நோக்கித் திரும்பும்போது, அப்பாெருள் நம் பார்வைக்குப் புலப்படுகிறது என்பதை முதலில் விளக்கினார். இதன் காரணமாக, இவர் சில நேரங்களில் உலகின் "முதல் உண்மையான விஞ்ஞானி" என்று விவரிக்கப்படுகிறார்.[14] இவர் மெய்யியல், இறையியல் மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் எழுதும் ஒரு பல்துறை வல்லுநராகவும் இருந்தார். [25]

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இபின்_அல்_ஹய்தம்&oldid=3697269" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை