கண்டம்

கண்டம் () (Continent) எனப்படுவது தொடர்ச்சியான மிகப்பெரிய நிலப்பரப்பைக் குறிக்கும். புவி ஏழு கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை எந்தவொரு குறிப்பிட்ட காரணங்களால் அன்றி மரபுசார்ந்தே அடையாளப்படுத்தப்படுகின்றன. மிகப் பெரியதிலிருந்து சிறியதாக இவை: ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அன்டார்க்டிக்கா, ஐரோப்பா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகும்.[1]

அசைபடமாக, வண்ணக் குறிகளிட்டு காலவோட்டத்தில் கண்டங்களைப் பிரிக்கும் முறைகள் காட்டப்பட்டுள்ளன. மரபுகளையும் முறைமையையும் பொறுத்து, சில கண்டங்கள் ஒருங்கிணைக்கப்படலாம் அல்லது பிரிக்கப்படலாம்: காட்டாக, ஐரோவாசியா பெரும்பாலும் ஐரோப்பா என்றும் ஆசியா என்றும் (சிவப்பு வண்ணங்களில்) பிரிக்கப்பட, சில நேரங்களில் வட தென் அமெரிக்கா கண்டங்களை ஒன்றிணைத்து ஒரே அமெரிக்கக் கண்டமாக கொள்வதுண்டு (பச்சை வண்ணங்கள்).

நிலவியல் படிப்பில் கண்டங்கள் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்புகள் மூலமாக விவரிக்கப்படுகின்றன. முன்னதாகக் கண்டப்பெயர்ச்சி என அறியப்பட்ட கண்டங்களின் நகர்வுகளையும் மோதல்களையும் பிரிகைகளையும் ஆய்வுறும் துறையே தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு கல்வியாகும்.

வரையறைகளும் செயல்பாடுகளும்

மரபுப்படி, "கண்டங்கள் பெரும் நீர்பரப்புகளால் பிரிக்கப்பட்ட, பெரிய, தொடர்ச்சியான, தனித்த நிலத்தொகுதிகளாகும்."[2] பொதுவாக மரபுப்படி அறியப்படும் ஏழு கண்டங்கள் அனைத்துமே நீர்பரப்புகளால் பிரிக்கப்பட்ட தனித்த நிலப்பரப்புகள் அல்ல. "பெரிய" என்ற அளவுகோள் தன்னிச்சையான வகைப்பாடாகும்: 2,166,086 சதுர கிலோமீட்டர்கள் (836,330 sq mi) புறப்பரப்பளவுள்ள கிறீன்லாந்து உலகின் மிகப்பெரும் தீவாகக் கருதப்படுகிறது; ஆனால் 7,617,930 சதுர கிலோமீட்டர்கள் (2,941,300 sq mi) புவிப்பரப்பளவுள்ள ஆத்திரேலியா ஒரு கண்டமாகக் கருதப்படுகிறது. அதே போல, தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்ற அளவுகோலும் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டு கண்டத் திட்டுகளும் பெருங்கடல் தீவுகளும் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன; வடக்கு, தெற்கு அமெரிக்க கண்டங்களும் இக்கோட்பாட்டிற்கு முரணாக அமைந்துள்ளன. ஐரோவாசியாவும் ஆபிரிக்காவும் எந்தவொரு இயற்கையான நீர்ப்பரப்பாலும் பிரிக்கப்படாதபோதும் இரண்டு கண்டங்களாகக் கருதப்படுகின்றன. தொடர்ச்சியான நிலப்பகுதியான ஐரோப்பாவும் ஆசியாவும் இரு கண்டங்களாகப் பிரிக்கப்படும்போது இந்த முரண் இன்னும் தெளிவாகிறது. புவியின் நிலப்பகுதிகள் ஒரே தொடர்ச்சியான உலகப் பெருங்கடலால் சூழப்பட்டிருக்க இதுவம் பல பெருங்கடல்களாகக் கண்டங்களாலும் பிற புவியியல் அளவீடுகளாலும் பிரிக்கப்பட்டுள்ளது.[3][4] கண்டங்கள் சிலநேரங்களில் முதன்மை நிலப்பரப்புகளிலிருந்தும் விரிவுபடுத்தப்பட்டு உலகின் அனைத்து நிலப்பகுதிகளும் ஏதேனும் ஒரு கண்டத்தின் அங்கமாகக் கொள்ளப்படுகிறது.[5]

கண்டங்களின் பரப்புக்கள்

கண்டம் என்பதன் குறுகிய பொருளாகத் தொடர்ச்சியான[6] நிலப்பரப்பாக அல்லது பெருநிலப்பகுதியாக கொள்ளலாம்; கண்டத்தின் எல்லைகளாகக் கடற்கரைகளும் நில எல்லைகளும் அமைந்தன. இந்தக் கோட்பாட்டின்படி ஐரோப்பிய கண்டம் (சிலநேரங்களில் "தி கான்டினெட்") என்பது ஐரோப்பிய பெருநிலப் பகுதியைக் குறிப்பிடுவதாக அமைந்தது; இதில் தீவுகளான பெரிய பிரித்தானியா, அயர்லாந்து, ஐசுலாந்து போன்றவை நீக்கப்பட்டன. அதேபோல ஆத்திரேலியக் கண்டம் என்ற சொல் ஆத்திரேலியப் பெருநிலப் பகுதியை மட்டுமே குறிக்க தாசுமேனியா , நியூ கினி போன்ற தீவுகள் விலக்கப்பட்டன. இக்கோட்பாட்டின் தொடர்ச்சியாக, ஐக்கிய அமெரிக்கக் கண்டம் என்ற சொல்லாட்சி வட அமெரிக்காவின் மத்தியில் தொடர்ச்சியாக உள்ள 48 மாநிலங்களையும் (கனடாவால் பிரிக்கப்பட்டுள்ள) வடமேற்கிலுள்ள அலாஸ்காவையும் மட்டுமே உள்ளடக்கி அமைதிப் பெருங்கடலில் உள்ள ஹவாய் தீவை விலக்கி வரையறுக்கிறது.

நிலவியல் அல்லது புவியியல் அணுகுமுறையில், கண்டம் தொடர்ச்சியான நிலப்பகுதியைத் தவிர ஆழமற்ற நீரில் மூழ்கிய அண்மைப்பகுதிகளையும் (கண்டத் திட்டு)[7] அப்பரப்பிலுள்ள தீவுகளையும் (கண்டத் தீவுகள்), உள்ளடக்குகிறது;இவையும் கண்டத்தின் கட்டமைப்பின் அங்கமாக விளங்குகின்றன.[8] இதன்படி கடற்கரைகள் கடலின் ஏற்றத் தாழ்வுகளால் மாறிவருவதால், கடலோர கண்டப்படுகையே உண்மையான எல்லையாகும்.[9] இந்த அணுகுமுறைப்படி பெரிய பிரித்தானியாவின் தீவுகளும் அயர்லாந்தும் ஐரோப்பாவின் அங்கமே; ஆத்திரேலியாவும் நியூ கினியும் இணைந்து ஒரே கண்டமே.

பண்பாட்டுக் கூறுகளின்படி, கண்டத்தின் எல்லை கண்டப்படுகைகளையும் கடந்து தீவுகளையும் கண்டத் துண்டுகளையும் உள்ளடக்குகிறது. இதன்படி, ஐசுலாந்து ஐரோப்பாவின் அங்கமாகவும் மடகாசுகர் ஆபிரிக்காவின் அங்கமாகவும் கருதப்படுகிறது. இக்கோட்பாட்டையே மேலும் விரிவுபடுத்தி, சில புவியியலாளர்கள் ஆஸ்திரேலேசிய புவிப்பொறையுடன் அமைதிப் பெருங்கடலில் உள்ள தீவுகளையும் ஒன்றிணைத்து ஓசியானியா எனக் குறிப்பிடலாயினர். இது புவியின் அனைத்துப்பரப்பையும் கண்டங்களாகவும் கண்டம் போன்ற நிலத்தொகுதிகளாகவும் பிரிக்க வழி செய்கிறது.[10]

கண்டங்கள் பிரிப்பு

தீவு நாடுகளின் நிலப்படம்: இந்த நாடுகள் பெரும்பாலும் புவியியல்படி அடுத்துள்ள கண்ட நிலப்பகுதிகளுடன் சேர்க்கப்படுகின்றன.

ஒவ்வொரு கண்டமும் தனித்த நிலப்பகுதியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை கோட்பாட்டிலிருந்து பொதுவாகத் தன்னிச்சையான, வரலாற்று மரபுகளால் விலக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஏழு கண்டங்களில் ஆத்திரேலியாவும் அன்டார்க்டிக்காவும் மட்டுமே மற்ற கண்டங்களிலிருந்து தனித்து உள்ளன.

பல கண்டங்கள் முற்றிலும் தனித்த பகுதிகளாக வரையறுக்கப்படவில்லை; " ஏறக்குறைய தனித்த நிலப்பரப்புகளாக"பிரிக்கப்பட்டுள்ளன.[11] ஆசியாவும் ஆபிரிக்காவும் சூயஸ் குறுநிலத்தால் இணைக்கப்பட்டுள்ளன; வடக்கு, தெற்கு அமெரிக்காக்கள் பனாமா குறுநிலத்தால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு குறுநிலங்களுமே (isthmus) அவை இணைக்கும் பெருநிலப்பகுதிகளை விட மிகக் குறுகியவை. இவற்றின் குறுக்காகச் செயற்கையான நீர்வழிகள் ( முறையே சூயஸ் , பனாமா கால்வாய்கள்) இந்த நிலப்பரப்புகளைப் பிரிக்கின்றன.

எந்தவொரு கடலும் பிரிக்காத ஐரோவாசியாவை ஆசியா என்றும் ஐரோப்பா என்றும் பிரிப்பது பிறழ்வு ஆகும். ஐரோவாசியாவை ஒரே கண்டமாக ஏற்றுக்கொண்டால் உலகில் ஆறு கண்டங்களாகப் பிரிக்கலாம். இந்த அணுகுமுறை நிலவியலிலும் புவியியலிலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஐரோவாசியாவை ஐரோப்பா என்றும் ஆசியா என்றும் பிரிப்பது ஐரோப்பிய மையவாதத்தின் எச்சமாகக் கருதப்படுகிறது: "நிலப்பரப்பு, பண்பாடு மற்றும் வரலாற்று பன்முகத்தில், சீன மக்கள் குடியரசும் இந்தியாவும் முழுமையான ஐரோப்பிய நிலப்பரப்பிற்கு ஒத்தது; எந்தவொரு தனி ஐரோப்பிய நாட்டிற்கும் அல்ல. ஒரு சிறந்த மாற்றாக (அப்போதுகூட முழுமையற்ற) பிரான்சை, முழுமையான இந்தியாவுடன் அல்லாது, உத்தரப் பிரதேசம் போன்ற ஒரு இந்திய மாநிலத்துடன் ஒப்பிடுவதே சரியானதாகும்."[12] இருப்பினும், வரலாற்று, பண்பாட்டுக் காரணங்களுக்காக, ஐரோப்பாவை தனி கண்டமாகப் பல வகைப்படுத்தல்களிலும் கருதப்படுகிறது.

ஏழு கண்டங்கள் கோட்பாட்டில் வட அமெரிக்காவும் தென் அமெரிக்காவும் தனி கண்டங்களாகக் கருதப்படுகின்றன. இருப்பினும் அவற்றை ஒரே கண்டமாக, அமெரிக்காவாகவும் பார்க்கலாம். இந்தப் பார்வை இரண்டாம் உலகப் போர் வரை ஐக்கிய அமெரிக்காவில் நிலவியது; சில ஆசிய ஆறு கண்ட கோட்பாடுகளிலும் இது கடைபிடிக்கப்படுகிறது.[13] மேலும் எசுப்பானியா, போர்த்துக்கல் மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில், இவை ஒரே கண்டமாகக் கருதப்படுகின்றன. இந்தப் பயன்பாட்டை அமெரிக்க நாடுகளின் அமைப்பு போன்ற பெயர்களில் காணலாம். 19வது நூற்றாண்டிலிருந்து சிலர் "அமெரிக்காக்கள்" என்ற சொல்லாக்கத்தை பயன்படுத்துகின்றனர்.

கண்டங்களைத் தனித்த நிலப்பகுதிகளாக வரையறுத்து அனைத்து தொடர்ச்சியான நிலப்பகுதிகளையும் ஒன்றிணைத்தால், ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா அடங்கிய ஒற்றை நிலப்பகுதி ஆப்பிரிக்க-யூரேசியா என்றழைக்கப்படுகிறது. இதன்படி நான்கு கண்டங்கள் உள்ளன: ஆப்பிரிக்க-யூரேசியா, அமெரிக்கா, அன்டார்ட்டிகா மற்றும் ஆத்திரேலியா.

பனி யுகத்தில், கடல்மட்டம் தாழ்ந்திருந்தபோது பல கண்டப்படுகைகள் உலர்நிலமாக, நிலப்பாலங்களாக வெளிப்பட்டன; அக்காலத்தில் ஆத்திரேலியா (கண்டம்) ஒரே தொடர்ச்சியான நிலப்பகுதியாக இருந்தது. அதேபோல அமெரிக்காக்களும் ஆபிரிக்க-யூரேசியாவும் பெரிங் பாலத்தால் இணைக்கப்பட்டிருந்தன. பெரிய பிரித்தானியா போன்ற பிற தீவுகளும் தங்கள் கண்டத்தின் பெருநிலப்பகுதிகளுடன் இணைந்திருந்தன. அக்காலத்தில் மூன்று கண்டங்களே இருந்தன: ஆபிரிக்க-யூரேசிய-அமெரிக்கா, அன்டார்ட்டிகா, ஆத்திரேலியா-நியூ கினியா.

கண்டங்களின் எண்ணிக்கை

பலவேறு முறைகளில் கண்டங்கள் பிரிக்கப்படுகின்றன:

மாடல்கள்
வண்ணக்குறியிடப்பட்ட கண்டங்களின் வரைபடம். இணைக்கக்கூடிய அல்லது பிரிக்கக்கூடிய நிலப்பகுதிகள் ஒரேபோல வண்ணச்சாயை கொடுக்கப்பட்டுள்ளன.
4 கண்டங்கள்[14]
          ஆப்பிரிக்க-யூரேசியா
       அமெரிக்கா
    அன்டார்க்டிக்கா
    ஆஸ்திரேலியா
5 கண்டங்கள்
[15][16][17]
    ஆப்பிரிக்கா
       ஐரோவாசியா
       அமெரிக்கா
    அன்டார்க்டிக்கா
    ஆஸ்திரேலியா
6 கண்டங்கள்[18]
    ஆபிரிக்கா
    ஐரோப்பா
    ஆசியா
       அமெரிக்கா
    அன்டார்க்டிக்கா
    ஆஸ்திரேலியா
6 கண்டங்கள்
[15][19]
    ஆபிரிக்கா
       யூரேசியா
    வட அமெரிக்கா
    தென் அமெரிக்கா
    அன்டார்க்டிக்கா
    ஆஸ்திரேலியா
7 கண்டங்கள்
[1][19][20][21][22][23]
    ஆபிரிக்கா
    ஐரோப்பா
    ஆசியா
    வட அமெரிக்கா
    தென் அமெரிக்கா
    அன்டார்க்டிக்கா
  ஆஸ்திரேலியா
  • ஏழு கண்டங்களக்ச் சீன மக்கள் குடியரசு, இந்தியா, மேற்கு ஐரோப்பாவின் சிலபகுதிகள் மற்றும் பெரும்பாலான ஆங்கிலமொழி பேசும் நாடுகளில் கற்றுக்கொடுக்கப்படுகிறது.
  • அமெரிக்காவை ஒரே கண்டமாகக் கொண்ட ஆறு கண்டங்கள் வடிவம் எசுப்பானிய மொழி பேசும் நாடுகளிலும்[24] கிரீசு போன்ற சில ஐரோப்பிய நாடுகளிலும் (சிலவற்றில் மனித நடமாட்டம் இல்லாத அன்டார்க்டிக்காவை தவிர்த்து ஐந்தாகவும்) கற்றுக் கொடுக்கப்படுகிறது.[18]

மனித நடமாட்டம் இல்லாத அன்டார்க்டிக்காவைத் தவிர்த்த ஐந்து கண்ட வடிவத்தைப் பன்னாட்டு ஒலிம்பிக் குழு ஏற்றுக்கொண்டு[16][17] ஒலிம்பிக் சின்னங்கள்#ஒலிம்பிக் சின்னத்தில் ஐந்து வளையங்களைக் கொண்டுள்ளது.[25]

ஆத்திரேலியாவையும் அடுத்துள்ள பசிபிக் மற்றும் அமைதிப் பெருங்கடல் தீவுகளையும் குறிக்க சிலநேரங்களில் ஓசியானியா அல்லது ஆஸ்திரேலியா என்ற சொற்பயன்பாட்டையும் காணலாம். இப்பயன்பாட்டை கனடா [20] இத்தாலி, கிரேக்கம் (நாடு)[18] மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகள், போர்த்துக்கல், எசுப்பானியா நாட்டு பாடப்புத்தகங்களில் காணலாம்.

பரப்பளவும் மக்கட்தொகையும்

பரப்பளவின் ஒப்பீடும் (பத்து மில்லியன் ச.கிமீக்களில்) மக்கள்தொகை ஒப்பீடும் (பில்லியன் மக்கள்களாக)

கீழ்வரும் அட்டவணையில் ஒவ்வொரு கண்டத்தின் பரப்பளவும் மக்கள் தொகையும் தொகுக்கப்பட்டுள்ளது.[26]

கண்டம்பரப்பு (கிமீ²)தோராய மக்கட்தொகை
2002
மக்கட்தொகை
சதவிகிதம்
சதுர கி.மீ.க்கு
மக்களடர்த்தி
ஆப்பிரிக்க-யுரேசியா84,360,0005,400,000,00086%64.0
யுரேசியா53,990,0004,510,000,00072%83.5
ஆசியா43,810,0003,800,000,00060%86.7
அமெரிக்காக்கள்42,330,000886,000,00014%20.9
ஆப்பிரிக்கா30,370,000890,000,00014%29.3
வட அமெரிக்கா24,490,000515,000,0008%21.0
தென் அமெரிக்கா17,840,000371,000,0006%20.8
அண்டார்டிக்கா13,720,0001,0000.00002%0.00007
ஐரோப்பா10,180,000710,000,00011%69.7
ஓசியானியா9,010,00033,552,9940.6%3.7
ஆஸ்திரேலியா -நியூ கினியா8,500,00030,000,0000.5%3.5
ஆஸ்திரேலியா7,600,00021,000,0000.3%2.8

எல்லாக் கண்டங்களும் சேர்த்து மொத்தப் பரப்பளவு 148,647,000 ச.கி.மீ. இது உலகின் பரப்பில் ஏறத்தாழ 29.1 சதவிகிதம் ஆகும்.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கண்டம்&oldid=3582542" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை