டிக்டாக்

டிக்டாக் (TikTok, சீனம்: 抖音பின்யின்: Dǒuyīn; நேர்பொருளாக "vibrating sound") டூயின் என அழைக்கப்படும் இந்த சீன செயலியின் மூலம் குறு நிகழ்படங்களை உருவாக்கவும் பகிர்ந்துகொள்ளவும் இயலும். பைட்டேன்ஸ் எனும் சீன நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தச் செயலி செப்டம்பர், 2016 ஆம் ஆண்டில் சீனாவில் அறிமுகமானது.[3][4] ஆனால் ஒரு ஆண்டிற்குப் பிறகே இது வியாபார ரீதியிலாக செயல்பாட்டிற்கு வந்தது.[5] ஆசியா, அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் உலகின் பட நாடுகளில் நிகழ்பட இயக்கு தளங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் செயலியாகும். 2018 ஆம் ஆண்டிலிருந்து பரவலான வரவேற்பைப் பெறத் துவங்கியது. அக்டோபர் 2018 இல் அமெரிக்காவில் அதிக முறை பதிவிறக்கமான செயலிகளில் முதலிடம் பெற்றது.[6]

டிக்டாக்
உருவாக்குனர்பைட்டேன்ஸ்
தொடக்க வெளியீடுசெப்டம்பர் 2016; 7 ஆண்டுகளுக்கு முன்னர் (2016-09)
அண்மை வெளியீடு15.5.42 / ஏப்ரல் 06, 2020
இயக்கு முறைமைஐஓஎஸ், ஆண்ட்ராய்டு இயங்குதளம்
கோப்பளவு287.6 MB (ஐஓஎஸ்)[1]84 MB (ஆண்ட்ராய்டு)[2]
கிடைக்கும் மொழிதமிழ், ஆங்கிலம் உட்பட பல மொழிகள்
மென்பொருள் வகைமைநிகழ்படங்கள் பகிர்தல்
உரிமம்இலவசமென்பொருள்
இணையத்தளம்tiktok.com (ஆங்கிலம்)
douyin.com (சீனம்)

தமிழகத்தில் டிக் டாக்

டிக் டாக் செயலியின் மூலமாக ஆபாசமாக நடன அசைவுகள் இருப்பதாகவும் சமூகச் சீரழிவிற்கு வழிவகுப்பதாகவும் பலதரப்பில் இருந்து கருத்துக்கள் வந்ததன் அடிப்படையில் அதனைத் தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசிற்கு கடிதம் அனுப்பப்பட்டது.[7][8][9]

இந்தியாவில் தடை

மதுரை உயர்நீதிமன்ற கிளையில், வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் இந்த செயலி மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப் பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறி, இதனை தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் "டிக்டாக்" செயலியை தரவிறக்கம் செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். இதை எதிர்த்து டிக்டாக் நிறுவனம், தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீ‌திமன்றம், மதுரை உயர்நீதிமன்றம் கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து டிக்டாக் செயலியை பிளேஸ்டோர் மற்றும்‌ ஆப்ஸ்டோர் தளங்களில் இருந்து நீக்குமாறு, கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடிதம் ‌எழுதியுள்ளது. இதனை ஏற்று டிக் டாக்கை பதிவிறக்கம் செய்யும் வசதியை கூகுள் பிளேஸ்டோர் நீக்கியுள்ளது.[10][11][12]

தடை நீக்கம்

இதைத்தொடர்ந்து டிக்டாக் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது. டிக்டாக் நிறுவனம் தொடர்ந்த மனுவை மதுரை உயர்நீதிமன்றம் ஏப்ரல் 22, 2019 அன்று விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென்றும், தவறும் பட்சத்தில் இந்த தடை தளர்ந்ததாக கருதப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இதன்படி ஏப்ரல் 22, 2019 அன்று இந்த வழக்கை விசாரித்து மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் ஆபாச நடன அசைவுகள், சமூக சீர்க்கேடு நடன அசைவுகள் போன்றவற்றை பதிவேற்றம் செய்யக்கூடாது என நிபந்தனையுடன் டிக்டாக் செயலிக்கான தடையை நீக்கியது.[13][14]

இந்த தடை நீங்கிய பிறகு டிக்டாக் செயலியை பிளேஸ்டோர் மற்றும்‌ ஆப்ஸ்டோர் தளங்களில் பதிவிறக்கம் செய்யும் வசதி மீண்டும் கொண்டுவரப்பட்டது.[15]

இந்திய அரசு தடை செய்தல்

இச்செயலியானது தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் சீனாவின் ‘டிக் டாக்’, ‘ஷேர்இட்’ செயலிகள் உள்பட 59 செயலிகளுக்கு 29 சூன், 2020 அன்று இந்திய அரசு அதிரடியாக தடை செய்தது. பின்பு டிக்டாக் செயலியை பிளேஸ்டோர் மற்றும்‌ ஆப்ஸ்டோர் தளங்களிலிருந்து நீக்கப்பட்டது.[16]

சான்றுகள்

வெளியிணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=டிக்டாக்&oldid=3919707" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை