நோம் சோம்சுக்கி

நோம் சோம்சுக்கி (பிறப்பு: டிசம்பர் 7, 1928) அமெரிக்காவில் வாழும் ஓர் பேரறிஞர். இவருடைய முழுப்பெயர் ஆவ்ரம் நோம் சோம்சுக்கி (Avram Noam Chomsky) ஆகும். பல துறைகளில் அடிப்படையான அறிவாக்கங்கள் தந்திருக்கின்றார். அமெரிக்காவில் உள்ள மாசாச்சுசெட்சு இன்சிட்டிட்யூட் ஆஃவ் டெக்னாலச்யில் (MIT) பல்லாண்டுகள் பணியாற்றி, பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். மொழியியல் துறையில் தோற்றுவாய் இலக்கணம் (generative grammar) என்னும் அறிவுக்கொள்கையை முன்வைத்தவர். மொழியியல் துறையில் தலைசிறந்த பேரறிஞர்களில் ஒருவராய் அறியப்படுகின்றார். உள்ளம், அறிவுத்திறன், உள்ளறிவு, உள்ளுணர்தல் முதலியவற்றைத் தொடர்பு கொள்ளும் அறிதிறன் அறிவியல் (cognitive science) என்னும் துறையில் பெரும் புரட்சியைத் தூண்டியவர் இவர்.

நோம் சோம்சுக்கி
2004 இல் பிரிட்டீஷ் கொலம்பியா சென்றிருந்தபோது.
பிறப்புதிசம்பர் 7, 1928 (1928-12-07) (அகவை 95)
பிலடெல்பியா, பென்சில்வேனியா, அமெரிக்க ஐக்கிய நாடு
மற்ற பெயர்கள்அவ்ரம் நோம் சோம்சுக்கி
படித்த கல்வி நிறுவனங்கள்பென்சில்வேனியா பல்கலைக்கழகம் (B.A.) 1949, (M.A.) 1951, (முனைவர்) 1955
காலம்20th / தற்கால மெய்யியல்
பகுதிமேற்குலக மெய்யியல்
பள்ளிGenerative linguistics, பகுப்பாய்வு மெய்யியல்
கல்விக்கழகங்கள்MIT (1955–present)
முக்கிய ஆர்வங்கள்
மொழியியல் ·
Metalinguistics
உளவியல்
மொழி மெய்யியல்
மன மெய்யியல்
அரசியல் · நன்னெறி
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
 
  • தோற்றுவாய் இலக்கணம்
    உலகளாவிய இலக்கணம்
    Transformational grammar
    Context-sensitive grammar
    Deterministic context-free grammar
    இடம் சாரா இலக்கணம்
    Phrase structure grammar
    Formal grammar
    Generative linguistics
    Cartesian linguistics
    Transformational syntax
    Government and binding
    X-bar theory
    Chomsky hierarchy
    Digital infinity
    Principles and parameters
    Minimalist program
    Language acquisition device
    Linguistic competence
    Innateness hypothesis
    Poverty of the stimulus
    Levels of adequacy
    Psychological nativism
    Second-language acquisition
    Statistical language acquisition
    பேச்சுச் சமுதாயம்
    Plato's Problem
    Deep structure
    Cognitive closure
    "Colorless green ideas sleep furiously"
    மொழி
    Markedness
    Mentalism
    Merge
    m-command
    Parasitic gap
    ஒலியனியல்
    Scansion
    Subjacency
    Symbol
    Immediate constituent analysis
    Linguistic performance
    Innate language
    Non-configurational language
    சுழல் in language
    Phrase structure rules
    Tensed-S condition
    Specified subject condition
    Empty category principle
    Structure preservation principle
    Trace erasure principle
    Projection Principle
    Extended Projection Principle
    Axiom of categoricity
    Logical Form
    Chomsky–Schützenberger theorem
    Chomsky Normal Form
    Terminal and nonterminal symbols
    Formal democracy
    Intellectual responsibility
    Bought priesthood
    Corporate media
    Elite media
    Media manipulation
    Self-censorship
    propaganda model[1]
செல்வாக்குக்கு உட்பட்டோர்
வலைத்தளம்
chomsky.info
நோம் சோம்சுக்கி

மொழியியல், அறிதிறன் அறிவியல், கணினியியல் ஆகிய துறைகளில் ஏற்படுத்திய தாக்கம் மட்டுமின்றி, இவர் ஐக்கிய அமெரிக்க நாடுகள் உட்பட பன்னாட்டு வெளியுறவுக் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் மிக முனைப்புடன் திறனாய்வு செய்து பரவலாகப் பகிர்ந்து கொண்டு வந்திருக்கின்றார். கலை, இலக்கியம் பற்றிய தலைப்புகளில் எழுதுகின்ற உயிர் வாழும் அறிஞர்கள் யாவரைக் காட்டிலும் அதிக அளவு எண்ணிக்கையில் மேற்கோள்கள் காட்டப்பட்ட புகழ் மிக்க எழுத்தாளராக இருப்பவர் இவர். அண்மையில் நடத்திய ஆய்வின் படி 1980–1992 ஆம் காலப்பகுதியில், மேற்குலக வரலாற்றிலேயே அதிக அளவு மேற்கோள் சுட்டப்பட்ட ஆசிரியராக அல்லது படைப்புகளில் முதல் 10 ஆக அறியப்படுபவர்.[21]

வாழ்க்கைக் குறிப்புகள்

சோம்சுக்கி ஐக்கிய அமெரிக்க நாடுகளில் உள்ள பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பிலடெல்ஃவியா நகரத்திலே வில்லியம் சோம்சுக்கிக்கும் எல்சீ சோம்சுக்கிக்கும் மகனாகப் பிறந்தார். தந்தையார் வில்லியம் சோம்சுக்கி யுக்ரேன் நாட்டிலிருந்து குடியேறிய எபிரேய அறிஞர். தாயார் இன்றைய பெலாரசு நாட்டிலிருந்து வந்தவர். இவர் யூதர் இனத்தைச் சேர்ந்தவர். சிறு வயதில் (1930களில்) இவருடைய யூத பின்னணியினால் கத்தோலிக மதத்தவர்களாலும் பிறராலும் இடர்ப்பாடுகளை எதிர்கொண்டிருக்கின்றார்.

சோம்சுகி தன் 10 ஆவது அகவையிலேயே ஸ்பானிய உள்நாட்டுப்போரில் பார்சிலோனா நகரம் வீழ்ச்சியுற்றதை அடுத்து பாசிசக் கொள்கைகள் பரவும் அச்சம் இருப்பதாக எழுதினார். தம் 12-13 ஆவது அகவையிலேயே அரசியல் கருத்துக்களில் ஈடுபாடு காட்டினார்.

பிலடெல்ஃவியா மைய உயர்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற்றபின், 1945ல் பிலடெல்ஃவியா பல்கலைக்கழகத்தில் மெய்யியல், மொழியியல் பற்றி பயிலத் தொடங்கினார். வெஸ்ட் சர்ச்மன் (West Churchman), நெல்சன் குட்மன் (Nelson Goodman) ஆகிய மெய்யியல் அறிஞர்களிடமும், செல்லிக் ஹாரிஸ் (Zellig Harris) என்னும் மொழியியல் அறிஞரிடமும் பயிற்சி பெற்றார். ஹாரிஸ் அவர்களுடைய பாடங்களில் அவர் கண்டுபிடித்த மொழியியல் பற்றிய கணித வழி ஆய்வுகளும் இருந்தன. இக்கருத்துக்களைப் பின்னர் சோம்சுகி வேறுகோணத்தில் எண்ணி இடம்-சாரா இலக்கணம் பற்றிய கருத்துக்களைப் படைத்தார்.

1949ல் சோம்சுகி காரொல் ஷாட்சு (Carol Schatz) என்னும் மொழியியலாளரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அவிவா (பி.1957), டயான் (பி.1960) ஆகிய இரு மகள்களும், ஹாரி (பி.1967) என்னும் மகனும் உள்ளார்கள்.

சோம்சுகி 1955ல் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இருந்து மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். முனைவர் பட்டத்திற்கான ஆய்வை ஹார்வர்டு ஜூனியர் வெல்லோ வாக ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தினார். இவருடைய ஆய்வின் அடிப்படையில் எழுந்த கருத்துக்களைத் தொகுத்து சொற்றொடரியல் அமைப்புகள் என்னும் பொருள்படும் Syntactic Structures என்னும் தலைப்பில் இவர் எழுதிய நூல் மிகவும் பரவலாக அறியப்பட்ட மொழியியல் வெளியீடு ஆகும்.

சோம்சுக்கி அவர்கள் மாசாச்சுசெட் தொழில்நுட்பக் கல்விக்கழகம் என்னும் MIT (எம் ஐ டி) யில் 1955ல் சேர்ந்து 1961ல் பேராசிரியராகத் தேர்வு பெற்றார். பின்னர் 1966-1976ஆம் காலப்பகுதியில் ஃவெராரி வார்டு பேராசிரியர்ப்பதிவி பெற்றார். பின்னர் 1976ல் எம்.ஐ.டியின் தனிச்சிறப்பு வாய்ந்த இன்ஸ்டிட்யூட் பேராசிரியராக அமர்த்தப்பட்டடர். எம் ஐ டியில் இவர் 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து விரிவுரையாற்றி வந்திருக்கின்றார்.

மொழியியல் ஆக்கங்கள்

சோம்சுக்கியின் மொழிக் கோட்பாட்டின் அடிப்படை ஒரு மொழியின் வடிவத்தினைத் தீர்மானிக்கும் கொள்கைகள் உயிரியியல் ரீதியாக மனித மனத்தில் தீர்மானிக்கப்படுகின்றது, எனவே இது மரபு வழியாக கடத்தப்படுகிறது என்கிறது. இக்கொள்கையின் படி இவர் எல்லா மனிதர்களும் அவர்களது சமூக கலாசார வேறுபாடுகளைக் கடந்து ஒரே மொழியியல் வடிவத்தைத்தான் பகிர்ந்துகொண்டிருகிறார்கள் என வாதிடுகிறார். இவர் பி.எப்.ஸ்கின்னரின் புரட்சிகர நடத்தைக் கொள்கையை எதிர்க்கிறார். மனித மொழி மற்ற உயிரினங்களின் தகவல் தொடர்பு வடிவங்களில் இருந்து வேறுபட்டது என்கிறார் சாம்ஸ்கி.

அரசியல் கருத்துக்கள்

சோம்சுக்கி தனது வாழ்நாளில் பெரும்பகுதியில் இடதுசாரிக் கருத்துக்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளுக்காகச் செலவிட்டிருக்கிறார். அமெரிக்காவில் இவரது அரசியல் சாய்வு பொது நடப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும் இவர் தனது கருத்துக்கள் பொதுவாக "பதவியிலிருப்பவர்களும் ஆளுமை அதிகாரம் கொண்டவர்களும் கேட்க விரும்பாதவைகளாக" இருப்பதால் தம்மை ஒரு அரசியல் மறுப்பாளராகக் காட்டுகின்றனர் என்கிறார்.

பெற்ற பரிசுகளும் புகழ்ப்பட்டங்களும்

சோம்சுக்கி அவர்கள் 1969ல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழத்தில் (Oxford University) ஜான் லாக் (John Locke) விரிவுரை நிகழ்த்தினார். 1970ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பெர்ட்ரண்டு ரஸ்ஸல் (Bertrand Russel) நினைவு விரிவுரை நிகழ்த்தினார். 1972ல் புது தில்லியில் நேரு நினைவு விரிவுரை நிகழ்த்தினார். 1988ல் டொராண்ட்டோ பல்கலைக்கழகத்தின் மாஸ்ஸி விரிவிரை நிகழ்த்தினார்.நோம் சோம்சுக்கி அவர்கள் மிகப்பல கௌரவ முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அவற்றுள் லண்டன் பல்கலைக்கழகம், சிகாகோ பல்கலைக்கழகம், சிகாகோவின் லயோலா பல்கலைக்கழகம், ஸ்வாத்மோர் கல்லூரி, தில்லி பல்கலைக்கழகம், மாசாச்சுசெட்சு பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஜியார்ஜ்டவுன் பல்கலைக்கழகம், பென்சில்வேனியா பல்கலைக்கழகம், புயுனோஸ் ஏரிஸ் பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம், ஹார்வர்டு பல்கலைக்கழகம், கொல்கத்தா பல்கலைக்கழகம், டொராண்ட்டோ பல்கலைக்கழகம், ப்ரஸ்செல் விரியே பல்கலைக்கழகம், மேற்கு ஒண்ட்டாரியோ பல்கலைக்கழகம் முதலியன குறிப்பிடத்தக்கன.இவர் பெற்ற பரிசுகளில் கியோட்டோ பரிசு, பென் பிராங்க்கலின் பதக்கம், இருமுறை ஆர்வெல் பரிசு, ஹெல்ம்ஹோல்ட்ஸ் பதக்கம், டோரொத்தி எல்ட்ரிட்ஜ் பீஸ்மேக்கர் பரிசு முதலியன குறிப்பிடத்தக்கன. தம் அறிவு வாழ்க்கையின் தொடக்கத்திலேயே மெக்கார்த்தர் பரிசு பெற்றார்.

பிரித்தானிய இதழ் Prospect (ப்ராஸ்பெக்ட்) நிகழ்த்திய 2005க்கான உலகளாவிய அறிவாளி பற்றிய கருத்துத் தேர்தலில் (poll), வாழும் அறிஞரில் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க இதழ் New Statesman 2006ல் நிகழ்த்திய வாக்கெடுப்பில் ‘’Heros of our time’’ (தற்கால சூரன் (ஏறோன்)) வரிசையில் ஏழாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நோம் சோம்சுக்கியின் ஆக்கங்கள்

மொழியியல்

முழு விவரங்களும் சோம்சுக்கியின் எம்.ஐ டி வலைத்தளத்திலே பார்க்கலாம்.

  • Chomsky (1951). Morphophonemics of Modern Hebrew. Master's thesis, University of Pennsylvania.
  • Chomsky (1955). Logical Structure of Linguistic Theory.
  • Chomsky (1955). Transformational Analysis. Ph.D. dissertation, University of Pennsylvania.
  • Chomsky, Noam, Morris Halle, and Fred Lukoff (1956). "On accent and juncture in English." In For Roman Jakobson. The Hague: Mouton
  • Chomsky (1957). Syntactic Structures. The Hague: Mouton. Reprint. Berlin and New York (1985).
  • Chomsky (1964). Current Issues in Linguistic Theory.
  • Chomsky (1965). Aspects of the Theory of Syntax. Cambridge: The MIT Press.
  • Chomsky (1965). Cartesian Linguistics. New York: Harper and Row. Reprint. Cartesian Linguistics. A Chapter in the History of Rationalist Thought. Lanham, Maryland: University Press of America, 1986.
  • Chomsky (1966). Topics in the Theory of Generative Grammar.
  • Chomsky, Noam, and Morris Halle (1968). The Sound Pattern of English. New York: Harper & Row.
  • Chomsky (1968). Language and Mind.
  • Chomsky (1972). Studies on Semantics in Generative Grammar.
  • Chomsky (1975). The Logical Structure of Linguistic Theory.
  • Chomsky (1975). Reflections on Language.
  • Chomsky (1977). Essays on Form and Interpretation.
  • Chomsky (1979). Morphophonemics of Modern Hebrew.
  • Chomsky (1980). Rules and Representations.
  • Chomsky (1981). Lectures on Government and Binding: The Pisa Lectures. Holland: Foris Publications. Reprint. 7th Edition. Berlin and New York: Mouton de Gruyter, 1993.
  • Chomsky (1982). Some Concepts and Consequences of the Theory of Government and Binding.
  • Chomsky (1982). Language and the Study of Mind.
  • Chomsky (1982). Noam Chomsky on The Generative Enterprise, A discussion with Riny Hyybregts and Henk van Riemsdijk.
  • Chomsky (1984). Modular Approaches to the Study of the Mind.
  • Chomsky (1986). Knowledge of Language: Its Nature, Origin, and Use.
  • Chomsky (1986). Barriers. Linguistic Inquiry Monograph Thirteen. Cambridge, MA and London: The MIT Press.
  • Chomsky (1993). Language and Thought.
  • Chomsky (1995). The Minimalist Program. Cambridge, MA: The MIT Press.
  • Chomsky (1998). On Language.
  • Chomsky (2000). New Horizons in the Study of Language and Mind.
  • Chomsky (2000). The Architecture of Language (Mukherji, et al, eds.).
  • Chomsky (2001). On Nature and Language (Adriana Belletti and Luigi Rizzi, ed.).

கணினியியல்

  • Chomsky (1956). Three models for the description of language. I.R.E. Transactions on Information Theory, vol. IT-2, no. 3: 113-24.

அரசியல்

  • (1969). American Power and the New Mandarins
  • (1970). "Notes on Anarchism", New York Review of Books
  • (1970). At war with Asia
  • (1970). Two Essays on Cambodia
  • (1971). Chomsky: selected readings
  • (1971). Problems of Knowledge and Freedom
  • (1973). For Reasons of State
  • (1974). Peace in the Middle East? Reflections on Justice and Nationhood
  • (1976). Intellectuals and the State
  • (1978). Human Rights and American Foreign Policy
  • (1979). After the Cataclysm: Postwar Indochina and the Reconstruction of Imperial Ideology (with Edward Herman)
  • (1979). Language and Responsibility
  • (1979). The Washington Connection and Third World Fascism (with Edward Herman)
  • (1981). Radical Priorities
  • (1982). Superpowers in collision: the cold war now
  • (1982). Towards a New Cold War: Essays on the Current Crisis and How We Got There
  • (1983). The Fateful Triangle: The United States, Israel, and the Palestinians
  • (1985). Turning the Tide : U.S. intervention in Central America and the Struggle for Peace
  • (1986). Pirates and Emperors: International Terrorism in the Real World
  • (1986). The Race to Destruction: Its Rational Basis
  • (1987). The Chomsky Reader
  • (1987). On Power and Ideology
  • (1987). Turning the Tide: the U.S. and Latin America
  • (1988). The Culture of Terrorism
  • (1988). Language and Politics
  • (1988). Manufacturing Consent: The Political Economy of the Mass Media (with Edward Herman)
  • (1989). Necessary Illusions
  • (1991). Terrorizing the Neighborhood
  • (1992). What Uncle Sam Really Wants
  • (1992). Chronicles of Dissent
  • (1992). Deterring Democracy
  • (1993). Letters from Lexington: Reflections on Propaganda
  • (1993). The Prosperous Few and the Restless Many
  • (1993). Rethinking Camelot: JFK, the Vietnam War, and U.S. Political Culture
  • (1993). World Order and Its Rules: Variations on Some Themes
  • (1993). Year 501: The Conquest Continues
  • (1994). Keeping the rabble in Line
  • (1994). Secrets, Lies, and Democracy
  • (1994). World Orders, Old and New
  • (1996). Powers and Prospects: Reflections on Human Nature and the Social Order
  • (1996). Class Warfare
  • (1997). Media Control: The Spectacular Achievements of Propaganda
  • (1997). One Chapter, The Cold War and the University
  • (1998). The Culture of Terrorism
  • (1999). The Umbrella of US Power
  • (1999). The New Military Humanism: Lessons from Kosovo
  • (1999). Profit over People
  • (1999). The Fateful Triangle
  • (2000). Rogue States
  • (2001). Propaganda and the Public Mind
  • (2001). 9-11
  • (2002). Understanding Power: The Indispensable Chomsky
  • (2002). Media control
  • (2003). Hegemony or Survival: America's Quest for Global Dominance
  • (2005). Chomsky on Anarchism
  • Chomsky, Noam (April 2005). Government in the future. Seven Stories Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-58322-685-0.
  • (2005). Imperial Ambitions – Conversations on the Post-9/11 World
  • (2006). Failed States: The Abuse of Power and the Assault on Democracy

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நோம்_சோம்சுக்கி&oldid=3930039" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை