பிங்

பிங் (Bing) என்பது மைக்ரோசாப்ட் நிறுவத்திற்குச் சொந்தமான வலைத் தேடல் பொறி ஆகும். இத்தேடல் பொறியானது முன்னர் லைவ் சேர்ச், வின்டோசு லைவ் சேர்ச், எம்எஸ்என் சேர்ச் ஆகிய பெயர்களைக் கொண்டு அமைந்திருந்தது. இத்தேடல் பொறி மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால் முடிவெடுக்கும் பொறியாக விளம்பரப்படுத்தப்பட்டது.[3] 2009 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதியன்று சான் டியேகோ நகரில் இடம்பெற்ற ஆல் திங்ஸ் டிஜிட்டல் (All Things Digital) மாநாட்டின் போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி இசுட்டீவ் பால்மரால் இத்தேடல் பொறி அறிமுகப்படுத்தப்பட்டு சூன் 1 இல் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.. [4] 2009 ஆம் ஆண்டு சூன், 29 ஆம் திகதியன்று யாகூ! தேடல் பொறியினை பிங் தேடல் பொறி நிர்வகிக்கும் என அறிவிக்கப்பட்டது.[5]

பிங்
Bing logo
வலைத்தள வகைவலைத் தேடல் பொறி
கிடைக்கும் மொழி(கள்)40
உரிமையாளர்மைக்ரோசாப்ட்
உருவாக்கியவர்மைக்ரோசாப்ட்
மகுட வாசகம்பிங் செய்வதற்காக
Bing is for doing. (2012)
பிங்கு முடிவெடு
Bing and decide (2009)
வணிக நோக்கம்ஆம்
நிரலாக்க மொழிஏஎஸ்பி.நெட்[1]
வெளியீடுசூன் 1, 2009; 14 ஆண்டுகள் முன்னர் (2009-06-01)
அலெக்சா நிலைpositive decrease 17 (திசம்பர் 2015)[2]
தற்போதைய நிலைசெயல்பாட்டிலுள்ளது
உரலிwww.bing.com


இத்தேடல் பொறியானது அல்பானியன், அரபு, பல்கேரியன், காட்டலான், சீனம், குரோவாசியன், செக், டேனியன், இடச்சு, ஆங்கிலம், எசுத்தோனியம், பின்னியம், பிரெஞ்சு, செருமானியம், கிரேக்கம், எபிரேயம், அங்கேரியன், இசுலேன்சுக, இந்தோனேசியன், இத்தாலியன், சப்பானியன், கொரியன், இலத்துவியன், இலித்துவானியம், மலாய், நோர்வீஜியன், பிரேசிலிய போர்த்துகேய மொழி, போர்த்துகேயம், உருமானியம், உருசியன், சேர்பியன், சுலோவாக், சுலோவேனியன், எசுப்பானியம், சுவீடிஸ், தமிழ், தாய், துருக்கியம், உக்குரேனியன், வியட்னாமியம் ஆகிய 40 மொழிகளில் காணப்படுவதுடன் பல்வேறு நாடுகளுக்காகவும் பகுதிப் பரவலாக்கப்பட்டுள்ளது. [6] உலகிலுள்ள ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் ஏற்ற தேடல் முடிவுகளை இத்தேடல் பொறி தருகின்றது.[7]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பிங்&oldid=3563316" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை