மெசுத் ஓசில்

மெசுட் ஓசில் (Mesut Özil, பி. அக்டோபர் 15, 1988) ஒரு செருமானிய [2] கால்பந்தாட்ட வீரர். தற்போது இங்கிலாந்தின் பிரீமியர் லீக் (இபில்) பிரிவில் ஆர்சனல் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் 2006ம் ஆண்டிலிருந்து செருமானிய இளையோர் தேசிய அணிக்காக விளையாடி வருகிறார். 2009ம் ஆண்டிலிருந்து செருமானிய தேசியக் கால்பந்தாட்ட அணியிலும் இடம்பெற்றுவருகிறார். ஓசில் 2010 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளில் சிறந்த விளையாட்டு வீரருக்கு வழங்கப்படும் தங்கப்பந்து (Golden Ball) விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டதன் மூலம் பிரபலமானார். தனது முதுநிலை தொழில்முறைக் கால்பந்து வாழ்க்கையை, அவரது சொந்த ஊரின் கால்பந்துக் கழகமான சால்கெவில் 2006-ஆம் ஆண்டில் தொடங்கினார்; இக்கழகம் செருமனியின் முதல்தர கால்பந்துக் கூட்டிணைவான புன்டசுலீகாவில் இடம்பெற்றிருக்கிறது. 2008-ஆம் ஆண்டில் மற்றொரு புன்டசுலீகா கழகமான வெர்தர் பிரெமனுக்கு மாற்றலானார். 2010 உலகக்கோப்பைப் போட்டிகளில் அவரது சிறந்த ஆட்டத்தின் காரணமாக, ரியல் மாட்ரிட் அணி ஆகத்து, 2010-இல் அவரை வாங்கியது. 2013-ஆம் ஆண்டின் "கோடைக்கால விளையாட்டுவீரர்களுக்கான மாற்றல் சாளரத்தின்" கடைசி நாளில், £42.5 மில்லியனுக்கு ஆர்சனலுக்குப் பெயர்ந்தார்; இதுவே, அக்கழகத்தினால் ஒரு வீரருக்குக் கொடுக்கப்பட்ட அதிகபட்ச விலையாகும். மேலும், இந்த விற்பனைமூலம் அதிக விலை போன செருமானிய கால்பந்தாட்டக்காரர் என்ற பெருமைக்கும் உரித்தானவரானார்.

மெசுத் ஓசில்

செருமனி அணிக்காக விளையாடும் ஓசில்
Personal information
முழு பெயர்மெசுத் ஓசில்
பிறந்த நாள்15 அக்டோபர் 1988 (1988-10-15) (அகவை 35)
பிறந்த இடம்கெல்சென்கிர்ச்சென, மேற்கு செருமனி
உயரம்1.82 மீ[1]
விளையாட்டு நிலைதாக்கும் நடுக்கள வீரர் (Attacking midfielder)
Club information
தற்போதைய கிளப்ஆர்சனல்
எண்11
Youth career
1995–1998வெஸ்ட்ஃபாலியா 04 கெல்சென்கிர்ச்சென்
1998–1999டியுட்டோனியா ஷால்கே-நோர்ட்
1999–2000ஃபால்கே கெல்சென்கிர்ச்சென்
2000–2005ரோட்-வெய்ஸ் எஸ்சன்
2005–2006ஷால்கே 04
Senior career*
YearsTeamApps(Gls)
2006–2008ஷால்கே 0430(0)
2008–2010வெர்தெர் பிரெமென்71(13)
2010–2013ரியால் மாட்ரிட்26(5)
2013-ஆர்சனல்
National team
2006–200719 வயதுக்குட்பட்ட ஜெர்மானிய தேசிய அணி11(4)
2007–200921 வயதுக்குட்பட்ட ஜெர்மானிய தேசிய அணி16(5)
2009–ஜெர்மானிய தேசிய அணி62(18)
* Senior club appearances and goals counted for the domestic league only and correct as of 16 அக்டோபர் 2010.

† Appearances (Goals).

‡ National team caps and goals correct as of 12 அக்டோபர் 2010

ஓசில் ஒரு தாக்கும்-நடுக்கள வீரராவார்; இவர் தனது பந்துகடத்தும் நேர்த்தி மற்றும் தாக்காட்டத்தை மேம்படுத்தும் திறனுக்காக பெரிதும் அறியப்படுபவர் ஆவார். அவரது பந்துகடத்தும் திறனும், தனது சக-அணி வீரர்களுக்கு கோலடிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் விதத்தில் முன்னாள் கால்பந்து ஜாம்பவானான "ஜீனதின் ஜிதேனுடன்" ஒப்பிடப்படுகிறார். 2011-ஆம் ஆண்டில் ஐரோப்பாவின் முதல்தர கழகப் போட்டிகள் மற்றும் அவர் ஆடிய நாட்டின் கால்பந்துக் கூட்டிணைவுகளில் அதிக அளவு கோலடிக்க உதவிய "அசிஸ்டு"களை ஏற்படுத்தியவர் ஆவார்; அவ்வாண்டில் மொத்தம் 25 அசிஸ்டுகள் செய்தார். 2012-ஆம் ஆண்டில் எசுப்பானியாவின் லா லீகா கூட்டிணைவில் 17 அசிஸ்டுகளுடன் முதல் இடம் பெற்றார். மேலும், 2010 உலகக்கோப்பை கால்பந்து மற்றும் யூரோ 2012 போட்டிகளில் அதிக அசிஸ்டுகள் ஏற்படுத்திய வீரர்களில் ஒருவராக விளங்கினார்; இவ்விரு போட்டிகளிலும் இவர் மூன்று அசிஸ்டுகள் பெற்றார்.

கழகத் தொழில் வாழ்க்கை

கெல்சென்கிர்சென் மற்றும் றொட்-வெயிசு எசென்

மெசுட் ஓசில் தனது இளமைப் பருவத்தில் கெல்சென்கிர்சென்லிலுள்ள கழகங்களுக்காக விளையாடத் தொடங்கியதன் மூலம் காலபந்தாட்ட உலகில் நுழைந்தார். அதன் பிறகு றொட்-வெயிசு எசென் கழகத்திற்காக ஐந்து ஆண்டுகள் வருடங்கள் விளையாடினர்.

ஷால்கெ 04

2005ல் இவர் சால்கெ 04 கால்பந்துக் கழகத்தின் இளையோர் பிரிவில் சேர்ந்தார். அங்கு இவர் ஒரு நடுக்கள வீரராக இருந்தார் .அத்துடன் அன்று இவரது இலக்கம் 17 ஆகும். லிகாபொகல் போட்டிகளின் பொது லின்கன் எனும் வீரர் இடைநிறுத்தப்பட்டதால் பாயர் லெவெர்குசென் மற்றும் பயெர்ன் முனிச் கழகங்களுடனான போட்டியில் தாக்கும் நடுக்கள வீரராக (Attacking midfielder) ஷால்கெ 04 அணிக்காக விளையாடினர். இதுவே இவர் முதலாவது தாக்கும் நடுக்கள வீரராக விளையாடிய போட்டியாகும்.[3] சால்கெ கால்பந்துக் கழகத்தின் முதல்தர அணியில் இடம்பிடித்தபின்னர், "அடுத்த பெரிய பெயர்" ஆகும் வாய்ப்புடன் இருப்பதாகக் கூறப்பட்டார். ஆனால் சால்கெ அளித்த, ஆண்டுக்கு €1.5 மில்லியன் சம்பளம் தனக்குப் போதாது என்று தெரிவித்த பின்னர், சனவரி 2008-இல் மற்றொரு செருமானிய முதல்தரக் கால்பந்துக் கழகமான வெர்தர் பிரெமனுக்கு மாற்றலானார்.

வெர்தெர் பிரெமென்

ஏப்ரல் 2010-இல் வெர்தர் பிரெமெனுடன் ஓசில்.

இவர் 31 ஜனவரி 2008ல் வெர்தெர் பிரெமென் என்னும் ஜெர்மானிய சங்கத்திற்கு 30 சூன் 2011 வரை விளையாடுவாதற்காக €5 மில்லியன் தொகைக்கு ஒப்பந்தமானார்.[1] வெர்தெர் பிரெமன் கால்பந்துக் கழகத்தைத் தவிர்த்து புன்டசுலீகாவின் மற்றுமிரு முக்கிய கழகங்களான "ஆன்னோவர் 96" மற்றும் "விஎஃப்பி ஸ்டுட்கார்ட்" ஆகியவையும் மெசுத் ஓசிலை வாங்குவதற்கு முயன்றன; ஆனால், அவ்விரு கழகங்களும் மாற்றலுக்காக அப்பெரும் தொகையைச் செலவிடத் தயாராக இல்லை.[4] வெர்தர் பிரெமனில் ஓசில் எண் 11 போட்டியுடை அணிந்து விளையாடினார்.

சால்கெ 04 அணியிலிருந்து கசப்புடன் வெளியேறிய ஓசில், வெர்தெர் பிரெமனுடனான முதல் பருவத்தில் டிஎஃப்பி போகல் கோப்பையைக் கைப்பற்ற உதவினார்; பெர்லினில் நடைபெற்ற அக்கோப்பையின் இறுதிப்போட்டியில் பாயெர் லெவர்குசன் அணியினை 1-0 என்று இலக்குக் கணக்கில் வெர்தெர் பிரெமென் வீழ்த்தியது.[5] இறுதிப் போட்டியின் ஒற்றை கோல் ஓசிலால் அடிக்கப்பட்டது. மேலும், அப்பருவத்தில் யூஈஎஃப்ஏ கோப்பையின் இறுதிப் போட்டியையும் வெர்தெர் பிரெமென் எட்டியது; இறுதிப் போட்டியில் உக்ரைன் நாட்டு அணியான "சக்தர் டோனக்சிடம்" தோல்வியைத் தழுவியது.[6]

ரியல் மாட்ரிட்

17 அக்டோபர் 2010ல் €15 மில்லியன் இடமாற்று தொகையைப் பெற்றுக் கொண்டு ஓசிழை ரியால் மாட்ரிட் அணுக்கு மாற்ற வெர்தெர் ப்ரெமென் ஒப்புக்கொண்டது. ரியால் மாட்ரிட் அணுக்காக அவர் விளையாடிய முதல் ஆட்டம் 22 ஆகஸ்டில் ஹர்குலெஸ் அணியுடனான போட்டியாகும். இதில் ரியால் மாட்ரிட் 3க்கு 1 என்ற வித்தியாசத்தில் ஹர்குலெஸ் அணியை தோற்கடித்தது.[7] லாலிகா தொடரில் ரியால் மாட்ரிட் இற்கான தனது கன்னி போட்டியில் 62ம் நிமிடத்தில் ஏன்ஞ்சல் டி மரியா(Ángel di María) இற்கு பதிலாக மெல்லோர்கா(mallorca) கழகத்திற்கு எதிரான போட்டியில் களமிறங்கினார்.அப்போட்டி 0–0 கோல் கணக்கில் வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது.[8]

ஆர்சனல்

செப்டம்பர் 2, 2013, அன்று இங்கிலாந்தின் ஆர்சனல் அணிக்கு மாற்றலாக உடன்பட்டார். அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாவிடினும், மாற்றலாவதற்கும் ஐந்து வருட பிணைய ஒப்பந்தத்திற்குமாக தோராயமாக ₤42.5 மில்லியன் தொகை கொடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது; இது உண்மையெனில், வரலாற்றில் அதிக அளவிற்கு விலை போன செருமானிய வீரர் "மெசுத் ஓசிலே" ஆவார். ஆர்சனல் அணியில் 11-ஆம் எண் சட்டையுடன் தாக்கும் நடுக்கள வீரராக ஆடி வருகிறார்.

தனது முதல் பருவத்தில் (2013-14) ஆர்சனல் அணி, எஃப் ஏ கோப்பையை வெல்ல உதவினார். ஆர்சனல் அணி ஒன்பதாண்டுகளுக்குப் பிறகு வென்ற முதல் கோப்பை இதுவேயாகும்.

சர்வதேச விளையாட்டு வாழ்க்கை

2006 செப்டம்பரில் ஓசிழ் ஜெர்மனியின் 17 வயதிற்குட்பட்டவர்களுக்கான அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2007ல் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அணியில் உறுப்பினரானார். 29 சூன் 2009ல் நடைபெற்ற U-21 யுரோபியன் சாம்பியன்ஷிப் ( U-21 European Championship) இறுதிப்போட்டியில் இங்கிலாந்துடன் 4க்கு 1 என்ற கோல் வித்தியாசத்தில் ஜெர்மானிய அண்இ வெற்றிபெற காரணமாக இருந்தார். 11 பெப்ரவரி 2009ல் நடந்த நோர்வே உடனான நட்புறவு போட்டி, இவர் ஜெர்மனி தேசிய அணிக்காக விளையாடிய முதல் போட்டியாகும். ஓசிழ் ஜெர்மன் தேசிய அணிக்கான தனது முதலாவது கோலை ளெவெர்குசென்(Leverkusen)ல் தென்னாப்பிரிக்காவுக்கெதிரான தனது மூன்றாவது போட்டியில் அடித்தார்.

2010 உலகக்கோப்பை

ஓசிழ் 2010 உலகக்கோப்பை போட்டிகளில் ஜெர்மனி தேசிய அணிக்கு விளையாடத் தெரிவானார். முதல் நான்கு போட்டிகளிலும் திறமையுடன் விளையாடினார். கானா அணிக்கெதிரான போட்டியில் கடினமான கோலை அடித்தது மூலம் ஜெர்மனிக்கு குழுவில் முதலாவது இடத்தை உறுதிப்படுத்தினார். 27 சூன் 2010ல் இங்கிலாந்துடனான போட்டியில் நான்காவது கோலை போட தோமஸ் முலாருக்கு உதவினார். இது இங்கிலாந்துடனான 16 ஆவது தொடர் வெற்றியாகும். இப்போட்டியில் 4க்கு 1 என்ற கோல் வித்தியாசத்தில் ஜெர்மன் அணி இங்கிலாந்து அணியை தோற்கடித்தது. கால் இறுதியில் ஆர்ஜன்டினா உடனான போட்டியில் மிரோசலாவ் குளோசே இற்கு பந்தைக் கடத்தியது மூலம் இரண்டாவது கோலை போட உதவினார். இப்போட்டியில் 4க்கு 1 என்ற வித்தியாசத்தில் ஜெர்மன் அணி ஆர்ஜன்டினா அணியை தோற்கடித்தது. பிபா இவரை தங்கப்பந்து (Golden Ball) விருதுக்கான 10 பேர்களில் ஒருவராக பரிந்துரை செய்தது.

சர்வதேச கோல்கள்

#தேதிஇடம்எதிரணிஸ்கோர்போட்டி
15 செப்டம்பர் 2009பே எரீனா, லெவர்குசென், ஜெர்மனி  தென்னாப்பிரிக்கா2–0நட்பு ரீதியான போட்டி
223 சூன் 2010கால்பந்து நகரம், ஜொஹனஸ்பர்க், தென்னாப்பிரிக்கா  கானா1–02010 பிபா உலகக் கோப்பை
38 அக்டோபர் 2010ஒலிம்பிக் அரங்கம், பெர்லின், ஜெர்மனி  துருக்கி2–0யூஈஎஃப்ஏ யூரோ 2012 கோப்பை தகுதிச்சுற்று
Correct as of 8 October 2010

தொழில்முறை வாழ்க்கைப் புள்ளிவிவரங்கள்

இற்றைபடுத்தப் பட்ட தேதி: அக்டோபர் 23, 2010[9][10]

சங்க அணிஆண்டுலீக்கோப்பைஐரோப்பாமொத்தம்
ஆடியவைகோல்கள்உதவிகள்ஆடியவைகோல்கள்உதவிகள்ஆடியவைகோல்கள்உதவிகள்ஆடியவைகோல்கள்உதவிகள்
ஷால்கே 042006–0719011001002101
2007–0811041104001614
மொத்தம்30052105003715
வெர்தெர் பிரெமென்2007–0812110002001411
2008–0928315521140747523
2009–103191750280744926
2010–11101101
மொத்தம்7113331124240141061551
ரியால் மாட்ரிட்2010–118240003121136
மொத்தம்8240003121136
தொழில் வாழ்க்கை மொத்தம்10915421334321161541962

சாதனைகள்

கழகம்

வெர்தெர் பிரெமென்
  • டிஃப்பி-பொகல்  : 2009
ரியல் மாட்ரிட்
ஆர்சனல்

நாடு

2014 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வென்ற பிறகு உலகக்கோப்பையுடன் ஓசில்.
செருமனி
தனியர்

தனிப்பட்ட வாழ்க்கை

ஓசிழின் சகோதரர் முட்லுவும் ஒரு கால்பந்தாட்ட வீரர் ஆவார்.இவர் கெல்சென்கிர்செனிலுள்ள ஹெலெர் 06 என்னும் அணிக்காக விளையாடி வருகிறார்.இவர் மூன்றாவது தலைமுறை ஜெர்மன் வாழ் துருக்கி இனத்தை சார்ந்தவர்.இவரின் மூதாதையர்கள் வட துருக்கியிலிருந்து வந்த டெவ்ரெக், சொங்குல்தக் இனத்தை சார்ந்தவர்.இவர் அவரின் ஒவ்வொரு போட்டியின் போதும் அவதானமாக இருக்க போட்டி ஆரம்பிக்கும் முன் குர்ஆன் ஓதுவார்.இவர் பேட்டி ஒன்றின் பொது "நான் ஒவ்வொரு போட்டியின் முன்னும் இதை செய்து வருகிறேன் மற்றும் தொழுகிறேன் இவ்வேளையில் எனது அணி வீரர்கள் என்னுடன் கதைக்க முடியாது என அறிவார்கள் " என தெரிவித்தார்.

குறிப்புகள்

வெளிப்புற இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mesut Özil
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வார்ப்புரு:Germany Squad 2010 World Cupவார்ப்புரு:Real Madrid C.F. squad

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மெசுத்_ஓசில்&oldid=3568426" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை