இம்ரான் கான்

இம்ரான் கான் என அழைக்கப்படும் இம்ரான் அகமது கான் நியாசி (Imran Ahmed Khan Niazi; பிறப்பு: 5 அக்டோபர் 1952) பாக்கித்தான் அரசியல்வாதியும், முன்னாள் துடுப்பாட்ட வீரரும் ஆவார். இவர் 2018 முதல் ஏப்ரல் 2022 வரை 22-வது பாக்கித்தான் பிரதமர் ஆகப் பதவியில் இருந்தார்.[5]

இம்ரான் கான்
Imran Khan
2019-இல் இம்ரான் கான்
பாக்கித்தானின் 22-வது பிரதமர்
பதவியில்
18 ஆகத்து 2018 – 10 ஏப்ரல் 2022
குடியரசுத் தலைவர்மம்நூன் ஹுசைன்
ஆரிப் அல்வி
முன்னையவர்நசிருல் முல்க்
பாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
25 ஏப்ரல் 1996
முன்னையவர்புதிய பதவி
தேசியப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
13 ஆகத்து 2018
முன்னையவர்ஒபைதுல்லா சாதிக்கெல்
தொகுதிமியான்வாலி-I
பெரும்பான்மை113,523 (44.89%)
பதவியில்
19 சூன் 2013 – 31 மே 2018
முன்னையவர்அனீப் அப்பாசி
பின்னவர்சேக் ரசீத் சாபிக்
தொகுதிராவல்பிண்டி-VII
பெரும்பான்மை13,268 (8.28%)
பதவியில்
10 அக்டோபர் 2002 – 3 நவம்பர் 2007
முன்னையவர்புதிய தொகுதி
பின்னவர்நவாப்சாதா மாலிக் அமத் கான்
தொகுதிமியான்வலி-I
பெரும்பான்மை6,204 (4.49%)
பிராட்போர்டு பல்கலைக்கழக வேந்தர்
பதவியில்
7 திசம்பர் 2005 – 7 திசம்பர் 2014
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இம்ரான் அகமது கான் நியாசி

5 அக்டோபர் 1952 (1952-10-05) (அகவை 71)
லாகூர், பஞ்சாப், பாக்கித்தான்
அரசியல் கட்சிபாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப்
துணைவர்(s)
ஜெமினா கோல்டுசிமித்
(தி. 1995; முறிவு 2004)

ரேகம் கான்
(தி. 2015; முறிவு 2015)

புசுரா பீபி (தி. 2018)
பிள்ளைகள்3
பெற்றோர்(s)இக்ரமுல்லா கான் நியாசி (தந்தை),
சௌக்கத் கானும் (தாய்)
வாழிடம்பானி காலா மாளிகை[1]
கல்விகெபில் கல்லூரி, ஆக்சுபோர்டு (இ.க)
கையெழுத்து
இணையத்தளம்www.insaf.pk
புனைப்பெயர்கப்தான்[2][3]
தனிப்பட்ட தகவல்கள்
உயரம்1.88 மீ[4]
மட்டையாட்ட நடைவலக்கைத் துடுப்பாளர்
பந்துவீச்சு நடைவலக்கை வேகப் பந்துவீச்சாளர்
பங்குபன்முக வீரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 88)3 சூன் 1971 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வு2 சனவரி 1992 எ. இலங்கை
ஒநாப அறிமுகம் (தொப்பி 175)31 ஆகத்து 1974 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாப25 மார்ச் 1992 எ. இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகைதேர்வுஒ.நா.பமு.தப.அ
ஆட்டங்கள்88175382425
ஓட்டங்கள்3,8073,70917,77110,100
மட்டையாட்ட சராசரி37.6933.4136.7933.22
100கள்/50கள்6/181/1930/935/66
அதியுயர் ஓட்டம்136102*170114*
வீசிய பந்துகள்19,4587,46165,22419,122
வீழ்த்தல்கள்3621821287507
பந்துவீச்சு சராசரி22.8126.6122.3222.31
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
231706
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
60130
சிறந்த பந்துவீச்சு8/586/148/346/14
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
28/–36/–117/–84/–
மூலம்: ESPNCricinfo, 5 நவம்பர் 2014

இம்ரான் கான் பசுத்தூன் குடும்பம் ஒன்றில் 1952 இல் லாகூரில் பிறந்தார். 1975 இல் ஆக்சுபோர்டு கேபிள் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து, தனது 18-வது அகவையில் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் ஈடுபடலானார். 1971 இல் இங்கிலாந்து அணிக்கு எதிரான தேர்வுப் போட்டியில் விளையாடினார். 1992 வரை துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். 1982 முதல் 1992 வரை பாக்கித்தான் அணியின் தலைவராகப் பல முறை விளையாடியுள்ளார்.[6] 1992 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை வென்றார். இதுவே பாக்கித்தானின் ஒரேயொரு உலகக்கிண்ண வெற்றியாகும். துடுப்பாட்டத்தின் மிகப்பெரும் பன்முக வீரர்களில் ஒருவராக இம்ரான் கான் கணிக்கப்பட்டார்.[7][8] இவர் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்தில் 3,807 ஓட்டங்களையும், 362 இலக்குகளையும் எடுத்துள்ளார்.

இம்ரான் கான்ஆரசியலில் இறங்குவதற்கு முன்னர்,[9][10] லாகூரிலும் பெசாவரிலும் புற்றுநோய் மருத்துவமனைகளையும்,[11] அவரது தொகுதியான மியான்வலியில் கல்லூரி ஒன்றையும் நிறுவியுள்ளார்.[12][13] 1996 இல் பாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். 2002 பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். 2007 வரை எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தார். 2008 தேர்தலில் இவரது கட்சி தேர்தலில் பங்கெடுக்காமல் ஒதுங்கி இருந்தது. 2013 தேர்தலில் இவரது கட்சி இரண்டாவது அதிக எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்றது.[14][15] 2018 தேர்தலில், அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக வெற்றி பெற்று, சுயேச்சௌ உறுப்பினர்களுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைத்தது. இம்ரான் கான் பிரதமரானார்.

கான் பன்னாட்டு நாணய நிதியத்தின் பிணையெடுப்பின் மூலம் செலுத்தும் வரவுச்செலவு சமநிலை நெருக்கடியை நிவர்த்தி செய்தார்.[16][17] நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க பாதுகாப்புச் செலவுகளை மட்டுப்படுத்தினார்.[18][19] இதன்மூலம் சில பொதுவான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்தார்.[20] கான் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடங்கினார், ஆனாலும் அரசியல் எதிரிகளால் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்பட்டதற்காக விமர்சிக்கப்பட்டார்.[21] வரி வசூல்,[22][23] முதலீடுகள் ஆகியவற்றை அதிகரித்தார்.[24] சமூகப் பாதுகாப்புக் காப்புவலையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. கானின் அரசாங்கம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாற்றத்திற்கு உறுதியளித்தது, தேசியக் காடுகளை வளர்ப்பதிலும், பாதுகாக்கப்பட்ட பகுதிகளை விரிவுபடுத்துவதிலும் ஈடுபட்டது. கோவிட்-19 தொற்றுநோய்களின் போது நாட்டை வெற்றிகரமாக வழிநடத்தினார். வெளியுறவுக் கொள்கையில், அவர் இந்தியாவிற்கு எதிரான எல்லை மோதல்களைக் கையாண்டார், ஆப்கானித்தான் அமைதி செயல்முறைக்கு ஆதரவளித்தார்.[25] அத்துடன், சீனா, உருசியா நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தினார்.[26] அதே நேரத்தில் அமெரிக்காவுடனான உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. 2022 இல், இம்ரான் கான் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டார், இது அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தியதை அடுத்து, 2022 ஏப்ரல் 10 இல் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இளமைக் காலம்

இம்ரான் கான் பஷ்தூன் மரபைச் சேர்ந்தவர் ஆவார். இவர் அக்டோபர் 5 , 1952 இல் லாகூர், பஞ்சாபில் பிறந்தார். இவர் 25 நவம்பர் 1952 இல் பிறந்தார் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.[27][28][29][30] பாக்கித்தான் துடுப்பாட்ட வாரிய அதிகாரிகள் அவரது கடவுச்சீட்டில் நவம்பர் 25 தவறாக குறிப்பிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.[31] இவர் குடிசார் பொறியாளரான இக்ரமுல்லா கான் நியாசி மற்றும் அவரது மனைவி ஷகத் கானூமின் ஒரே மகன் ஆவார். இவருக்கு நான்கு சகோதரிகள் உள்ளனர்.[32] வடமேற்கு பஞ்சாபில் மியான்வாலியில் நீண்டகாலமாக குடியேறினார்.அவரது தந்தைவழி குடும்பம் பஷ்தூன் இனத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் நியாசி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.[33] இவரது மூதாதையர்களில் ஒருவரான ஹைபத் கான் நியாஸி, 16 ஆம் நூற்றாண்டில், " சேர் சா சூரியில் ஒருவராக இர்ந்தார். மேலும், பஞ்சாபின் ஆளுநராகவும் இருந்துள்ளார்.[34] பாகிஸ்தானின் வரலாற்றில் பல வெற்றிகரமான துடுப்பாட்ட வீரர்கள் பஷ்தூன் மக்களாக இருந்துள்ளனர்.[32] ஜாவேத் புர்கி மற்றும் மஜித் கான் ஆகியோர் இவரது உறவினர் ஆவர்.[35] இவரது தாய்வழி குடும்பம் சுமார் 600 ஆண்டுகளாக இந்தியாவின் ஜலந்தரில் உள்ள பஸ்தி டேனிஷ்மண்டாவில் இருந்தது.[36][37] தனது இளமை பருவத்தில் அமைதியான மற்றும் கூச்ச சுபாவமுள்ள சிறுவனாக இருந்த கான் தனது சகோதரிகளுடன் ஒப்பீட்டளவில் வசதியான, உயர் நடுத்தர வர்க்க சூழ்நிலைகளில் வளர்ந்தார் [38]

இவர் வோர்செஸ்டர் மற்றும் ஆக்சுபோர்டில் உள்ள கெப்ளி கல்லூரியிலும் பயின்றார். தனது 13 ஆம் வயது முதல் துடுப்பாட்டம் விளையாடி வருகிறார். முதலில் தனது கல்லூரி அணிக்காக விளையாடி இவர் பின் வோர்செஸ்டர்ஷயர் துடுப்பாட்ட சங்கத்திற்காக விளையாடினார். 1971 ஆம் ஆண்டில் பிர்மின்ஹாமில் நடைபெற்ற போட்டியில் தனது 18 ஆம் வயதில் பாக்கித்தான் அணிக்காக விளையாடினார். ஆக்சுபோர்டுவில் பயின்றபிறகு இவர் 1976 ஆம் ஆண்டில் பாக்கித்தான் தேசிய அணியில் இடம்பிடித்தார்.இவர் 1982 முதல் 1992 ஆம் ஆண்டு வரையில் தலைவராக இருந்துள்ளார்.[39] 1992 இல் பாகிஸ்தான் உலகக் கிண்ணம் வென்றபோது அணித் தலைவராக இருந்தார்.[40]

இவர் 1992 ஆம் ஆண்டில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார். 362 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி இவர் 3,807 ஓட்டங்கள் எடுத்தார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த சகலத்துறையர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.[41] 2010 ஆம் ஆண்டின் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் ஹால் ஆஃப் ஃபேமாக தெரிந்தெடுக்கப்பட்டார். 1991 ஆம் ஆண்டில் லாகூரில் 25 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் தனது தாயின் நினைவாக புற்றுநோயியல் மருத்துவமனை ஒன்றைத் துவங்கினார். பின் பெசாவரில் இரண்டாவது மருத்துவமனை ஒன்றைத் துவங்கினார்[11]. தனது ஓய்விற்குப் பிறகு பிராட்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக வேந்தராகவும் , வள்ளலாகவும், துடுப்பாட்ட வர்ணனையாளராகவும் இருந்தார்.[42][43]

சர்வதேச போட்டிகள்

1971 ஆம் ஆண்டில் எட்ஜ்பஸ்டனில் நடைபெற்ற இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். பின் புரூடென்சியல் கோப்பைத் தொடரில் இதே அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார். ஆக்சுபோர்டுவில் பயின்றபிறகு இவர் 1976 ஆம் ஆண்டில் பாக்கித்தான் தேசிய அணியில் நிலையான இடம்பிடித்தார். 1976-1977 ஆம் ஆண்டுகளில் இவர் நியூசிலாந்து துடுப்பாட்ட அணி மற்றும் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.[44]

விளையாட்டில் சாதனைகள்

அனைத்துக் காலத்திற்குமான சிறந்த விரைவு வீச்சாளர்களில் ஒருவராக இம்ரான் கான் திகழ்கிறார் என பிபிசி தெரிவித்தது.[45] ஈஎஸ்பிஎன் நிறுவனத்தின் தரவரிசையில் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த சகலத்துறையர்களின் வரிசையில் சோபர்ஸ்க்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.[46][47][48]

தனிப்பட்ட வாழ்க்கை

இவர் தனது இளமைப் பருவ வாழ்க்கையில் பல பெண்களுடன் உறவு நிலையினைக் கொண்டிருந்தார். [49] இவர் பிளேபாய் என்று அறியப்பட்டார். [49] [50][51] இவரது இளமைப்பருவ வாழ்க்கையில் இவருக்கு ஏராளமான தோழிகள் இருந்தனர்.[52] பலர் வெளியில் தெரியாவண்ணம் இருந்தனர். இதனை பிரித்தானிய செய்தித்தாளான தி டைம்ஸ் இவர்களை 'மர்மமான அழகிகள்' என்று அழைத்தது.[52] சீனத் அமான்,[53] எம்மா சார்ஜென்ட், சூசி முர்ரே-பிலிப்சன், சீதா வைட், சாரா கிராலி,[52] ஸ்டீபனி பீச்சம், கோல்டி ஹான், கிறிஸ்டியன் பேக்கர், சுசன்னா கான்ஸ்டன்டைன், மேரி ஹெல்வின், கரோலின் கெல்லட்,[54] லிசா காம்ப்பெல்,[35] அனஸ்தேசியா குக், ஹன்னா மேரி ரோத்ஸ்சைல்ட்,[55] ஜெர்ரி ஹால் மற்றும் லுலு பிளாக்கர்.[56][57] ஆகியோர் இதில் இடம்பெற்றிருந்தனர்.

திருமண வாழ்க்கை

இங்கிலாந்தைச் சேர்ந்த யூதரான ஜெமீமா கோல்டுஸ்மித் என்பவரை மதம் மாற்றி, 1995இல் திருமணம் செய்து கொண்டார் இம்ரான் கான். இந்த அணையருக்கு சுலைமான், காசிம் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களின் ஒன்பது வருட மணவாழ்வு மணமிறிவில் முடிந்தது. இதன்பிறகு பி.பி.சி.யில் பணியாற்றிய பிரித்தானிய – பாகிஸ்தானிய வம்சாவளியில் பிறந்த ரேஹம் கான் என்பவரை இரகசிய திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமனம் ஒரு ஆண்டுக்குள்ளேயே மணமுறிவில் முடிந்தது. பின்னர் 2008 பெப்ரவரியில் தனது ஆன்மிக குரு என்று அதுவரை கூறிக் கொண்டிருந்த புஷ்ரா மணிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.[58]

அரசியல் கட்சி வெற்றிகள்

பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (நீதிக்கான பாகிஸ்தானிய இயக்கம்) என்ற அமைப்பை இம்ரான் கான் 1996இல் தொடங்கினார். இது முதலில் ஒரு சமூக அரசியல் இயக்கமாக உருவெடுத்தது. 1999இல் இது அரசியல் கட்சியாக அறிவிக்கப்பட்டது. 2002 தேர்தலில் மியான்வாலி தொகுதிக்கு இம்ரான் கான் நாடாளுமன்ற உறுப்பினரானார். 2002 பொதுத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தைப் பிடித்த இம்ரானின் கட்சி 2008 தேர்தலை புறக்கணித்தது. 2013இல் நடந்த தேர்தலில் 75 லட்சம் வாக்குகளைப் பெற்றது.

17 ஆகஸ்ட் 2018 அன்று கான் 176 வாக்குகளைப் பெற்று பாகிஸ்தானின் 22 வது பிரதமரானார், அதே நேரத்தில் அவரது போட்டியாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் 96 வாக்குகளைப் பெற்றார்.[59] இவர் 18 ஆகஸ்ட் 2018 அன்று பதவியேற்றார்.[60] சிகந்தர் சுல்தான் ராஜாவை ரயில்வே செயலாளராகவும், கடல்சார் செயலாளராக ரிஸ்வான் அகமது மற்றும் வெளியுறவு செயலாளராக சோஹைல் மஹ்மூத் நியமிக்கப்பட்டது உட்பட நாட்டின் அதிகாரத்துவத்தில் உயர் மட்ட மறுசீரமைப்புக்கு கான் உத்தரவிட்டார்.[61][62] பாகிஸ்தான் இராணுவத்தில் அசிம் முனீருக்கு இடை-சேவை புலனாய்வு இயக்குநரக நியமித்தார்.[63]

சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இம்ரான்_கான்&oldid=3586190" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை