டொலுய்

செங்கிஸ் கான் மற்றும் போர்ட்டேயின் நான்காவது மகன்

டொலுய் கான் (அண்.1191 – 1232) என்பவர் ஒரு மங்கோலியக் கான் ஆவார். செங்கிஸ் கான் மற்றும் போர்ட்டேயின் நான்காவது மகன் ஆவார். 1227இல் இவரது தந்தை இறந்தபோது டொலுயின் உளூஸ் அல்லது மரபுவழிப் பிராந்தியமானது மங்கோலியப் பீடபூமியில் இருந்த மங்கோலியத் தாயகத்தைக் கொண்டிருந்தது. ஒக்தாயி பெரிய கானாகப் பதவியேற்கும் வரை ஒரு பிரதிநிதியாக டொலுய் மங்கோலியப் பேரரசை நிர்வகித்தார். டொலுய் அதற்கு முன் சின், சியா மற்றும் குவாரசமிய யுத்தங்களில் சிறப்பாகப் பங்கெடுத்திருந்தார். மேலும் மெர்வ் மற்றும் நிசாபூர் நகரங்களைக் கைப்பற்றுவதில் முக்கியப் பங்காற்றினார். இவரே மங்கோலியா மற்றும் ஈல்கான் பேரரசர்கள் பெரும்பாலானோரின் நேரடி மூதாதையர் ஆவார்.

டொலுய் கான்
ரசீத்தல்தீன் அமாதனியின் நூலிலுள்ள டொலுய் கானின் ஓவியம், 14 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம்.
மங்கோலியப் பேரரசின் பிரதிநிதி
ஆட்சிக்காலம்25 ஆகத்து 1227 – 13 செப்டம்பர் 1229
முன்னையவர்செங்கிஸ் கான்
பின்னையவர்ஒக்தாயி கான்
சோர்காக்டனி டொலுயிக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்குத் தலைவியாவார்
பிறப்புஅண்.1191
இறப்பு1232 (அகவை 40–41)
மங்கோலியப் பேரரசு (தற்கால மங்கோலியா)
துணைவர்சோர்காக்டனி பெகி
சருக் கதுன்
லிங்குன் கதுன்
நயன் கதுன்
டொகுஸ் கதுன்
குழந்தைகளின்
பெயர்கள்
மோங்கே கான் (1209–1259)
குப்லாய் கான் (1215–1294)
குலாகு கான் (1217–1265)
அரிக் போகே (1219–1266)
பெயர்கள்
இயற்பெயர்: டொலுய் (Тулуй)
மறைவுக்குப் பிந்தைய பெயர்
பேரரசர் ரென்செங் ஜிங்சியாங் (仁圣景襄皇帝, இறப்பிற்குப் பிறகு 1266ல் கொடுக்கப்பட்டது)
கோயில் பெயர்
ருயிசோங் (睿宗, இறப்பிற்குப் பிறகு 1266ல் கொடுக்கப்பட்டது)
மரபுபோர்சிசின்
தந்தைசெங்கிஸ் கான்
தாய்போர்ட்டே உஜின்
மதம்தெங்கிரி மதம்

டொலுய், ககான் என்ற பட்டத்தைத் தனக்காக என்றுமே பயன்படுத்திக் கொண்டது இல்லை; செங்கிஸ் கானோ அல்லது அவரது பின் வந்த மங்கோலியப் பேரரசின் மூன்று கான்களோ தெற்கிலிருந்த அண்டை நாட்டுச் சீன அரசமரபுகளைப் போல் இராஜ பட்டங்களை என்றுமே பயன்படுத்திக் கொண்டது இல்லை. டொலுய்க்கு ககான் என்ற பட்டம் இவரது மகன் மோங்கேயால் வழங்கப்பட்டது. இவருக்குக் கோயில் பெயரை (சீனம்: 元睿宗; பின்யின்: யுவான் ருயிசோங்; வேட்–கில்சு: ஜுயி-ட்சுங்) சில தசாப்தங்களுக்கு பிறகு யுவான் அரசமரபை நிறுவிய இவரது மற்றொரு மகனான குப்லாய் வழங்கினார்.

வாழ்க்கை

இளமை

செங்கிஸ் கான் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த போது, போரில் ஈடுபட இயலாத அளவிற்கு டொலுய் மிகவும் இளையவராக இருந்தார். இவருக்கு ஐந்து வயதாகிய பொழுது ஒரு தாதரால் இவர் கிட்டத்தட்ட கொல்லப்பட்டார். இவரை இவரது சகோதரி அல்டனி மற்றும் செங்கிஸ் கானின் இரண்டு கூட்டாளிகள் காப்பாற்றினர்.[1] 1203இல் இவரது தந்தை இவருக்கு சோர்காக்டனியை மணம் முடித்து வைத்தார். சோர்காக்டனி ஓங் கானின் (டொலுயின் தாத்தா எசுகெயின் நண்பர்) சகோதரரின் மகளாவார். 1209இல் இவர்களின் முதல் மகன் மோங்கே பிறந்தார்.

ஆரம்ப காலம்

இவர் முதன்முதலில் 1213இல் சின் அரசமரபுக்கு எதிரான யுத்தத்தில் களமிறங்கினார். டெக்சிங் கோட்டை மதில் சுவரில் தனது மைத்துனன் சிகுவுடன் இணைந்து ஏறினர்.

1221இல் செங்கிஸ் கான் இவரை ஈரானின் குராசான் பகுதிக்கு அனுப்பினார். அப்பகுதியில் இருந்த நகரங்கள் பல முறை கிளர்ச்சியில் ஈடுபட்டன. நவம்பர் 1220இல் நிசாபூரின் படைவீரர்கள் டொலுயின் மைத்துனன் தோகுசரைக் கொன்றனர். டொலுயின் இராணுவம் நிசாபூர் மக்களை சமவெளிப் பகுதிக்கு அழைத்துச் சென்றது. நிசாபூர் மற்றும் மெர்வ் நகர மக்களை மொத்தமாக படுகொலை செய்ய இவர் ஆணையிட்டார்.[2]

செங்கிஸ் கானுக்குப் பின் அடுத்த கான்

தனக்குப் பிறகு அடுத்த கான் யாரென செங்கிஸ் கான் முடிவு செய்ய நினைத்தபோது தனது நான்கு மகன்களில் ஒருவரைத் தேர்வு செய்வதில் அவருக்குப் பிரச்சினை இருந்தது. டொலுய்க்குச் சிறந்த இராணுவத் திறமைகள் இருந்தன. ஒரு தளபதியாகவும் அவர் பல வெற்றிகளைப் பெற்றிருந்தார். ஆனால் செங்கிஸ் கான் ஒக்தாயியைத் தேர்ந்தெடுத்தார். ஒக்தாயி அரசியல் ரீதியாகத் திறமைசாலியாக இருந்தார். ஒரு திறமையான தலைவனாக இருப்பதில் டொலுய் தேவையற்ற அளவுக்கு அதிக எச்சரிக்கையுடன் செயல்படுவார் என செங்கிஸ் கான் நினைத்தார். 1227இல் மேற்கு சியாவிற்கு எதிரான படையெடுப்பில் டொலுய் தனது தந்தையுடன் கலந்து கொண்டார்.

செங்கிஸ் கானின் இறப்பிற்குப் பிறகு டொலுய் மங்கோலியப் பேரரசை இரண்டு வருடங்களுக்குப் பொதுவான மேற்பார்வையாளராகக் கவனித்துக் கொண்டார். மங்கோலிய உயர்குடியினர் இச்செயலை ஏற்றுக் கொண்டனர். ஏனெனில், மங்கோலியப் பாரம்பரியப்படி, கடைசி மகன் தனது தந்தையின் சொத்துக்களைப் பெற்றார். மற்றொரு காரணம், அந்நேரத்தில் நடு மங்கோலியாவில் மிகப்பெரிய மற்றும் மிக சக்தி வாய்ந்த இராணுவத்தை டொலுய் கொண்டிருந்தார். அடுத்த ககானைத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பதை டொலுய் ஆதரித்தார். அடுத்த ககானாக ஒக்தாயி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் தனது தந்தையின் விருப்பத்தை டொலுய் நிறைவேற்றினார்.

டொலுய், ஒக்தாயியுடன் வடக்கு சீனாவில் படையெடுப்பை நடத்தினர். 1231–32இல் உத்தியியலாளர் மற்றும் களத் தளபதியாக டொலுய் பணியாற்றினார். சின் தலைநகரான கைபேங்கை முற்றுகையிட இரண்டு இராணுவங்கள் அனுப்பப்பட்டன. சின் அரசின் பெரும்பாலான பாதுகாப்புகளைத் தகர்த்த பின்னர் அவர்கள் வடக்குப் பகுதிக்குத் திரும்பினர்.[3]

இறப்பு

மங்கோலியர்களின் இரகசிய வரலாற்றின் படி சீனாவில் நடந்த ஒரு படையெடுப்பின்போது ஒக்தாயியை ஒரு மிக கடினமான உடல் நலக்குறைவில் இருந்து குணப்படுத்த டொலுய் தன்னைத் தியாகம் செய்தார். ஒக்தாயியின் உடல்நலக் குறைவுக்குக் காரணம், சீனாவின் பூமி மற்றும் நீர் ஆவிகள் என ஷாமன்கள் கூறினர். தங்களது மக்கள் விரட்டப்படுவதாலும், நிலப்பகுதி அழிக்கப்படுவதாலும் அந்த ஆவிகள் வருத்தம் அடைந்திருந்தன என அவர்கள் கூறினர். நிலம், விலங்குகள் மற்றும் மக்களைக் காணிக்கையாக அளித்த பொழுது ஒக்தாயியின் உடல்நலக்குறைவு மீண்டும் அதிகமானது. ஆனால் ஒரு குடும்ப உறுப்பினரை அவர்கள் தியாகம் செய்த போது ஒக்தாயி உடல்நலக் குறைவில் இருந்து உடனடியாக மீண்டார். டொலுய் தானாக ஒப்புக்கொண்டு ஒரு சபிக்கப்பட்ட பானத்தை நேரடியாக குடித்த பிறகு இறந்தார். ஆனால் அடா-மாலிக் ஜுவய்னி, குடிப்பழக்கத்தால் டொலுய் இறந்தார் என கூறுகிறார்.[4]

மரபு

மங்கோலியப் பேரரசின் விதியை அமைத்ததில் டொலுயை விட டொலுயின் வழித்தோன்றல்கள் எனப்படும் இவரது குடும்பத்தின் பங்கு முக்கியமானது. டொலுய்க்கும் அவரது நெசுத்தோரிய கிறித்தவ மனைவி சோர்காக்டனி பெகிக்கும் மோங்கே, குப்லாய், அரிக் போகே மற்றும் குலாகு ஆகியோர் மகன்களாகப் பிறந்தனர். இதில் முதல் மூவர் மங்கோலியப் பேரரசின் ககான் பட்டத்திற்குப் போட்டியிட்டனர். குலாகு ஈல்கானரசு அரசமரபையும் மற்றும் குப்லாய் சீனாவின் யுவான் அரசமரபையும் தோற்றுவித்தனர். டொலுயின் மகன்களான குப்லாய் மற்றும் அரிக் போகே இடையிலான சண்டையானது மங்கோலியப் பேரரசின் சக்தியைக் குறைத்தது. 1260 மற்றும் 1264இல் மேற்கு கானரசுகள் ஒன்றுடன் ஒன்று போரிட்ட டொலுய் உள்நாட்டுப் போருக்கு காரணமானது.

ஒக்தாயி மற்றும் குயுக் ஆகியோரின் இறப்பிற்குப் பின்னாலான பிரதிநிதித்துவ காலங்களில் டொலுயின் வழித்தோன்றல்கள், ஒக்தாயி மற்றும் சூச்சியின் மகன்கள் ஆகியோருக்கு இடையேயான போட்டியானது மங்கோலியப் பேரரசில் வளர்ச்சியற்ற தன்மை மற்றும் சண்டையை உருவாக்கியது. 1252இல் ககான் என்ற பட்டத்தை டொலுயின் இறப்பிற்குப் பிறகு அவருக்கு மோங்கே வழங்கினார்.[5] 1271இல் யுவான் அரசமரபை குப்லாய் கான் தோற்றுவித்த போது அவர் தனது தந்தை டொலுயின் பெயரை அலுவல் பதிவுகளில் ருயிசோங் என பதிவிட்டார். டொலுயின் வழித்தோன்றல்கள் மங்கோலியா மற்றும் தெற்கு மங்கோலியாவை 1251 முதல் 1635 வரையிலும், மங்கோலியாவை 1691 வரையிலும் மற்றும் புகாராவை 1920 வரையிலும் ஆண்டனர்.

செங்கிஸ் கான் தவிர டொலுய் மற்றும் அவரது மனைவி ஆகியோர் உள் மங்கோலியாவில் சீன பொதுவுடைமைவாதிகளால் 1950களில் கட்டப்பட்ட செங்கிஸ் கான் கல்லறையில் கௌரவப்படுத்தப்பட்டனர்.

குடும்பம்

  1. சோர்காக்டனி பெகி — சக்திவாய்ந்த கெரயிடுத் தலைவர் தொகுருலின் தம்பி ஜாகா கம்புவின் மகள்
    1. மோங்கே கான்: மங்கோலியப் பேரரசின் ககான் (1251–1259).
    2. குப்லாய் கான்: மங்கோலியப் பேரரசு மற்றும் யுவான் அரசமரபின் ககான் (1260–1294)
    3. குலாகு கான்: ஈரான், துருக்கி, சார்சியா மற்றும் ஆர்மீனியாவை ஆண்ட ஈல்கானரசு அரசமரபின் கான் (1256–1264).
    4. அரிக் போகே: 1260ல் குறுகிய காலத்திற்கு குப்லாய்க்கு எதிராகக் ககானாக அறிவிக்கப்பட்டார்; டொலுய் உள்நாட்டுப் போரில் குப்லாயுடன் சண்டையிட்டார். இறுதியாக, 1264ஆம் ஆண்டு குப்லாயால் பிடிக்கப்பட்டார்.
  2. லிங்குன் கதுன்[6]நைமன் கான் மற்றும் காரா கிதை ஆட்சியாளர் குச்லுக்கின் மகள்
    1. குதுகு — மங்கோலியர்களின் சாங் சீனப் படையெடுப்பின் போது தளபதி மெங் யூவால் யுத்தத்தில் கொல்லப்பட்டார்.
      1. கெல்மிசு அகா — கொங்கிராடின் சல்ஜிடை குரேகனுக்குத் திருமண செய்து வைக்கப்பட்டார்.
        1. ஒல்ஜை கதுன் — married to மெங்கு-தைமூருக்குத் திருமண செய்து வைக்கப்பட்டார்.
    2. எல் தெமூர் — குதுகா பெகியின் பேரன் பரூசு புகாவுக்குத் திருமண செய்து வைக்கப்பட்டார்[7]
  3. சருக் கதுன் — நைமர் இனத்தை சேர்ந்த துணைவி, குப்லாயின் செவிலியர்
    1. ஜோரிகே — கொங்கிராடின் அஞ்செனின் பேத்தி பல்காவிற்குத் திருமண செய்து வைக்கப்பட்டார். இளமையிலேயே இறந்தார்.
    2. மோகே — மங்கோலியர்களின் சாங் சீனப் படையெடுப்பின் போது கொல்லப்பட்டார்.
      1. சிங்தும்
      2. எபுகன்
  4. மயீச்சே — நைமர் இனத்தைச் சேர்ந்த ஒரு துணைவி
    1. போசோக் — 1236–41ல் மங்கோலியர்களின் ஐரோப்பியப் படையெடுப்பிலும், 1250ல் மோங்கேயின் தேர்விலும் பங்கெடுத்தார்
  5. நயன் கதுன்
  6. தோகுஸ் கதுன் —கெரயிடு கான் தொகுருலின் பேத்தி,
  7. தெரியாத மனைவிகள்
    1. சோகதை
    2. சுபுகதை

பரம்பரை

ஓவலுன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
எசுகெய்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
போர்ட்டே
 
தெமுசின் (செங்கிஸ் கான்)
 
கசர்
 
கச்சியுன்
 
தெமுகே
 
பெலகுதை
 
பெக்தர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
சூச்சி
 
 
சகதாயி
 
 
 
ஒக்தாயி
 
 
டொலுய்

மேலும் காண்க

உசாத்துணை

டொலுய்
பிறப்பு: 1191 இறப்பு: 1232
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
செங்கிஸ் கான்
மங்கோலியப் பேரரசின் அரசப் பிரதிநிதி
1227–1229
பின்னர்
ஒக்தாயி கான்
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=டொலுய்&oldid=3478705" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை