தொலை கிழக்கு

தொலை கிழக்கு (Far East) அல்லது தூரக் கிழக்கு என்பது புவியியல்படி கிழக்காசியா (வடகிழக்கு ஆசியா உட்பட), உருசியத் தொலை கிழக்கு (வடக்காசியாவின் அங்கம்), தென்கிழக்காசியாவைக் குறிக்க ஐரோப்பியர்கள் பயன்படுத்தும் சொல்லாகும்.[1] சில நேரங்களில் பொருளியல், பண்பாட்டுக் காரணங்களுக்காக தெற்கு ஆசியா நாடுகளும் இந்த வரையறையில் உட்படுத்தப்படுகின்றன.[2]

தொலை கிழக்கு
தொலை கிழக்கு நாடுகளின் அமைவிடம், புவியியல்படி வரையறை
சீனப் பெயர்
சீன எழுத்துமுறை 遠東
எளிய சீனம் 远东
சொல் விளக்கம்Far East
Filipino name
TagalogSilanganan (poetic)
Malayong Silangan (literal)
Indonesian name
IndonesianTimur Jauh
Japanese name
Kanji 極東
Korean name
Hangul 극동
Hanja 極東
மலாய்ப் பெயர்
மலாய்تيمور جاوء
Timur Jauh
Mongolian name
MongolianAls Dornod
Portuguese name
PortugueseExtremo Oriente
Russian name
Russian Дальний Восток
பஒஅ[ˈdalʲnʲɪj vɐˈstok]
RomanizationDál'niy Vostók
Thai name
Thai ตะวันออกไกล
Tawan-oak klai
Vietnamese name
Quốc ngữ Viễn Đông

1960களிலிருந்து, இப்பகுதி பன்னாட்டு ஊடகங்களில் கிழக்காசியா என்ற சொல்லே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது.[3][4] தொலைக்கிழக்கு என்றப் பயன்பாடு தற்காலத்தில் பழமையானதாகவும் புண்படுத்துவதாகவும் இனத்தைக் குறிப்பதாகவும் கருதப்படுகின்றது.[3] "தொலை கிழக்கு" என்பது ஐரோப்பியர் நோக்கிலிருந்து பிறந்ததாகும்; இதன்படி தென்மேற்கு ஆசியா அல்லது "மத்திய கிழக்கு நாடுகள்" "அண்மைக் கிழக்கு" எனப்படுகின்றது.

தொலைகிழக்கு என்ற சொல் 12ஆம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பியர்களால் பயன்படுத்தப்படுகின்றது. இதே காரணங்களுக்காக சீன மக்கள் 19ஆவது, இருபதாம் நூற்றாண்டுகளில் மேற்கத்திய நாடுகளை தொலை மேற்கு "டாய்ச்சி (泰西)" என்றழைத்தனர்; அரபுநாடுகளுக்கு மேற்கிலிருந்து அனைத்து நாடுகளுமே தொலை மேற்கு நாடுகளாம்.

தொலை கிழக்கு என்ற சொல் ஐரோப்பாவிலிருந்து இவை மிகவும் கிழக்கில் உள்ளபோதும், பண்பாட்டின்படி மேற்கத்திய நாடுகளான ஆத்திரேலியா, நியூசிலாந்துக்குப் பயன்படுத்தப்படுவதில்லை.

ஆள்புலங்களும் மண்டலங்களும்

பெயர்[5] and
ஆள்புலம், கொடியுடன்
பரப்பு
(கிமீ²)
மக்கள்தொகை
(ஜூலை 1 2002 மதிப்.)
மக்களடர்த்தி
(ச.கிமீக்கு)
தலைநகரம்
புரூணை5,770350,89860.8பண்டர் செரி பெகாவான்
கம்போடியா181,04012,775,32470.6புனோம் பென்
சீனா[6]9,584,4921,384,303,705134.0பெய்ஜிங்
ஆங்காங் (சீனா)[7]1,0927,303,3346,688.0
இந்தோனேசியா[8]1,419,588227,026,560159.9ஜகார்த்தா
ஜப்பான்377,835126,974,628336.1தோக்கியோ
லாவோஸ்236,8005,777,18024.4வியஞ்சான்
மக்காவு (சீனா)[9]25461,83318,473.3
மலேசியா329,75022,662,36568.7கோலாலம்பூர்
மங்கோலியா1,565,0002,694,4321.7உலான் பத்தூர்
மியான்மர்678,50042,238,22462.3நைப்பியிதோ[10]
வடகொரியா120,54022,224,195184.4பியொங்யாங்
பிலிப்பீன்சு300,00084,525,639281.8மணிலா
உருசியா[11]13,115,20039,129,7293.0மாஸ்கோ
சிங்கப்பூர்7044,483,9006,369.0சிங்கப்பூர்
தென் கொரியா98,48048,324,000490.7சியோல்
தாய்லாந்து514,00062,354,402121.3பேங்காக்
கிழக்குத் திமோர்[12]15,007952,61863.5டிலி
தாய்வான்[13]35,98022,548,009626.7தாய்பெய்
வியட்நாம்329,56081,098,416246.1ஹனோய்

காட்சியகம்

இவற்றையும் காண்க

மேற்சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தொலை_கிழக்கு&oldid=3596028" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை