A

இலத்தீன் எழுத்துமுறையிலுள்ள ஓர் எழுத்து

A () என்பது சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கில் முதலாவது எழுத்தும் முதலாவது உயிரெழுத்தும் ஆகும்.[1] இது பண்டைய கிரேக்க எழுத்தான அல்பாவிலிருந்து பெறப்பட்ட எழுத்தாகும்.[2]

Aஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை

மொழிகளில்

ஆங்கிலத்தில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் மூன்றாவது (eஇற்கும் tஇற்கும் அடுத்து) எழுத்து a ஆகும்.[3] ஆங்கிலம், எசுப்பானியம், பிரான்சியம் ஆகிய மொழிகளின் உரைப்பகுதிகளில் முறையே, 3.68%, 6.22%, 3.95% பயன்படுத்தப்படும் எழுத்து a என ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.[4] ஆங்கில மூலத்தையுடைய சொற்களில் இரண்டு a எழுத்துகள் தொடர்ந்து வருவதில்லையாயினும், aardvark, Aaron போன்ற பிறமொழிச் சொற்களில் இரண்டு a எழுத்துகள் தொடர்ந்து வருவதுண்டு.[5]

கணிதத்திலும் அறிவியலிலும்

வடிவவியலில், கோட்டுத்துண்டங்கள், கோடுகள் முதலியவற்றைக் குறிப்பதற்கு A, B, C முதலிய ஆங்கிலப் பேரெழுத்துகள் பயன்படுத்தப்படும்.[6] வழமையான குறிப்பீட்டில், ABC என்ற ஒரு முக்கோணியின் ஒரு கோணம் A பேரெழுத்தாலும் அதற்கெதிரான பக்கம் a சிற்றெழுத்தாலும் குறிக்கப்படும்.[7]

இயற்பியலில், அம்பியருக்கான அனைத்துலக முறை அலகுக் குறியீடு A ஆகும்.[8]

வேதியியலில், வலுவளவு ஓட்டு எதிர்மின்னிச் சோடித் தள்ளுகைக் கொள்கையில் மைய அணுவானது Aஆல் குறிப்பிடப்படும்.[9]

தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்

சிற்றெழுத்து aஇன் வேறுபட்ட எழுத்து வடிவங்கள்
  • Α α : கிரேக்க எழுத்து அல்பா.
  • А а : சிரில்லிய எழுத்து A.
  • Ɑ ɑ : இலத்தீன் எழுத்து அல்பா.
  • ɐ : சிற்றெழுத்து aஇன் தலைகீழ் வடிவம்.
  •  : பேரெழுத்து Aஇன் தலைகீழ் வடிவம், ஏரணத்தில் "எல்லாவற்றுக்கும்" என்பதைக் குறிக்கப் பயன்படும்.[10]
  • ª : ஒரு வரிசைக் காட்டி.
  • Æ æ : இலத்தீன் கூட்டெழுத்து AE.
  • Å å : பல்வேறு எசுக்காண்டினாவிய மொழிகளில் பயன்படுத்தப்படும் ஓர் எழுத்து.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

  • பொதுவகத்தில் A பற்றிய ஊடகங்கள்
  •  A – விளக்கம்
  •  a – விளக்கம்
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=A&oldid=3588338" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை