இந்திய ரூபாய்

இந்தியாவின் நாணயம் இந்திய ரூபாய் என அழைக்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரூபாயை வெளியிடுகிறது. INR என்பது இந்திய ரூபாயின் ஐஎஸ்ஓ 4217 குறியீடு.

இந்திய ரூபாய்
இந்திய ரூபாய் பணத்தாள்கள்இந்திய ரூபாய் நாணயங்கள்
ஐ.எசு.ஓ 4217
குறிINR (எண்ணியல்: 356)
சிற்றலகு0.01
அலகு
அலகுரூபாய்
குறியீடு
மதிப்பு
துணை அலகு
1100பைசா
குறியீடு
பைசா
வங்கித்தாள்
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)10, 20, 50, 100, 200, 500
 அரிதாக பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)1, 2, 5
Coins
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும்
உலோக நாணயம்(கள்)
1, 2, 5
 அரிதாக பயன்படுத்தப்படப்படும்

உலோக நாணயம்(கள்)

50, 10, 20
மக்கள்தொகையியல்
அதிகாரப்பூர்வ
பயனர்(கள்)
அதிகாரப்பூர்வமற்ற
பயனர்(கள்)
வெளியீடு
நடுவண் வங்கிஇந்திய ரிசர்வ் வங்கி[5]
 இணையதளம்www.rbi.org.in
அச்சடிப்பவர்இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயங்கள் உற்பத்திக் கழகம்[6]
 இணையதளம்spmcil.com
காசாலைஇந்திய அரசு காசாலை[6]
 இணையதளம்spmcil.com
மதிப்பீடு
பணவீக்கம்5.02% (அக்டோபர் 2023)
 ஆதாரம்இந்திய ரிசர்வ் வங்கி
 முறைநுகர்வோர் விலை குறியீட்டு எண் (இந்தியா)[8]
மூலம் இணைக்கப்பட்டது பூட்டான் நகுல்ட்டிரம் (சம அளவில்)
நேபாள ரூபாய் (அதிக மதிப்பு) [1 இந்திய ரூபாய்=1.6 நேபாள ரூபாய்][7]

ரிசர்வ் வங்கியால் 5, 10, 20, 50, 100, 500 வரையிலான ரூபாய் தாள்கள் அச்சடிக்கப்படுகின்றன. ஒரு ரூபாய் தாள்கள் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரையிலான நாணயங்களை வெளியிடும் அதிகாரம் இந்திய அரசுக்கு மட்டுமே உண்டு.[9] உலோக நாணயங்கள் 1, 2, 5, 10 மற்றும் 20 வரையிலான மதிப்புகளில் வெளியிடப்படுகின்றன. 20 க்கு அதிகமான மதிப்புடைய நாணயங்கள் புகழ்வாய்ந்த நபர்களையோ அல்லது ஏதேனும் ஒரு நிகழ்வையோ குறிப்பிடும் வகையில் நினைவு நாணயங்களாக வெளியிடப்படுகின்றன. 50 பைசாவுக்கு குறைவான பைசா நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இல்லை.

சொற்பிறப்பியல்

பாணினி (கிமு 6 முதல் 4 ஆம் நூற்றாண்டு) ரூப்யா (रूप्य) என்ற வார்த்தையை குறிப்பிடுகிறார்.[10] முதல் மௌரியப் பேரரசர் சந்திரகுப்த மௌரியர் (கி.மு. 340-290) காலத்தில் சாணக்கியர் எழுதிய அர்த்தசாத்திரதம் வெள்ளி நாணயங்களைக் ரூப்யா எனக் குறிப்பிடுகிறது.[11] ரூபாய் என்கிற பதம் சமசுகிருத வார்த்தையான "ரூப்யா" என்கிற வார்த்தையிலிருந்து வந்தது. ரூபாயின் உடனடி முன்னோடியான ரூபியா 178 தானியங்கள் எடையுள்ள வெள்ளி நாணயங்களாக வட இந்தியாவில் ஷேர் ஷா சூரியால் 1540 இல் அச்சிடப்பட்டது. இது பின்னர் முகலாயப் பேரரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.[12]

உற்பத்தி

மும்பை நாணய அச்சகம்

நாணயங்களையும். ஒரு ரூபாய் நோட்டையும் அச்சடிக்க இந்திய அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது. நாணயங்கள் அச்சடிக்கும் உரிமை 1906 ஆம் வருட நாணயச் சட்டதால் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மதிப்புகளில் நாணயங்களை வடிவமைத்து அச்சிடுவதும் இந்திய அரசின் பொறுப்பாகும். மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் நொய்டா ஆகிய நான்கு இடங்களில் நாணயங்கள் அச்சிடப்படுகின்றன.[13] இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934 அடிப்படையில் ரிசர்வ் வங்கி மூலம் மட்டுமே நாணயங்கள் புழக்கத்திற்கு வெளியிடப்படுகின்றன.[14] இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்திக் கழகம் நான்கு அச்சகங்களை கொண்டுள்ளது.[15] பணத்தாள் அச்சிடும் அச்சக ஆலை 1928 ஆம் ஆண்டில் நாசிக்கில் நிறுவப்பட்டது.[16] முதல் பணத்தாள் அச்சிடும் அச்சகம் நாசிக்கில் நிறுவப்பட்டது.[17] தேவாஸ், மைசூர் மற்றும் சல்போனியிலும் காகிதப் பணத்தை அச்சிடும் அச்சகங்கள் உள்ளன.[15][18]

மொழிகள்

இந்தியாவில் பெரும்பான்மையாக ருபீ, ரூபாய், ரூபயி போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது, ஆனால் கிழக்கு இந்தியாவின் மேற்கு வங்காளம், ஒரிசா, அசாம் போன்ற மாநிலங்களில் "டாக்கா" என்னும் சமசுகிருதப் பெயரிலிருந்து தோன்றிய பெயரால் அழைக்கப்படுகிறது.[19]

பல்வேறு இந்திய மொழிகளில் இந்திய ரூபாய் உச்சரிக்கப்படும் விதம்:

  1. টকা (tôka) அசாமிய மொழி
  2. টাকা (taka) பெங்காலி
  3. ଟଙ୍କା(tanka) ஒரிய மொழி
  4. રૂપિયો (rupiyo) குஜராத்தி
  5. रुपया (rupayā) இந்தி
  6. روپے (rupay) காஷ்மீரி, உருது
  7. ರೂಪಾಯಿ (rūpāyi) கன்னடம், துளு
  8. रुपया (rupayā) கொங்கணி
  9. രൂപ (rūpā) மலையாளம்
  10. रुपये (rupaye) மராத்தி
  11. रुपियाँ (rupiya) நேபாளி
  12. ਰੁਪਈਆ (rupiā) பஞ்சாபி
  13. रूप्यकम् (rūpyakam) சமசுகிருதம்
  14. रुपियो (rupiyo) சிந்தி
  15. ரூபாய் (rūpāi) தமிழ்
  16. రూపాయి (rūpāyi) தெலுங்கு

இந்திய பணத்தாள்களின் முதற்பக்கத்தில் பணத்தின் மதிப்புடன் ரூபாய் என்கிற வார்த்தையும் ஆங்கிலத்திலும், இந்தியிலும் குறிக்கப்பட்டுள்ளது. பணத்தாளின் பின்புறம் மற்ற 15 இந்திய மொழிகளிலும் ஆங்கில அகரவரிசைப்படி எழுதப்பட்டுள்ளது [20].

பல்வேறு இந்திய மொழிகளில் பணமதிப்புகள்
Language12510205010050010002000
ஆங்கிலம்One RupeeTwo RupeesFive RupeesTen RupeesTwenty RupeesFifty RupeesHundred RupeesFive Hundred RupeesOne Thousand RupeesTwo thousand rupees
பெங்காலிএক টাকাদুই টাকাপাঁচ টাকাদশ টাকাকুড়ি টাকাপঞ্চাশ টাকাশত টাকাপাঁচশত টাকাএক হাজার টাকাদুই হাজার টাকা
குஜராத்திએક રૂપિયોબે રૂપિયાપાંચ રૂપિયાદસ રૂપિયાવીસ રૂપિયાપચાસ રૂપિયાસો રૂપિયાપાંચ સો રૂપિયાએક હજાર રૂપિયાબે હજાર રૂપિયા
இந்திएक रुपयादो रुपयेपाँच रुपयेदस रुपयेबीस रुपयेपचास रुपयेएक सौ रुपयेपांच सौ रुपयेएक हज़ार रुपयेदो हज़ार रुपये
நேபாளிएक रुपियाँदुई रुपियाँपाँच रुपियाँदश रुपियाँबीस रुपियाँपचास रुपियाँएक सय रुपियाँपाँच सय रुपियाँएक हज़ार रुपियाँदुई हजार रुपियाँ
கன்னடம்ಒಂದು ರುಪಾಯಿಎರಡು ರೂಪಾಯಿಗಳುಐದು ರೂಪಾಯಿಗಳುಹತ್ತು ರೂಪಾಯಿಗಳುಇಪ್ಪತ್ತು ರೂಪಾಯಿಗಳುಐವತ್ತು ರೂಪಾಯಿಗಳುನೂರು ರೂಪಾಯಿಗಳುಐನೂರು ರೂಪಾಯಿಗಳುಒಂದು ಸಾವಿರ ರೂಪಾಯಿಗಳುಎರಡು ಸಾವಿರ ರುಪಾಯಿಗಳು
கொங்கணிएक रुपयादोन रुपयापांच रुपयाधा रुपयावीस रुपयापन्नास रुपयाशंभर रुपयापाचशें रुपयाएक हज़ार रुपयादोन हजार रुपया
மலையாளம்ഒരു രൂപരണ്ടു രൂപഅഞ്ചു രൂപപത്തു രുപഇരുപതു രൂപഅമ്പതു രൂപനൂറു രൂപഅഞ്ഞൂറു രൂപആയിരം രൂപരണ്ടായിരം രൂപ
மராத்திएक रुपयादोन रुपयेपाच रुपयेदहा रुपयेवीस रुपयेपन्नास रुपयेशंभर रुपयेपाचशे रुपयेएक हजार रुपयेदोन हजार रुपये
அசாமிএক টকাদুই টকাপাঁচ টকাদহ টকাবিছ টকাপঞ্চাশ টকাএশ টকাপাঁচশ টকাএক হাজাৰ টকাদুহেজাৰ টকা
சமசுகிருதம்एकं रूप्यकम्द्वे रूप्यकेपञ्च रूप्यकाणिदश रूप्यकाणिविंशती रूप्यकाणिपञ्चाशत् रूप्यकाणिशतं रूप्यकाणिपञ्चशतं रूप्यकाणिसहस्रं रूप्यकाणिद्विसहस्रं रूप्यकाणि
தமிழ்ஒரு ரூபாய்இரண்டு ரூபாய்ஐந்து ரூபாய்பத்து ரூபாய்இருபது ரூபாய்ஐம்பது ரூபாய்நூறு ரூபாய்ஐந்நூறு ரூபாய்ஆயிரம் ரூபாய்இரண்டாயிரம் ரூபாய்
தெலுங்குఒక రూపాయిరెండు రూపాయిలుఐదు రూపాయిలుపది రూపాయిలుఇరవై రూపాయిలుయాభై రూపాయిలునూరు రూపాయిలుఐదువందల రూపాయిలువెయ్యి రూపాయిలురెండు వేల రూపాయలు
பஞ்சாபிਏਕ ਰੁਪਏਦੋ ਰੁਪਏਪੰਜ ਰੁਪਏਦਸ ਰੁਪਏਵੀਹ ਰੁਪਏਪੰਜਾਹ ਰੁਪਏਇਕ ਸੋ ਰੁਪਏਪੰਜ ਸੋ ਰੁਪਏਇਕ ਹਜਾਰ ਰੁਪਏਦੋ ਹਜ਼ਾਰ ਰੁਪਏ
உருதுایک روپیہدو روپےپانچ روپےدس روپےبیس روپےپچاس روپےایک سو روپےپانچ سو روپےایک ہزار روپےدو ہزار روپے
ஒரியா1 ଟଙ୍କ2 ଟଙ୍କ୫ ଟଙ୍କ୧୦ ଟଙ୍କ୨୦ ଟଙ୍କ୫୦ ଟଙ୍କ୧୦୦ ଟଙ୍କ୫୦୦ ଟଙ୍କ୧୦୦୦ ଟଙ୍କଦୁଇ ହଜାର ଟଙ୍କା

ரூபாய் தாள்கள்

அசோக ஸ்தூபி வரிசை

1950இல் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட ரூபாய் தாள்கள் ஆங்கிலேயே ரூபாயின் அம்சங்களுடன், ஜார்ஜ் IV படத்திற்கு பதிலாக ‘அசோக ஸ்தூபி’ சின்னத்தை நீர்க்குறியாக கொண்டிருந்தன. அதன் பின்னர், தொழில்நுட்ப வளர்ச்சியால், இந்தியக் கலை வடிவங்களைக் கொண்ட படங்கள் ரூபாய் தாள்களில் இடம்பெற்றன. 1980இல் “வாய்மையே வெல்லும்” என்று தேசிய சின்னத்தில் பொறிக்கப்பட்டது. இந்த ரூபாய் தாள்கள் யாவும் ‘அசோக ஸ்தூபி’ வரிசை எனப்பட்டன.[21]

மகாத்மா காந்தி வரிசை

1996 முதல் மகாத்மா காந்தி வரிசை ரூபாய் தாள்கள் வெளியிடப்பட்டன. 2005க்கு பிறகு புதிய மகாத்மா காந்தி வரிசை ரூபாய் தாள்கள் வெளியிடப்பட்டன. இவற்றில் மகாத்மா காந்தி நீர்க்குறி இருக்கும்.[21] இவற்றின் பாதுகாப்பு சிறப்பம்சங்கள் பின்வருமாறு

  • ஐம்பது ரூபாய் வரை உள்ள தாள்களில் பாதுகாப்பு நூல் முன்புறம் சாளரம் வடிவில் தெரியும், பின்புறம் மறைந்திருக்கும். புற ஊதாக் கதிரில் பார்க்கும்போது இரு புறத்திலும் இந்த பாதுகாப்பு நூல் மஞ்சள் நிறத்தில் தெரியும். சாதாரண வெளிச்சத்தில் ஒரே நேர்கோடாகத் தெரியும்.
  • நூறிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை உள்ள தாள்களில் பாதுகாப்பு நூல் இயந்திரத்தால் கண்டறியக்கூடியது. இந்த நூலின் நிறம் வெவ்வேறு கோணங்களில் நீலத்திலிருந்து பச்சையாக மாறும். புற ஊதாக் கதிரில் பார்க்கும்போது வாசகங்கள் பிரகாசமாகத் தெரியும்.
  • காந்தி, ரிசர்வ் வங்கி முத்திரை, உறுதி வாசகம், அசோக ஸ்தூபி, ஆளுநர் கையொப்பம், பார்வையற்றோர்க்கான குறி ஆகியவை செறிவூட்டப்பட்ட இன்டளிக்ளோவில் அச்சிடப்பட்டவை.
  • முன்னும் பின்னும் எண்கள் சரியாக அச்சிடப்பட்டுள்ளதால் எவ்வாறு பார்த்தாலும் ஒன்றுபோல் தெரியும்.[21]

இந்திய அரசாங்கம் மகாத்மா காந்தி தொடரின் அனைத்து ₹500/- மற்றும் ₹1,000/- ரூபாய் நோட்டுகளையும் புழக்கத்தில் இருந்து நீக்குவதாக 2016 ஆம் ஆண்டில் அறிவித்தது.[22][23][24]

மகாத்மா காந்தி புதிய வரிசை

மகாத்மா காந்தி புதிய வரிசை ரூபாய் தாள்கள், நவம்பர் 8, 2016ல் அறிவிக்கப்பட்டது.[25] நவம்பர் 10, 2016ல் இந்திய ரிசர்வ் வங்கியால் 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் தாள்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டது. இத்தாள்களின் முகப்பில் மகாத்மா காந்தி படமும், மறுபக்கத்தில் தூய்மை இந்தியா இயக்கத்தின் சின்னமும் இடம்பெற்றிருக்கின்றன.[26][27] பாதுகாப்பு நடவடிக்கையாக, புதிய இந்திய ரூபாய் நோட்டுத் தொடரில் பல்வேறு இடங்களில் நுண் அச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

புழக்கத்தில் உள்ள பணத்தாள்கள்

பழைய வரிசை பணத்தாள்கள்
படம்மதிப்புபரிமாணங்கள்முக்கிய நிறம்விளக்கம்வெளியிடப்பட்ட தேதி
முகப்புபின்புறம்முகப்புபின்புறம்நீர்க்குறி
₹197 mm × 63 mmஇளஞ்சிவப்புபுதிய ₹1 நாணயம்சாகர் சாம்ராட் எண்ணெய் ஆலைஇந்திய தேசிய இலச்சினை2020
5117 mm × 63 mmபச்சைமகாத்மா காந்திஉழவு இயந்திரம்மகாத்மா காந்தி2002 / 2009
புதிய வரிசை பணத்தாள்கள்
படம்மதிப்புபரிமாணங்கள்முக்கிய நிறம்விளக்கம்வெளியிடப்பட்ட தேதி
முகப்புபின்புறம்முகப்புபின்புறம்நீர்க்குறி
10123 mm × 63 mmபழுப்புமகாத்மா காந்திகொனார்க் சூரியக் கோயில்மகாத்மா காந்தி மற்றும்
பணத்தின் மதிப்பு
2017
20129 mm × 63 mmபச்சை-மஞ்சள்எல்லோரா குகைகள்2019
50135 mm × 66 mmபச்சை-நீலம்ஹம்பி தேர்2017
100142 mm × 66 mmஇளஞ்சிவப்பு (லாவண்டர்)ராணி கி வாவ்2018
200146 mm × 66 mmமஞ்சள்அசோக சிங்கத் தூபி2017
500150 mm × 66 mmசாம்பல்செங்கோட்டை2016
₹200066 mm × 166 mmஆழ்ந்த சிவப்புமங்கள்யான்2016


2023 ஆம் ஆண்டில், இந்திய ரிசர்வ் வங்கி 19 மே அன்று ₹ 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் என்று ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது.[28]

ரூபாயின் மதிப்பு

1947க்கு முன்னர் ஒரு டாலரின் மதிப்பு ஒரு ரூபாயாக இருந்தது. 1952ல் ஒரு டாலர் ரூ4.79 என நிர்ணயிக்கப்பட்டது. 1966ல் ரூபாயின் மதிப்பை ரூ7.57 என்ற அளவுக்கு குறைக்கும் அறிவிப்பை இந்திய அரசு வெளியிட்டது.[29] 1975ம் ஆண்டில் அமெரிக்க டாலர், ஜப்பானிய யென் மற்றும் ஜெர்மன் மார்க் ஆகிய மூன்று நாணயங்களின் பரிவர்த்தனை மதிப்புடன் இந்திய ரூபாய்க்கு இணைப்பு ஏற்படுத்தப்பட்டது.[30] 1993ல் தாராளமயக் கொள்கையின் அடியொற்றி பரிவர்த்தனை மதிப்பினை பணச்சந்தை தீர்மானிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.[31] அதே நேரத்தில் கடுமையான ஏற்ற இறக்கங்களை தவிர்க்கும் விதத்தில் தலையிடுவதற்கான உரிமை ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டது.1995ல் ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 32.42 ஆக இருந்தது. 2000 முதல் 2010 வரை இது சற்றே குறையாக ரூ.45 என்ற நிலையில் இருந்து வந்தது. 2013 ஆகத்தில் 50 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியடைந்து ஒரு டாலர் 68 ரூபாய் என்ற நிலையிலான கடும் சரிவை எதிர்கொண்டது.[32][33]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இந்திய_ரூபாய்&oldid=3922369" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை