புர்ஜ் கலிஃபா

புர்ஜ் கலிஃபா (அரபு மொழி: برج خليفة என்னும் கலிஃபா கோபுரம்) ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள ஒரு வானளாவி (skyscraper) ஆகும். இதுவே உலகின் உயரமான கட்டிடமும் ஆகும். இது 163 மாடிகளைக் கொண்ட, 828 மீட்டர் (2,716.5 அடி) உயரமுள்ள கட்டடமாகும்[5]. 2004, செப்டம்பர் 21 இல் ஆரம்பிக்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து, 2010, சனவரி 4 ஆம் நாள் திறந்து வைக்கப்பட்டது [1][2][6]..

புர்ஜ் கலிஃபா
Burj khalifa

புர்ஜ் கலிஃபா என்னும் கலிஃபா கோபுரம்.


தகவல்
அமைவிடம்துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
நிலைTopped-out
தொடக்கம்21 செப்டம்பர் 2004
Estimated completion2009[1]
திறப்பு4 சனவரி 2010[2]
பயன்பாடுபலவித பயன்பாடு
உயரம்
Antenna/Spire818 மீ (2,684 அடி)[1]
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை160 வசிக்கக்கூடிய மாடிகள்[3]
தளப் பரப்பு334,000 மீ2 (3,595,100 சதுர அடி)
நிறுவனங்கள்
கட்டிடக்கலைஞர்ஸ்கிட்மோர், ஓவிங்ஸ் மற்றும் மெரில்
அமைப்புப்
பொறியாளர்
பில் பேக்கர்[4]
Developerஎமார்
புர்ஜ் கலிஃபா கட்டுமானம்

இக்கட்டிடத்தைக் கட்டும் ஒப்பந்த நிறுவனத்தின் கணக்கொன்றின்படி இதன் உயரம், 818 மீட்டர் (2684 அடி) அளவுக்கு இருக்கக்கூடுமென நம்பப்பட்டது. இதன்படி இதில் அமையும் மாடிகளின் எண்ணிக்கை 162 வரை இருக்கும் எனவும் கணிக்கப்பட்டது. எனினும், இத்திட்டத்துக்கான அதிகாரபூர்வ இணையத் தளத்தில் வெளியிடப்பட்டிருந்த படமொன்றில் காணப்படும் உயர்த்தியொன்றில் 195 எண்ணிக்கைகள் வரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. துணை ஒப்பந்த நிறுவனம் ஒன்றான பேர்சியன் கல்ஃப் எக்ஸ்ட்றூஷன்ஸ் வெளியிட்டிருந்த தகவலின்படி, இதன் இறுதி உயரம் 940 மீட்டராக (3084 அடி) இருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.

இதன் தலைமைக் கட்டிடக்கலைஞர், ஸ்கிட்மோர் ஆவிங்ஸ் ஆன் மெரில்ஸ் என்னும் கட்டிடக்கலை நிறுவனத்தின் சிக்காகோ அலுவலகத்தைச் சேர்ந்த ஆட்ரியான் சிமித் என்பவராவார்[7][8]. இந்தக் கட்டிடத்தின் உரிமையாளர்கள் "இமார்" (AMAR) நிறுவனத்தினராவர். இதற்கான தலைமை ஒப்பந்த நிறுவனமாக தென்கொரியாவைச் சேர்ந்த Samsung T&T இருந்தது[9].

இக்கட்டிடம் திறக்கப்படுவதற்கு கடைசிநிமிடம் வரை புர்ஜ் துபை என்றே அனைவராலும் அழைக்கப்பெற்றது. துபை வேர்ல்ட்ன் கடன்சுமையை அபுதாபி கலிஃபா 10 பில்லியன் அளவில் பைல்அவுட் செய்ததன் நன்றிக்கடனாக இப்பெயர் சூட்டப்பெற்றதாக பரவலாக பேசப்பட்டது.

ஏனைய கட்டடங்களுடன் புர்ஜ் கலிஃபாவை ஒப்பிடும்போது.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=புர்ஜ்_கலிஃபா&oldid=3575623" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை