யூரோ 2016

யூரோ 2016 (Euro 2016) எனப் பொதுவாக அழைக்கப்படும் 2016 யூஈஎஃப்ஏ ஐரோப்பிய கால்பந்தாட்ட வாகையாளர் போட்டி (2016 UEFA European Championship) என்பது ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியத்தினால் (யூஈஎஃப்ஏ) நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பெறும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான ஆண்களுக்கான 15-வது ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியாகும். இப்போட்டிகள் பிரான்சில் 2016 சூன் 10 முதல் சூலை 10 வரை நடைபெற்றது.[3][4] முந்தையப் போட்டியின் வாகையாளரான எசுப்பானிய அணி 2008, 2012 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் 16வது சுற்றில் எசுப்பானியா இத்தாலியினால் தோற்கடிக்கப்பட்டு வெளியேறியது. பாரிசில் நடந்த இறுதிப் போட்டியில் மேலதிக நேரத்தில் 1-0 என்ற கணக்கில் போர்த்துகல் அணி பிரான்சை வென்று முதற்தடவையாக வாகையாளர் கோப்பையைக் கைப்பற்றியது.

யூரோ 2016
Championnat d'Europe de football 2016 (பிரெஞ்சு)
Le Rendez-Vous
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடுபிரான்சு
நாட்கள்10 சூன் – 10 சூலை 2016
அணிகள்24
அரங்கு(கள்)10 (10 நகரங்களில்)
இறுதி நிலைகள்
வாகையாளர் POR (1-ஆம் தடவை)
இரண்டாம் இடம் FRA
போட்டித் தரவுகள்
விளையாடிய ஆட்டங்கள்51
எடுக்கப்பட்ட கோல்கள்108 (2.12 /ஆட்டம்)
பார்வையாளர்கள்24,27,303 (47,594/ஆட்டம்)
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்)பிரான்சு அந்துவான் கிரீசுமன் (6 கோல்கள்)[1]
சிறந்த இளம் ஆட்டக்காரர்போர்த்துகல் ரெனாட்டோ சான்செசு[2]
2012
2020

1996-ஆம் ஆண்டிலிருந்து 16 அணிகள் பங்குபெறும் போட்டித்தொடராக இருந்த இப்போட்டித்தொடரில் 2016-இல் இருந்து 24 அணிகள் பங்குபெறும் வண்ணம் போட்டியமைப்பு முதற்தடவையாக மாற்றியமைக்கப்பெற்றது.[5] புதிய போட்டியமைப்பின்படி, 24 அணிகளும் ஆறு குழுக்களாக, ஒவ்வொரு குழுவிலும் நான்கு அணிகளாகப் போட்டியிட்டன. குழுநிலையில் வெற்றி பெற்ற முதலிரண்டு அணிகளும், மூன்றாம் நிலையில் வந்த சிறந்த நான்கு அணிகளும் இறுதிச் சுற்றுகளில் போட்டியிட்டன.

இப்போட்டிகளை நடத்துவதற்கு பிரான்சு, இத்தாலி, துருக்கி ஆகிய நாடுகள் போட்டியிட்டன. இவற்றில் பிரான்சு 2010 மே 28 இல் தெரிவு செய்யப்பட்டது.[6][7] பிரான்சின் பொர்தோ, லான்சு, லீல், லியோன், மர்சேய், நீஸ், பாரிஸ், சான்-டெனி, சான்-ஏத்தியென், துலூஸ் ஆகிய 10 நகரங்களில் உள்ள 10 விளையாட்டரங்குகளில் போட்டிகள் இடம்பெற்றன. பிரான்சு ஏற்கனவே 1960, 1984 போட்டிகளை தனது நாட்டில் நடத்தியிருந்தது. பிரான்சு 1984, 2000 போட்டிகளில் யூரோ கோப்பையைக் கைப்பற்றியிருந்தது.

இப்போட்டித் தொடரில் வெற்றிபெற்றதன் மூலம் போர்த்துகல் அணி 2017-இல் உருசியாவில் நடைபெறவிருக்கும் பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.[8]

தகுதி பெற்ற நாடுகள்

  இறுதிச்சுற்றுக்குத் தகுதியான நாடுகள்
  தகுதி பெறாத நாடுகள்
அணிமுன்னர் பங்குபற்றிய இறுதிச்சுற்றுகள்[n 1]
 அல்பேனியா0 (முதன்முறை)
 ஆஸ்திரியா1 (2008)
 பெல்ஜியம்4 (1972, 1980, 1984, 2000)
 குரோவாசியா4 (1996, 2004, 2008, 2012)
 செக் குடியரசு[n 2]5B (1996, 2000, 2004, 2008, 2012)
 இங்கிலாந்து8B (1968, 1980, 1988, 1992, 1996, 2000, 2004, 2012)
 பிரான்சு8 (1960, 1984, 1992, 1996, 2000, 2004, 2008, 2012)
 செருமனி11 (1972, 1976, 1980, 1984, 1988, 1992, 1996, 2000, 2004, 2008, 2012)
 அங்கேரி2 (1964, 1972)
 ஐசுலாந்து0 (முதன்முறை)
 இத்தாலி8 (1968, 1980, 1988, 1996, 2000, 2004, 2008, 2012)
 வட அயர்லாந்து0 (முதன்முறை)
 போலந்து2 (2008, 2012)
 போர்த்துகல்6 (1984, 1996, 2000, 2004, 2008, 2012)
 அயர்லாந்து2 (1988, 2012)
 உருமேனியா4 (1984, 1996, 2000, 2008)
 உருசியா[n 3]4 (1996, 2004, 2008, 2012)
 சிலவாக்கியா0 (முதன்முறை)
 எசுப்பானியா9 (1964, 1980, 1984, 1988, 1996, 2000, 2004, 2008, 2012)
 சுவீடன்5 (1992, 2000, 2004, 2008, 2012)
 சுவிட்சர்லாந்து3 (1996, 2004, 2008)
 துருக்கி3 (1996, 2000, 2008)
 உக்ரைன்1 (2012)
 வேல்சு0 (முதன்முறை)

அரங்குகள்

சான்-டெனிமர்சேய்லியோன்லீல்
பிரான்சு அரங்குவேலொட்ரோம் அரங்குலியோன்னே ஒலிம்பிக் பூங்காபியேர்-மோரியா அரங்கு
48°55′28″N 2°21′36″E / 48.92444°N 2.36000°E / 48.92444; 2.36000 (Stade de France)43°16′11″N 5°23′45″E / 43.26972°N 5.39583°E / 43.26972; 5.39583 (Stade Vélodrome)45°45′56″N 4°58′52″E / 45.76556°N 4.98111°E / 45.76556; 4.98111 (Parc Olympique Lyonnais)50°36′43″N 3°07′50″E / 50.61194°N 3.13056°E / 50.61194; 3.13056 (Stade Pierre-Mauroy)
இருக்கைகள்: 81,338இருக்கைகள்: 67,394
(மேம்படுத்தப்பட்டது)
இருக்கைகள்: 59,286
(புதிய அரங்கு)
இருக்கைகள்: 50,186
(புதிய அரங்கு)
பாரிஸ்பொர்தோ
பிரின்செசு பூங்காமாட்முட் அத்திலாந்திக்
48°50′29″N 2°15′11″E / 48.84139°N 2.25306°E / 48.84139; 2.25306 (Parc des Princes)44°53′50″N 0°33′43″W / 44.89722°N 0.56194°W / 44.89722; -0.56194 (Bordeaux)
இருக்கைகள்: 48,712
(மேம்படுத்தப்பட்டது)
இருக்கைகள்: 42,115
(புதிய அரங்கு)
சான்-ஏத்தியென்நீஸ்லான்சுதுலூஸ்
45°27′39″N 4°23′24″E / 45.46083°N 4.39000°E / 45.46083; 4.39000 (St Etienne)43°42′25″N 7°11′40″E / 43.70694°N 7.19444°E / 43.70694; 7.19444 (Nice)50°25′58.26″N 2°48′53.47″E / 50.4328500°N 2.8148528°E / 50.4328500; 2.8148528 (Lens)43°34′59″N 1°26′3″E / 43.58306°N 1.43417°E / 43.58306; 1.43417 (Toulouse)
சொஃப்ருவா-கிசார் அரங்குஅல்லியான்சு இரிவியேரா அரங்குபொலார்-தெலெலிசு அரங்குமுனிசிப்பால் அரங்கு
இருக்கைகள்: 41,965
(மேம்படுத்தப்பட்டது)
இருக்கைகள்: 35,624
(புதிய அரங்கு)
இருக்கைகள்: 38,223
(மேம்படுத்தப்பட்டது)
இருக்கைகள்: 33,150
(மேம்படுத்தப்பட்டது)

குறிப்பு: இருக்கைகள் எண்ணிக்கை யூரோ 2016 ஆட்டங்களுக்கானவை; அரங்கத்தின் முழுமையான கொள்ளளவு கூடுதலாக இருக்கலாம்..

குழுநிலை ஆட்டங்கள்

குழுநிலையில் வெற்றி பெற்ற 1வது, 2வது அணிகளும், மூன்றாம் நிலையில் வந்த சிறந்த நான்கு அணிகளும் 16 அணிகளின் சுற்றுக்குத் தகுதி பெறுகின்றன.

குழு A

நிலைஅணிவெதோதகோஎகோகோவேபுள்தகுதி
1  பிரான்சு321041+37வெளியேறும் நிலைக்கு தகுதி
2  சுவிட்சர்லாந்து312021+15வெளியேறும் நிலைக்கு தகுதி
3  அல்பேனியா310213-23
4  உருமேனியா301224-21
பிரான்சு  2–1  உருமேனியா
ஜிரூட்  57'
பயெட்  89'
அறிக்கைஇசுத்தான்கு  65' (தண்ட உதை)
பிரான்சு அரங்கு, சான்-டெனி
பார்வையாளர்கள்: 75,113[9]
நடுவர்: விக்டர் கசாய் (அங்கேரி)
அல்பேனியா  0–1  சுவிட்சர்லாந்து
அறிக்கைஸ்கார்  5'
பொலார்-தெலெலிசு அரங்கு, லான்சு
பார்வையாளர்கள்: 33,805[10]
நடுவர்: கார்லோசு கார்பலோ (எசுப்பானியா)

உருமேனியா  1–1  சுவிட்சர்லாந்து
ஸ்டான்கு  18' (தண்ட உதை)அறிக்கைமெகுமெதி  57'
பிரின்செசு பூங்கா, பாரிஸ்
பார்வையாளர்கள்: 43,576[11]
நடுவர்: செர்கே கராசெவ் (உருசியா)
பிரான்சு  2–0  அல்பேனியா
கிரீசுமன்  90'
பாயெட்  90+6'
அறிக்கை
வேலொட்ரோம் அரங்கு, மர்சேய்
பார்வையாளர்கள்: 63,670[12]
நடுவர்: விலி கொலம் (இசுக்கொட்லாந்து)

சுவிட்சர்லாந்து  0–0  பிரான்சு
அறிக்கை
பியேர்-மோரியா அரங்கு, லீல்
பார்வையாளர்கள்: 45,616[13]
நடுவர்: தாமிர் ஸ்கோமினா (சுலோவீனியா)
உருமேனியா  0–1  அல்பேனியா
அறிக்கைசாதிக்கு  43'
லியோன்னே ஒலிம்பிக் பூங்கா, லியோன்
பார்வையாளர்கள்: 49,752[14]
நடுவர்: பாவெல் கிராலோவிச் (செக் குடியரசு)

குழு B

நிலைஅணிவெதோதகோஎகோகோவேபுள்தகுதி
1  வேல்சு320163+36வெளியேறும் நிலைக்கு தகுதி
2  இங்கிலாந்து312032+15வெளியேறும் நிலைக்கு தகுதி
3  சிலவாக்கியா31113304வெளியேறும் நிலைக்கு தகுதி
4  உருசியா301226-41
வேல்சு  2–1  சிலவாக்கியா
பேல்  10'
ரொப்சன்-கானு  81'
அறிக்கைதூதா  61'
பொர்தோ புதிய அரங்கு, பொர்தோ
பார்வையாளர்கள்: 37,831[15]
நடுவர்: சுவெயின் மோயென் (நோர்வே)
இங்கிலாந்து  1–1  உருசியா
டயர்  73'அறிக்கைவி. பெரெசூத்சுக்கி  90+2'
வேலொட்ரோம் அரங்கு, மர்சேய்
பார்வையாளர்கள்: 62,343[16]
நடுவர்: நிக்கோலா ரிசோலி (இத்தாலி)

உருசியா  1–2  சிலவாக்கியா
குளாசுக்கோவ்  80'அறிக்கைவெயிசு  32'
ஆம்சிக்  45'
பியேர்-மோரியா அரங்கு, லீல்
பார்வையாளர்கள்: 38,989[17]
நடுவர்: தாமிச் ஸ்கோமினா (சுலோவீனியா)
இங்கிலாந்து  2–1  வேல்சு
வார்டி  56'
ஸ்டரிட்ச்  90+2'
அறிக்கைபேல்  42'
பொலார்-தெலெலிசு அரங்கு, லான்சு
பார்வையாளர்கள்: 34,033[18]
நடுவர்: பெலிக்சு பிரிச் (செருமனி)

சிலவாக்கியா  0–0  இங்கிலாந்து
அறிக்கை
சொஃப்ருவா-கிசார் அரங்கு, சான்-ஏத்தியென்
பார்வையாளர்கள்: 39,051[19]
நடுவர்: கார்லோசு வெலாசுக்கோ கார்வாலோ (எசுப்பானியா)
உருசியா  0–3  வேல்சு
அறிக்கைராம்சி  11'
டெய்லர்  20'
பேல்  67'
முனிசிப்பால் அரங்கு, துலூஸ்
பார்வையாளர்கள்: 28,840[20]
நடுவர்: [யோனாசு எரிக்சன் (சுவீடன்)

குழு C

நிலைஅணிவெதோதகோஎகோகோவேபுள்தகுதி
1  செருமனி321030+37வெளியேறும் நிலைக்கு தகுதி
2  போலந்து321020+27வெளியேறும் நிலைக்கு தகுதி
3  வட அயர்லாந்து31022203வெளியேறும் நிலைக்கு தகுதி
4  உக்ரைன்300305-50
போலந்து  1–0  வட அயர்லாந்து
மிலிக்  51'அறிக்கை
அல்லியான்சு இரிவியேரா அரங்கு, நீஸ்
பார்வையாளர்கள்: 33,742[21]
நடுவர்: ஒவித்கியூ ஆட்டிகன் (உருமேனியா)
செருமனி  2–0  உக்ரைன்
முஸ்தாபி  19'
இசுவைன்சுடைகர்  90+2'
அறிக்கை
பியேர்-மோரியா அரங்கு, லீல்
பார்வையாளர்கள்: 43,035[22]
நடுவர்: மார்ட்டின் அட்கின்சன் (இங்கிலாந்து)

உக்ரைன்  0–2  வட அயர்லாந்து
அறிக்கைமெக்கோலி  49'
மெக்கின்  90+6'
லியோன்னே ஒலிம்பிக் பூங்கா, லியோன்
பார்வையாளர்கள்: 51,043[23]
நடுவர்: பாவெல் கிராலோவெச் (செக் குடியரசு)
செருமனி  0–0  போலந்து
அறிக்கை
பிரான்சு அரங்கு, சான்-டெனி
பார்வையாளர்கள்: 73,648[24]
நடுவர்: ஜோன் புயிப்பர்சு (நெதர்லாந்து)

வட அயர்லாந்து  0–1  செருமனி
அறிக்கைகோமசு  30'
பிரின்செசு பூங்கா, பாரிஸ்
பார்வையாளர்கள்: 44,125[25]
நடுவர்: கிளேமென்ட் டர்ப்பின் (பிரான்சு)
உக்ரைன்  0–1  போலந்து
அறிக்கைபிளாசிகோவ்சுக்கி  54'
வேலொட்ரோம் அரங்கு, மர்சேய்
பார்வையாளர்கள்: 58,874[26]
நடுவர்: சிவெயின் மோயென் (நோர்வே)

குழு D

நிலைஅணிவெதோதகோஎகோகோவேபுள்தகுதி
1  குரோவாசியா321053+27வெளியேறும் நிலைக்கு தகுதி
2  எசுப்பானியா320152+36வெளியேறும் நிலைக்கு தகுதி
3  துருக்கி310224-23
4  செக் குடியரசு301215-31
துருக்கி  0–1  குரோவாசியா
அறிக்கைமோதிரிச்  41'
பிரின்செசு பூங்கா, பாரிஸ்
பார்வையாளர்கள்: 43,842[27]
நடுவர்: யோனாசு எரிக்சன் (சுவீடன்)
எசுப்பானியா  1–0  செக் குடியரசு
பிக்கே  87'அறிக்கை
முனிசிப்பால் அரங்கு, துலூஸ்
பார்வையாளர்கள்: 29,400[28]
நடுவர்: சைமன் மார்சீனியாக் (போலந்து)

செக் குடியரசு  2–2  குரோவாசியா
ஸ்கோடா  76'
நேச்சிட்  89' (தண்ட உதை)
அறிக்கைபெரிசிச்  37'
ராக்கித்திச்  59'
சொஃப்ருவா-கிசார் அரங்கு, சான்-ஏத்தியென்
பார்வையாளர்கள்: 38,376[29]
நடுவர்: மார்க் கிளாட்டன்பெர்க் (இங்கிலாந்து)
எசுப்பானியா  3–0  துருக்கி
மொராட்டா  34'48'
நொலிட்டோ  37'
அறிக்கை
அல்லியான்சு இரிவியேரா அரங்கு, நீஸ்
பார்வையாளர்கள்: 33,409[30]
நடுவர்: மிலோராத் மாசிச் (செர்பியா)

குரோவாசியா  2–1  எசுப்பானியா
என். கலினிச்  45'
பெரிசிச்  87'
அறிக்கைமொராட்டா  7'
பொர்தோ புதிய அரங்கு, பொர்தோ
பார்வையாளர்கள்: 37,245[31]
நடுவர்: ஜோன் கூப்பர்சு (நெதர்லாந்து)
செக் குடியரசு  0–2  துருக்கி
அறிக்கையில்மாசு  10'
டூஃபான்  65'
பொலார்-தெலெலிசு அரங்கு, லான்சு
பார்வையாளர்கள்: 32,836[32]
நடுவர்: வில்லி கொலம் (இசுக்கொட்லாந்து)

குழு E

நிலைஅணிவெதோதகோஎகோகோவேபுள்தகுதி
1  இத்தாலி320131+26வெளியேறும் நிலைக்கு தகுதி
2  பெல்ஜியம்320142+26வெளியேறும் நிலைக்கு தகுதி
3  அயர்லாந்து311124-24வெளியேறும் நிலைக்கு தகுதி
4  சுவீடன்301213-21
அயர்லாந்து  1–1  சுவீடன்
ஊலகான்  48'அறிக்கைகிளார்க்  71' (சுய கோல்)
பிரான்சு அரங்கு, சான்-டெனி
பார்வையாளர்கள்: 73,419[33]
நடுவர்: மிலோராத் மாசிச் (செர்பியா)
பெல்ஜியம்  0–2  இத்தாலி
அறிக்கைகியாச்செரினி  32'
பெல்லே  90+3'
லியோன்னே ஒலிம்பிக் பூங்கா, லியோன்
பார்வையாளர்கள்: 55,408[34]
நடுவர்: மார்க் பிளாட்டன்பர்க் (இங்கிலாந்து)

இத்தாலி  1–0  சுவீடன்
ஏடெர்  88'அறிக்கை
முனிசிப்பால் அரங்கு, துலூஸ்
பார்வையாளர்கள்: 29,600[35]
நடுவர்: விக்டர் கசாய் (அங்கேரி)
பெல்ஜியம்  3–0  அயர்லாந்து
ஆர். லுக்காக்கு  48'70'
விட்செல்  61'
அறிக்கை
பொர்தோ புதிய அரங்கு, பொர்தோ
பார்வையாளர்கள்: 39,493[36]
நடுவர்: சூனைட் சாக்கிர் (துருக்கி)

சுவீடன்  0–1  பெல்ஜியம்
அறிக்கைநைங்கோலன்  84'
அல்லியான்சு இரிவியேரா அரங்கு, நீஸ்
பார்வையாளர்கள்: 34,011[37]
நடுவர்: பெலிக்சு பிரைக் (செருமனி)
இத்தாலி  0–1  அயர்லாந்து
அறிக்கைபிராடி  85'
பியேர்-மோரியா அரங்கு, லீல்
பார்வையாளர்கள்: 44,268[38]
நடுவர்: ஒவிதியூ ஏட்டிகன் (உருமேனியா)

குழு F

நிலைஅணிவெதோதகோஎகோகோவேபுள்தகுதி
1  அங்கேரி312064+25வெளியேறும் நிலைக்கு தகுதி
2  ஐசுலாந்து312043+15வெளியேறும் நிலைக்கு தகுதி
3  போர்த்துகல்30304403வெளியேறும் நிலைக்கு தகுதி
4  ஆஸ்திரியா301214-31
ஆஸ்திரியா  0–2  அங்கேரி
அறிக்கைசாலாய்  62'
இசுடைபர்  87'
பொர்தோ புதிய அரங்கு, பொர்தோ
பார்வையாளர்கள்: 34,424[39]
நடுவர்: கிளெமென்ட் டர்ப்பின் (பிரான்சு)
போர்த்துகல்  1–1  ஐசுலாந்து
நானி  31'அறிக்கைபி. ப்ஜர்னாசன்  50'
சொஃப்ருவா-கிசார் அரங்கு, சான்-ஏத்தியென்
பார்வையாளர்கள்: 38,742[40]
நடுவர்: சூனெயித் சாக்கிர் (துருக்கி)

ஐசுலாந்து  1–1  அங்கேரி
ஜி. சிகர்ட்சோன்  40' (தண்ட உதை)அறிக்கைசேவார்சன்  88' (சுய கோல்)
வேலொட்ரோம் அரங்கு, மர்சேய்
பார்வையாளர்கள்: 60,842[41]
நடுவர்: செர்கே கரசேவ் (உருசியா)
போர்த்துகல்  0–0  ஆஸ்திரியா
அறிக்கை
பிரின்செசு பூங்கா, பாரிஸ்
பார்வையாளர்கள்: 44,291[42]
நடுவர்: நிக்கொலா ரிசோலி (இத்தாலி)

ஐசுலாந்து  2–1  ஆஸ்திரியா
பூவார்சன்  18'
டிரோசுடாசுடன்  90+4'
அறிக்கைசோப்ஃபு  60'
பிரான்சு அரங்கு, சான்-டெனி
பார்வையாளர்கள்: 68,714[43]
நடுவர்: சைமன் மார்சீனியாக் (போலந்து)
அங்கேரி  3–3  போர்த்துகல்
கேரா  19'
சுட்சாக்  47'55'
அறிக்கைநானி  42'
ரொனால்டோ  50'62'
லியோன்னே ஒலிம்பிக் பூங்கா, லியோன்
பார்வையாளர்கள்: 55,514[44]
நடுவர்: மார்ட்டின் அட்கின்சன் (இங்கிலாந்து)

மூன்றாம் நிலை அணிகளின் தரவரிசை

நிலைகுழுஅணிவெதோதகோஎகோகோவேபுள்தகுதி
1B  சிலவாக்கியா31113304வெளியேறும் நிலைக்கு தகுதி
2E  அயர்லாந்து311124-24வெளியேறும் நிலைக்கு தகுதி
3F  போர்த்துகல்30304403வெளியேறும் நிலைக்கு தகுதி
4C  வட அயர்லாந்து31022203வெளியேறும் நிலைக்கு தகுதி
5D  துருக்கி310224-23
6A  அல்பேனியா310213-23

வெளியேறும் நிலை

 
16 அணிகளின் சுற்றுகாலிறுதிகள்அரையிறுதிகள்இறுதிப் போட்டி
 
              
 
25 சூன் – சான்-ஏத்தியென்
 
 
 சுவிட்சர்லாந்து1 (4)
 
30 சூன் – மர்சேய்
 
 போலந்து1 (5)
 
 போலந்து1 (3)
 
25 சூன் – லான்சு
 
 போர்த்துகல்1 (5)
 
 குரோவாசியா0
 
6 சூலை – லியோன்
 
 போர்த்துகல்1
 
 போர்த்துகல்2
 
25 சூன் – பாரிசு
 
 வேல்சு0
 
 வேல்சு1
 
1 சூலை – லீல்
 
 வட அயர்லாந்து0
 
 வேல்சு3
 
26 சூன் – துலூஸ்
 
 பெல்ஜியம்1
 
 அங்கேரி0
 
10 சூலை – சான்-டெனி
 
 பெல்ஜியம்4
 
 போர்த்துகல்1
 
26 சூன் – லீல்
 
 பிரான்சு0
 
 செருமனி3
 
2 சூலை – பொர்தோ
 
 சிலவாக்கியா0
 
 செருமனி1(6)
 
27 சூன் – சான்-டெனி
 
 இத்தாலி1(5)
 
 இத்தாலி2
 
7 சூலை – மர்சேய்
 
 எசுப்பானியா0
 
 செருமனி0
 
26 சூன் – லியோன்
 
 பிரான்சு2
 
 பிரான்சு2
 
3 சூலை – சான்-டெனி
 
 அயர்லாந்து1
 
 பிரான்சு5
 
27 சூன் – நீஸ்
 
 ஐசுலாந்து2
 
 இங்கிலாந்து1
 
 
 ஐசுலாந்து2
 

16 அணிகளின் சுற்று

சுவிட்சர்லாந்து  1–1  போலந்து
சாக்கிரிi  82'அறிக்கைபிளாசிக்கோவ்சுகி  39'
ச.நீ
லிக்சுடைனர்
காக்கா
சாக்கிரி
ஸ்கார்
ரொட்ரிகசு
4–5 லெவாந்தோவ்சுகி
மிலிக்
கிளிக்
பிளாசிக்கோவ்சுகி
கிரிச்சோவியாக்
ஜெப்ரி-கிச்சார்டு அரங்கு, சான்-ஏத்தியென்
பார்வையாளர்கள்: 38,842[45]
நடுவர்: மார்க் கிளாட்டன்பர்க் (இங்கிலாந்து)

வேல்சு  1–0  வட அயர்லாந்து
மெக்கோலி  75' (சுய கோல்)அறிக்கை
பிரின்செசு பூங்கா, பாரிசு
பார்வையாளர்கள்: 44,342[46]
நடுவர்: மார்ட்டின் அட்கின்சன் (இங்கிலாந்து)

குரோவாசியா  0–1  போர்த்துகல்
அறிக்கைகரெசுமா  117'
பொலார்ட்-டிலேலிசு அரங்கு, லான்சு
பார்வையாளர்கள்: 33,523[47]
நடுவர்: கார்லொசு கார்வாலோ (எசுப்பானியா)

பிரான்சு  2–1  அயர்லாந்து
கிரீசுமன்  58'61'அறிக்கைபிரேடி  2' (தண்ட உதை)
ஒலிம்பிக் லியோன்னாய் பூங்கா, லியோன்
பார்வையாளர்கள்: 56,279[48]
நடுவர்: நிக்கோலா ரிசோலி (இத்தாலி)

செருமனி  3–0  சிலவாக்கியா
போட்டெங்கு  8'
கோமசு  43'
டிராக்சிலர்  63'
அறிக்கை
பியேர்-மோரோய் அரங்கு, லீல்
பார்வையாளர்கள்: 44,312[49]
நடுவர்: சிமோன் மர்சீனியாக் (போலந்து)

அங்கேரி  0–4  பெல்ஜியம்
அறிக்கைஆல்டர்வீரல்டு  10'
பட்சுவாயி  78'
அசார்டு  80'
கராசுக்கோ  90+1'
மாநகர அரங்கு, துலூஸ்
பார்வையாளர்கள்: 28,921[50]
நடுவர்: மிலொராத் மாசிச் (செர்பியா)

இத்தாலி  2–0  எசுப்பானியா
சில்லேனி  33'
பெல்லே  90+1'
அறிக்கை
பிரான்சு அரங்கு, சான்-டெனி
பார்வையாளர்கள்: 76,165[51]
நடுவர்: சூனெயித் சாக்கிர் (துருக்கி)

இங்கிலாந்து  1–2  ஐசுலாந்து
ரூனி  4' (தண்ட உதை)அறிக்கைசிகரோசன்  6'
சிக்போர்சன்  18'
அல்லியான்சு ரிவியேரா, நீஸ்
பார்வையாளர்கள்: 33,901[52]
நடுவர்: தாமிர் இசுக்கோமினா (சுலோவீனியா)

காலிறுதிகள்

போலந்து  1–1  போர்த்துகல்
லெவந்தோவ்சுக்கி  2'அறிக்கைசான்செசு  33'
ச.நீ
லெவந்தோவ்சுக்கி
மிலிக்
கிலிக்
பிளாசிக்கோவ்சுக்கி
3–5 ரொனால்டோ
சான்செசு
மோட்டீனியோ
நானி
காரெசுமா
வேலொதுரோம் அரங்கு, மர்சேய்
பார்வையாளர்கள்: 62,940[53]
நடுவர்: பெலிக்சு பிரைக் (செருமனி)
வேல்சு  3–1  பெல்ஜியம்
ஏ.வில்லியம்சு  31'
ராப்சன்-கானு  55'
வோக்சு  86'
அறிக்கைநைங்கோலன்  13'
பியேர்-மோரோர் அரங்கு, லீல்
பார்வையாளர்கள்: 45,936[54]
நடுவர்: தாமிர் இசுக்கோமினா (சுலோவீனியா)
செருமனி  1–1  இத்தாலி
ஓசில்  65'அறிக்கைபொனுச்சி  78' (தண்ட உதை)
ச.நீ
குரூசு
மூல்லர்
ஓசில்
டிராக்சிலர்
இசுவைன்சுடைகர்
அம்மெல்சு
கிம்மிச்
போட்டெங்கு
எக்டர்
6–5 இன்சிக்னி
சாசா
பர்சாக்லி
பெல்லே
பொனூச்சி
கியாச்செரினி
பரோலோ
டி சிக்லியோ
டார்மியென்
போர்தோ புதிய அரங்கு, பொர்தோ
பார்வையாளர்கள்: 38,764[55]
நடுவர்: [விக்டர் கசாய் (அங்கேரி)
பிரான்சு  5–2  ஐசுலாந்து
ஜிரூட்  12'59'
பொக்பா  20'
பயெட்  43'
கிரீசுமன்  45'
அறிக்கைசிக்போர்சன்  56'
பியானர்சன்  84'
பிரான்சு அரங்கு, சான்-டெனி
பார்வையாளர்கள்: 76,833[56]
நடுவர்: யோர்ன் கூப்பர்சு (நெதர்லாந்து)

அரையிறுதிகள்

போர்த்துகல்  2–0வேல்சு 
ரொனால்டோ  50'
நானி  53'
அறிக்கை
லியோனை ஒலிம்பிக் பூங்கா, லியோன்
பார்வையாளர்கள்: 55,679[57]
நடுவர்: யோனாசு எரிக்சன் (சுவீடன்)
செருமனி  0–2  பிரான்சு
அறிக்கைகிரீசுமன்  45+2' (தண்ட உதை)72'
வேலோதுரோம் அரங்கு, மர்சேய்
பார்வையாளர்கள்: 64,078[58]
நடுவர்: நிக்கோலா ரிசோலி (இத்தாலி)

இறுதிப் போட்டி

போர்த்துகல்  1-0 (கூ.நே)  பிரான்சு
எடெர்  109'அறிக்கை
பிரான்சு அரங்கு, சான்-டெனி
பார்வையாளர்கள்: 75,868[59]
நடுவர்: மார்க் கிளாட்டன்பெர்கு (இங்கிலாந்து)

தரவுகள்

அதிக கோல் எடுத்தவர்கள்

6 கோல்கள் எடுத்தவர்கள்
3 கோல்கள் எடுத்தவர்கள்
1 சுய கோ போட்டவர்கள்
  • பிர்க்கீர் சேவார்சன் (அங்கேரிக்கு எதிராக)
  • கரெத் மெக்கோலி (வேல்சிற்கு எதிராக)
  • சியாரன் கிளார்க் (சுவீடனுக்கு எதிராக)

மூலம்: UEFA[60][61]

பரிசுப் பணம்

மொத்தம் €301 மில்லியன் பரிசுப் பணம் வழங்கப்பட்டது. யூரோ 2012 இல் இத்தொகை €196 மில்லியனாக இருந்தது. போட்டியில் விளையாடிய 24 அணிகளுக்கும் தலா €8 மில்லியன் வழங்கப்பட்டது. மேலதிகமாக ஒவ்வோர் அணியின் திறமைக்கேற்ப பணம் வழங்கப்பட்டது. வாகையாளரான போர்த்துகல் அணி மொத்தம் €27 மில்லியன் பெற்றது.[62]

முழுமையான விபரம்:[62]

  • பங்குபற்றும் ஒவ்வோர் அணிக்கும்: €8 மில்லியன்

மேலதிக பரிசுப் பணம் அணியின் திறமைக்கேற்ப வழங்கப்பட்டது:

  • வாகையாளர்: €8 மில்லியன்
  • இரண்டாவதாக வந்த அணி: €5 மில்லியன்
  • அரையிறுதிக்குத் தகுதி பெற்றவை:: €4 மில்லியன்
  • காலிறுதிக்குத் தகுதி பெற்றவை: €2.5 மில்லியன்
  • 16 அணிகளின் சுற்றுக்குத் தகுதி பெற்றவை: €1.5 மில்லியன்
  • குழு ஆட்டம் ஒன்றில் வெற்றி பெற்ற அணி: €1 மில்லியன்
  • குழு ஆட்டம் ஒன்றில் சமமாக ஆடிய அணிகளுக்கு: €500,000

வன்முறைகள்

2016 சூன் 11 மர்சேய் நகரில் இங்கிலாந்துக்கும் உருசியாவுக்கும் இடையில் நடைபெற்ற குழு B ஆட்டம் 1-1 என்ற சமநிலையில் முடிவடைந்ததை அடுத்து, அங்கு இரு நாட்டு ரசிகர்களுக்கிடையே மோதல்கள் வெடித்தன.[63] ஆங்கிலேயர் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். மேலும் பலர் காயமடைந்தனர்.[64]

போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் சூன் 14 அன்று உருசிய அணிக்கு இடைநிறுத்திய தகுதிநீக்கம் தண்டனை வழங்கியதுடன் €150,000 அபராதம் விதித்தனர்; மேலும் ஏதாவது வன்முறை நிகழ்வுகளில் ஈடுபட்டால் போட்டியிலிருந்து நீக்கப்படுவர் என எச்சரிக்கப்பட்டனர். 50 உருசிய இரசிகர்கள் பிரான்சை விட்டு வெளியேற்றப்பட்டனர்.[65] ஆட்ட அரங்கினுள் நடந்த வன்முறைகளுக்கு மட்டுமே ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் பொறுப்பேற்குமெனவும் தண்டனை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இங்கிலாந்தும் தகுதிநீக்கம் குறித்து எச்சரிக்கப்பட்டாலும் முறையாக குற்றம் சாட்டப்படவில்லை.[66]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=யூரோ_2016&oldid=3569331" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை