ஸ்தாவ்ரபோல் பிரதேசம்

ஸ்தாவ்ரபோல் பிரதேசம் (Stavropol Krai (உருசியம்;Ставропо́льский край , tr. Stavropolsky kray; IPA: [stəvrɐˈpolʲskʲɪj kraj]) என்பது ஒரு உருசிய கூட்டாட்சி பிரதேசம் (கிராய்) ஆகும். இது வடக்கு ககாசியன் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்தது. இதன் நிர்வாக மையம் ஸ்ட்யாவ்ர்போல் நகரம். மக்கள் தொகை: 2,786,281 (2010 கணக்கெடுப்பு).[7]

ஸ்தாவ்ரபோல் கிராய்
Stavropol Krai
கிராய்
Ставропольский край
ஸ்தாவ்ரபோல் கிராய் Stavropol Krai-இன் கொடி
கொடி
ஸ்தாவ்ரபோல் கிராய் Stavropol Krai-இன் சின்னம்
சின்னம்
பண்: none[1]
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்வடக்கு காவ்கேசியன்[2]
பொருளாதாரப் பகுதிவடக்கு காவ்கேசியன்[3]
தலை நகரம்ஸ்தாவ்ரபோல்
அரசு
 • நிர்வாகம்டுமா[4]
 • ஆளுநர்[4]விளதிமிர் விளதிமிரோவ்[5]
பரப்பளவு[6]
 • மொத்தம்66,500 km2 (25,700 sq mi)
பரப்பளவு தரவரிசை45வது
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[7]
 • மொத்தம்27,86,281
 • Estimate (2018)[8]28,00,674 (+0.5%)
 • தரவரிசை14வது
 • அடர்த்தி42/km2 (110/sq mi)
 • நகர்ப்புறம்57.2%
 • நாட்டுப்புறம்42.8%
நேர வலயம்[9] (ஒசநே+3)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRU-STA
அனுமதி இலக்கத்தகடு26
அலுவல் மொழிகள்உருசியம்[10]
இணையதளம்http://www.stavregion.ru

நிலவியல்

இந்த கிராயின் நிலப்பரப்பு போர்ஸ்-காகச்சின் நடுப் பகுதியை உள்ளடக்கியதாக மற்றும் பெரும்பாலும் காகசஸ் மேஜரின் வடக்கு சரிவுகளைக் கொண்டதாக உள்ளது. இதன் எல்லைகளாக ரசுத்தோவ் மாகாணம், கிராஸ்னதார் பிரதேசம், கல்மீக்கியா குடியரசு, தாகெஸ்தான் குடியரசு, செசின்யா குடியரசு, வடக்கு ஒசேத்திய-அலனியா குடியரசு, கபர்தினோ -பல்கேரிய குடியரசு, காரசாய்–செர்கிஸ் குடியரசு ஆகியன உள்ளன.

வரலாறு

இந்தக் கிராய் 1924 அக்டோபர் 17 அன்று வடக்கு காகஸ் கிராய் என்ற பெயரில் நிறுவப்பட்டது. பல நிர்வாக மாற்றங்களை மேற்கொண்ட பின்னர், ஓர்டிஜோஹொனிகிட்செ பிரதேசம் (Орджоникидзевский край), என்றும், பின்னர் செர்கோ ஓர்டிஜோஹொனிகிட்செ என்று 1937 மார்ச் அன்று மாற்றப்பட்டு, ஸ்ட்யாவ்ர்போல் பிரதேசம் என பெயர் மாற்றம் 1943 சனவரி 12 அன்று செய்யப்பட்டது.

அரசியல்

சோவியத் காலத்தில், பிராந்திய (கிராய்) உயர் அதிகாரம் மூன்று நபர்கள் இடையே பகிர்ந்து கொள்ளப்பட்டது: முதன்மை அதிகாரம் ஸ்ட்யாவ்ர்போல் பிரதேச சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவின் முதன்மைச் செயலாளரிடம் (இவரிடமே மாபெரும் அதிகாரம் இருந்தது), அடுத்து பிரதேச சோவியத் தலைவர் (சட்டமியற்றும் அதிகாரம்), மற்றும் நிலப்பரப்பு நிர்வாகக் குழுத் தலைவர் (நிறைவேற்று அதிகாரம்).

1970-1978, ஆண்டு காலகட்டத்தில் ஸ்தாவ்ரபோல் கிராயின் கம்யூனிச கட்சியின் முதன்மைச் செயலாளராக மிக்கைல் கொர்பச்சோவ் இருந்தார். 1978 இல் இவர் மாஸ்கோ பகுதிக்கு இடம்பெயர்ந்து பின்னர், இவர் சோவியத் கம்யீனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் செயலாளராக ஆனார். பின் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் நாட்டின் தலைவராக உயர்ந்தார்.

1991, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி தன் அனைத்து அதிகாரங்களையும் இழந்தது, இக்கால கட்டத்தில் கிராயின் தலைமையையும் கம்யூனிஸ்ட் கட்சி இழந்து, கிராயின் தலைவராக வட்டார நாடாளுமன்றத்தால் ஆளுநர் நியமிக்கப்பட்டார்/தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஸ்ட்யாவ்ர்போல் பிரதேச சாசனம் பிராந்திய அடிப்படையான சட்டம் ஆகும். ஸ்ட்யாவ்ர்போல் பிரதேச மாகாணத்தில் பிராந்திய சட்டமன்ற (பிரதிநிதி) அமைப்பு உள்ளது. சட்டமன்றம் பிராந்திய ரீதியிலான சட்டமன்ற (பிரதிநிதி) அமைப்பு ஆகும். கிராய் சட்டமன்றம் சட்டமியற்றும் அதிகாரம், தீர்மானங்களை இயற்றுதல், மற்றும் பிற சட்ட நடவடிக்கைகளை மேற்பார்வயிடுதல், நடைமுறைப்படுத்துதல், கவணித்தல் ஆகிய அதிகாரங்களை உடையது. கிராய் அரசானது உயர்ந்த நிர்வாக அமைப்பாக உள்ளது. இதனுடன் மாவட்ட நிர்வாகங்கள் போன்ற, பிராந்திய நிர்வாக அமைப்புகள் அடங்கும். கிராயின் நிர்வாகத்தின் உயர்ந்த ஆட்சியாளராக உருசிய அரசியலமைப்பின்படி பிரதேச சாசனத்திற்கு ஏற்ப ஆளுநர் உள்ளார்.

மக்கள் வகைப்பாடு

மக்கள் தொகை

2010 ஆண்டைய மக்கள் கணக்கெடுப்பின்படி இந்த பிரதேசத்தின் மக்கள் தொகை 2,786,281;[7] 2002 ஆண்டைய மக்கள் தொகையான 2,735,139 விடக் கூடுதல்[12] மற்றும் 1989 மக்கள் கணக்கெடுப்பின்படி 2,410,379 விட கூடுதல்.[13] பிரதேச்சத்தின் மக்கள் தொகை குபன் ஆறு, குமா ஆறு ஆகிய ஆறுகளின் வடிகால் பகுதிகளில் அடர்த்தியாக உள்ளது.

இனக்குழுக்கள்

2010 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி தற்போதைய நிலவரத்தில் இப்பிராந்தியத்தில் முப்பத்து மூன்று இனக்குழுவினர் 2,000; பேருக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ளனர். உருசியக் கூட்டாட்சியில் பல்லினங்கள் கொண்ட ஒரு பிரதேசமாக இப்பிரதேசம் உள்ளது. இங்கு மொத்தம் 140 க்கும் மேற்பட்ட பல்வேறு இனக் குழுக்களை சேர்ந்த மக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பட்டியல் பின்வறுமாறு:[7]

மக்கள் தொகைஇனக் குழுமொத்த மக்கள் தொகையில் விழுக்காடு
2,232,153உருசியர்80.9%
161,324ஆர்மேனியர்5.9%
49,302தார்ஜினர்1.8%
33,573கிரேக்க கவுகாசுஸ்1.2%
30,879ரோமா மக்கள்1.1%
30,373உக்ரைனியர்1.1%
22,006நொகைஸ்0.8%
15,598கராச்சே0.6%
17,800அஜர்பைஜன்0.6%
15,048துர்க்மெனியர்0.5%
11,980செசனியர்0.4%
11,795தடார்கள்0.4%
7,988ஒசிடியர்0.3%
10,419துருக்கியர்0.4%
7,104பெலருசியர்0.3%
6,759கொரியர்கள்0.2%
55,946பிறர்2%
  • 26,855 பேர் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது தங்களது இனத்தைப்பற்றி குறிப்பிடவில்லை. இதனால் தங்கள் இனம் குறித்து தெரிவித்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளது.[14]

2007 முதன்மை புள்ளி விவரங்கள்:

  • பிறப்பு விகிதம்: 1000 பேருக்கு 11.22
  • இறப்பு விகிதம்: 1000 பேருக்கு 13.32
  • நிகர மக்கள் தொகை வளர்ச்சி: 1000 பேருக்கு +3.5
2012 முதன்மை புள்ளி விவரம்
  • பிறப்புகள்: 34 768 (1000 பேருக்கு 12.5)
  • இறப்புகள்: 33 356 (1000 பேருக்கு 12.0) [15]

மொத்த கருத்தரிப்பு விகிதம்:[16]2009 - 1.45 | 2010 - 1.44 | 2011 - 1.43 | 2012 - 1.52 | 2013 - 1.55 | 2014 - 1.62 | 2015 - 1.63(e)

சமயம்

2012 ஆண்டைய அதிகாரப்பூர்வ மக்கள் கணக்கெடுப்பின்படி[17] ஸ்தாவ்ரபோல் பிரதேசத்தில் 46.9% பேர் உருசிய மரபுவழி கிருத்தவர்கள், 7% திருச்பை சாராத பொதுவன கிறித்தவர், 5% பேர் முஸ்லிம், 1% பேர் கிழக்கு மரபுவழித் திருச்பையை நம்புபவர்கள், வேறு திருச்பையை ஏற்காதவர்கள், 1% பேர் ரோட்னோவரி அல்லது உள்ளூர் நாட்டுப்புறச் சமயத்தினர். 19% பேர் கடவுள் நம்பிக்கை உள்ள ஆனால் சமய நம்பிக்கை அற்றவர்கள் என குறிப்பிடுபவர்கள், 16% பேர் நாத்திகர், 7.1% பேர் பிற சமயங்களைச் சார்ந்தவர்களாகவோ அல்லது தங்கள் சமயத்தைப் பற்றி குறிப்பிடாதவர்களோ ஆவர்.[17]

நிர்வாகப் பிரிவுகள்

ஸ்தாவ்ரபோல் கிராய் இருபத்தாறு மாவட்டங்களாக (ரையான்ஸ்) பிரிக்கப்பட்டுள்ளது. மற்றும் பத்து நகரங்கள் உள்ளன. மாவட்டங்கள் ஒன்பது நகரங்களாக அல்லது மாவட்ட சபார்டினன்ஸ் என பிரிக்கப்பட்டு, ஏழு நகர்ப்புற-வகை குடியேற்றங்கள், மற்றும் 284 கிராமப்புற ஓர்க்ஸ் என பிரிக்கப்பட்டுள்ளன.

வேளாண்மை

பாசன விவசாயம் பிராந்தியத்திலே வளர்ந்துள்ளது. 2001 தொடக்கம் வரை, ஸ்ட்யாவ்ர்போல் பிரதேசத்தில் உள்ள 959 கி.மீ. பாசண வாய்க்கால்களில் 959 கி.மீ மண் கால்வாயாக (அதாவது, கான்கிரீட் அல்லது கல் சுவர்கள், இல்லாமல் வெறுமனே மண் சுவர்கள் கொண்டது இதில் நீர் இழப்பு ஏற்படும்.) இருந்தது.[18]

மேற்கோள்கள்

குறிப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை