அமேசான் ஆறு

தென் அமெரிக்காவின் முக்கிய ஆறு

அமேசான் ஆறு (ஆங்கிலம்: Amazon River) (இலங்கை வழக்கு: அமேசன் ஆறு; பொதுவாக சுருக்கமாக: அமேசான் (US: /ˈæməzɒn/ அல்லது UK: /ˈæməzən/; எசுப்பானியம் மற்றும் போர்த்துக்கேய மொழி: Amazonas) தென் அமெரிக்க கண்டத்திலுள்ள ஒரு ஆறாகும். இது உலகின் இரண்டு நீளமான ஆறுகளில் ஒன்று. மற்றொன்று நைல் ஆறு. அமேசான் ஆறு கொணரும் நீரின் அளவில் உலகின் பெரிய ஆறாகும்.   மற்றும் சில ஆசிரியர்களின் கூற்றின்படி, உலகின் நீண்ட ஆறாகும். இதன் அளவு மிசிசிப்பி, நைல், மற்றும் யாங்சே ஆகிய நதிகளின் மொத்த அளவை விட அதிகம். இதன் நீளம் 6400 கி.மீ.கள். உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறாகும். இதன் மொத்த அளவு அடுத்த எட்டு பெரிய ஆறுகளின் நன்னீரின் அளவை விட அதிகமாகும்.

அமேசான் ஆறு (அமேசானியா)
அபூரிமக், ஏனி, தம்போ, உக்காயலி, அமேசோனஸ், சோலிமோஸ்
ஆறு
கொலம்பியாவில் லத்தீசியவுக்கு அருகில், அமேசானில் கதிரவன் மறைவுத் தோற்றம்
நாடுகள்பெரு, கொலம்பியா, பிரேசில்
கிளையாறுகள்
 - இடம் மாரானோன், ஜபூர் / கிகெட்டா, ரியோ நெக்ரோ / குய்னியா, புட்டுமயோ
 - வலம் உக்கலியி, புருஸ், மடிரா, தபஜோஸ், சிங்கு
நகரம்இக்விடோஸ் (பெரு); லெட்டிகா (கொலம்பியா);
தாபிகாசி (பிரேசில்); டெஃபி (பிரேசில்);
இட்டோபாடாடா  (பிரேசில்) பாரிசின்ஸ் (பிரேசில்);
ஒபிடோஸ்  (பிரேசில்); சாண்டாரெம் (பிரேசில்);
அல்மீரிம் (பிரேசில்);   மெகாபா (பிரேசில்)

மனாஸ் (பிரேசில்)
உற்பத்தியாகும் இடம் ரியோ மாண்டரோ
 - அமைவிடம்ஹுங்காயோ, ஹுங்காயோ மாகாணம், பெரு
 - உயர்வு5,220 மீ (17,126 அடி)
கழிமுகம்அத்திலாந்திக்குப் பெருங்கடல்
 - elevationமீ (0 அடி)
நீளம்6,992 கிமீ (4,345 மைல்) [1]
வடிநிலம்70,50,000 கிமீ² (27,22,000 ச.மைல்) [1]
Discharge
 - சராசரி [2]
 - மிகக் கூடிய
 - மிகக் குறைந்த
அமேசான் ஆறும் அதன் வடிகால் பகுதி
அமேசான் ஆறும் அதன் வடிகால் பகுதி
அமேசான் ஆறும் அதன் வடிகால் பகுதி
அமேசான் ஆறு பாயும் மண்டலம்
அமேசான் ஆறு கடலுடன் சேரும் கழிமுகம். அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கும் பொழுது, நொடிக்கு 300,000 கன மீட்டர் நன்னீரைக் கொண்டு சேர்க்கின்றது

இந்த ஆற்றின் ஓட்டம் பலமுறை மாறியுள்ளது. முதலில் மேற்கு நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்த இந்த ஆறு அண்டெஸ் மலையின் வளர்ச்சியினால் கிழக்கு நோக்கிப் பாய்கிறது.

அமேசான் ஆறு எந்த இடத்திலும் பாலம் மூலமாக கடக்கப்படுவதில்லை. இதற்கு காரணம் இதன் அகலம் அல்ல, தற்கால பொறியாளர்களால் இதன் குறுக்கே பாலம் கட்டமுடியும். எனினும் ஆற்றின் பெரும் பகுதி வெப்பமண்டல மழைக்காடுகள் வழியாக பாய்வதாலும் அங்கு சில நகரங்களே உள்ளதாலும் பாலத்தின் தேவை ஏற்படவில்லை.

பல்வேறு அளவைகளின் படி அமேசான் ஆறே உலகில் பெரியதாக இருந்தாலும் நீளத்தை பொறுத்தமட்டில் இது நைல் ஆற்றைவிட சிறிது குறைவு என்பது பெரும்பாலான புவியிலாளர்களின் கணிப்பு. எனினும் இதை பிரேசில் மற்றும் பெரு நாட்டை சேர்ந்த சில அறிவியலாளர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.

இந்த ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு ஏறத்தாழ ஒரு விநாடிக்கு 209,000 கன மீட்டர்—தோராயமாக ஆண்டுக்கு 6,591 கியூபிக் கிலோமீட்டர் ஆகும், இது இதற்கடுத்த ஏழு மிகப்பெரிய ஆறுகள் வெளியேற்றும் ஆறுகளைவிட கூடுதலாக உள்ளது- உலகின் ஆற்றில் கலக்கும் மொத்த ஆறுகளின் நீரில் அமேசானின் பங்கு 20% ஆகும்.[3]  அமேசான் கால்வாய் உலகின் மிகப்பெரிய வடிகால் பகுதி ஆகும், இது சுமார் 7,050,000 சதுர கிலோமீட்டர் (2,720,000 சதுர மைல்) பரப்பளவில் உள்ளது.

அமேசான் பாயும் நாடுகள்

இதன் தலைத் துணை ஆறுகளின் உருவாக்கம் பெரு, எக்குவடோர் நாடுகளில் இருந்தாலும், இதன் பெரும்பாலான ஆற்று படுக்கை பகுதி பிரேசில் நாட்டில் அமைந்துள்ளது.Đ

அமேசான் ஆறு ஆயிரத்திற்கும் மிகுதியான துணையாறுகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் 17 ஆறுகள் 1000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டன.

வடிநிலம்

அமேசானின் வடிகால் பகுதியே உலகின் மிகப்பெரியதாகும். இது தோராயமாக தென் அமெரிக்காவின் பரப்பில் 40 விழுக்காடு ஆகும். இதன் ஒரு நீர்பிடிப்பு பகுதி உள் ஆண்டிய மேட்டுநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி பசிபிக் பெருங்கடலுக்கு அருகில் உள்ளது.

அமேசான் ஆறினால் அட்லாண்டிக் பெருங்கடலில் சேரும் நீரின் அளவு மிக அதிகமாகும். மழைக்காலத்தில் வினாடிக்கு 300,000 கன மீட்டர் அளவு வரை நீர்வரத்தும் 1973-1990 வரையான காலப்பகுதியில் தோராயமாக 209,000 கன மீட்டர் அளவும் நீர்வரத்து இருந்தது.

அமேசான் வடிநிலமானது தென் அமெரிக்காவின் மற்றொரு பெரிய ஆறான ஓரினோகோவின் வடிநிலத்துடன் காசிகியுயர் கால்வாய் மூலம் இணைக்கப்படுகிறது. அதனால் இதை இயற்கையாக அமைந்த நீர் இணைப்பு என்பார்கள். கால்வாய் என்று சொன்னாலும் காசிகியுயர் என்பது மேல் ஓரினோ ஆற்றின் கிளை ஆறாகும். இது தெற்காக ஓடி அமேசானின் துணை ஆறாகிய ரியோ நீக்ரோ ஆற்றுடன் கலக்கிறது.

தோற்றம்

பெரு, ஈக்வடார் நாடுகளில் அமேசான் ஆறு பல ஆற்றுத்தொகுதிகள் உடைய பெரிய ஆற்று அமைப்பாகும். பல நேரடியாக மரானான், உகயாலி போன்ற ஆறுகளில் கலக்கிறது. மரானா, பாஸ்டாச, நுகுரே போன்ற பல ஆறுகள் முதன்மை அமேசான் ஆற்றில் கலக்கின்றன.

பெரு நாட்டின் ஆண்டீய மலைத்தொடரில் உள்ள பனி மூடிய நவாடோ மிசிமி சிகரத்தின் பனிஏரியில் அமேசான் உருவாவதாக ௧௯௯௧, 20012007ம் ஆண்டுகளில் நிறுவப்பட்டது. இது டிடிகாகா ஏரிக்கு மேற்கிலும் லிமாவுக்கு தென் கிழக்கிலும் உள்ளது. நவாடோ மிசிமியிலிருந்து வரும் நீரானது குபிராடாஸ் கார்குசன்டா மற்றும் அபாசேடா ஆறுகளில் கலக்கிறது இவை உகயாலி ஆற்றின் துணை ஆறாகிய ரியோ அபுரிமாக் உடன் இணைகிறது. உகயாலி மரானான் உடன் இணைந்து முதன்மை அமேசான் ஆற்றை உருவாக்குகிறது. இந்த இடத்தையே பெரும்பாலான புவியியலாளர்கள் முதன்மை அமேசான் உருவாகும் இடமாக கருதுகிறார்கள். இங்குள்ள ஆற்றை பிரேசிலில் சோலிமோஸ் டாஸ் ஆகுஅஸ் என அழைக்கிறார்கள். ஆயிரம் மைல்கள் கடந்த பின் கரிய நிறமுடைய நீரினை உடைய ரியோ நீக்ரோ மண் நிறமுடைய அமேசானுடன் இணைகிறது. ஆறு மைல் வரையில் இரண்டும் கலக்காமல் அடுத்தடுத்து ஓடுகின்றன.

வெள்ளம்

அனைத்து அமேசான் துணை ஆறுகளிலும் ஓரே சமயத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதில்லை. பெரும்பாலானவற்றில் நவம்பர் மாதத்தில் வெள்ளம் ஏற்படத்துவங்கி ஜூன் வரை நீடிக்கும். ரியோ நீக்ரோவில் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் வெள்ளம் ஏற்பட துவங்கி ஜூன் மாத வாக்கில் வெள்ளம் குறையத்தொடங்கும். மெடிரிரா மற்ற அமேசான் துணை ஆறுகளில் வெள்ளம் ஏற்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே வெள்ளம் ஏற்பட்டு குறையந்துவிடும்.

மழைக்காலத்தில் ஆற்றின் ஆழம் சராசரியாக 40 அடியாகும்.

முதன்மை ஆறு தோராயமாக ஒன்று முதல் ஆறு மைல் அகலம் உடையது. பெரிய கடலில் செல்லும் கலங்கள் இதில் மனவுஸ் வரை செல்லலாம். சிறிய 3000 டன் அல்லது 9000 டன் எடையுடைய கலங்கள் மற்றும் கலத்தின் கீழ் பாகம் நீர் நிலையிலிருந்து 18 அடி வரை இருந்தால் அவை ஆற்றில் 3600 கிமீ வரை செல்லலாம்.

கழிமுகம்

இதன் கழிமுகத்தின் அகலம் தொடர்பாக நிபுணர்களிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது அதற்கு காரணம் கழிமுகத்தின் புவியியல் அமைப்பாகும். பாரா ஆறு அமேசானுடன் சேர்த்து கணக்கிடப்படுகிறது. சில முறை பாரா ஆறு டோகன்டின்ஸ் (Tocantins) ஆற்றின் தனிப்பட்ட கீழ் பகுதியாக கணக்கிடப்படுகிறது., தனிப்பட்ட பாரா ஆற்றின் கழிமுகம் பெரியதாகும். பாரா மற்றும் அமேசான் ஆறுகள் பல்வேறு ஆற்று கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு இடையில் மரஜா (Marajó)தீவு அமைந்துள்ளது. இதன் பரப்பளவு சுவிட்சர்லாந்து நாட்டு அளவுக்கு பெரியதாகும்.

காட்டு உயிர்கள்

உலகின் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு அமேசான் காடுகளில் வசிக்கின்றன. அமேசான் ஆற்றுப்படுகையும் மழைக்காடுகளும் 5.4 மில்லியன் சதுர கி.மீ (2.1 மில்லியன் சதுர மைல்) க்கும் மேலானதாகும். அமேசான் ஆற்றில் 3,000 க்கும் அதிகமான மீன் வகைகள் கண்டறியப்பட்டுள்ளது.

அமேசான் ஆற்று டால்பின் அமேசான் மற்றும் ஒரினோகோ ஆற்றுப் பகுதியில் வசிக்கிறது. இதுவே ஆற்று டால்பின் வகைகளில் மிகப்பெரியதாகும். இது ௦௦ அடி வரை வளரக்கூடியது.

இங்கு அதிகளவில் பிரன்கா என்ற மீன் வகை காணப்படுகிறது. இவை கூட்டமாக வாழும். இவை மாடு, மான் போன்ற உயிரினங்களை தாக்ககூடியவை. மனிதர்களும் தாக்கப்பட்டுள்ளார்கள். எனினும் சில வகை பிரன்காக்களை மனிதர்களை தாக்குகின்றன. குறிப்பாக சிவப்பு வயிற்று பிரான்கா மனிதரை தாக்கும் வகையாகும்.

அனகோண்டா வகை பாம்புகள் அமேசான் படுகையின் கரையில் காணப்படுகிறது. இது பெரிய பாம்பினங்களில் ஒன்றாகும். இவை பெரும்பாலும் நீரிலேயே வாழ்கின்றன. இதன் மூக்கு பகுதி மட்டும் நீர் மட்டத்துக்கு வெளியே இருக்கும்.

அமேசான் மழைக்காடுகள்

முதன்மைக் கட்டுரை: அமேசான் மழைக்காடு

அண்டெஸ் மலைத்தொடரின் கிழக்கில் இருந்து அமேசான் மழைக்காடு தொடங்குகிறது. இதுவே உலகின் மிகப்பெரிய மழைக்காடும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும். இது உலகில் வெளியடப்படும் கார்பன்-டை-ஆக்சைடு வளியை பெருமளவில் உட்கொள்ளும் திறன் வாய்ந்தது. இந்த மழைக்காடுகளைக் காப்பது இந்நாட்களில் முக்கிய விடயமாக இருக்கிறது.

மிகவும் ஈரப்பதம் கொண்ட அமேசான் படுகை இம்மழைக்காடுகளுக்கு அரணாக விளங்குகிறது. இப்பகுதியில் அமேசான் ஆறும் இதன் நூற்றுக்கணக்கான துணையாறுகளும் மிகவும் மெதுவாக ஓடி பின் கடலில் கலக்கின்றன.

உயிரியல் வளம் மிக்க இம்மழைக்காடு, 25 இலட்சம் வகையான பூச்சியினங்களுக்கும் ஆயிரக்கணக்கான தாவர வகைகளுக்கும் ஏறத்தாழ இரண்டாயிரம் பறவைகள், பாலூட்டிகள் ஆகியவற்றிற்கும் இருப்பிடமாக விளங்குகிறது. உலகின் மொத்தப் பறவையினங்களில் ஐந்தில் ஒரு பகுதி இக்காடுகளில் வசிக்கின்றன. அமேசான் காடுகள் பெரும்பாலும் பிரேசில் நாட்டில் அமைந்துள்ளதால்,அந்நாடு உலகிலேயே உருசியாவிற்கு அடுத்த இரண்டாவது பெரிய காடு வளத்தை (பரப்பளவில் 4,776,980 ச.கி.மீகள்)கொண்டதாக உள்ளது.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அமேசான்_ஆறு&oldid=3282100" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை