போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம்

போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம் (Polish–Lithuanian Commonwealth), போலந்து இராச்சியம் (1385-1569), லித்துவேனியப் பெரிய டியூக்ககம் என்பன இணைந்து 1569 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவின் மிகப் பெரிய, கூடிய மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாகவும் விளங்கியது. போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம் (ஐக்கியம் ; 17ம் நூற்றாண்டிலிருந்து போலந்து குடியரசு '[5]என்றும் 1791க்கு பின் போலந்து பொதுநலவாயம் என்றோ போலந்னே குடியரசு என்றோ அழைக்கப்பட்டது) போலந்தையும் லித்துவேனியாவையும் ஓரே குடையின் கீழ் (மன்னரின் கீழ்) ஆளப்பட்ட நிலப்பகுதியாகும்[6][7]. 16-17ம் நூற்றாண்டு ஐரோப்பாவில் 390,000 சதுர மைல் உடைய இதுவே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகும். இது பல்லின மக்கள்[8] வாழும் இடமாகவும் 17ம் நூற்றாண்டில் உச்சத்தில் இருந்த போது 11 மில்லியன் மக்கள்தொகை கொண்டதாகவும் விளங்கியது[9]. சூலை 1569ல் ஐக்கிய டப்லின் என்று இது உருவானது. ஆனால் உண்மையான ஐக்கியம் போலந்து மன்னரசும் லித்துவேனிய மன்னரசும் லித்துவேனிய அரசின் சோகய்ல போலந்திற்கு மன்னன் (1386) ஆகியபோது ஏற்பட்டது. 1772ல் உண்டான போலந்தின் முதல் பிரிவினையின் போது பொதுநலவாயம் சிதறி 1795ல் போலந்தின் மூன்றாம் பிரிவினையின் போது மறைந்தது.[10][11][12]

போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம்
Rzeczpospolita (போலந்து)
Res Publica Serenissima (இலத்தீன்)[1]
Рѣч Посполита (ருத்தேனியம்)
1569–1795
கொடி of போலந்து-லித்துவேனியா
அரச பாதகை (கிபி. 1605)
Royal Coat of arms of போலந்து-லித்துவேனியா
Royal Coat of arms
குறிக்கோள்: இலத்தீன்: Si Deus nobiscum quis contra nos (இறைவன் நம்மிடம் இருந்தால் நமக்கு எதிராக யார் துணிவார்)
Pro Fide, Lege et Rege
(இலத்தீன்: For Faith, Law and King, 18 ஆம் நூற்றாண்டில் இருந்து)
நாட்டுப்பண்: Gaude Mater Polonia[2]
"Rejoice, oh Mother Poland"
அதிகளவு பரப்பளவுடன் கூடிய போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்தின் அமைவிடம்
அதிகளவு பரப்பளவுடன் கூடிய போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்தின் அமைவிடம்
நிலைநாடுகளின் ஒன்றியம்
தலைநகரம்கிராக்கோவும் வில்னியசும் 1596 வரை, வார்சோ (1673 இலிருந்து குரோட்னோவுக்கும். லித்துவேனியாவின் தலைநகர் இன்னும் வில்னியசிலும், லித்துவேனியத் தலைநகர் கிராக்கோவிலும்.]])[3] & வில்னியஸ்[b]
(1569–1596)
வார்சா
(1596–1795)
பேசப்படும் மொழிகள்
சமயம்
அரசாங்கம்மரபுவழி முடியாட்சி
(1569–1573)
தேர்ந்தெடுக்கப்பட்ட முடியாட்சி
(1573–1791 / 1792–1795)
அரசியல்சட்ட முடியாட்சி
(1791–1792)
போலந்து அரசர் / லித்துவேனியப் பெரும் டியூக் 
• 1569–1572
இரண்டாம் சிகிசுமுன்டு அகுசுடசு
• 1764–1795
இரண்டாம் இசெயின்சுடுலா அகுசுடசு
சட்டமன்றம்செசும்
• Privy Council
Senate
வரலாற்று சகாப்தம்நவீன கால தொடக்கம்
• ஒன்றியம் உருவாக்கப்பட்டது
சூலை 1 1569
• சமாதானம் வேண்டி ஒட்டமான் பேரரசுடன் உடன்படிக்கை[4]
1672-1676
• உருசியப் பேரரசுக்கு உட்பட்ட அரசாக
1768
• மே 3, 1791 அரசமைப்பு சட்டம்
May 3, 1791
• போலந்தில் இரண்டாம் பிரிவினை
January 23, 1793
• 3ம் பிரிவினை
அக்டோபர் 24, 1795 1795
பரப்பு
1582815,000 km2 (315,000 sq mi)
16501,153,465 km2 (445,355 sq mi)
மக்கள் தொகை
• 1582
6500000
• 1650
11000000
முந்தையது
பின்னையது
அரச சின்னம்போலந்து இராச்சியம் (1385–1569)
அரச சின்னம்லித்துவேனியப் பெரும் டியூச்சி
கலிசிய லொடோமேரிய இராச்சியம்
உருசியப் பேரரசு
பிரசிய இராச்சியம்

தற்கால நாடுகளைப்போல் இவ்வைக்கியம் சில சிறப்புகளை கொண்டிருந்தது. இதன் அரசியலமைப்பு மன்னரின் அதிகாரத்தையும் சட்டத்தை கொண்டு அறிஞர் குழுவால் கட்டுப்படுத்தக்கூடியதாக இருந்தது. இம்முறையே தற்கால மக்களாட்சி[13], அரசியல்சட்ட முடியாட்சி[14][15][16], கூட்டாட்சி[17] போன்றவற்றுக்கு முன்னோடியாக இருந்தது. பொதுநலவாயத்தில் இரு நாடுகளும் சமமாக இருந்தாலும் இவற்றில் போலந்து ஆதிக்கமுள்ளதாக இருந்தது[18].

இந்தப் புதிய ஒன்றியம், சமகாலத்து நாடுகளுக்குத் தனித்துவமான பல இயல்புகளைக் கொண்டதாக விளங்கியது. பொதுநலவாயத்தின் அரசியல் முறைமை, அரசரின் அதிகாரத்தின் மீது கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தது. இக் கட்டுப்பாடுகள், பிரபுக்களினால் கட்டுப்படுத்தப்பட்ட சட்டவாக்கச் சபையினால் உருவாக்கப்பட்டன. இம் முறைமை, நவீன கருத்துருக்களான குடியாட்சி, அரசியல்சட்ட முடியாட்சி, கூட்டாட்சி போன்றவற்றுக்கு முன்னோடியாக விளங்கியது. இவ்வொன்றியத்தின் கூறுகளான இரண்டு நாடுகளும் முன்னர் சமநிலையில் இருந்த போதும் ஒன்றியத்தில் போலந்து முக்கியத்துவம் கூடிய கூட்டாளியாகக் காணப்பட்டது. காலத்துக்குக் காலம் அளவுகள் வேறுபட்டுக் காணப்பட்டபோதும், போலிய-லித்துவேனியப் பொதுநலவாயம், உயரளவிலான இனப் பல்வகைமையையும், வழமைக்கு மாறான மத நல்லிணக்கத் தன்மையும் கொண்டிருந்தது. போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம் பெருமளவு இன வேறுபாடுகளையும் சமய சகிப்புதன்மை உள்ளதாகவும் இருந்தது. இது வார்சா கூட்டிணைவின் உட்கூறால் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது[19][20][21]எனினும் பிற்காலத்தில் சமய சுதந்திரம் முழுதாக இல்லை.[22]

இப் பொதுநலவாயம் பல பத்தாண்டுகள் இணையற்ற அதிகாரமும், பெருமையும் கொண்டு விளங்கிய பின்னர் நீண்ட அரசியல், படைத்துறை, பொருளாதார வீழ்ச்சிக் காலகட்டத்துக்குள் புகுந்தது. வளமாக பல ஆண்டுகள் இருந்த இவ்வைக்கியம்[23][24][25] it entered a period of protracted political,[16][26] அரசியல், பொருளாதாரம், இராணுவ அளவில் வலுவிழக்கத் தொடங்கியது [16] [27] . இதைப்பயன்படுத்தி 18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 1795 ஆம் ஆண்டில், வலிமை பொருந்திய அயல் நாடுகளான ஆசுத்திரியா, பிரசியா, உருசியா ஆகியவற்றால் இல்லாது ஒழிக்கப்பட்டது. இதன் மறைவிற்கு சிறிது காலத்துக்கு முன்பு மே 3 , 1791ல் பெரும் சீர்திருத்தங்கள் அரசலமைப்பு மூலம் ஏற்பட்டன. இதுவே நவீன ஐரோப்பாவின் முதல் எழுத்துப்பூர்வமான அரசியலமைப்பாகும். உலக அளவில் இது இரண்டாவது. முதல் எழுத்துப்பூர்வமான அரசியலமைப்பு ஐக்கிய அமெரிக்காவினுடையது[28][29][30][31][32].

வரலாறு

14ம் நூற்றாண்டிலும் 15ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் போலந்தும் லுத்துவேனியாவும் பல போர்களையும் உடன்பாடுகளையும் சந்தித்தன. 1569ம் ஆண்டுக்கு முன்பு பல உடன்படிக்கைகளை இவ்விரு நாடுகளுக்கிடையே உருவாகியிருந்தாலும் அவை வலுவானதாக இல்லை 1569ம் ஆண்டு ஏற்பட்ட ஐக்கிய லுப்லின் என்ற உடன்படிக்கை வலுவானதாக இருந்தது. சாகெல்லோன் மரபின் கடைசி அரசரான இரண்டாம் சிகிசுமுன்டு அகுசுடசுவின் குறிப்பிடத்தக்க சாதனைகளில் இவ்வுடன்படுக்கையையும் ஒன்றாகும். தேர்ந்தெடுக்கப்படும் மன்னர் என்ற முறை தனது அரசமரபை காக்கும் என்று நம்பினார். 1572ல் அவர் இறந்த பின் ஏற்பட்ட மூன்று ஆண்டு காலத்தில் அரசிலமைப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. இம்மாறுதல்கள் தேர்ந்தெடுக்கப்படும் மன்னர் அமைப்பை உருவாக்கிய போதிலும் போலந்து இன அறிஞர்களின் செல்வாக்கை அதிகரித்தது[33].

பொதுநலவாயத்தின் பொற்காலம் என்பது 17ம் நூற்றாண்டின் ஆரம்ப காலமாகும். அறிஞர்களால் ஆன இதன் ஆன்றோர் சபை ஐரோப்பிய நாடுகள் பல ஈடுபட்ட 30 ஆண்டு போர் என்பதில் ஈடுபடாமல் போரில் நடுநிலை வகித்ததால் ஐரோப்பா முழுவதும் கடும் பாதிப்புக்குள்ளான போதும் இது போரின் பாதிப்பிலிருந்து தப்பியது. இக்காலத்தில் பொதுநலவாயம் உருசியாவின் சார் பேரரசு, சுவீடன் பேரரசு, ஒட்டமான் பேரரசின் கப்பல் படை ஆகியவற்றை எதிர்க்கும் வலுவுடன் இருந்தது. அண்டை நாடுகளின் மேல் படையெடுத்து தன் எல்லையை விரிவாக்கமும் செய்தது. இதன் படைகள் உருசியா மேல் மேற்கொண்ட படையெடுப்புகளில் ஒரு முறை மாசுக்கோவை செப்டம்பர் 27, 1610 முதல் நவம்பர் 4, 1612 வரை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

17ம் நூற்றாண்டின் நடுக்காலத்தில் பொதுநலவாயத்தின் வலு குன்றத்தொடங்கியது. 1648ல் பொதுநலவாயத்தின் தென்பகுதியில் (தற்கால உக்ரைனின் பகுதியிலிருந்து) இருந்த கசக் மக்கள் பெரும் புரட்சி செய்தனர். உருசிய சார் பேரரசுடன் உடன்படிக்கை ஏற்படுத்தி தங்களை அவ்வரசு காக்க வேண்டும் என்றனர். உருசியா உக்ரைனின் பல பகுதிகளை இணைத்தது. 1655ல் சுவீடன் படையெடுப்பு இதனை மேலும் வலு குன்றச்செய்தது. 17ம் நூற்றாண்டின் இறுதியில் பொதுநலவாயத்தின் மன்னர் மூன்றாம் சான் சாபியசுக்கி ரோம் மன்னர் முதலாம் லியோபோல்டு உடன் இணைந்து ஒட்டோமான் பேரரசை தோற்கடித்தார். 1683ம் ஆண்டு வியன்னா போர் 250 ஆண்டு காலம் கிறுத்துவ ஐரோப்பாவுக்கும் முசுலிம் ஒட்டோமான் பேரரசுக்கும் நடத்துவந்த சண்டையின் இறுதி திருப்பமாக இருந்தது. இப்போரில் ஒட்டோமான் பேரரசு தோல்வி கண்டதுடன் அதன் ஐரோப்பிய படையெடுப்புக்கு முற்றுப்புள்ளியாகவும் அமைந்தது. பொதுநலவாயம் முசுலிம் ஒட்டாமான்களின் படையெடுப்பை நூறு ஆண்டுகளுக்கு மேல் தடுத்துவந்ததால் இது கிறுத்துவர்களின் பாதுகாப்பு சுவர் என அழைக்கப்படலாயிற்று[17][34]. 16 ஆண்டுகள் துருக்கிய அரசுடன் நடந்த போரின் விளைவாக துருக்கியர்கள் தன்யூப் ஆற்றின் தென்கரையுடன் நிறுத்தப்பட்டு அவர்களால் நடு ஐரோப்பாவுக்கு மீண்டும் அச்சுருத்தல் ஏற்படாமல் காக்கப்பட்டது [35].

1715ல் மன்னருக்கும் அறிஞர் குழுவுக்கும் ஏற்பட்ட பெரும் கருத்துவேறுபாட்டால் உள்நாட்டு போர் உருவாகும் நிலை உருவானது. இது வெளிநாடுகள் செல்வாக்கு செலுத்த காரணமாகவிருந்தது. உருசியாவின் முதலாம் பீட்டர் இவர்களிடையேயான சிக்கலை தீர்த்து இணக்கம் ஏற்படுத்த முயன்றார். இவரால் பொதுநலவாயம் மேலும் பலம் குறைந்தது[36]. உருசிய படைகளை பொதுநலவாயத்தின் நாடாளுமன்றத்தை காக்க நியமித்தார். மன்னரின் சாக்சன் படையை கலைத்தும் பொதுநலவாயத்தின் படைகள் எண்ணிக்கையை குறைத்தும் அதற்கான குறிப்பிட்ட அளவே நிதியை கிடைக்கும்படியும் செய்தார். 1768ல் பொதுநலவாயம் உருசியாவின் ஆட்சிக்குட்பட்ட நாடாக விளங்கியது [37]. நாட்டை சீராக்க நாடாளுமன்றத்தின் மே சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்த பொழுது நாடு வெளிநாட்டு அரசுகளின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்ததால் பெரிதும் பயன் தரவில்லை. பொதுநலவாயத்தின் அண்டை நாடுகளான உருசிய பேரரசாலும் பிரிசிய பேரரசாலும் அப்சுபர்க் அரசாலும் இது மூன்றாக பிரிக்கப்பட்டு 1795ல் பொதுநலவாயம் முற்றாக இல்லாமல் செய்யப்பட்டது. 1918லேயே போலந்தும் லுத்துவேனியாவும் சுதந்திர நாடுகளாக மீண்டும் உருவாகின.

பொருளாதாரம்

பொதுநலவாயத்தில் உற்பத்தியான தானியங்கள் வணிகத்துக்கு போதுமான அளவில் உபரியாக இருந்தன. இக்கால கட்டம் பொதுநலவாயத்தின் தானிய வணிகத்தின் சிறந்ததாக இருந்ததுடன் இம்முறை பொதுநலவாயத்தின் ஆளும் வர்க்கத்திற்கு ஏற்றதாக இருந்தது. 17ம் நூற்றாண்டில் பொதுநலவாயத்தின் பொருளாதாரம் நலிவடைய ஆரம்பித்தது. போர்கள், சாலை கட்டமைப்புகளை மேம்படுத்தாதது ஆகியவை வணிகத்தை பெரிதும் பாதித்தன. விளைநிலங்களில் இருந்த தொழிலாளிகள் பிரபுக்களின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட தலைப்பட்டனர். இதனால் நிலங்களில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன, அவர்களின் வேலைப்பளு அதிகரிக்கப்பட்டது, அவர்களின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டது,

17ம் நூற்றாண்டில் பொதுநலவாயத்தின் நகர மக்கள் தொகை 20% இருந்தது, இது அக்காலத்தில் மற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளின் நகர மக்கள் தொகையை விட குறைவாகும். தோராயமாக நெதர்லாந்திலும் இத்தாலியிலும் நகர மக்கள் தொகை 50% இருந்தது. விவசாயமே பொதுநலவாயத்தின் முதன்மையாக இருந்ததாலும் விவசாய தொழிலாளர்கள் மேல் பிரபுக்களுக்கு இருந்த செல்வாக்காலும் நகரமயமாக்கம் மெதுவாக நடந்தது, தொழில் துறை வளர்ச்சியும் மெதுவாக இருந்தது. 16ம் நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பாவிற்கு தானியம், கால்நடை, உரோமம் போன்றவற்றை ஏற்றுமதி செய்தது, மேற்கு ஐரோப்பிவிற்கான ஏற்றுமதியில் இம்மூன்றும் 90% ஆகும்.

பொதுநலவாயம் ஐரோப்பாவின் பெரிய தானிய ஏற்றுமதியாளராக இருந்த போதிலும் உற்பத்தியில் பெரும் பங்கு உள்நாட்டிலேயே பயன்படுத்தப்பட்டது. 1560-70 காலப்பகுதியில் போலந்து அரசும் பிரைசியாவும்(செருமன் பேரரசு) தோராயமாக 113,000 டன் தானியத்தை பயன்படுத்தின. 16ம் நூற்றாண்டில் பொதுநலவாயத்தில் சராரசரியாக ஆண்டுக்கு 120,000 டன் தானியம் உற்பத்தி செய்யப்பட்டது. இதில் 6% ஏற்றமதி செய்யப்பட்டது, 19% நகரப்பகுதியில் பயன்படுத்தப்பட்டது, மீதி உள்ளது கிராமப்பகுதிகளில் பயன்படுத்தப்பட்டது.

விவசாய நில பண்ணை முதலாளிகள் 80% வணிகத்தை கட்டுக்குள் வைத்துள்ள கதான்ஸ்க் நகர வணிகர்களிடம் வழக்கமாக ஒப்பந்தம் செய்து கொள்வார்கள். தானியங்கள் கதான்ஸ்க் நகரத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து கப்பல் வழியாக மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகும். விசுத்துலா மற்றும் அதன் துணை ஆறுகளும் தானிய போக்குவரத்துக்கு பயன்பட்டன. 1569ல் அகுசுடவ் நகரமானது டச்சு பகுதியிலிருந்து போலந்து பகுதிக்கு வருபவர்களுக்கு சுங்கசாவடியாக விளங்கியது. இதனால் அருகிலிருந்த குராட்னவ் நகரத்துக்கு (தற்போது பெலருசுவில் உள்ளது) மதிப்பு கூடியது. நெதர்லாந்திலிருந்தும் பிளாண்டர்சுலிருந்தும் வரும் கப்பல்கள் கதான்ஸ்க் நகரிலிருந்து தானியங்களை ஆண்ட்வெர்புக்கும் ஆம்சுடர்டமுக்கும் கொண்டு சென்றன. தானியங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு பொருட்களும் ஏற்றுமதியாகின. நிலப்பகுதி வழியாக கால்நடைகள் ஏற்றுமதியாகின. வைன், பழங்கள், ஆடம்பர பொருட்கள், துணிகள், மீன், இரும்பு, கருவிகள் போன்றவை இறக்குமதியாகின.

16ஆம் 17ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பொதுநலவாயத்தின் வணிகத்தில் ஏற்றுமதியில் இருந்து வரும் பணத்தை விட இறக்குமதி மூலம் செல்லும் பணம் அதிகமாகியது. கண்டுபிடிப்புக் காலத்தின் காரணமாக புதிய வணிக பாதைகள் உருவாக்கப்பட்டு பழைய வணிக பாதைகள் மதிப்பிழந்தன. ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் வணிக கூட்டங்கள் செல்லும் சாத்து வழி என்னும் சிறப்பையும் பொதுநலவாயம் இழந்தது. எனினும் பொதுநலவாயத்தின் வழியாக ஒரு பகுதியின் பொருட்கள் மற்றொரு பகுதிக்கு சென்றன. பாரசீகத்திலிருந்து பொதுநலவாயம் வழியாக மேற்கு ஐரோப்பிய நாடுகள் பெற்ற கம்பளம் போலந்து கம்பளம் எனப்பட்டது.

பண்பாடு

அறிவியலும் இலக்கியமும்

ஐரோப்பாவின் தற்கால சமூக, அரசியல் எண்ணங்கள் வளர்ந்ததில் சிறப்பு இடம் பொதுநலவாயத்திற்கு உண்டு. இதன் தனித்துவமான அரசியல் முறை பல்வேறு அறிஞர்களால் பாராட்டப்பட்டது. இங்கு கத்தோலிகர்கள், யூதர்கள், இசுலாமியர்கள், பழமைவாதிகள், சீர்திருத்தவாதிகள் என பல மதத்தவர்கள் வாழ்ந்த போதிலும் சமய நல்லுணர்வு மிகுந்து இருந்தது. பிரித்தானிய, அமெரிக்க ஓரிறையாளர்களுக்கு முன்னோடியான போலந்து சகோதரர்கள் என்ற கிறுத்துவப் பிரிவு பொதுநலவாயத்தில் வளர்ந்தாகும்.

1364ல் உருவாக்கப்பட்ட உலகின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான கிராக்கோவிலுள்ள கியாகெல்லோவும் 1579ல் உருவாக்கப்பட்ட வில்னியஸ் பல்கலைக்கழகமும் இணைந்து பொதுநலவாயத்தின் அறிவியல் மையமாகவும் அறிஞர்கள் கூடும் இடமாகவும் திகழ்ந்தன. 1773ல் கோமிச எடுகேசி நரோடோவெச் (Komisja Edukacji Narodowej) என்ற உலகின் முதல் தேசிய கல்வி அமைச்சகம் உருவாகியது.

வரலாற்று அறிஞரான மார்டின் கிரோமர் (1512-1589), வேதியியலாளர் மைக்கேல் செட்சிவோச்சு (1566-1636), கணிதம், வானியல், இயற்பியல் என பல துறைகளில் அறிஞராக விளங்கிய சான் புரோசெக், பொறியாளரும் மானுசவியலாளரும், டச்சு மேற்கு இந்திய இராணுவத்தில் அதிகாரியாக பிரேசிலை கைப்பற்ற எசுப்பானிய பேரரசுடன் போர் புரிந்தவருமான கிரிசுசோபல் அரிச்சிவ்விசுகி (1592-1656), இராணுவ பொறியாளரும், பீரங்கி படையின் நிபுணரும் ஏவூர்தியை உருவாக்கியவருமான கசிமிர்சு சிமினோவிச்சு (1600-1651), வானியலாளரும் நிலவு உருவவியலாருமான சோன்னசு கெவிலியசு (1611-1687), இயற்கைவியலாரும், கீழ்திசைவாணரும், நிலப்படவியலாளரும் மிங் அரசமரபின் தூதராக விளங்கியவருமான மைக்கேல் போயம் (1612-1659), கணிதவியலாளரும் பொறியாளருமான ஆடம் ஆடெமன்டி கோசன்சுகி (1631-1700), அசிடிக் யூதத்தை தோற்றுவித்தவெரென கருதப்படும் பால் செம் டோவ் ( הבעל שם טוב ; எபிரேயம்) ) (1698–1760), கணிதவியலாளரும் வானியலாளருமான மார்சின் ஒடலன்சுகி போசோபட் (1728 - 1810), இசுக்காட்டிய அறிஞர் மரபைச் சேர்ந்த மருத்துவரும் அறிஞருமான சான் சான்சன் (1603-1675) போன்றோர் பொதுநலவாயத்தின் அறிவியலாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். 1628ல் செக் நாட்டின் அறிவியலாளரும் ஆசிரியரும் கல்வியாளரும் எழுத்தாளருமான சான் ஏமசு கமீனியசு, அந்நாட்டில் சீர்திருத்தவாதிகள் தண்டிக்கப்பட்டதால் புகலிடம் தேடி பொதுநலவாயத்தை அடைந்தார்.

கலையும் இசையும்

கத்தோலிகம் மரவுவாதிகள் என்ற இரு பெரும் சமய பண்பாடுகள் பொதுநலவாயத்தில் இணைந்து நல்லுறுவுடன் இருந்தன. கத்தோலிகர்களின் புனித மேரியை நினைவுபடுத்தும் சின்னங்களும் மரபுவாதிகளின் உலோக ஆடையை பயன்படுத்தும் சின்னங்களும் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது நல்லுறவு நிலவியதற்கு சான்றாகும். கறுப்பு மடோனா என்கிற மரபுவாதிகளின் சின்னம் இன்றும் போலந்தில் கத்தோலிகர்கள் அதிகம் வாழும் பகுதியில் வணங்கப்படுகிறது. லித்துவேனியாவில் விடியற்காலை கதவின் பெண்மணி என்ற வணங்கப்படுகிறது. மறுமலர்ச்சி காலத்துக்கு பின் தேசியவாதம் பரப்பப்பட்டது போலந்தின் பாரோக்கு கட்டட கலையில் மரபுவாதிகளின் ஓவியமும் போலந்து பாங்கினால் ஊக்கபடுத்தப்பட்ட காசேக் பாரோக்கு பாணி கட்டடக்கலை உருவாக்கப்பட்டது. இப்பாணிகளே கத்தோலிக பாணி கிழக்கு மரபுவழி கலையில் ஊடுறுவ வாய்ப்பாக அமைந்தது.

சர்மாட்டியன் காலத்தில் பொதுவான கலையாக மரண நிகழ்வின் போதும் மற்ற சில குறிப்படத்தக்க நிகழ்வின் போதும் பொதுநலவாயத்தின் பண்பாட்டை எதிரொலிக்கும் மரணப்பெட்டி ஓவியங்கள் திகழ்ந்தன. விதியாக இவ்வோவியங்கள், மரணப்பெட்டியின் உயர்த்தப்பட்ட முன்பக்கத்தில் ஆறு அல்லது எட்டு பக்கங்கள் உடைய உலோக தகட்டின் மீது வரையப்பட்டன. தேவாலயங்களின் பல்வேறு பகுதிகள் (மேற்கூரை, தூண், நினைவுக்கல், நினைவகம் மற்றும் பல) கருங்கற்களால் கட்டப்பட்டன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Polish-Lithuanian Commonwealth
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை