1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

1988 கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் என்பது அதிகாரபூர்வமாக XXIV ஒலிம்பியாட் (ஒலிம்பிக் விளையாட்டுகள்) என அழைக்கப்படுகிறது. தென் கொரிய தலைநகர் சியோலில் செப்தெம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை இப்போட்டிகள் நடைபெற்றன. இது ஆசியாவில் நடைபெறும் இரண்டாவது கோடைகால ஒலிம்பிக் ஆகும். முதல் ஒலிம்பிக் 1964ம் ஆண்டு டோக்கியோவில் நடந்தது. இலையுதிர் காலத்தில் நடைபெறும் நான்காவது ஒலிம்பிக் இதுவாகும். இப்போட்டியில் 159 நாடுகள் பங்கு கொண்டன. அவற்றிலிருந்து மொத்தமாக 8391 போட்டியாளர்கள் (6197 ஆண்கள் 2194 பெண்கள்) பங்கெடுத்தனர். இப்போட்டியில் 263 நிகழ்வுகள் நடைபெற்றன.

வட கொரியாவும் அதன் நட்பு நாடுகளான கியுபா, எத்தியோப்பியா ஆகியவை ஆகியவை இப்போட்டியைப் புறக்கணித்தன[1]. பல்வேறு காரணங்களால் அல்பேனியா, மடகாஸ்கர் சீசெல்சு, நிகரகுவா ஆகியவை இப்போட்டியைப் புறக்கணித்தன [2]. இப்போட்டியில் முதல் இரு இடங்களைப் பிடித்த சோவியத் ஒன்றியத்துக்கும் கிழக்கு செருமனிக்கும் இது கடைசிப் போட்டியாக அமைந்தது.

போட்டி நடத்தும் நாடு தெரிவு

சப்பானும் தென் கொரியாவும் மட்டுமே போட்டியிட்டன. செப்தெம்பர் 30, 1981ம் ஆண்டு மேற்கு செருமனியில் நடந்த ஒலிம்பிக் ஆணையகத்தின் 84வது அமர்வில் சியோல் 1988ம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக்கை நடத்த தேர்வு பெற்றது.

[3][4]

1988 ஒலிம்பிக் போட்டியை நடத்த போட்டியிட்ட நகரங்களின் தேர்தல் முடிவுகள்[5]
நகரம்நாடுசுற்று 1
சியோல்  KOR52
நகோயா  JPN27

சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்

ஒலிம்பிக் தீச்சுடர் எரியும் மேடையைச் சுற்றி தென் கொரிய மக்கள் 1988 ஒலிம்பிக்
  • வரலாற்றில் முதன்முறையாக அழகுபடுத்தப்பட்ட குதிரையேற்ற ஒழுங்கில் அனைத்து நிகழ்வுகளிலும் பெண்கள் வென்றனர்.[6]
  • 64 ஆண்டுகளுக்கு பின் டென்னிசு ஒலிம்பிக்கில் இடம் பிடித்தது.[7] ஸ்டெப்பி கிராப் அர்ஜெண்தினாவின் கேப்ரில்லா சபாட்டினியை வென்று தங்கம் பெற்றார். அவ்வாண்டு யூ.எஸ் ஓப்பனில் இறுதி ஆட்டத்தில் சபாட்டினியை வென்றதுடன் அனைத்து பெருவெற்றித் தொடர் போட்டிகளிலும் ஸ்டெப்பி கிராப் வென்றார்.[8][9]
  • மேசைப்பந்தாட்டம் ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டு சீனாவும் தென் கொரியாவும் தலா இரு தங்கங்களை வென்றன.[10]
  • போதை மருந்து சோதனையில் தேறாததால் இரண்டு பல்கேரிய எடைதூக்குபவர்களின் தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியால் அந்நாடு எடைதூக்குபவர்கள் அணியை முழுவதுமாக இப்போட்டியில் இருந்து விலக்கிக்கொண்டது.[11]
  • நியூசிலாந்தைச் சேர்ந்த நடுவர் தென்கொரிய குத்துச்சண்டை வீரரை எச்சரித்ததால் தென் கொரிய குத்துச்சண்டை அதிகாரிகளும் பாதுகாப்பு வீரர்களும் தாக்கினர்.
  • அமெரிக்க வீரருக்குப் பதிலாக தென் கொரிய வீரரை வென்றதாக நடுவர்கள் அறிவித்து தங்க பதக்கம் அளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.[12]
  • 100 மீ விரைவுஓட்டத்தில் உலக சாதனை புரிந்த கனடாவின் சான்சன் போதை மருந்து சோதனையில் தேறாததால் அவரின் தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டது.[13][14]
  • பெண்கள் பிரிவில் வில்வித்தையில் வெள்ளி வென்றதே இந்தோனேசியாவின் முதல் ஒலிம்பிக் பதக்கமாகும்.
  • பறக்க விடப்பட்ட அமைதிப் புறாக்களில் பல ஒலிம்பிக் தீச்சுடர் எரிந்த மேடையின் வெப்பத்தால் கருகி செத்தன. இதனால் 1996 ஒலிம்பிக்கில் காகித புறாக்களே பறக்கவிடப்பட்டன.[15]
ஒலிம்பிக்கின் நிறைவு நிகழ்ச்சியில் வாண வேடிக்கை

1988 கோடைகால ஒலிம்பிக் புறக்கணிப்பு

1988 கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் போது 1984 கோடைகால ஒலிம்பிக்கை புறக்கணித்த சோவியத் ஒன்றியமும் அதன் நட்பு நாடுகளும் இப்போட்டியையும் புறக்கணிக்குமோ என்ற அச்சம் எழுந்தது. பொதுவுடைமை நாடுகளுடன் தென் கொரியாவுக்கு தூதரக உறவு இல்லாதது இச்சிக்கலை அதிகப்படுத்தியது. அதனால் ஒலிம்பிக் போட்டியில் புறக்கணிப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு முழுவதும் பன்னாட்டு ஒலிம்பிக் ஆணையத்தின் மீது விழுந்தது. சோவியத் ஒன்றியம் இப்போட்டியில் பங்கேற்பதாக உறுதி கூறியது. 1984ம் ஆண்டு போட்டியை புறக்கணித்த கிழக்கு செருமனி இப்போட்டியில் பங்கேற்பதாக கூறியது.

கியுபாவின் பிடல் காஸ்ட்ரோ வட கொரியாவும் இப்போட்டியை இணைந்து நடத்தவேண்டும் என்றார். அதன் காரணமாக 1986 சனவரி 8, 9 ல் சுவிட்சர்லாந்தில் பன்னாட்டு ஒலிம்பிக் ஆணையகத்தின் தலைவர் வட கொரியாவின் ஒலிம்பிக் ஆணையகத்தையும் தென் கொரியாவின் ஒலிம்பிக் ஆணையகத்தையும் கொண்டு கூட்டம் கூட்டினார். வட கொரியா 23 போட்டிகளை தான் நடத்த அனுமதி கோரியது. இரண்டு கொரியாக்களும் இணைந்த ஐக்கிய அணியையும், தொடக்க, இறுதி விழாக்களை இணைந்து நடத்தவும் கோரியது. பல கூட்டங்கள் நடந்தும் இணக்கம் ஏற்படவில்லை. பன்னாட்டு ஒலிம்பிக் ஆணையகம் வட கொரியா ஐந்து போட்டிகள் நடத்தலாம் என்றும் தொடக்க அல்லது இறுதி விழாக்களை தென் கொரியா மட்டுமே நடத்தும் என்று தெரிவித்தது. அதை வட கொரியா ஏற்கவில்லை.[16] இதனால் 1988 ஒலிம்பிக் போட்டியை தென் கொரியா மட்டுமே ஏற்று நடத்தியது.

பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் வட கொரியா 1988 ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணித்தது. அதற்கு ஆதரவாக கியுபாவும் எதியோப்பியாவும் இப்போட்டியை புறக்கணித்தன. அல்பேனியா, நிக்கராகுவா, சீசெல்சு ஆகியவையும் இப்போட்டியை புறக்கணித்தன [17]. மடகாசுகர் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பின் வட கொரியாவுடன் இணைந்து இப்போட்டியை புறக்கணித்தது.[18]

பதக்கப் பட்டியல்

பங்குகொண்டவைகளில் 52 நாடுகள் பதக்கம் பெற்றன'

      போட்டியை நடத்தும் நாடு
      முதன்முறையாக தங்கம் வென்ற நாடு
      முதன்முறை பதக்கம் வென்ற நாடு

நிலைநாடுதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
1  URS553146132
2  GDR373530102
3  USA36312794
4  KOR12101133
5  FRG11141540
6  HUN116623
7  BUL10121335
8  ROU711624
9  FRA64616
10  ITA64414
11  CHN5111228
12  GBR510924
13  KEN5229
14  JPN43714
15  AUS36514
16  YUG34512
17  TCH3328
18  NZL32813
19  CAN32510
20  POL25916
21  NOR2305
22  NED2259
23  DEN2114
24  BRA1236
25  FIN1124
 ESP1124
27  TUR1102
28  MAR1023
29  AUT1001
 POR1001
 SUR1001
32  SWE04711
33  SUI0224
34  JAM0202
35  ARG0112
36  CHI0101
 CRC0101
 INA0101
 IRI0101
 AHO0101
 PER0101
 SEN0101
 ISV0101
44  BEL0022
 MEX0022
46  COL0011
 DJI0011
 GRE0011
 MGL0011
 PAK0011
 PHI0011
 THA0011
மொத்தம்241234264739

மேற்கோள்கள்


🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை