அப்துல்ரசாக் குர்னா

அப்துல்ரசாக் குர்னா (Abdulrazak Gurnah; பிறப்பு: 20 திசம்பர் 1948) ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த புதின எழுத்தாளர் ஆவார். இவர் 1960களில் சான்சிபார் நாட்டில் இருந்து சான்சிபார் புரட்சியின் போது வெளியேறி அகதியாக ஐக்கிய இராச்சியத்தில் குடியேறினார்.[1] இவர் 1994 இல் எழுதிய சொர்க்கம் என்ற புதினம் மான் புக்கர் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இவருக்கு 2021 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[2][3][4][5]

அப்துல்ரசாக் குர்னா
Abdulrazak Gurnah
குர்னா (மே 2009)
குர்னா (மே 2009)
பிறப்புஅப்துல்ரசாக்
20 திசம்பர் 1948 (1948-12-20) (அகவை 75)
சான்சிபார் (இன்றைய தான்சானியா)
கல்விகான்டர்பரி கிறைஸ்ட் சர்ச் பல்கலைக்கழகம் (இளங்கலை)
கெண்ட் பல்கலைக்கழகம் (முதுநிலை, முனைவர்)
வகைபுதினம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • சொர்க்கம் (1994)
  • கைவிடல் (2005)
குறிப்பிடத்தக்க விருதுகள்இலக்கியத்திற்கான நோபல் பரிசு (2021)

வாழ்க்கைக் குறிப்பு

அப்துல்ரசாக் குர்னா 1948 திசம்பர் 20 இல்[6] இன்றைய தான்சானியாவில் உள்ள சான்சிபார் சுல்தானகத்தில் பிறந்தார்.[7] சான்சிபார் புரட்சியின் போது அரபு மக்களுக்கெதிரான துன்புறுத்தலை அடுத்து, இவர் தனது 18-வது அகவையில் நாட்டை விட்டு வெளியேறினார்.[8][9] 1968 இல் இவர் ஏதிலியாக இங்கிலாந்து வந்து சேர்ந்தார்.[10][11]

இங்கிலாந்து கான்டர்பரி கிறைஸ்ட் சர்ச் கல்லூரியில் கல்வி கற்று இலண்டன் பல்கலைக்கழகத்தின் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்..[12] பின்னர் கெண்ட் பல்கலைக்கழகத்தில் 1982 இல் மேற்கு ஆப்பிரிக்கப் புதினங்களின் விமர்சனத்தின் அளவுகோல் என்பதில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தைப் பெற்றார்.[7][13] 1980 முதல் 1983 வரை நைஜீரியாவில் உள்ள பயேரோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர் இளைப்பாறும் வரை கெண்ட் பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழித் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார்.[8]

விருதுகளும் சிறப்புகளும்

கருப்பொருள்

குர்னாவின் பெரும்பாலான படைப்புகள் கிழக்கு ஆப்பிரிக்காவின் கரையோரப் பகுதிகளை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளன.[15] இவரது புதினங்களில் ஒருவரைத் தவிர கதாநாயகர்கள் அனைவரும் சான்சிபாரில் பிறந்தவர்கள்.[16] குர்னாவின் புதினங்கள் கிழக்கு ஆப்பிரிக்க கதாநாயகர்களை அவர்களின் பரந்த சர்வதேச சூழலில் வைக்கின்றன என்று இலக்கிய விமர்சகர் புரூஸ் கிங் வாதிடுகிறார்.[17] எழுத்தாளர் ஐ. சாந்தன் தனது 'உள்ளங்கையில் உலக இலக்கியம்' (2010) என்ற நூலில் "குர்ணாவின் 'அமைதியை நாடுதல்' என்ற புதினம் இடப்பெயர்வு, பண்பாட்டு அடையாளங்கள் போன்றவற்றைப் பேசுகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை