உபுண்டு (இயக்குதளம்)

டெபியன் அடிப்படையிலான லினக்ஸ் இயக்க முறைமை

உபுண்டு (/ʊˈbʊnt/ uu-BUUN-too)[1][2] (Ubuntu) என்பது, குனூ/லினக்சு இயங்குதளத்தின் வழங்கல்களில் ஒன்றாகும். இது டெபியனை அடிப்படையாகக் கொண்டது. இதில் அடங்கியுள்ள அனைத்து மென்பொருட்களும் கட்டற்ற, திறந்த ஆணைமூல மென்பொருட்களாகும். இவ்வழங்கல் முற்றுமுழுதாக இலவசமாகக் கிடைக்கிறது. இவ்வழங்கல் பொதியப்பட்ட இறுவட்டுக்களைப் பணம் எதுவும் செலுத்தாமல் அஞ்சல் மூலம் பெறக்கூடியதாக இருந்தது. உபுண்டு என்ற ஆப்பிரிக்கச் சொல்லிற்கான பொருள், மானிட நேயம் என்றவாறாக அமைகிறது. "மனிதர்களுக்கான லினக்சு" என்ற மகுட வாக்கியத்தோடு இது வெளிவருகிறது.[3]

உபுண்டு
Ubuntu logo

உபுண்டு 12.04 LTS (Precise Pangolin)
நிறுவனம்/
விருத்தியாளர்
கனோனிக்கல் நிறுவனம் / உபுண்டு பவுண்டேசன்
இயங்குதளக் குடும்பம்லினக்ஸ்
மூலநிரல் வடிவம்திறந்த மூலநிரல்
முதல் வெளியீடு20 அக்டோபர் 2004; 19 ஆண்டுகள் முன்னர் (2004-10-20)
பிந்தைய நிலையான பதிப்பு18.04 Bionic Beaver / 26 ஏப்ரல் 2018; 6 ஆண்டுகள் முன்னர் (2018-04-26)
பிந்தைய நிலையற்றப் பதிப்பு17.10 Artful Aardvark / 26 அக்டோபா், 2017
கிடைக்கும் மொழிகள்பன்மொழி (Multilingual) 55 க்கும் மேற்பட்ட மொழிகள்
மேம்பாட்டு முறைAPT
Package managerdpkg, Snappy
Supported platformsI386, IA-32, AMD64; ARMhf (ARMv7 + VFPv3-D16), ARM64; Power, ppc64le; s390x
கேர்னர்ல் வகைMonolithic kernel, Linux
இயல்பிருப்பு பயனர் இடைமுகம்குநோம்
அனுமதிகுனூ பொதுமக்கள் உரிமம் (GNU GPL)
தற்போதைய நிலைதற்போதைய (Current)
இணையத்தளம்www.ubuntu.com

வெளியீடுகள்

அலைபேசி(Nexus S) உபுண்டு
உபுண்டு தொலைக்காட்சிப் பெட்டி

உபுண்டுவின் வெளியீடுகள் ஒவ்வொரு ஆறுமாதகாலத்திற்கு ஒருமுறை வெளிவருகின்றன. ஒவ்வொரு வெளியீடும் 18 மாதங்களுக்கான இலவச அனுசரணை கொண்டவையாக அமைகின்றன. இதில் டாப்பர் ட்ரேக் (6.06) ஆனது மேசைக்கணினிகளுக்கு 3 வருட இலவச அனுசரணையும் வழங்கிகளுக்கு 5 வருட இலவச அனுசரணையும் கொண்டதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்டபடி இதன் தற்போதைய பதிப்பான கட்ஸி கிப்பன், 18 அக்டோபர், 2007 அன்று வெளியிடப்பட்டுள்ளது. . இதில் முற்றிலும் தளையறு மென்பொருட்களைக் கொண்ட ஒரு வழங்கலும் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியீடுகள் தமக்கென தனித்தனியான பெயர்களையும், பதிப்பு இலக்கத்தையும் கொண்டிருக்கும். பதிப்பு இலக்கமானது வெளியீட்டின் ஆண்டினையும் மாதத்தையும் குறிப்பதாக அமையும். எடுத்துக்காட்டாக உபுண்டு 4.10 ஆனது 2004 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் வெளிவந்ததாகும்.

வரிசைபதிப்புவெளியிடப்பட்ட திகதிCode nameஆதரவு காலம்
14.1020 அக்டோபர், 2004Warty Warthog30 ஏப்ரல், 2006 உடன் ஆதரவு முடிவடைந்துள்ளது
25.048 ஏப்ரல், 2005Hoary Hedgehog31 அக்டோபர், 2006 உடன் ஆதரவு முடிவடைந்துள்ளது
35.1013 அக்டோபர், 2005Breezy Badger[4][5]13 ஏப்ரல், 2007 வரை
46.061 ஜூன், 2006Dapper Drake[6][7]மேசைக் கணினிகளுக்கு ஜூன் 2009, வழங்கிகளுக்கு 2011
56.1026 அக்டோபர், 2006Edgy Eft[8][9]ஏப்ரல் 2008
67.0419 ஏப்ரல், 2007Feisty Fawn[10]அக்டோபர் 2008
77.1018 அக்டோபர், 2007Gutsy Gibbon[11]ஏப்ரல் 2009
88.0424 ஏப்ரல், 2008Hardy Heron[12]மே 2013
98.1030 அக்டோபர், 2008Intrepid Ibex[13]ஏப்ரல் 2010
109.0423 ஏப்ரல், 2009Jaunty Jackalopeஅக்டோபர் 2010
119.1029 அக்டோபர், 2009Karmic Koalaஏப்ரல் 2011
1210.0429 ஏப்ரல், 2010Lucid Lynxமேசைக் கணினிகளுக்கு ஏப்ரல் 2013, வழங்கிகளுக்கு ஏப்ரல் 2015
1310.1010 அக்டோபர், 2010Maverick Meerkatஏப்ரல் 2012
1411.0428 ஏப்ரல், 2011Natty Narwhalஅக்டோபர் 28, 2012
1511.1013 அக்டோபர், 2011Oneiric Ocelotமே 2013
1612.0426 ஏப்ரல், 2012Precise Pangolin[14]ஏப்ரல் 2017
1712.1018 அக்டோபர், 2012Quantal Quetzal[15]ஏப்ரல் 2014
1813.0425 ஏப்ரல், 2013Raring Ringtail[16]சனவரி 2014
1913.1017 அக்டோபர், 2013Saucy Salamanderசூலை 2014
2014.0417 ஏப்ரல், 2014Trusty Tahr17 ஏப்ரல் 2019 [17]
2114.1023 அக்டோபர் 2014Utopic Unicorn9 மாதங்கள் [18]
2215.0423 ஏப்ரல் 2015Vivid Vervetபிப்ரவரி 2016
2315.1022 அக்டோபர் 2015Wily Werewolfசூலை 2016
2416.0421 ஏப்ரல் 2016Xenial Xerusஏப்ரல் 2021
2517.0413 ஏப்ரல் 2017Zesty Zapusசனவரி 2018
2617.1019 அக்டோபா் 2017Artful Aardvarkசூலை 2018
2718.0426 ஏப்ரல் 2018Bionic Beaverஏப்ரல் 2023
2818.1008 அக்டோபா் 2018Cosmic Cuttlefishஜூலை 2019
2919.0418 ஏப்ரல் 2019Disco Dingoஜனவரி 2020
3019.1017 அக்டோபர் 2019Eoan Ermineஜூலை 2020
3120.0423 ஏப்ரல் 2020Focal Fossaஏப்ரல் 2025
3221.0422 ஏப்ரல் 2021Hirsute Hippoஜனவரி 2022
3321.1014 அக்டோபா்2021Impish Indriஜூலை 2022
3422.0421 ஏப்ரல் 2022Jammy Jellyfishஏப்ரல் 2027

இவ்வழங்கலை கொண்டு அன்றாட கணினி பாவனைகள் அனைத்தையும் செய்யமுடியும். அத்தோடு வழங்கியாகவும் இதனை பயன்படுத்த முடியும். மேசைக்கணினிகளைப் போலவே மடிக்கணினிகளுக்கும் இது சிறப்பான ஆதரவை வழங்குகிறது.

மார்க் ஷட்டில்வர்த் (Mark Shuttleworth) என்பவருடைய கனோனிக்கல் நிறுவனம் (Canonical Ltd) எனும் நிறுவனம்[19] உபுண்டுவுக்கு அனுசரணை வழங்குகிறது.

தன்மைகள்

உபுண்டு - தமிழ் இடைமுகப்புடன்
  • நிறுவிக்கொண்டவுடனேயே பயன்படுத்தக்கூடியதாக, தேவையான சாதாரண மென்பொருட்கள் அனைத்தையும் இறுவட்டு கொண்டிருக்கிறது.
  • நிர்வாகி அனுமதி, sudo மூலம் பயனருக்கு வழங்கப்படுகிறது.
  • தமிழ் உள்ளிட ஏராளமான மொழிகளில் இடைமுகப்பை மாற்றிக்கொள்ளக்கூடிய வசதி.
  • தமிழ் உள்ளீட்டுக்கென GTKIM.
  • utf -8 குறிமுறைக்கான ஆதரவு.
  • பொதி முகாமைக்கு deb பொதி வடிவம் பயன்படுத்தப்படுகிறது.
  • synaptic மூலம் வேண்டிய மென்பொருட் பொதிகளை இணையத்திலிருந்து நேரடியாக நிறுவிக்கொள்ளக்கூடிய வசதி. (தளைகள் தன்னியக்கமாக கையாளப்படும்)
  • புதிய வெளியீடு வந்தவுடன் நிறுவப்பட்ட இயங்குதளத்தை இணையத்தினூடாக இலவசமாகவும், எளிமையாகவும், புதிய வெளியீட்டுக்கு மேம்படுத்திக்கொள்ளக்கூடிய வசதி.

மென்பொருள் பொதி முகாமைத்துவமும் அனுசரணையும்

உபுண்டு 12.04வில், குபுண்டுவை
நிறுவும் போது, நாம் தெரிவு செய்ய வேண்டிய
கேடிஇ திரைமேலாளர்கள்

உபுண்டுவின் மென்பொருள் பொதி முகாமைத்துவமும், மென்பொருட்களுக்கான அனுசரணையும் நான்கு பெரும் பிரிவுகளினூடு கையாளப்படுகிறது.அவையாவன,

  • Main (முதன்மை)
  • Restricted (கட்டுப்படுத்திய)
  • Universe (பிரபஞ்சம்)
  • Multiverse (அகிலம்)

Main

இதனுள் உபுண்டு அணியினரால் முழுமையான அனுசரணை வழங்கப்படத்தக்க மென்பொருட்கள் அடங்குகின்றன. இதனுள் அடங்கும் பொதிகள் முழுமையாக உபுண்டு உரிம கட்டுப்பாடுகளுக்கு ஒழுகுவனவாகும். இப்பொதிகளுக்கு காலத்துக்குக்காலம் பாதுகாப்பு பொருத்துக்களும், இற்றைப்படுத்தல்களும் வழங்கப்படுகின்றன. இப்பிரிவினுள் கணினிப்பயனர் ஒருவருக்கு தேவையான பொதுவான அனைத்து பொதிகளும் உள்ளடக்கப்படுகின்றன.

Restricted

இதனுள் அடங்கும் பொதிகளின் முக்கியத்துவம் கருதி உபுண்டு அணியினர் இவற்றுக்கும் அனுசரணை வழங்குகின்றனர். ஆனால் இப்பொதிகள் முறையான தளையறு மென்பொருட்கள் அல்ல. திறந்த அணைமூல உரிமத்தின் அடிப்படையில் வழங்கப்படாதவை கூட இதனுள் அடங்குகின்றன. பெரும்பாலும் இன்றியமையாத வன்பொருள் இயக்கிகள், கருவிற்குரிய பகுதிகள் என்பன இதனுள் அடங்குகின்றன. இத்தகைய மென்பொருட்களின் மூல நிரல் கிடைக்காதிருக்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளதால் உபுண்டு அணியினரால் முறையான அனுசரணையினை வழங்க முடியாத நிலை ஏற்படலாம்.

Universe

இப்பிரிவினுள் பெருமளவான மென்பொருட்கள் அடங்குகின்றன. அவற்றின் உரிமம் எதுவாகவும் இருக்கலாம். இப்பொதிகளுக்கு உபுண்டு அணியினரின் அனுசரணை கிடையாது.

Multiverse

இதனுள் அடங்கும் மென்பொருட்கள் பெரும்பாலும் பொது மக்கள் உரிமத்தின் அடிப்படையில் வழங்கப்படாதவையாக இருக்கும். இவற்றுக்கு உபுண்டு எந்தவிதமான அனுசரணையும் வழங்குவதில்லை.

மேகக் கணினி கூட்டம் (Cloud computing)

உபுண்டு சர்வர் பதிப்பு மேகக் கணினி கூட்டம் தன்னகத்தே கொண்டுள்ளது. (உபுண்டு 11.04 பதிப்பும் அதற்கு மேலும்)

உபுண்டு வழங்கலின் வடிவங்கள்

பல்வேறு தேவைகளையும் பயன்பாடுகளையும் கருத்திற்கொண்டு இவ்வழங்கல் வெவ்வேறு வடிவங்களில் வெளிவருகிறது.

இயக்கும் முறையை அடிப்படையாகக்கொண்ட வடிவங்கள்

  • நிறுவக்கூடிய வட்டு - இந்த இறுவட்டினை நீங்கள் கணினியில் நிறுவி பின் வழங்கலை (குனூ/லினக்ஸ் இயங்குதளத்தை) பயன்படுத்தலாம்.
  • நிகழ்வட்டு - இதனை கணினியில் நிறுவிக்கொள்ளாமல், வன்தட்டில் எந்த விதமான மாற்றங்களையும் உருவாக்காமல், இறுவட்டிலிருந்தே பயன்படுத்திப்பார்க்கலாம். இயங்குதளத்தை கணினியில் நிறுவமுடியாதவர்கள், இதனை பயன்படுத்தலாம்.

வன்பொருள் கட்டமைப்பை அடிப்படையாக கொண்ட வடிவங்கள்

கணினியில் பொருத்தப்பட்டுள்ள முறைவழியாக்கியின் (processor) கட்டமைப்பின் வகைகளை பொறுத்து இவை வெளிவருகின்றன.

  • x86 (PC) வடிவம் (32 இருமம்)
  • PPC (ஆப்பிள் கணினிகள்)
  • 64 bit (64பிட் கட்டமைப்புக்குரியது)

உபுண்டுவின் அளவுகள்

  • உபுண்டு 12.10 (ubuntu-12.10-desktop-i386) 789.9 MBகள்

சகோதர செயற்றிட்டங்கள்

  • கேயுபுண்டு (kubuntu) - இது கே டீ ஈ(KDE) பணிச்சூழலை கொண்டுள்ளது. கே டீ ஈ இனை விரும்பும் பயனாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டது.
  • எடியுபுண்டு (edubuntu) - இது கற்றல் தொடர்பான தேவைகளுக்காக தனிப்பயனாக்கப்பட்ட வடிவமாகும்.
  • சுபுண்டு (xubuntu) - இது எக்ஸ் எப் சீ ஈ (xfce) பணிச்சூழலை கொண்டுள்ளது. எக்ஸ் எப் சீ ஈ இனை விரும்பும் பயனாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டது.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை