2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

XVII ஆசிய விளையாட்டுக்கள்
XVII ஆசிய விளையாட்டுக்கள்
XVII ஆசிய விளையாட்டுக்கள்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2014 ஆம் ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ இலச்சினை
நடத்திய நகரம்இஞ்சியோன், தென் கொரியா
குறிக்கோள் வசனம்பன்மயம் இங்கே ஒளிர்கிறது
நிகழ்வுகள்439 விளையாட்டுகளில் 36
துவக்க விழாசெப்டம்பர் 19
நிறைவு விழாஅக்டோபர் 4
முதன்மை அரங்கம்இஞ்சியோன் ஆசியட் முதன்மை விளையாட்டரங்கம்
A map of South Korea with Incheon marked in the north-west of the country.
A map of South Korea with Incheon marked in the north-west of the country.
இஞ்சியோன்
தென் கொரியாவில் இஞ்சியோன் அமைவிடம்

2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், அலுவல்முறையாக XVII ஆசியட், செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4, 2014 வரை தென் கொரியாவில் இஞ்சியோனில் நடைபெற்றது.[1] ஆசியாவில் ஆசிய ஒலிம்பிக் மன்றத்தால் (OCA) கட்டுப்படுத்தப்படும் மிகப்பெரும் பல்விளையாட்டுப் போட்டியாகும். 36 விளையாட்டுகளில் 439 போட்டிகள் நடத்தப்பட்டன.

ஏப்ரல் 17, 2007 அன்று இந்தியாவின் தில்லிக்கு எதிராக இஞ்சியோன் இந்தப் போட்டிகளை ஏற்று நடத்தும் உரிமையை வென்றுள்ளது. சியோல் (1986), புசான் (2002) நகரங்களை அடுத்து ஆசிய விளையாட்டுக்களை நடத்தும் தென் கொரியாவின் மூன்றாவது நகரமாகும்.

அமைப்பு

ஏலம்

2014 ஆசிய விளையாட்டுக்கள் நடத்த ஏலம்
நகரம்நாடுவாக்குகள்
இங்கியோன் தென் கொரியா32
தில்லி இந்தியா13

இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்திட இரண்டு நகரங்கள் ஏலத்தில் பங்கேற்றன; இந்தியாவின் தில்லியும் தென் கொரியாவின் இங்கியோனும் தங்கள் முறையான ஏல மனுக்களை திசம்பர் 2, 2006இல் கத்தாரின் தோகாவில் அளித்தன.[2]

இந்த மனுக்கள் மீதான வாக்கெடுப்பு ஆசிய ஒலிம்பிக் குழுவின் பொதுக்குழுக் கூட்டத்தில் ஏப்ரல் 17, 2007 அன்று குவைத்தின் குவைத்து நகரத்தில் மரியோட்டு தங்குவிடுதியில் நடந்தது. வாக்கெடுப்பிற்கு சற்று முன்னதாக இந்த விளையாட்டுக்களில் இதுவரை பதக்கம் எதுவும் வெல்லாத நாடுகளுக்கு விளையாட்டு வசதிகளையும் பயிற்சிகளையும் கூட்டும் வகையில் $20 மில்லியன் நிதி தருவதாகவும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் கட்டணமின்றி பயணச்செலவையும் தங்கு வசதிகளையும் செய்து தருவதாகவும் சமர்ப்பித்தது.[3][4] யாருமறியா வண்ணம் அனைத்து 45 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பில் இங்கியோன் வென்றது.[5] வாக்கு எண்ணிக்கைகள் அலுவல்முறையாக அறிவிக்கப்படாவிடினும் இங்கியோன் 32–13 வாக்குகளில் வென்றதாக தகவல் வெளியானது.[6]

அப்போதைய இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர், தில்லி இந்த விளையாட்டுப் போட்டிகளை ஏற்று நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.[7] இவரது கருத்துக்களே தில்லி ஏலத்தில் தோற்றதற்கான முதன்மைக் காரணமாக இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் கூறினார்.[8] தில்லியின் மாசுநிலையும் போக்குவரத்து நெரிசலும் பிற காரணங்களாக அமைந்தன.[9] இங்கியோனின் கடைசிநேர நிதி உதவியும் இத்தோல்விக்கு காரணமாக அமைந்தது.[3]

நிகழிடங்கள்

மொத்தம் 49 போட்டிக்கான அரங்கங்களும் 48 பயிற்சிக்கான மையங்களும் இந்தப் போட்டிகளின்போது பயன்படுத்தப்படும். 49 போட்டிக்கான நிகழிடங்களில் 10 நிகழிடங்கள் இக்யாங்கி மாநிலத்தின் ஆறு நகரங்களில் நடக்க உள்ளன; மேலும் இரு நிகழிடங்கள் சுங்ஜூவிலும் சியோலிலும் உள்ளன. ஏனைய போட்டி நிகழிடங்கள் இங்கியோன் பெருநகரப் பகுதியின் எட்டு மாவட்டங்களிலும் ஓர் கவுன்ட்டியிலும் அமைந்துள்ளன. பத்து விளையாட்டரங்கங்கள் இந்தப் போட்டிகளுக்காகவே கட்டப்பட்டவை.[10] தவிரவும் 3,300 அலகுகளுடன் போட்டியாளர்களுக்கும் 9,560 அலகுகளுடன் ஊடகவியலாளர்களுக்கும் குடியிருப்புகள் கட்டப்பட்டன.[10]

முதன்மை விளையாட்டரங்கமான இஞ்சியோன் ஆசியட் முதன்மை விளையாட்டரங்கம் 61,074 இருக்கைகள் கொண்டது; இப்போட்டிகளுக்குப் பிறகு இதன் கொள்ளளவு 30,000 இருக்கைகளாகக் குறைக்கப்படும்.[11] அமெரிக்க டாலர்கள் 400 மில்லியன் கட்டப்பட்டுள்ள இந்த விளையாட்டரங்கை பாபுலசு நிறுவனம் வடிவமைத்துள்ளது.[12]

தீச்சுடர் தொடரோட்டம்

இந்தப் போட்டிகளுக்கான தீச்சுடர் வடிவமைப்பு அக்டோபர் 2013இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் வடிவமைப்பின் நோக்குரு, இஞ்சியோன் பெருநகரத்தின் அலுவல்முறை பறவையான கொக்கினை அடிப்படையாகக் கொண்டுள்ளது; நீலநிற உட்கலன் வான்வெளியையும் கடல்வெளியையும் குறிப்பிடுகிறது. மற்ற நான்கு வண்ணங்கள் (பச்சை, மஞ்சள், சிவப்பு, ஊதா) ஆசியாவின் ஐந்து வலயங்களைக் குறிப்பதாக உள்ளது.[13]

இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தீச்சுடர் 1954இல் இந்தப் போட்டிகள் துவங்கிய புது தில்லியின் தியான் சந்த் தேசிய விளையாட்டரங்கத்தில் ஆகத்து 9, 2014 அன்று ஏற்றப்பட்டது.[14]

தென் கொரியாவில் தீச்சுடர் ஏற்றும் விழா ஆகத்து 12, 2014இல் கங்க்ங்வா தீவிலுள்ள இஞ்சியோன் நகரத்தின் மனிசன் பகுதியில் நடந்தது.[15] ஆகத்து 13இல் துவங்கிய தீச்சுடர் தொடரோட்டம் துவக்க விழா வரை 5,700 கிமீ தொலைவிற்கு பயணித்து இந்நாட்டின் 70 நகரங்களையும் சென்றடையும்.[16]

பங்கேற்கும் நாடுகள்

இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து தேசிய ஒலிம்பிக் குழுக்களும் பட்டியலிடப்பட்டுள்ளன; ஒவ்வொரு நாட்டின் சார்பாகவும் பங்கேற்கும் அணியின் போட்டியாளர்களின் எண்ணிக்கை அடைப்புக் குறிக்குள் தரப்படும்.

போட்டிகளின் நிரல்

 து.வி துவக்க விழா ●  போட்டி நிகழ்வுகள் 1 இறுதிப் போட்டிகள் நி.வி நிறைவு விழா
செப்டம்பர்/அக்டோபர் 201414வது
ஞா
15வது
திங்
16வது
செவ்
17வது
புத
18வது
வியா
19வது
வெள்
20வது
சனி
21வது
ஞாயி
22வது
திங்
23வது
செவ்
24வது
புத
25வது
வியா
26வது
வெள்
27வது
சனி
28வது
ஞாயி
29வது
திங்
30வது
செவ்
1வது
புத
2வது
வியா
3வது
வெள்
4வது
சனி
தங்கப்
பதக்கங்கள்
நீர் விளையாட்டுக்கள் – பாய்தல்2222210
நீர் விளையாட்டுக்கள்– நீச்சல்66776638
நீர் விளையாட்டுக்கள் – ஒருங்கிணைந்த நீச்சல்1113
நீர் விளையாட்டுக்கள் – நீர்ப் பந்தாட்டம்112
வில்வித்தை448
தடகள விளையாட்டு58741111147
இறகுப்பந்தாட்டம்111227
அடிப்பந்தாட்டம் – அடிப்பந்தாட்டம்11
அடிப்பந்தாட்டம் – மென்பந்தாட்டம்11
கூடைப்பந்தாட்டம்112
பௌலிங்111124212
குத்துச்சண்டை31013
சிறு படகோட்டம் – நெளிவரி224
சிறு படகோட்டம் – விரைவு6612
துடுப்பாட்டம்112
மிதிவண்டி – BMX22
மிதிவண்டி – மலையேற்றம்22
மிதிவண்டி – சாலை2114
மிதிவண்டி – தடகளம்22111310
குதிரையேற்றம்112116
வாள்வீச்சு (விளையாட்டு)22222212
காற்பந்தாட்டம்112
குழிப்பந்தாட்டம்44
சீருடற்பயிற்சிகள் – கலைநயம்1125514
சீருடற்பயிற்சிகள் – சீரிசை112
சீருடற்பயிற்சிகள் – குதித்தெழு மெத்தை22
எறிபந்தாட்டம்112
வளைதடிப் பந்தாட்டம்112
யுடோ455216
சடுகுடு22
கராத்தே55313
தற்கால ஐந்திறப்போட்டி224
துடுப்பு படகோட்டம்7714
எழுவர் ரக்பி22
பாய்மரப் படகோட்டம்1414
செபாக் டக்ரோ2226
குறி பார்த்துச் சுடுதல்444441066244
சுவர்ப்பந்து224
மேசைப்பந்தாட்டம்2327
டைக்குவாண்டோ444416
டென்னிசு – டென்னிசு2327
டென்னிசு – மென் டென்னிசு21227
நெடுமுப்போட்டி213
கைப்பந்தாட்டம் – கடற்கரை112
கைப்பந்தாட்டம் – உள்ளரங்கம்112
பாரம் தூக்குதல்222222315
மற்போர்4444420
உஷு2222715
விழாக்கள்து.விநி.வி
மொத்த தங்கப் பதக்கங்கள்18242729383822243026354639367439
திரள் கூட்டல்18426998136174196220250276311357396432439
செப்டம்பர்/அக்டோபர் 201414வது
ஞாயி
15வது
திங்
16வது
செவ்
17வது
புத
18வது
வியா
19வது
வெள்
20வது
சனி
21வது
ஞாயி
22வது
திங்
23வது
செவ்
24வது
புத
25வது
வியா
26வது
வெள்
27வது
சனி
28வது
ஞாயி
29வது
திங்
30வது
செவ்
1வது
புத
2வது
வியா
3வது
வெள்
4வது
சனி
தங்கப்
பதக்கங்கள்

பதக்கப் பட்டியல்

151 தங்கம், 108 வெள்ளி, 83 வெண்கலம் என 342 பதக்கங்களுடன் சீனா முதலிடம் பெற்றது. 79 தங்கம், 71 வெள்ளி, 84 வெண்கலம் என 234 பதக்கங்களுடன் தென் கொரியா இரண்டாவது இடம் பிடித்தது. 47 தங்கம், 76 வெள்ளி, 77 வெண்கலம் என 200 பதக்கங்களுடன் ஜப்பான் மூன்றாம் இடத்தைக் கைப்பற்றியது. 11 தங்கம், 10 வெள்ளி மற்றும் 36 வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களுடன் இந்தியா 8 வது இடத்தை பெற்றது.


   *   நடத்திய நாடு (தென் கொரியா)

நிலைநாடுதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
1சீனா15110883342
2தென் கொரியா}797184234
3ஜப்பான்477677200
4கசக்ஸ்தான்28233384
5ஈரான்21181857
6தாய்லாந்து1272847
7வடகொரியா11111436
8இந்தியா11103657
9சீன தாய்பெய்10182351
10கத்தார்100414
மொத்தம்4394395761454

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை