எஸ்பெராண்டோ

மொழி

எஸ்பராண்டோ ( )[2] உலகில் அதிகம் பேசப்படும் கட்டமைக்கப்பட்ட மொழியாகும்.[3] எஸ்பெராண்டோ என்பதன் பொருள் நம்பிக்கையுடனான என்பதாகும். 1887இல் எல். எல். சாமன்ஹோஃப் எழுதிய 'உனுவா லிப்ரோ' (Unua Libro)[4] எனும் நூலில் 'எஸ்பெராண்டோ' பற்றிய தகவல்கள் முதன்முதலாக வெளிவந்தன.

Esperanto
எஸ்பெராண்டோ
எஸ்பெராண்டோ
உருவாக்கப்பட்டதுடாக்டர் லுடோவிக் லாசரஸ் ஜாமன்ஹாப்
Usersதெரியவில்லை (தாய்மொழியாக: 200 - 2000 (1996, மதிப்பிடு.);[1]
சரளமாக பேசும் மக்கள்: 100,000 - 2 மில்லியன் காட்டடப்பட்டது: 1887)
நோக்கம்
constructed language
  • பன்னாட்டு உருவாக்கப்பட்ட மொழி
    • Esperanto
      எஸ்பெராண்டோ
மூலம்ஜெர்மானிய மொழிகள் மற்றும் ரோமானிய மொழிகளிலிருந்து சொல்லகராதி; சிலாவிய மொழிகளிலிருந்து உச்சரிப்பு
மொழிக் குறியீடுகள்
ISO 639-1eo
ISO 639-2epo
ISO 639-3epo

கற்றலுக்கு எளியதாக மொழி இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் சாமன்ஹோஃப் இம்மொழியை எஸ்பெராண்டோ எனும் புனைவுப்பெயரில் தொடங்கியுள்ளார். இன்று உலகில் கிட்டத்தட்ட 1,000 மக்கள் இம்மொழியை தாய்மொழியாகப் பேசுகின்றனர். மதிப்பீட்டின் படி ஒரு இலட்சம் முதல், இரண்டு மில்லியன் மக்களால் இம்மொழியை சரளமாக பேசமுடியும். தற்போது 120 நாடுகளில் இம்மொழி பேசப்படுகின்றது.[5] ஐரோப்பா, கிழக்கு ஆசியா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இதன் பயன்பாடு மிகுந்து உள்ளது.[6] ஆனால் உலகில் எங்கேயும் எஸ்பெராண்டோ ஆட்சி மொழியாக இல்லை.

வரலாறு

1887 இல் டாக்டர் லுடோவிக் லாசரஸ் ஜாமன்ஹாப் (Ludovic Lazarus Zamenhof), எஸ்பராண்டோ என்ற ஒரு புது மொழியை உருவாக்கினார். இம்மொழிக்கான இலக்கணம் அதே ஆண்டில் 'மருத்துவர் எஸ்பராண்டோ' என்ற புனைப் பெயரில் அவரால் வெளியிடப்பட்டது. இவ்வார்த்தைக்கு 'நம்பும் மருத்துவர்' என்று பொருள். நாடுகளுக்கிடையே மொழித் தடைகளை போக்கி உலகப் பொது மொழியாக இது உருவாக வேண்டுமென அவர் விரும்பினார். தொடக்கத்திலேயே பல நாடுகள் கடுமையாக இதை எதிர்த்தன. உருசியாவில் தீவிர எதிர்ப்பு இருந்தது. 1954ஆம் ஆண்டு வரை இம்மொழிக்கு அங்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

எசுபெராண்டோ மொழிக்கான முதல் உலக மாநாடு பிரான்சில் 1905இல் நடைபெற்றது. அது முதல் இந்த மாநாடு, உலகப்போர் நடந்த ஆண்டுகள் விலக்கலாக, ஒவ்வொரு ஆண்டும் பல நாடுகளில் நடத்தப்பட்டு வருகின்றது. எந்த நாடும் இதனை அலுவலக முறையாக ஏற்காதபோதும் பிரான்சிய அறிவியல் அகாதமி 1921இல் பரிந்துரைத்துள்ளது. 1954ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. 1985இல் பன்னாட்டு அரசு சார்பற்ற அமைப்புக்கள் எசுபெராண்டோவை பயன்படுத்த பரிந்துரைத்துள்ளது. 'ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா அமைப்பு' (UNWTO) 1980 மணிலா அறிக்கையில் சுற்றுலாத்துறை எசுபெராண்டோவை பயன்படுத்த கோரியது. 2007இல் 'மொழிகளுக்கான பொது ஐரோப்பிய ஆயக் கட்டமைப்பின்' 32வது மொழியாக ஏற்கப்பட்டுள்ளது.[7]

சான் மரினோவிலுள்ள (San Marino) 'பன்னாட்டு அறிவியல் அகாதமியில்' தற்போது பயிற்று மொழியாக எசுபெராண்டோ விளங்குகின்றது. எசுபெராண்டோவை கற்பதனால் மொழிகளை கற்க அடிப்படை பொதுவாக மேம்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சில துவக்கப்பள்ளிகளில் அயல்நாட்டு மொழிகளை கற்பிக்க ஆயத்த ஏற்பாடாக எசுபெராண்டோ கற்பிக்கப்படுகின்றது.[8]

இணையத்தில் எசுபெராண்டோ குறிப்பிடத்தக்க அளவில் பயன்படுத்தப்படுகின்றது. எசுபெராண்டோ கற்பிக்கும் மிகவும் பிரபலமான வலைத்தளமான லெர்னு! (lernu!) 2013இல் 150,000 பதிகை செய்த பயனர்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் ஏறத்தாழ 150,000 முதல் 200,000 வரையிலான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.[9] எசுபிராண்டோ விக்கிப்பீடியாவில் ஏறத்தாழ 3,52,000 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. கட்டுரைகளின் எண்ணிக்கைப்படி இம்மொழி 32வது இடத்தில் உள்ளது.[10] செயற்கையாக கட்டமைக்கப்பட்ட மொழியொன்றில் மிக அதிக அளவில் விக்கிப்பீடியாவில் விரவியுள்ள மொழியாகவும் விளங்குகின்றது.[11] 2012ஆம் ஆண்டு பெப்ரவரி 22ல் கூகுள் மொழிபெயர்ப்பு எசுபெராண்டோவை தனது 64வது மொழியாக ஏற்றுக்கொண்டுள்ளது.[12] 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டுவோலிங்கோ பங்களிப்பாளர்கள் எசுபெராண்டோ மொழியைக் கற்பதற்கான ஓர் பாடதிட்டத்தை உருவாக்கத் துவங்கியுள்ளனர். டுவோலிங்கோவில் கட்டமைக்கப்பட்ட மொழியொன்றுக்கு பாடத்திட்டம் உருவாக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்த பாடத்திட்டம் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது.[13]

தற்போது, எசுபெராண்டோ பயனாளர்கள் பலரும் இதனை உலகில் வளர்ந்து வரும் ஆங்கிலப் பயன்பாட்டிற்கு மாற்றாகவோ கூடுதலாகவோ கருதுகின்றனர். ஆங்கிலத்தை விட எளிய மொழியாகவும் இதனைக் கருதுகின்றனர்.[14]பாலோ கொய்லோ எழுதிய"ரசவாதி (the alchemist) நாவலிலும் இம்மொழி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது (ரசவாதி-பாலோ கொய்லோ- மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்-This edition first published in 2018)

அகரவரிசை

எழுத்துஉச்சரிப்பு
a
bbee என்ற ஆங்கில வார்த்தையில் உள்ளது போன்று (குறியார்வம் அற்றது)
cத்ஸ்
ĉச்
dDenmark என்ற ஆங்கில வார்த்தையில் உள்ளது போன்று
e
ffine என்ற ஆங்கில வார்த்தையில் உள்ளது போன்று
gago என்ற ஆங்கில வார்த்தையில் உள்ளது போன்று
ĝஜ்
hஹ்
ĥj எசுபானிய மொழியில் உள்ளது போன்று
i
jய்
ĵmeasure என்ற ஆங்கில வார்த்தையில் உள்ளது போன்று
kக்
lல்
mம்
nந்
o
pப்
rர்
sஸ்
ŝshe என்ற ஆங்கில வார்த்தையில் உள்ளது போன்று
tத்
u
ŭauto என்ற ஆங்கில வார்த்தையில் உள்ளது போன்று
vவ்
zzero என்ற ஆங்கில வார்த்தையில் உள்ளது போன்று

சொற்தொகுதி

இம்மொழிக்கான சொற்தொகுதி சில நூற்றுக்கணக்கான வேர்ச்சொற்களைக் கொண்டது. இவற்றைக் கொண்டு பல்லாயிரக்கணக்கான சொற்களை உருவாக்கிவிடலாம். எனினும், இதன் பெரும்பாலான சொற்களும் அவற்றின் வேர்ச்சொற்களும் ஐரோப்பிய மொழிகளைச் சார்ந்தவை.

கல்வி

இம்மொழியினைக் கற்கும் பெரும்பான்மையினர் இணைய வழியாகவும், உதவிப் புத்தகங்களின் வழியாகவும் கற்றுவருகின்றனர். இம்மொழி சில நாடுகளில் பள்ளிகளிலும் கற்பிக்கப்பட்டு வருகிறது. இம்மொழி, பல ஐரோப்பிய மொழிகளைக் காட்டிலும் கற்பதற்கு எளிதானதாக உள்ளது எனக் கூறப்படுகிறது.

பிரெஞ்சு மாணவர்கள் வேற்று மொழிப் பாடங்களைக் கற்க எடுத்துக் கொண்ட நேரத்தைக் கணக்கிட்டு இம்முடிவு உறுதிப்படுத்தப்பட்டது.

பிரெஞ்சு மாணவர்கள் வேற்று மொழிப் பாடங்களைக் கற்க எடுத்துக் கொண்ட நேரப் பட்டியல்:[சான்று தேவை]

  1. இடாய்ச்சு மொழி கற்க 2000 மணி நேரம்.
  2. ஆங்கில மொழி கற்க 1500 மணி நேரம்.
  3. இத்தாலிய மொழி கற்க 1000 மணி நேரம்.
  4. எசுப்பெராண்டோ மொழி கற்க 150 மணி நேரம்.
This article includes inline links to audio files. If you have trouble playing the files, see Wikipedia Media help.

எளிய சொற்றொடர்கள்

பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடியின்படி ஒலிக்குறிப்புகளுடன், சில பயனுள்ள எஸ்பராண்டோ சொற்கள் மற்றும் சொற்றொடர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன:

தமிழ்எஸ்பராண்டோபன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி ஒலிக்குறிப்பு
வணக்கம் / வாழ்த்து[sa.ˈlu.ton]
ஆமாம் / சரி[ˈjes]
இல்லை / கிடையாது[ˈne]
காலை வணக்கம்[ˈbo.nan ma.ˈte.non]
மாலை வணக்கம்[ˈbo.nan ves.ˈpe.ron]
இனிய இரவு வணக்கம்[ˈbo.nan ˈnok.ton]
சென்றுவருகிறேன்[ˈdʒis (la) re.ˈvi.do]
உங்கள் பெயர் என்ன?[ˈki.o ˌes.tas ˌvi.a ˈno.mo]
என் பெயர் மார்கோ (Marco).[ˌmi.a ˈno.mo ˌes.tas ˈmar.ko]
எப்படி இருக்கிறீர்கள்?[ˈki.el vi ˈfar.tas]
நான் நலமாக இருக்கிறேன்.[mi ˈfar.tas ˈbo.ne]
நீங்கள் எஸ்பெராண்டோவில் பேசுகிறீர்களா?[ˈtʃu vi pa.ˈro.las ˌes.pe.ˈran.te]
நான் உன்னை புரிந்து கொள்ள முடியவில்லை.[mi ˌne kom.ˈpre.nas ˌvin]
எல்லாம் சரி.[ˈbo.ne]
சரி.[ˈbo.ne]
உங்களுக்கு நன்றி.[ˈdan.kon]
நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள்.[ˌne.dan.ˈkin.de]
தயவு செய்து / தங்கள் விருப்பம் போல்.[bon.ˈvo.lu]
என்னை மன்னித்துவிடு / என்னை மன்னிக்கவும்[par.ˈdo.nu ˈmin]
உங்களுக்கு ஆசீர்வாதங்கள்![ˈsa.non]
வாழ்த்துக்கள்[ɡra.ˈtu.lon]
நான் உன்னை காதலிக்கிறேன்[mi ˈa.mas ˌvin]
தயவுசெய்து ஒரு பொங்கு தீர்த்தம் கொடுக்கவும்[ˈu.nu bi.ˈe.ron, mi ˈpe.tas]
கழிப்பறை எங்கே உள்ளது?[ˈki.e ˈes.tas ˈla ˌne.tse.ˈse.jo]
அது என்ன?[ˈki.o ˌes.tas ˈti.o]
அது ஒரு நாய்[ˈti.o ˌes.tas ˈhun.do]
நாம் நேசிப்போம்![ni ˈa.mos]
அமைதி / சமாதானம்[ˈpa.tson]
நான் எஸ்பெராண்டோவில் தொடக்க நிலையில் இருக்கிறேன்.[mi ˈes.tas ˌko.men.ˈtsan.to de ˌes.pe.ˈran.to]

எஸ்பராண்டோ சமுதாயம் 

எஸ்பெராண்டோ சமூகத்தவர்களுக்கு விருந்தோம்பல் சேவை செய்வதற்கான புரவலர்கள் இருப்பிட வரைபடம். பாஸ்போரா செர்வோ (Paspora Servo) பண்பொத்த கட்டுமானவியல் இணைய உலவி - 2015

எஸ்பராண்டோ உலகில் மிகவும் பரவலாக பேசப்படும் மொழியாக உள்ளது.[15] ஐரோப்பா, கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளில் நகர் மற்றும் நகர் சார்ந்த பகுதிகளிலிலும், குறிப்பாக எஸ்பராண்டோவுக்காக சிறப்பு மன்றங்களும், சங்கங்களும், கூடலகங்களும், செயல்பாட்டில் உள்ள இடங்களிலும், இம்மொழி பேசுபவர்கள் மிக அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.[16]

எஸ்பராண்டோ பரவியுள்ள வடக்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகள்:

பெருவாணிபம் மற்றும் வியாபாரம்

எஸ்பராண்டோ வணிக குழுக்கள் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளன. பிரஞ்சு பெருவாணிப கழகக் கூடம் 1920களில் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் அடிப்படையில், 1921ஆம் ஆண்டு 'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் எஸ்பராண்டோ மொழி சிறந்த வணிக மொழி என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது.[18]

இறைநம்பிக்கை

எஸ்பராண்டோ மக்களிடையே பல மதங்களும், இறைநம்பிக்கைகளும், வேத நெறிகளும் பரவி முக்கியப் பங்கேற்றுள்ளன. அவற்றுள், ஜப்பானைச் சார்ந்த ஓஹியோவின் ஓமோட்டோவும் (Oomoto), ஈரான் நாட்டின் பஹாய் (Bahá'í) நம்பிக்கையும் பலராலும் ஊக்கமளிக்கப்பட்டு வருகின்றன. இது போன்று சில ஆவிக்குரிய இயக்கங்களும் செயல்பட்டு வருகின்றன.

ஓமோட்டோ

ஓமோட்டோ மதம் அதனைப் பின்பற்றுபவர்களிடையே எஸ்பரான்டோ மொழிப் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. மேலும் ஸமன்ஹாஃபை (Zamenhof) உன்னத தெய்வத்தன்மையுள்ள சக்திகளில் ஒன்றாக ஏற்றுக்கொள்கிறது.[19]

 பஹாய் நம்பிக்கை

பஹாய் நம்பிக்கை ஒரு துணை சர்வதேச மொழிப் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. எஸ்பரான்டோ மொழி தன் செயல்பாட்டில் பெருமளவுத் திறன் பெற்றிருப்பினும், அது எதிர்காலத்தின் மொழியாக இருக்காது என்று பஹாய் நம்பிக்கையாளர்கள் கருதுகின்றனர். எனவே இம்மொழி மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை.[20] எஸ்பரான்டோவின் சிறந்த கருத்தை அப்துல் பாஹா (Abdu'l-Bahá) பாராட்டினார். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை எஸ்பரான்டோ மொழியினருக்கும், பஹாய்களுக்கும் இடையில் நல்லுறவு இருந்தது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

  1. எஸ்பராண்டோ (Esperanto a, b, c) பரணிடப்பட்டது 2010-07-03 at the வந்தவழி இயந்திரம்
  2. 'Ĉu vi scias pri esperanto?' : ஓர் மொழித்தேடல்! பரணிடப்பட்டது 2012-04-02 at the வந்தவழி இயந்திரம்
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=எஸ்பெராண்டோ&oldid=3928269" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை