2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் (2014 Winter Olympics) அல்லது 22வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (22nd Winter Olympics) உருசியாவின் சோச்சி நகரில் 2014 பெப்ரவரி 7 முதல் பெப்ரவரி 23 வரை நடைபெற்ற பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இந்தப் போட்டிகளில் பல்வேறு பனி விளையாட்டுக்கள் இடம்பெற்றன. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அயன அயல் மண்டல நகரமொன்றில் நடப்பது இதுவே முதல்முறையாகும். சூலை 4, 2007இல் குவாத்தமாலாவின் குவாத்தமாலா நகரத்தில் கூடிய 119வது பன்னாட்டு ஒலிம்பிக் குழு மன்றத்தில் இங்கு நடத்த முடிவெடுக்கப்பட்டது.[2] 1980இல் மாஸ்கோ நகரில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்தியுள்ள உருசியா குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

2013 இல் வெளியிடப்பட்ட 100 உருசிய ரூபிள் வங்கித்தாள்

பங்கேற்கும் நாடுகள்

வான்கூவரில் நடைபெற்ற கடைசி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் 82 நாடுகள் பங்கேற்றிருந்தன; இதனை காட்டிலும் கூடுதலாக 88 நாடுகள் இங்கு விளையாடத் தகுதிபெற்று சாதனை படைத்துள்ளன.[3] ஏழு நாடுகள், டொமினிக்கா, மால்ட்டா, பரகுவை, கிழக்குத் திமோர், டோகோ, தொங்கா, மற்றும் சிம்பாப்வே, குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன்முறையாக விளையாடுகின்றன.[4]

சோச்சியில் 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் நாடுகள்.
பங்கேற்கும் நாடுகள்
2010ல் பங்கேற்று 2014ல் பங்கேற்காத நாடுகள்2010ல் பங்கேற்காமல் 2014ல் பங்கேற்கும் நாடுகள்
 COL
 ETH
 GHA
 PRK
 SEN
 RSA
 IVB
 DMA
 LUX
 MLT
 PAR
 PHI
 THA
 TLS
 TOG
 TGA
 VEN
 ISV
 ZIM

இந்தியப் பங்கேற்பு

இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தல் நடைமுறைகள் குறித்த பிணக்கினால் திசம்பர் 2012இல் இந்தியா பன்னாட்டு ஒலிம்பிக் குழுவால் இடைநீக்கம் செய்யப்பட்டது. இந்தக் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியபோதும் இத்தேர்தல்கள் நடைபெறாத நிலை இருந்தது. எனவே இந்தியாவின் சார்பாக இப்போட்டிகளில் பங்கேற்கும் மூவர் ஒலிம்பிக் கொடியின் கீழ் பங்கேற்றனர். இவர்களது சாதனைகளும் சுயேச்சை ஒலிம்பிக் பங்கேற்பாளர்கள் என பட்டியலிடப்படும் என்பதாக அறிவிக்கப்பட்டது.[5][6] இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் பன்னாட்டு ஒலிம்பிக் குழு நடைமுறைப்படி தேர்தல் நடந்தது. எனவே சோச்சியில் கூடிய பன்னாட்டு ஒலிம்பிக் குழு, இந்திய ஒலிம்பிக் சங்கம் மீதான தடையை நீக்கியது. இதனால் இந்திய வீரர்கள் இனி இந்தியக் கொடியை பயன்படுத்துவர். அவர்களது சாதனைகள் இந்தியாவின் கீழ் பட்டியலிடப்படும்.[7]

ஒலிம்பிக் நடத்த போட்டியிட்ட நகரங்கள்

2014 ஒலிம்பிக்போட்டியை நடத்த போட்டியிட்ட நகரங்களின் தேர்தல் முடிவுகள்
நகரம்நாடு (தே.ஒ.கு)சுற்று 1சுற்று 2
சோச்சி  RUS3451
பியாங்சாங்  South Korea3647
சால்சுபர்க்  Austria25

விளையாட்டுக்கள்

சோச்சி போட்டியின் மூன்று முகடிகளை கொண்டுள்ள உருசிய அஞ்சல் தலை.

  • லூஜ்
  • நோர்டிக் கம்பைன்டு
  • குறுந் தடகள வேகப் பனிச்சறுக்கல்
  • எலும்புக்கூடு இசுலெட்
  • வேகப் பனிச்சறுக்கல்

தொலைக்காட்சி ஒளிபரப்பு

தெற்காசியாவில் 7 நாடுகளில் நேரடி ஒளிபரப்பினை செய்வதற்குரிய உரிமையினை ஸ்டார் இண்டியா தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது.[8]

  • இந்தியாவில் STAR Sports 2, STAR Sports 4 எனும் தொலைக்காட்சி அலைவரிசைகளில் நேரடி ஒளிபரப்பினை காண இயலும்.

பதக்கப் பட்டியல்

இறுதி பதக்கப் பட்டியல்:[9]

நிலைநாடுதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
1  RUS*1311933
2  NOR1151026
3  CAN1010525
4  USA971228
5  NED87924
6  GER86519
7  SUI63211
8  BLR5016
9  AUT48517
10  FRA44715
11  POL4116
12  CHN3429
13  KOR3328
14  SWE27615
15  CZE2428
16  SLO2248
17  JPN1438
18  FIN1315
19  GBR1124
20  UKR1012
21  SVK1001
22  ITA0268
23  LAT0224
24  AUS0213
25  CRO0101
26  KAZ0011
மொத்தம்999799295

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை