நாதியா முராது

நாதியா முராது (Nadia Murad) வடக்கு ஈராக்கில் 1993 ஆம் ஆண்டு பிறந்தார். இசுலாமிய அரசால் யசீதி இன மக்கள் படும் கொடுமைகள் குறித்து வெளியுலகிற்கு தெளிவுபடுத்தி அம்மக்களுக்கான மனித உரிமை ஆர்வலராகத்[1][2] திகழ்கிறார். மேலும் இவர் ஐக்கிய நாடுகள் அவையால் பாலியல் அடிமைகளுக்கான நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டதுடன், அமைதிக்கான நோபல் பரிசுக்காக [3] 2016 ஆண்டுக்கான முக்கிய நபராகப் பரிந்துரைக்கப்பட்டார். 2018 இல் இவருக்கும் டெனிசு முக்வேகிக்கும் "பாலியல் வன்முறைகளை போர் மற்றும் ஆயுத மோதலின் ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கு எதிரான அவர்களின் முயற்சிகளுக்காக" அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[4]

நாதியா முராது
Nadia Murad
2018 இல் நாதியா முராது
பிறப்புநாதியா முராது பசீ தாகா
1993 (அகவை 30–31)
கோயோ, ஈராக்கு
பணிமனித உரிமை ஆர்வலர்
செயற்பாட்டுக்
காலம்
2014 முதல்
விருதுகள்அமைதிக்கான நோபல் பரிசு (2018)

சிறைப்பட்ட நிலை

2014 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் ஈராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள கோச்சோ கிராமத்தில் புகுந்த இசுலாமிய அரசு தீவிரவாதிகள் இவரின் இனத்தவர்கள் 600 பேரைக் கொன்றுவிட்டு இவரோடு பல இளம் பெண்களைப் பாலியல் அடிமைகளாகப் பிடித்துச் சென்றனர்.[5]அங்கு இவரோடு சேர்த்து 6,700 யாசிதி இன பெண்கள் சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டனர். இவர்களிடமிருந்து 2014 ஆம் ஆண்டு தப்பித்து மோசுல் நகருக்கு வந்து சேர்ந்தார்.[6] அங்கிருந்து கத்தாரின் தலைநகர் தோகா வழியாக ஜெர்மனி நாட்டின் இசுடுட்கார்ட் என்ற நகருக்கு சென்று தஞ்சம் அடைந்தார்.

தொழில்

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒரு மாநிலமான டெக்சஸ்சில் அமைந்துள்ள யாதிகளுக்கான உலகளவிலான அமைப்பு அனைத்து உதவிகளையும் செய்கிறது.[5][7]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நாதியா_முராது&oldid=3816088" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை