பிரேசில் தேசிய காற்பந்து அணி

பிரேசில் தேசிய கால்பந்து அணி (போர்த்துக்கேய மொழி: Seleção Brasileira) பன்னாட்டு ஆடவர் காற்பந்தாட்டப் போட்டிகளில் பிரேசில் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை பிரேசிலில் கால்பந்தாட்டத்தை கட்டுப்படுத்தும் பிரேசிலிய கால்பந்து கூட்டமைப்பு (CBF) நிர்வகிக்கிறது. பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பில் 1923 முதல் அங்கத்தினராக உள்ளது; தென்னமெரிக்க கால்பந்து கூட்டமைப்பில் 1916 முதல் அங்கத்தினராக உள்ளது.

பிரேசில்
Shirt badge/Association crest
அடைபெயர்Canarinho (சிறிய கேனரி)
A Seleção (தேர்ந்தவர்)
Verde-Amarela (பச்சையும் மஞ்சளும்)
Pentacampeões (ஐமுறை வாகையாளர்கள்)
கூட்டமைப்புConfederação Brasileira de Futebol (CBF)
கண்ட கூட்டமைப்புதென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு (தென் அமெரிக்கா)
தலைமைப் பயிற்சியாளர்லூயி பெலிப் இசுகோலரி
Most capsகாஃபு (142)[1][2]
அதிகபட்ச கோல் அடித்தவர்பெலே (77)[2]
பீஃபா குறியீடுBRA
பீஃபா தரவரிசை10[3] 3
அதிகபட்ச பிஃபா தரவரிசை1 (ஏழு காலங்களில் 151 முறை [4])
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை22 (சூன் 2013)
எலோ தரவரிசை1[5] 1
அதிகபட்ச எலோ1 (38 முறை 7,708 நாட்கள்[6])
குறைந்தபட்ச எலோ18 (நவம்பர் 2001)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 அர்கெந்தீனா 3–0 பிரேசில் பிரேசில்
(புவெனஸ் ஐரிஸ், அர்கெந்தீனா; செப்டம்பர் 20, 1914)
பெரும் வெற்றி
 பிரேசில் 14–0 நிக்காரகுவா நிக்கராகுவா
(இசுடேடியோ அசுடெக்கா, மெக்சிக்கோ; அக்டோபர் 17, 1975)
பெரும் தோல்வி
 செருமனி 7–1 பிரேசில் 
( பெலோ அரிசாஞ்ச் பிரேசில்; சூலை 8, 2014)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்20 (முதற்தடவையாக 1930 இல்)
சிறந்த முடிவுவாகையாளர்கள் : 1958, 1962,
1970, 1994 மற்றும் 2002
கோப்பா அமெரிக்கா
பங்கேற்புகள்33 (முதற்தடவையாக 1916 இல்)
சிறந்த முடிவுவாகையாளர்கள் : 1919, 1922,
1949, 1989, 1997, 1999,
2004, 2007
ரோக்கா கோப்பை
பங்கேற்புகள்13 (முதற்தடவையாக 1914 இல்)
சிறந்த முடிவுவாகையாளர்கள் : 1914, 1922, 1945,1957,1960, 1963,1971,[7] 1976, 2011 மற்றும் 2012
கான்காகேப் தங்கக்கோப்பை
Appearances3 (முதற்தடவையாக 1996 இல்)
Best resultஇரண்டாமிடம் : 1996, 2003
கூட்டமைப்புகள் கோப்பை
பங்கேற்புகள்7 (முதற்தடவையாக 1997 இல்)
சிறந்த முடிவுவாகையாளர்கள் : 1997, 2005, 2009 and 2013
பதக்க சாதனைகள்
உலகக்கோப்பை
தங்கப் பதக்கம் – முதலிடம் 1958 சுவீடன் அணி]]
தங்கப் பதக்கம் – முதலிடம் 1962 சிலி அணி]]
தங்கப் பதக்கம் – முதலிடம் 1970 மெக்சிக்கோ அணி]]
தங்கப் பதக்கம் – முதலிடம் 1994 ஐக்கிய அமெரிக்கா அணி]]
தங்கப் பதக்கம் – முதலிடம் 2002 தென் கொரியா மற்றும் சப்பான் அணி]]
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1950 பிரேசில் அணி]]
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1998 பிரான்சு அணி]]
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1938 பிரான்சு அணி]]
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1978 அர்கெந்தீனா அணி]]
பதக்க சாதனைகள்
கூட்டமைப்புக்களின் கோப்பை
தங்கப் பதக்கம் – முதலிடம் 1997 சவூதி அரேபியா அணி]]
தங்கப் பதக்கம் – முதலிடம் 2005 செருமனி அணி]]
தங்கப் பதக்கம் – முதலிடம் 2009 தென் ஆபிரிக்கா அணி]]
தங்கப் பதக்கம் – முதலிடம் 2013 பிரேசில் அணி]]
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1999 மெக்சிக்கோ அணி]]

உலகக்கோப்பை காற்பந்து வரலாற்றில் பிரேசில் ஐந்து முறை (1958, 1962, 1970, 1994, 2002) கோப்பையை வென்று மிகவும் வெற்றிகரமான கால்பந்து அணியாக விளங்குகிறது. பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிகளிலும் நான்கு முறை வெற்றி கண்டு சாதனை படைத்துள்ளனர். 1997, 2005, 2009 மற்றும் 2013 ஆண்டுகளில் கோப்பையை வென்று நடப்பு வாகையாளர்களாக உள்ளனர். இதுவரை நடந்த அனைத்து உலகக்கோப்பை போட்டிகளிலும் பங்கேற்ற ஒரே தேசிய அணியாக பிரேசில் சாதனை படைத்துள்ளது. [9]

பிரேசில் தேசிய கால்பந்து அணி உலக கால்பந்து எலோ தர வரிசையில் உலகின் முதலிடத்தைப் பெற்றுள்ளது.[5][10][11][12][13][14] பிபா தர வரிசையில் 11ஆம் இடத்தில் உள்ளது.

நான்கு வெவ்வேறு கண்டங்களில் நடந்த உலகக்கோப்பைகளில் வென்ற பெருமையும் பிரேசிலுக்கு உண்டு: ஐரோப்பாவில் சுவீடனில் 1958இலும் தென் அமெரிக்காவில் சிலியில் 1962இலும் வட அமெரிக்காவில் (இருமுறை) மெக்சிக்கோவில் 1970இலும் ஐக்கிய அமெரிக்காவில் 1994இலும் ஆசியாவில் கொரியா/சப்பானில் 2002இலும் கோப்பையை வென்றுள்ளது. தொடர்ந்த அலுவல்முறையான 35 ஆட்டங்களில் தோல்வியடையாத சாதனையை எசுப்பானியாவுடன் பகிர்கின்றனர்.[15][16][17] கால்பந்து இரசிகர்களிடையே பரவலான மேற்கோளுரை: "Os ingleses o inventaram, os brasileiros o aperfeiçoaram" ("ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்தனர், பிரேசிலியர் கச்சிதப் படுத்தினர்").[18]

பிரேசில் 2014 உலகக்கோப்பையை நடத்தும் நாடாக இருப்பதால் தானியக்கமாக போட்டியில் விளையாடத் தகுதி பெறுகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை