1996 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

1996 ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் என்பது அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் 1996 சூலை 19 முதல் ஆகத்து 4 வரை நடந்த கோடைகால ஒலிம்பிக்கை குறிக்கும். அதிகாரபூர்வமாக இப்போட்டி XXVI ஒலிம்பிக் என அழைக்கப்படுகிறது, ஒலிம்பிக்கிற்கு இது நூறாவது ஆண்டு ஆகும். ஒலிம்பிக் ஆணையகத்தில் பதிவு செய்த அனைத்து நாடுகளும் இதில் பங்கேற்றன.197 நாடுகளைச்சேர்ந்த 10,318 வீரர்கள் இதில் பங்கேற்றனர். 1924ம் ஆண்டிலிருந்து கோடைகால ஒலிம்பிக்கும் குளிர்கால ஒலிம்பிக்கும் ஒரே ஆண்டில் நடைபெற்றன, 1986ம் ஆண்டு ஒலிம்பிக் ஆணையகம் இரண்டையையும் 1994ம் ஆண்டிலிருந்து இரு ஆண்டுகள் இடைவெளியில் வெவ்வேறு ஆண்டுகளில் (இரட்டை வருடங்கள்) நடத்த முடிவுசெய்தது. 1996 கோடைகால ஒலிம்பிக் அவ்வாண்டில் குளிர்கால ஒலிம்பிக் இல்லாமல் நடைபெற்ற முதல் கோடைகால ஒலிம்பிக்காகும். குளிர்கால ஒலிம்பிக் 1992 க்கு பிறகு நான்கு ஆண்டுகளுக்கு பதிலாக இரு ஆண்டுகள் இடைவெளியில் 1994ம் ஆண்டு நோர்வே நாட்டில் நடைபெற்றது. அதன் பின் மீண்டும் நான்கு ஆண்டுகள் இடைவெளியில் நடைபெற்றது. அட்லாண்டா நகரில் நடைபெறும் ஒலிம்பிக் அமெரிக்காவில் நடைபெறும் ஐந்தாவது ஒலிம்பிக்கும் மூன்றாவது கோடைகால ஒலிம்பிக்கும் ஆகும்.

அரங்கத்தில் ஒலிம்பிக் கொடி

போட்டி நடத்தும் நாடு தெரிவு

செப்டம்பர் 18, 1990ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் ஆணையகத்தின் 96வது அமர்வில் அட்லாண்டா 1996ம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக்கை நடத்த தேர்ந்தெடுக்கப்பட்டது. முதல் ஒலிம்பிக் 1896ம் ஆண்டு ஏதென்சில் நடைபெற்றது. ஒலிம்பிக்கிற்கு இது நூறாவது ஆண்டு ஆகும். எனவே இப்போட்டியை இவ்வாண்டு நடத்த பல நகரங்கள் விரும்பின.

1996 ஒலிம்பிக்போட்டியை நடத்த போட்டியிட்ட நகரங்களின் தேர்தல் முடிவுகள்[1]
நகரம்நாடுசுற்று 1சுற்று 2சுற்று 3சுற்று 4சுற்று 5
அட்லாண்டா  ஐக்கிய அமெரிக்கா1920263451
ஏதென்சு  கிரேக்க நாடு2323263035
டொராண்டோ  கனடா14171822
மெல்பேர்ண்  ஆத்திரேலியா122116
மான்செஸ்டர்  ஐக்கிய இராச்சியம்115
பெல்கிரேட்  யுகோசுலாவியா7

பதக்கப் பட்டியல்

பங்குகொண்டவைகளில் 79 நாடுகள் பதக்கம் பெற்றன

 நிலை நாடுதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
1  ஐக்கிய அமெரிக்கா*443225101
2  உருசியா26211663
3  செருமனி20182765
4  சீனா16221250
5  பிரான்சு1571537
6  இத்தாலி13101235
7  ஆத்திரேலியா992341
8  கியூபா98825
9  உக்ரைன்921223
10  தென் கொரியா715527
11  போலந்து75517
12  அங்கேரி741021
13  எசுப்பானியா56617
14  உருமேனியா47920
15  நெதர்லாந்து451019
16  கிரேக்க நாடு4408
17  செக் குடியரசு43411
18  சுவிட்சர்லாந்து4307
19  டென்மார்க்4116
19  துருக்கி4116
21  கனடா311822
22  பல்கேரியா37515
23  சப்பான்36514
24  கசக்கஸ்தான்34411
25  பிரேசில்33915
26  நியூசிலாந்து3216
27  தென்னாப்பிரிக்கா3115
28  அயர்லாந்து3014
29  சுவீடன்2428
30  நோர்வே2237
31  பெல்ஜியம்2226
32  நைஜீரியா2136
33  வட கொரியா2125
34  அல்ஜீரியா2013
34  எதியோப்பியா2013
36  ஐக்கிய இராச்சியம்18615
37  பெலருஸ்16815
38  கென்யா1438
39  ஜமேக்கா1326
40  பின்லாந்து1214
41  இந்தோனேசியா1124
41  யுகோசுலாவியா1124
43  ஈரான்1113
43  சிலவாக்கியா1113
45  ஆர்மீனியா1102
45  குரோவாசியா1102
47  போர்த்துகல்1012
47  தாய்லாந்து1012
49  புருண்டி1001
49  கோஸ்ட்டா ரிக்கா1001
49  எக்குவடோர்1001
49  ஆங்காங்1001
49  சிரியா1001
54  அர்கெந்தீனா0213
55  நமீபியா0202
55  சுலோவீனியா0202
57  ஆஸ்திரியா0123
58  மலேசியா0112
58  மல்தோவா0112
58  உஸ்பெகிஸ்தான்0112
61  அசர்பைஜான்0101
61  பஹமாஸ்0101
61  லாத்வியா0101
61  பிலிப்பீன்சு0101
61  தொங்கா0101
61  சீன தைப்பே0101
61  சாம்பியா0101
68  சியார்சியா0022
68  மொரோக்கோ0022
68  டிரினிடாட் மற்றும் டொபாகோ0022
71  இந்தியா0011
71  இசுரேல்0011
71  லித்துவேனியா0011
71  மெக்சிக்கோ0011
71  மங்கோலியா0011
71  மொசாம்பிக்0011
71  புவேர்ட்டோ ரிக்கோ0011
71  தூனிசியா0011
71  உகாண்டா0011
மொத்தம்271273298842

கலந்து கொண்ட நாடுகள்

1996ல் கோடைகால ஒலிம்பிக்கில் பங்கேற்ற நாடுகள்
Blue =முதல் முறையாக பங்கேற்பவை. Green = முந்தைய ஒலிம்பிக்கில் பங்கேற்றவை. மஞ்சள் சதுரம் இப்போட்டியை நடத்தும் அட்லாண்டா
பல்வேறு நாடுகளிலிருந்து கலந்து கொண்ட வீரர்கள் எண்ணிக்கை

1996 ஒலிம்பிக்கில் 197 நாடுகளும் 10,318 வீரர்களும் பங்கேற்றனர் [2]. இருபத்தி நான்கு நாடுகள் முதல் முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்றன, இவற்றில் பதினொன்று நாடுகள் 1992 ஒலிம்பிக்கில் ஐக்கிய அணி மூலம் போட்டியிட்ட முன்னால் சோவியத் ஒன்றித்தை சார்தவை. உருசியா உருசியப் பேரரசாக இருந்த பொழுது தனி நாடாக இதற்கு முன்னர் 1912ம் ஆண்டு ஒலிம்பிக்கில் போட்டியிட்டு உள்ளது. யுகோசுலேவியா யுகோசுலேவிய கூட்டமைப்பு என்ற பெயரில் தனி நாடாக போட்டியிட்டுள்ளது.

சோவியத் ஒன்றியத்தை சாராத முதல் முறையாக பங்கெடுத்த பதினான்கு நாடுகள்: அசர்பைஜான், புருண்டி, கேப் வர்டி, கொமொரோசு, டொமினிக்கா, கினி-பிசாவு, மாக்கடோனியக் குடியரசு, நவூரு, பாலஸ்தீனம், செயிண்ட் கிட்சும் நெவிசும், செயிண்ட் லூசியா, சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான். 1994ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கெடுத்து கோடைகால ஒலிம்பிக்கில் முதல் முறை பங்கெடுத்தவை ஆர்மீனியா, பெலருஸ், செக் குடியரசு, சியார்சியா (நாடு), கசக்ஸ்தான், கிர்கிசுத்தான், மல்தோவா, சிலோவாக்கியா, உக்ரைன், உசுபெக்கிசுத்தான். செக் குடியரசும் சிலோவாக்கியாவும் செக்கோசிலோவாக்கியா உடைந்தபின் தனி நாடுகளாக பங்கேற்றன. எசுத்தோனியா, லாத்வியா , லித்துவேனியா ஆகியவை சோவியத் ஒன்றியம் உருவாவதற்கு முன் தனி நாடுகளாக போட்டியிட்டுள்ளன.

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை