செருமன்விங்ஸ் விமானம் 9525

செருமன்விங்ஸ் விமானம் 9525 (Germanwings Flight 9525, 4U9525) என்பது பார்செலோனாவிலிருந்து தியூசல்டோர்ஃபு வரை செல்லும் செர்மன்விங்சு நிறுவனத்தால் இயக்கப்படும் பன்னாட்டு பயணிகள் வானூர்தியாகும். இது செருமனியின் லுஃப்தான்சா வானூர்தி நிறுவனத்தின் குறைந்த விலை வானூர்திப்பிரிவாகும். ஏர்பஸ் ஏ320-200 ரக வானூர்தி 2015 மார்ச்சு 24 அன்று பிரான்சில் ஆல்ப்ஸ் மலையில் நீசூ நகரின் வடமேற்கே 100 கிமீ தொலைவில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைத்து 144 பயணிகளும் 6 பணியாளர்களும் உயிரிழந்தனர்.[5][6][7]

செருமன்விங்ஸ் விமானம் 9525
மே, 2014இல் எடுக்கப்பட்ட விபத்தில் சிக்கிய வானூர்தியின் படம்
Occurrence சுருக்கம்
நாள்24 மார்ச்சு 2015 (2015-03-24)
இடம்பிரான்சு ஆப்சு, தென்பிரான்சு[1]
44°16′48.3″N 6°26′19.5″E / 44.280083°N 6.438750°E / 44.280083; 6.438750
பயணிகள்144[2]
ஊழியர்6 (2 விமானிகள் உட்பட)[2][3]
உயிரிழப்புகள்150 (நம்பப்படுவது)[4]
தப்பியவர்கள்0
வானூர்தி வகைஏர்பஸ் எ320-211
இயக்கம்செர்மன்விங்ஸ்
வானூர்தி பதிவுD-AIPX
பறப்பு புறப்பாடுபார்சிலோனா எல் பிராட் வானூர்தி நிலையம், எசுப்பானியா
சேருமிடம்தியூசல்டோர்ஃபு வானூர்தி நிலையம், செருமனி

இவ்விபத்து செருமன்விங்க்சு வானூர்தியின் துணை வானோடி 27-அகவையுள்ள அந்திரேயாசு லூபிட்சு வேண்டுமென்றே வானூர்தியை மலையில் மோதவிட்டுள்ளார் எனவும், இவர் மனத்தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர் என்றும் பிரெஞ்சு மற்றும் செருமானிய வான்போக்குவரத்து அதிகாரிகள் கூறியுள்ளனர்.[8]

பின்னணி

வானூர்தி

பயண தடம், புறப்பட்ட & விபத்து நேர்ந்த நேரம்

விபத்துக்குள்ளான ஏர்பஸ் ஏ320 ரகத்தைச் சேர்ந்த வானூர்தி 24-ஆண்டுகள் பழமையானதாகும். இது 1990 நவம்பர் 29 இல் தனது பறப்பை ஆரம்பித்தது.[9] மொத்தம் 58,300 பறப்பு மணித்தியாலங்களில் 46,700 தடவைகள் இது பறந்துள்ளது.[10]

வானோடிகள்

தேசியம் வாரியாக வானூர்தியில் பயணித்தவர்கள்[11]
தேசியம்எண்.மூலம்
 செருமனி71[12]
 எசுப்பானியா51[13]
 அர்கெந்தீனா3[14]
 கசக்ஸ்தான்3[15]
 ஐக்கிய இராச்சியம்3[16]
 ஐக்கிய அமெரிக்கா3[17]
 ஆத்திரேலியா2[18]
 கொலம்பியா2[19]
 ஈரான்2[20]
 சப்பான்2[21]
 மெக்சிக்கோ2[22]
 மொரோக்கோ2[23]
 வெனிசுவேலா2[24]
 பெல்ஜியம்1[25]
 சிலி1[26]
 டென்மார்க்1[27]
 இசுரேல்1[28]
 நெதர்லாந்து1[29]
மொத்தப் பயணிகள்150
இரட்டைக் குடியுரிமை உடையோர்4

தலைமை வானோடி காப்டன் பாட்ரிக் சொன்டன்ஹைமர்,[30] 10 ஆண்டுகள் வரை (6000 பறப்பு மணிகள்) செருமன்விங்சு, லுஃப்தான்சா, கொன்டோர் சேவைகளின் வானோட்டியாகப் பணியாற்றியுள்ளார்.[30][31][32]

துணை வானோடி முதலாவது அதிகாரி அந்திரியாசு லூபிட்சு (27).[33][34] இவர் மனத்தளர்ச்சியினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் என்றும்,[35] இதனால் 2009 ஆம் ஆண்டில் வானோடிப் பயிற்சியின் போது இவர் சில காலம் விடுமுறை எடுத்துக் கொண்டார்.[36] இவர் 630 பறப்பு மணிகள் பறந்த அனுபவம் உள்ளவர்.[37]

பயணிகள்

விபத்துக்குள்ளான வானூர்தியில் 144 பயணிகள் சென்றிருந்தனர். மொத்தம் 18 நாடுகளை சேர்ந்த இவர்களில் பெரும்பாலானோர் செருமனியரும் எசுப்பானியரும் ஆவர். இவர்களில் சிலர் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களும் அடங்குவர்.[38]

பயணிகளில் 18 பேர் செருமானியப் பாடசாலை மாணவர்களும், 2 ஆசிரியர்களும் அடங்குவர். இவர்கள் பயிற்சிக்காக பார்செலோனா சென்று திரும்பியிருந்தனர்.[39][40] செருமனியைச் சேர்ந்த இரண்டு புகழ்பெற்ற ஒபேரா பாடகர்களும் பயணிகளில் அடங்குவர்.[41]

விபத்து

வானூர்தி 9295 பார்சிலோனாவின் எல் பிராட் வானூர்தி நிலையத்தில் 10:01:12 மஐநே (09:01.12 ஒஅநே) மணிக்கு புறப்பட்டது. தியூசல்டோர்ஃபு வானூர்தி நிலையத்திற்கு 1:39 மஐநே (10:39 ஒஅநே) வர வேண்டும். வானூர்தி புறப்பட குறிக்கப்பட்டிருந்த நேரம் 09:35 மஐநே (08:35 ஒஅநே).

பிரெஞ்சு வான் வழி போக்குவரத்து அதிகாரி வானூர்தி உயரத்தில் இருந்து கீழ் நோக்கி பயணித்த போது இன்னலில் இருந்ததாகவும் பின்பு வானூர்தியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.

வேண்டுமென்றே வானூர்தி வீழ்த்தப்பட்டிருக்க வேண்டும் என நிபுணர்களால் நம்பப்படுகிறது.

காரணம்

இந்த வானூர்தி விபத்துக்கு துணை வானோடி அந்திரியாசு லூபிட்சு [42] காரணம் என்று கூறப்பட்டுள்ளது. முதல் வானோடி வானூர்தியின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளும் படி முதல் வானோடியிடம் கூறுவதும் அதன் பின் அவரின் இருக்கை நகர்த்தப்படுவதும் பின்னர் அவர் கதவைத்தட்டும்போது இரண்டாவது வானோடி கதவை திறப்பது கேட்கப்படவில்லை என்றும் ஒலிப்பதிவுக்கருவியில் கேட்பதாக கூறப்படுகிறது.[43] இரண்டாவது கருப்புப்பெட்டி கண்டிபிடிக்கப்பட்டுள்ளது, அதன் படி அந்திரியாசு லூபிட்சு வானூர்தியை 100 அடிக்கு செல்லும்படி தானியங்கிக்கு கட்டளை கொடுத்துள்ளார் என்றும் தானியங்கியின் பல முறை வேகத்தை மாற்றி விரைவாக கீழிறங்கும் படி வைத்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.[44]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை