உள்ளடக்கத்துக்குச் செல்

கனகக்குன்னு அரண்மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனகக்குன்னு அரண்மனையின் தோற்றம்
கனகக்குன்னு அரண்மனையின் மற்றொரு தோற்றம்
திருவனந்தபுரத்தில் கனகக்குன்னு அரண்மனையின் முழுத் தோற்றம்

கனகக்குன்னு அரண்மனை (Kanakakkunnu Palace) என்பது கேரளத்தின், திருவனந்தபுரத்தின், நேப்பியர் அருங்காட்சியகத்துக்கு அருகில் உள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும்.[1]கனகக்குன்னு அரண்மனை வளாகத்தில் இந்தியாவின் முதல் எண்ம பூங்கா அமைந்துள்ளது. இதை கேரளப் பல்கலைக்கழகத் தாவரவியல் தறையைச் சேர்ந்த அகிலேஷ் எஸ். வி. நாயர் மற்றும் ஏ.கங்கபிரசாத் ஆகியோர் உருவாக்கியுள்ளனர்.[2][3][4][5]

இன்று அரண்மனையும் இதன் பரந்த மைதானமும் இன்று பல கலை நிகழ்ச்சிகளும், விழாக்களும் அரங்கேறும் இடமாக உள்ளது. இங்கு அகில இந்திய நடன விழாவானது (அக்டோபர் முதல் மார்ச் வரை) கேரள சுற்றுலாத்துறையால் ஒவ்வொரு ஆண்டும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் இந்திய பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து பல சுற்றுலாப் பயணிகள் ஒவ்வொரு ஆண்டும் வருகிறார்கள்.

வரலாறு

இந்த அரண்மனையை ஸ்ரீ மூலம் திருநாள் கட்டியதாக கூறப்படுகிறது. இது பின்னர் திருவிதாங்கூர் அரச குடும்பத்தினர் தன் விருந்தினர்களை மகிழ்விக்கும் இடமாக இருந்தது. அதாவது அரச குடும்பம் சைவ உணவு பழக்கத்தைக் கொண்டதாக இருந்ததால், தன் விருந்தினருக்கு அசைவ உணவை பரிமாறும் இடமாக பயன்படுத்தப்பட்டது. இது தற்போது கேரள சுற்றுலாத் துறையால் பாதுகாக்கப்படுகிறது. அரண்மனை ஏராளமான கலாச்சார சந்திப்புகளும், நிகழ்ச்சிகளும் நடப்பதற்கு ஏற்ற இடமாக உள்ளது. கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளை (இன்டாக்) இந்த இடத்தை பாரம்பரிய நினைவுச்சின்னங்களின் பட்டியலிடியலில் சேர்த்துள்ளது.

விவரங்கள்

இந்த அரண்மனையானது திருவனந்தபுரம் நகரின் மையத்தில் நேப்பியர் அருங்காட்சியகத்துக்கு வடகிழக்கில் சுமார் 800 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கனகக்குன்னு அரண்மனையானது காலனிய காலத்தின் இறுதிகால கட்டடக்கலை இடங்களில் ஒன்றாக, திருவாங்கூர் மன்னர் சிறீ மூலம் திருநாள் (1885-1924) ஆட்சிக்காலத்தில் விசுவகர்மாக்களின், உதவியுடன் கட்டப்பட்டது [6] இந்த அரண்மனை அரச விருந்துகளுக்கு முக்கிய இடமாக விளங்கியது. பின்னர் திருவிதாங்கூரின் பிரபலமான மன்னர்களில் ஒருவரான சுவாதி திருநாள் அரண்மனையை புதுப்பித்து, இதன் வளாகத்தில் வரிப்பந்தாட்ட அரங்கைக் கட்டினார். அவர் அதை சில ஆண்டுகள் கோடைகால மாளிகையாக பயன்படுத்தினார். கேரள பாணியின் அடையாளமாக பெருமை பேசும் திருவாங்கூர் அரச குடும்பத்தினர் விருந்தினர்களை மகிழ்விக்க இந்த வீட்டைப் பயன்படுத்தினர். உள்ளே செல்பவர்கள் பிரமாண்டமான படிக சரவிளக்குகளையும், நேர்த்தியான அரச தளபாடங்கள் போன்றவற்றைக் காண் இயலும். இசை, கலை போன்றவற்றில் ஆர்வமுள்ளவரான திருநாள் மன்னர்களின் பகட்டான வாழ்க்கை முறைக்கு இது ஒரு சான்றாக உள்ளது.

இப்போது கேரள அரசாங்கத்தின் பிரிவின் கீழ், அரண்மனை வளாகத்தில் நிஷகந்தி திறந்தவெளி அரங்கம் மற்றும் சூரியகாந்தி அரங்க மண்டபம் போன்றவை உள்ளன. இந்த அரங்கங்கள் நகரத்தில் கலாச்சார நிகழ்வுகளுக்கு பிரபலமான இடமாக விளஙுகுகிறது. அகில இந்திய நடன விழா அல்லது நிஷாகந்தி விழா என்றழைக்கபடும் விழாவை கேரள சுற்றுலாத்துறை ஆண்டுதோறும் நிஷகந்தி திறந்தவெளி அரங்கில் நடத்துகிறது. இந்த விழாவில் கலந்துகொள்ள இந்திய ஒன்றியம் முழுவதும் இருந்தும் இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர்கள் வருகிறார்கள்.

குறிப்புகள்

"https://www.search.com.vn/wiki/?lang=ta&title=கனகக்குன்னு_அரண்மனை&oldid=3548696" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்