உள்ளடக்கத்துக்குச் செல்

செந்தூருணி காட்டுயிர் உய்விடம்

77°12′38″E / 8.858694°N 77.210649°E / 8.858694; 77.210649
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செந்தூருணி வனவிலங்கு சரணாலயம்
இந்தியாவின் கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தின் செந்தூருணி வனவிலங்கு சரணாலயத்தில் ஹம்ப் நோஸ்ட் வைப்பர் (ஹிப்னேல் ஹிப்னேல்) என்னும் ஒருவகை விரியன் பாம்பு..
Map showing the location of செந்தூருணி வனவிலங்கு சரணாலயம்
Map showing the location of செந்தூருணி வனவிலங்கு சரணாலயம்
கேரளத்தில் அமைவிடம்
Map showing the location of செந்தூருணி வனவிலங்கு சரணாலயம்
Map showing the location of செந்தூருணி வனவிலங்கு சரணாலயம்
செந்தூருணி காட்டுயிர் உய்விடம் (இந்தியா)
அமைவிடம்கேரளம், கொல்லம் மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை
அருகாமை நகரம்கொல்லம் - 75 km
திருவனந்தபுரம் - 80 km
ஆள்கூறுகள்8°51′31″N 77°12′38″E / 8.858694°N 77.210649°E / 8.858694; 77.210649[1]
நீளம்23 கிலோமீட்டர்கள் (14 mi)
பரப்பளவு172.403 km2 (66.565 sq mi)
ஏற்றம்1169m
நிறுவப்பட்டது25 சூன் 1984
(39 ஆண்டுகள் முன்னர்)
 (1984-06-25)
Shendurney Wildlife Sanctuary

செந்தூருணி வனவிலங்கு சரணாலயம் (Shendurney Wildlife Sanctuary) என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாகும். இது கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் [2] அமைந்துள்ளது. இது அகத்தியமலை உயிர்க்கோள காப்பபகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. 172.403 சதுர கிலோமீட்டர்கள் (66.565 sq mi) பரப்பளவு கொண்ட இந்த சரணாலயமானது 1984 ஆகத்து 25, அன்று நிறுவப்பட்டது. இந்த சரணாலயத்தின் பெயரானது இப்பகுதிக்குதியைச் சேர்ந்த மரமான ( குளுட்டா திருவிதாங்கிகா ) செந்தூரினியின் பெயரைக்கொண்டு இடப்பட்டது.[3] இந்த சரணாலயம் கிட்டத்தட்ட 18.69 சதுர கி.மீ பரப்பளவுள்ள ஒரு செயற்கை ஏரியைக் கொண்டுள்ளது. மேலும் தேன்மலா அணையின் நீர்த்தேக்கப்பகுதியாலும் சூழப்பட்டுள்ளது. செந்தூரணி வனவிலங்கு சரணாலயம் தாவர பன்முகத்தன்மையின் சொர்க பூமியாகும். இந்த சரணாலயத்தில் 150 க்கும் மேற்பட்ட தாவரக் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1257 வகையான பூச்செடிகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 309 இனங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகளைச் சேர்ந்தவை. வலசைவரக்கூடிய, உள்ளூர் மற்றும் அருகிய இன பறவைகள் உட்பட 267 இனங்களைச் சேர்ந்த பறவைகள் இங்கு பதிவாகியுள்ளன.[4]

இந்த சரணாயத்துக்கு உட்பட்ட காடுகளானது வெப்பமண்டல பசுமைமாறா காடுகள் மற்றும் அரை பசுமைமாறா காடுகளை முதன்மையாக கொண்டுள்ளது.[5] இது மிகவும் ஆபத்துக்கு உள்ளான உயிரினமான சோலைமந்திகளின் இருப்பிடமாகவும் உள்ளது. இரவாடி பறவையான பெரிய காது பக்கி பறவையானது முதல் முறையாக கேரளத்தின் கொல்லத்தில் உள்ள செந்தூரணி வனவிலங்கு சரணாலயத்தில் காண்டறியப்பட்டது. முன்னதாக, இது 1995 மே இல் தமிழ்நாட்டின் சிறுவாணி மலை அடிவாரத்தில் இருப்பது பதிவு செய்யப்பட்டது.

இந்தியாவின் முதல் சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டமான தென்மலா சுற்றுச்சூழல் சுற்றுலா திட்டமானது செந்தூருணி வனவிலங்கு சரணாலயத்தையும், அதைச் சுற்றியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.[6]

செந்தூரணி சரணாலயத்தின் மற்றொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், இங்கு சந்தன மரங்களே இல்லை. [சான்று தேவை]

குறிப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்